தீத்து நிருபம் (வேத பாடங்கள்) அறிமுகம் பகுதி 2


தீத்து நிருபம் (வேத பாடங்கள்)






அறிமுகம் பகுதி 2



தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் (உள்ள) இடங்கள்


கிரேத்தா


"நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்கு படுத்தும்படிக்கும், நான்உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரைஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன்” (1:5).கிரேத்தாவானது மத்திய தரைக்கடல்) பகுதியில் நான்காவது பெரியதீவாக உள்ளது. இது மிகப் பழமையான மற்றும் மிகவும் மேம்பட்டநாகரீகங்கள் ஒன்றின் இருப்பிடமாயிருந்தது. புதிய ஏற்பாடு எழுதப்பட்டகாலங்களில், அங்கு
வாழ்வானது விழுந்து போகும் அளவுக்குக் கீழ்நிலையில் இருந்தது (1:12). இந்தப் புறதெய்வ மார்க்க உலகில் இளம்சபையானது எதிர்கொண்டிருந்த விஷயங்களை "ஒழுங்கு படுத்தும்படிக்கு”தீத்து ஊழியம் செய்ய வேண்டியிருந்தது.

நிக்கொப்போலி


"நான் அர்த் தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில்அனுப்பும் போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரி காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்” (3:12).இந்த "வெற்றியின் நகரமானது” கிரேக்கத்தின் வட மேற்குக் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது, இங்கு அநேகமாக கி.பி. 65 - சாத்தியக் கூறுள்ள வகையில் கி.பி. 66ன் மாரிக்காலத்தைச் செலவிடப் பவுல்தீர்மானித்திருந்தார். தீத்து கிரேத்தாவில் தம் ஊழியத்தை நிறைவேற்றியபிறகு அங்கு (நிக்கொப்போலிக்கு வரும்படி கேட்டுக் கொள்வதற்கு அவர்எழுதினார். இது திட்டவட்டமாய் அறியப்பட்டுள்ளபடி பவுல் செல்லநோக்கங் கொண்டிருந்த கடைசி இடமாய் இருப்பதால், அவர் இரண்டாம்முறை கைதானது அங்கு நடந்தது என்று சிலரால் யூகிக்கப்படுகிறது.






தீத்துவுக்கு எழுதிய நிருபத்தின்முக்கியமான கருத்து


போதித்தல்


"போதித்தல்” என்ற வார்த்தையை (இந்நிருபத்தில்) பவுல் அடிக்கடிபயன்படுத்துமளவுக்கு, எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தகுதியான/ஏற்புடைய தகவலைத் தருதல் என்பது அவரது சிந்தையில் மிகவும்முக்கியமானதாயிருந்தது. "போதித்தல்” என்ற வார்த்தையின் கருத்தொற்றுமை வார்த்தைகளாக இந்நிருபத்தில் “பேசுதல்/மற்றும் “ஊக்கப்படுத்துதல்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன,


தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் தலைப்புகளுடன் முக்கியமான வசனங்கள்


அதிகாரம் 1


1. பரிசுத்தமாய்) வாழுதல் மற்றும் நற்செயல்கள் ஆகியவற்றுக்காகசபையை ஒழுங்கமைத்தல்.

அ. ஒவ்வொரு சபைக்குழுமத்திலும் தகுதியுள்ள மூப்பர்கள்(1:5-9; அப். 14:23ஐக் காணவும்).

ஆ. பரிசுத்தமற்ற வகையில் வாழுதல் அல்லது போதித்தலைமூப்பர்களும் தீத்துவும் கடிந்து கொள்ள வேண்டும்(1:10-2:1).

அதிகாரம் 2


II. பரிசுத்தமாய்) வாழுதல் மற்றும் நற்செயல்கள் ஆகியவற்றுக்காகக்குடும்பத்தை ஒழுங்கமைத்தல்





அ. முதிர் வயதுள்ள ஆண்கள் (2:2)

ஆ. முதிர் வயதுள்ள பெண்கள் (2:3)

இ. இளம் பெண்கள் (2:4, 5)

ஈ. இளம் ஆண்க ள் (2:6-8)

உ. அடிமைகள் (2:9, 10)

ஊ. தேவனுடைய கிருபையினிமித்தம் இதைச் செய்யுங்கள்(2:11-15)

அதிகாரம் 3


III. பரிசுத்தமாய்) வாழுதல் மற்றும் நற்செயல்கள் ஆகியவற்றுக்காகத்தனிநபரை ஒழுங்கமைத்தல்.

அ. ஆள்பவர்களைப் பொறுத்தமட்டில் (3:1)

ஆ. அயலகத்தவர்களைப் பொறுத்தமட்டில் (3:2)

இ. நம்மீது தேவனுடைய அன்பு மற்றும் கிருபையினிமித்தம்இதைச் செய்யுங்கள் (3:3-7)

ஈ. பயனற்ற வாக்குவாதங்களை விட்டு விலகுங்கள் (3:9)

உ. மோசமான மனிதர்களும் நல்ல மனிதர்களும் (3:10-15)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.