தீத்து நிருபம் (வேத பாடங்கள்)
அறிமுகம் பகுதி 1
ஜேக் M. ஸ்கேர்ன் அவர்கள் பின்வருமாறு எழுதினார்:
தேவனால் ஒரு அண்டத்தையும்,பூமி உருண்டையானது தன்னிடத்திலே சுழலுவதையும்,அதன் பாதையின் இயக்கத்தையும், அதன் ஓட்டத்தின்கட்டுப்பாட்டையும்,வீரார்ந்த சட்டத்துடனும் கிருபையுடனும் திட்டமிடமுடியுமென்றால் ...நிச்சயமாகவே அவர் மனிதன் தனிமையாய் இராதபடிஒரு வாழ்க்கைப் பாதையைத் திட்டமிட்டார் என்றேயாகிறது!ஆம், அவர் அறியப்பாடத ஏராளமானவற்றினூடாகவாழ்வின் ஓட்டத்தை இயக்கி நடத்துகின்றார்.
'தேவனுடைய அருளிரக்கம் பற்றிய கவிதை நடையிலான இவ்வுருவாக்கம்,தீத்துவுக்குப் பவுலின் நிருபத்தைப் பற்றி ஒருவர் படிக்கத் தொடங்குகையில்ஏற்புடைய சிந்தனை மாதிரியாக உள்ளது.
நோக்கம்
இந்த நிருபமானது தேவனுடைய அருளிரக்கம் செயல்படுவதன்வல்லமையுள்ள நடைமுறைச் செயல்விளக்கம் ஒன்றை நமக்கு முன்வைக்கின்றது. தீத்துவுக்குப் பவுல் நியமித்த பணிப் பொறுப்பானது, ஒருசுவிசேஷ ஊழியர்உள்ளூர் சபைக்குழுமங்களைக் கட்டியெழுப்ப எவ்வாறுஊழியம் செய்ய வேண்டும் என்பதைத் துல்லியமாய்ச் சுட்டிக்காட்டுகின்றது. “இந்தக் காரணத்திற்காகவே” (தீத்து 1:5) பவுல் தீத்துவை கிரேத்தாதீவில் விட்டு வந்தார்.
இந்த நிருபத்தின் ஒவ்வொரு முகப்பும் பக்குவமடையும் உறுப்பினர்களை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றது (1:5-9). இது பல்வேறு வகையினரையும் குழுக்களையும் பற்றி எடுத்துரைக்கிறது (2:1-10), இல்லம் சார்ந்த(1:10, 11; 2:5, 6), சமூக (1:12, 15, 16) மற்றும் சபை (3:9-11) சூழ்நிலைகளில்கலகம் விளைவிப்பவர்களைக் கையாள்வது எப்படி என்பதற்கு வழிகாட்டுதல்களை அளிக்கின்றது. பல்வேறுபட்ட வகையினரும் குழுக்களும்எந்தக் காலத்திலும் சபைக்குழுமத்தின் அங்கமாய் இருப்பார்கள்.இவ்வகையில் இந்த நிருபமானது கிறிஸ்து இயேசுவுக்குள் அழைக்கப்பட்டமேன்மையான நியமத்திற்கு உயர்ந்து நிற்கும்படி யாவருக்கும் அறைகூவல்
விடுக்கிறது (2:11-14; 3:3-6), இது நமக்கு “நித்திய ஜீவனின் நம்பிக்கையை"அளிக்கிறது (1:2; 3:7).
தீத்து ஒரு காரணத்திற்காக - சரீரத்தைக் கட்டியெழுப்புதல் என்பதற்காக - கிரேத்தா தீவிலே விடப்பட்டிருந்தார். இந்த நாட்களில் சுவிசேஷஊழியர்கள் உள்ளூர் சபைக்குழுமங்களின் மத்தியில் தேவைகளைச் சந்திக்கஉதவும் அதிக வலிவான கருவியைக் கண்டறிய வீணான வகையில் தேடிக்கொண்டுள்ளனர்.
பவுல் எழுதிய 1 மற்றும் 2 தீமோத்தேயு மற்றும் தீத்து என்ற இம்மூன்றுநிருபங்களும் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மேய்ப்புப் பணிநிருபங்கள் என்று அறியப்பட்டுள்ளன. கி.பி. 1703ல் D. N. Berdot என்பவர்தீத்துவுக்கு எழுதிய நிருபத்தை “மேய்ப்புப் பணி நிருபம்” என்று விவரித்தார்,ஆனால் மைக்கேல் மோசஸ் கவனித்துள்ளபடி, "உண்மை நிலையில்,இம்மூன்று நிருபங்கள் எதிலும் 'pastor' என்ற சொற்றொடரோ அல்லதுஅதன் இணைச் சொல்லான “மேய்ப்பர்' என்பதோ இல்லை ... இந்தநிருபங்கள் உண்மையில் மேய்ப்புப் பணி இறையியலுக்கான ஒரு கைநூலாய் இருப்பதில்லை . இந்தப் புத்தகங்களின் ஒரு சிறு பகுதியே பிரசங்கப்போதனை என்று கூறப்படக்கூடிய விஷயங்களைக் கொண்டுள்ளன(1 தீமோ . 3:1-13; 5:3-22; தீத்து 1:5-9).”
இடமும் மக்களும்
கிரேத்தாத் தீவின் மக்களுடைய இயல்பு நன்கு அறியப்பட்டிருந்தது.கிரேத்தாத் தீவார் ஒரு (தீய) மதிப்பைக் கொண்டிருந்தனர். வில்லியம்பார்க்ளே பின்வருமாறு எடுத்துரைத்தார்:
பழங்கால உலகில் கிரேத்தாத் தீவாரைக் காட்டிலும் அதிகம்மோசமான பெயரெடுத்தவர்கள் எவரும் இருந்ததில்லை. பழங்காலஉலகினர் மிகவும் தீமையான மூன்று (க்கள் பற்றிப் பேசினர் - Cretans(கிரேத்தர்), Cilicians (சிலீசியர்கள்), மற்றும் Cappadocians (கப்பதோக்கியர்கள்), கிரேக்கர்கள் குடிவெறி, துடுக்குத்தனம், நம்பத்தகாத தன்மை ,பொய் மற்றும் பெருந் தீனிக்கார மக்கள் என்று பெயர்பெற்றிருந்தனர் …
பொய் மற்றும் ஏமாற்று என்று அர்த்தப்படும் to Cretize என்பதற்குkretizein என்ற ஒரு வினைச் சொல்லை கிரேக்கர்கள், உண்டாக்குமளவுக்கு கிரேத்தர்கள் மிகவும் கெட்ட பெயரெடுத்தவர்களாய்இருந்தனர்; ..."
பிரச்சனையானது சபையைச் சூழ்ந்திருந்த உலகிற்கு அப்பாலும்சென்றது: சபையானது தன்னிலேயே தீய செல்வாக்குகளின் இணைவொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தது. மெரில் C. டென்னே அவர்கள்பின்வருமாறு எழுதினார்:
கிரேத்தாவில் இருந்த கலகமானது கிரேத்தர்களின் இயல்பானவிருப்பங்களிலிருந்து எழுந்த ஒழுக்க ரீதியில் வழுவிச் செல்லுதலின் தொகுப்பினால் காரணப்படுத்தப்பட்டு (1:12, 13), தேவ பக்தியற்றவர்களாய் (1:16) அடங்காதவர்களாய் (1:10) தகாதவைகளைஉபதேசிக்கிறவர்களாய் (1:11) மற்றும் இழிவான ஆதாயத்தைஇச்சிக்கிறவர்களாய் (1:11) இருந்த யூதர்களின் குழு (1:10) ஒன்றினால்மேம்படுத்தப்பட்ட யூதக் கதைகள் மற்றும் கட்டளைகளின் மீதானவிவாதத்தினால் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. இந்த போதகர்கள்கலாத்தியர்களிடத்தில் கலகம் ஏற்படுத்தியவர்களிலிருந்து மாறுபட்டிருந்தனர், ஏனெனில் ஒழுக்க ரீதியில் முரண்பாடு என்பதுஇவர்களின் தவறாயிருந்தது, கலாத்தியர்களிடத்திலோ கடுமையானசட்டக் கோட்பாட்டில் தவறு காணப்பட்டது. இவ்விரண்டுமே இந்தநிருபத்தினால் கண்டனம் செய்யப்படுகின்றன."
விக்டர் E. ஹோவன் அவர்கள், தீத்து 1:10-14 வசனப் பகுதியானது,“அவர்களின் (தீய) ஒழுக்கமும் நடக்கையும் கிரேக்கப் புராணவியலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பவுலினால் ஒத்துக் கொள்ளப்பட்டதாகவும் இருந்தது. 15, 16ல் அவர்களின் இருதயம் மற்றும் மனச்சாட்சியின்நிலை கொடுக்கப்பட்டுள்ளது. மத். 15:19, 20ஐக் காணுங்கள். ஊழியத்திற்குஎன்ன ஒரு களம்!” என்று கவனித்துள்ளார்.
அந்தத் தீவில் சபை உண்மையில் எவ்வாறு தொடக்கம் பெற்றதுஎன்பது அறியப்படாததாக உள்ளது. H. C. தீயெஸ்ஸன் அவர்கள், கிரேத்தர்களுக்குக் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டதன் சாத்தியக் கூறுள்ளஆதார மூலமாக அப். 2:11(பெந்தெகொஸ்தே நாள்)ஐக் குறிப்பிட்டார்.மேலும், பவுல் ரோமாபுரிக்குச் செல்லும் வழியில் இந்தத் தீவில் சற்றுத்தாமதித்திருந்தார் (அப். 27:7-13, 21).
மக்களின் தொடக்கம் எப்படியிருப்பினும், அவர்களின் தேவைகள்,ஏவுதல் பெற்ற பின்னல் வேலையான பவுலின் நிருபத்தில் அவரால் பின்னப்பட்ட திறவுகோல் வார்த்தைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றால்தெளிவாக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகின்றது. தேவைகளையும்தீர்வுகளையும் ஒப்பிட்டு, சூழ்நிலை மற்றும் இந்த நிருபம் ஆகியவற்றிற்கிடையில் உள்ள பின்வரும் முரண்களைக் கவனியுங்கள்.
ஒழுக்க ரீதியான மற்றும் ஆவிக்குரிய வகையிலான கலகங்களுக்கு பவுல்ஒரு மிக உன்னதமான மற்றும் போதுமான இரட்சகரை முன்வைக்கின்றார்(1:3, 4; 2:10, 11, 13; 3:4, 6). இழந்து போகப்பட்டுள்ள எந்த சமூகத்திற்கும்இதன் மூலமாக நம்பிக்கை என்ற விஷயம், அளிக்கப்படுகின்றது.
"அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமான” (1:10) பலருக்கு, பவுல் ஆரோக்கியமான உபதேசம் என்றநல்மருந்தை, முறிவு மருந்தாக ஆலோசனை அளிக்கின்றார் (1:9; 13; 2:1, 2,10). அந்த ஆரோக்கியமான உபதேசமானது, "தங்கள் சொந்த விஷயத்தைச்செய்தல்" என்பதன் சமூகப் பண்பிற்கு மேலாய் எழுந்து சுய கட்டுப்பாடுஎன்ற நிலைப்பாட்டில் நிற்கின்ற மக்கள் என்ற “தெளிந்த புத்தியுள்ள"ஆத்துமாக்களினால் (1:8; 2:5, 6, 12) கையாளப்பட வேண்டியது அவசியமாயுள்ளது. இந்த சுய கட்டுப்பாடானது, மனிதர்கள் "தேவபக்தியுடமை"என்ற ஓட்டத்திற்குள் வருமுன்பே தன்னில் தானே வெளிப்படுத்தப்
படுகின்ற து (1:1; 2:12; 1 தீமோ . 2:2, 10; 3:16; 4:7, 8; 6:3, 5, 6, 11;2 தீமோ . 3:5).
ஆரோக்கியமான உபதேசமானது நன்கு பெற்றுக் கொள்ளப்படும்பொழுது, அது ஆத்துமாக்களை "பெரு வயிற்றுச் சோம்பேறிகளாய்" (1:12)இருப்பதிலிருந்து புறம்பே வழிநடத்தி “நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாய்” (2:14; 1:16; 2:3, 7; 3:1, 8, 14ஐக் காணவும்)ஆகும்படி வழிநடத்துகின்றது.
வீண் பேச்சு, சுயமேன்மை, கட்டளை கொடுத்தல், வாக்குவாதம்,போராட்டம், (பெரும்பாலும்) யூதத்துவக்காரர்கள் (1:9-11, 14; 2:8; 3:2, 9,10) என்பவற்றின் உச்சமுனையான நிலைப்பாட்டுக்கெதிராகப் பவுல்முன்னெச்சரிக்கை செய்தார். வைராக்கியம் என்பது “கீழ்ப்படிதல்" என்பதன்அடிப்படையில் கட்டி எழுப்பப்பட வேண்டியிருந்ததென்று அவர்போதித்தார் (2:5, 9; 3:1).
சுருக்கமாக, கிரேத்தாத் தீவின் பொல்லாத மக்கள் (1:12) நல்லவர்களாகும்படியும் நல்லவற்றைச் செய்யும்படியும் இந்த நிருபத்தின் மூலம்கேட்டுக் கொள்ளப்பட்ட னர் (1:16; 2:3, 7, 10, 13, 14; 3:1, 8, 14).
மற்றும், மக்களின் தேவைகள் தெய்வீக உபதேசத்தினால் அறைகூவல்விடுக்கப்பட்டு இயக்கப்பட்டன. வால்ட்டர் டன்னெட் அவர்கள் இந்தநிருபத்தின் உபதேசக் கருத்துக்கள் பற்றிய (பின்வரும்) நல்லதொருதொகுப்புரையைக் கொடுத்தார்:
1. தேவனுடைய உபதேசம். அவர் நித்தியமானவராய் இருக்கிறார்(1:3), அவர் கிருபையும் சமாதானமும் கொடுக்கிறார் (1:4), அவர்தம்மையேவெளிப்படுத்தியிருக்கிறார் (2:11) மற்றும் நமது இரட்சகராய் இருக்கிறார்(3:4). பவுல் அவருடைய அடிமை ஊழியராய் இருந்தார் (1:1).(பெருமையான மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவது அவசியமாய் உள்ளது.)
2. கிறிஸ்துவின் உபதேசம். அவர் நமது இரட்சகராய் இருக்கிறார் (1:4;2:13; 3:6). ஒரே வகையான இயற்பெயர் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும்பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். 2:13ல் உள்ள கூற்றானதுகிறிஸ்துவின் தெய்வீகத்துவத்திற்குச் சாட்சி என்ற வகையில் விசேஷமாய்க்குறிப்பிடத் தக்கதாக உள்ளது.” (மாம்சத்தில் தெய்வீகத்துவம் என்பதுமனிதன் உபதேசத்தை அலங்கரிக்கும்படி ஏற்றுக் கொள்ள ஒரு நியமத்தைவடிவமைக்கின்றது; 3:10.)
3. பரிசுத்த ஆவியானவரின் உபதேசம். இவர் மறுபிறப்பின் முகவராய்இருக்கின்றார் (3:5). (இரக்கத்தின் செய்தியானது வீழ்ந்து போனமனிதனுக்கு மறுபிறப்பு அளிக்கின்றது.)
4. தேவனுடைய வார்த்தையின் உபதேசம். பிரசங்கிக்கப்பட்டசெய்தியில் (Gk; kerygma) தேவன் தமது வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார், இது வாழ்விற்கு நியமமாய் இருக்க வேண்டியதாயுள்ளது (1:3;2:5, 10). இது 1:9ல் "உண்மையாய்” என்று அழைக்கப்படுகின்றது. தேவனுடைய வசனத்தின் தக்க வகையிலான போதனையின் மீது வலியுறுத்தம்உள்ளதைக் கவனியுங்கள் (1:9; 2:1, 7). இதனுடன் தொடர்புடையவகையில், தேவனுக்கெதிரான கூற்றுக்கு, (உறுதியாகவே இது யூதர்களின்
தேவ நம்பிக்கையற்ற வகையிலான போதனையாகவே உள்ளது) எதிராகஎச்சரிக்கை உள்ளது (1:10, 14; 3:9). (தெய்வீகக் கட்டளைகள் தேவனுக்கெதிரான மனிதரின் கூற்றுக்களுக்கு பலத்த வகையில் நேர்மாறானவைகளாய் முன்னிறுத்தப்பட்டுள்ளன.)
5. (உள்ளூர்) சபையின் உபதேசம். அப்போஸ்தலர் அதிகாரத்துடன்எழுதினார் (1:1, 3), மற்றும் தீத்துவும் அதிகாரத்துடன் பேசி, புத்தி கூறிமற்றும் கண்டனம் செய்ய வேண்டியதாய் இருந்தது (2:15). மூப்பர்களுக்கான தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன (1:6-8), அவர்களின்கடமைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன (1:9). விசுவாசிகளின் பொறுப்புகள்2:1-3:2ல் புறக்குறிப்பிடப்பட்டுள்ளன. (மனித மேம்பாட்டிற்கானதெய்வீக வழிகாட்டுதல்கள் கேட்கப்பட்டு கடைப்பிடிக்கப்படவேண்டும்.)
இந்த உபதேச ஆய்வானது, தீத்துவுக்குப் பவுலின் நிருபத்தில் உள்ளநடைமுறை இயல்பை முக்கியத்துவப்படுத்தி, ஒரு சபைக்குழுமமானதுஎத்தகைய சமுதாய அமைப்பில் வாழ்ந்தாலும் அதன் வாழ்வு மோசம்போக்கப்பட்டு விடாதபடி தெய்வீக ஆணைகளினால் தெய்வீகத்துவத்தையும் மனிதத்துவத்தையும் அழகுமிக்க வகையில் ஒன்று கலக்கின்றது.இப்படிப்பட்ட சாத்தியக் கூறானது தேவனுடைய மக்களை எந்த ஒருசமுதாயக் காட்சியிலும் சுத்தமானவர்களாய் இருக்கும்படியும் ஒருநியமத்தை ஏற்படுத்தும்படியும் தூண்ட வேண்டும்.
தேதி
வேதாகமப் பதிவிலிருந்து, நடபடிகளில் பதிவு செய்யப்பட்டபடி பவுல்ரோமாபுரியில் தமது முதல் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்என்பது தெளிவாக உள்ளது (அப். 28:16-31; பிலி. 2:24; 4:22ஐக் காணவும்).அவர் விடுவிக்கப்பட்ட காலத்திற்கு சற்று முன்னதாக அவர் தீமோத்தேயுவை பிலிப்பி நகருக்கு அனுப்பலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்(பிலி. 2:19-23). பவுல் விடுவிக்கப்பட்ட பொழுது (தாம் திட்டமிட்டிருந்தபடியே; பிலே. 1, 10, 22ஐக் காணவும்) ஆசியா மைனர் பகுதிக்குச் சென்றார்,வழியில் கிரேத்தாத்தீவில் சற்றுத் தாமதித்தார். அங்கு பவுல் தீத்துவை விட்டுவந்தார் (1:5). திட்டமிட்டபடி பவுல் ஒநேசிமுவைப் பற்றி பிலேமோனிடம்(பேசி) விஷயங்களை அமைவு பெறச் செய்வதற்காக கொலோசெ நகருக்குச்சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வேளையின் போது,தீமோத்தேயு பிலிப்பியிலிருந்து புறப்பட்டு வந்து எபேசு அல்லது மிலேத்துநகரில் பவுலைச் சந்தித்தார். பவுல் மக்கெதோனியாவுக்குச் செல்லுகையில்தீமோத்தேயுவை எபேசுவில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார் (1 தீமோ.1:3). மக்கெதோனியாவில் ஏதோ ஓரிடத்திலிருந்து எபேசு பகுதிக்குத்திரும்பி வரலாம் என்று பவுல் நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் தாம்தாமதிக்கலாம் என்று அவர் அறிந்திருந்தார் (1 தீமோ. 3:14, 15). அந்தவேளையில் அவர் 1 தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகிய இரு நிருபங்களையும்எழுதினார். அவர் ஐநோனியன் கடலின் கிழக்குக் கரையில் எப்பிரஸின்
நிக்கொப்போலி நகரில் தீத்து வந்து தம்முடன் இணைந்து கொள்ளும்படிகேட்டுக் கொண்டிருந்ததால், அவருடைய பயணத் திட்டங்கள் மாற்றம்அடைந்தன. "அவர் இன்னமும் நிக்கொப்போலி நகருக்கு வந்துசேர்ந்திருக்கவில்லை (3:12). அங்கு ('இங்கு இல்லை) அவர் மழைக்காலத்தில்தங்கியிருக்கலாம் என்று முடிவு செய்திருந்தபடியால் அவர் அநேகமாக/பெரும்பாலும் பின் கோடைக்காலம் அல்லது முன் பனிக்காலத்தில் இதைஎழுதியிருப்பார்.”9 வில்லியம் ஹென்ரிக்ஸென் அவர்கள், “கி.பி. 63 என்றதேதியானது மிகவும் தூரமாயிருக்க முடியாது" என்று கவனித்துள்ளார்.“கி.பி. 64ல் நீரோவின் துன்புறுத்துதல் தொடக்கம் பெற்ற காலத்தில் பவுல்ரோமச் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பார் என்பது ஏற்புடையதாயிருப்பதில்லை .”
பெற்றுக் கொள்பவர்
இந்த நிருபத்தைப் பெற்றுக் கொண்ட பிரசங்கியாரான தீர்த்துவைப்பற்றி நாம் அறிவது என்ன? லூயிஸ் C. ஃபோஸ்டர் அவர்கள், "தீத்துவின்பெற்றோர்கள் பற்றியும் சொந்த நாடு பற்றியும் அறியப்படவில்லை.இருப்பினும், அவர் ஒரு புறஜாதியாராய் இருந்தார் என்பது தெளிவாக்கப்பட்டது; மற்றும் அவர், பவுல் கிறிஸ்தவராகி பதினான்கு அல்லது பதினேழுஆண்டுகளுக்குப் பிறகு சீரியாவின் அந்தியோகியாவில் இருந்தார். (கலா.1:18; 2:1ஐக் காணவும்.) இந்த வேளையிலிருந்து அவர் (தீத்து) பவுலுடன்ஒரு நெருங்கிய துணைவராய் இருந்து, அப்போஸ்தலரால் மிகவும்உயர்வாக மதிக்கப்பட்டு முக்கியமான பணிப்பொறுப்புகள் ஒப்புவிக்கப்பட்டவராய் இருந்தார்."
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் தீத்துவின் பெயர்காணப்படுவதில்லை, ஆனால் புதிய ஏற்பாட்டின் மற்ற இடங்களில் இதுபதிமூன்று முறைகள் காணப்படுகின்றது: கலாத்தியருக்கு எழுதியநிருபத்தில் இரண்டு முறைகள் (2:1; 2:3), 2 தீமோத்தேயுவில் ஒரு முறை(4:10), தீத்துவில் ஒரு முறை (1:4) மற்றும் 2 கொரிந்தியரில் ஒன்பது முறைகள்(2:13; 7:6, 13, 14; 8:6, 16, 23; மற்றும் 12:18ல் இரு முறைகள்). நடபடிகளின்புத்தகத்தில் இவரது பெயர் குறிப்பிடப்படாதிருப்பினும், தீத்துவைப்பற்றிய மறைமுகமான குறிப்பொன்று அங்கு குறிப்பிடப்படுகின்றது: அப்.15:2("அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும்”)ஐ கலாத்தியர் 2:1, 3 (“நான்தீர்த்துவைக் கூட்டிக் கொண்டு ... என்னுடனே கூட இருந்த தீத்து") உடன்ஒப்பிடுவதினால் நாம், பவுல் மற்றும் பர்னபா ஆகியோரின் முதல்சுவிசேஷப் பயணத்திற்குப் பின் தீத்து பவுலுடன் இருந்தார் என்றுஅறிகின்றோம். புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு விருத்தசேதனம் செய்வித்தல்பற்றிய கேள்விக்கு முடிவு ஒன்றைப் பெறுவதில் சபையின் உதவியைப்பெறுவதற்காக அவர்கள் எருசலேமுக்கு அனுப்பப்பட்ட பொழுது “வேறுசிலரும்" அவர்களுடன் துணையாகச் சென்றனர், அவர்களில் தீத்துவும்இருந்தார்.'' இவ்விதமாகத் தீத்து விருத்தசேதனம் பற்றிய கேள்வியின்தொடர்பாக “எடுத்துக்காட்டு - அ” வாக இருந்தார், கிறிஸ்துவுக்குள் உண்டான சுவிசேஷச் சுயாதீனம் இழக்கப்படாதபடிக்கு பவுல் இவர்மூலமாக ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டார் (அப். 15:1-29; கலா.2:3-5ஐக் காணவும்).
கொரிந்துவில் கலகப் படுத்தப்பட்ட சபைக்கு தீத்து ஒரு விசேஷித்ததூதாளராக இருந்து (2 கொரி. 2:13; 7:5-14; 12:17, 18ஐக் காணவும்),பவுலுக்கு ஆறுதலின் வார்த்தைகளைத் திரும்பக் கொண்டு வந்தார்.தீத்துவால் தரப்பட்ட எந்த அறிக்கையையும் நம்பிக்கைக்குரியதாகப் பவுல்கண்டார் என்பது தெளிவு. தீத்துவின் மீதான மற்ற நம்பிக்கையும் தெளிவாய்உள்ளது, ஏனெனில் எருசலேமில் இருந்த ஏழைகளுக்கு நிதி சேகரிக்கஉதவும்படி அவர் தேர்ந்து கொள்ளப்பட்டார் (2 கொரி. 8:6-24).
"நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்கு படுத்தும்படிக்கும், நான்உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களைஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேனே” (1:5)என்ற வசனத்தின்படி தீர்த்துவைப் பவுல் கிரேத்தா தீவிலே விட்டுவந்திருந்தார்.15 பிற்பாடு, தீத்து நிக்கொப்போலியிலிருக்கும்படி விரும்பப்பட்டார், பவுலின் இரண்டாம் சிறையிருப்பின்போது ரோமாபுரியில் அவர்(தீத்து) இருந்தார், தல்மாத்தியாவுக்கு அனுப்பப்பட்டார் (3:12;2 தீமோ . 4:10).
இந்தப் பணி ஒப்படைப்புகள் யாவையும் "சபைப் பிரச்சனைகளைத்தீர்த்து வைத்தல்” போன்ற இவ்வித கடினமான கடமைகளுக்குப் பவுல்சார்ந்திருக்க முடிந்த ஒரு நபராகத் தீத்துவை அடையாளப்படுத்துகின்றன.அவர் பணம் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றில் நம்பப்படத் தக்கவராயிருந்தார். அவர் மனிதர்களைச் சீர்படுத்துபவராக, ஒருங்கமைப்பவராக,ஓரிடத்தில் விட்டுச் செல்லப்படும்பொழுது கைமேல் உள்ள பணியைச்செய்யத்தாமாகவே தொடங்குபவராக இருந்தார். தீத்து அமைத்து வைத்தமாபெரும் உதாரணத்திலிருந்து எந்த ஒரு சுவிசேஷ ஊழியரும் இந்தஇடத்தில் நிதானித்திருக்கவும் பின்வரும் நான்கு மடங்கு பரீட்சைக்குத்தம்மைத் தாமே ஒப்புக் கொடுக்கவும் திறம்படச் செயலாற்றுவார்:
1. விமர்சனத்தை நீங்கள் எந்த அளவுக்கு நன்றாய்க் கையாள முடியும்?(கலா . 2:3-5; அப். 15:1-29)
2. பிறர் செய்துள்ள அல்லது செய்து கொண்டுள்ள பணியைக் குறித்துநீங்கள் மிகச் சரியான, நம்பத் தகுந்த அறிக்கையைக் கொடுக்க முடியுமா(கொடுப்பீர்களா?
3. ஒவ்வொரு நகரிலும் மூப்பர்களை நியமிக்கும் அளவுக்கு (குறைவாய்)எஞ்சியுள்ள யாவற்றையும் நீங்கள் ஒழுங்கு படுத்த முடியுமா (1:5)? பல்சபைக்குழுமங்களில் கர்த்தருடைய ஊழியமானது நிறுவன அமைப்பளவில்நிறைவடையாததாக விடப்பட்டுள்ளது.
4. நிதிகள் மற்றும் பொருளாதாரங்கள் ஆகியவற்றைக் கையாள்வதில்நீங்கள் நம்பத் தகுந்தவர்களாய் இருக்கின்றீர்களா (2 கொரி. 8:6, 16-21, 23,24)? சுவிசேஷ ஊழியர்கள் தீர்த்து அமைத்துள்ள நியமத்தின் மாதிரியாயிருக்கத் தவறியதால் சபைக்குழுமத்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும்செய்யப்பட்டுள்ள சேதத்தைக் கர்த்தர் மட்டுமே அறிவார்.
பவுல் தீத்துவுக்குக் கொடுத்த இப்படிப்பட்ட பொறுப்புள்ளபணிகளின் கண்ணோக்கில், பவுல் தீத்துவை “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம் குமாரன்" (தீத்து 1:1) என்று குறிப்பிட்டதில் வியப்பெதுவும்இருப்பதில்லை . பல வகைகளில் பவுலும் தீத்துவும் "ஒரே ஆவியைஉடையவர்களாய்” நடந்தனர் (2 கொரி. 12:18ஐக் காணவும்). கிறிஸ்துவினிமித்தமும் அவருடைய மக்களினிமித்தமும் தீத்துவின் இருதயத்தில்(2 கொரி. 8:16, 17) தேவன் “ஜாக்கிரதையை”16 வைத்ததாகப் பவுல் உறுதிப்படுத்தினார். ஊக்கம் மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கான ஞானம்ஆகியவற்றுடன் கலக்கப் பட்ட இந்த ஜாக்கிரதையுள்ள ஆவியானதுதீத்துவைப் பவுலுடனும் கர்த்தருடனும் பணியாற்றும் விலைமதிப்பற்ற ஒருஉடன் ஊழியராக்கிற்று.
"நீங்களும் சென்று அந்தப்படியே செய்யுங்கள்!” என்ற கண்ணோட்டத்துடன் தீத்துவின் வாழ்வையும் ஊழியத்தையும் ஜாக்கிரதையாய்ப் படிக்கும்சுவிசேஷ ஊழியர் எவரும் நன்கு செயல்படுவார்.
இந்த நிருபம் ஏன் எழுதப்பட்டது, யாருக்காக எழுதப்பட்டது,யாருக்கு எழுதப்பட்டது என்பதை அறிந்துள்ள நாம் இப்பொழுது வசனப்பகுதிக்குள் சென்று என்ன எழுதப்பட்டது என்பதைக் கவனமாய்ப்படிப்போம்.
தீத்துவுக்குப் பவுல் எழுதுகையில், அவர் (பவுல்) சில விளக்கங்கள்தேவைப்படுகிற மக்கள் பலர், பல இடங்கள் மற்றும் கருத்துக்களைக்குறிப்பிட்டார். நாம் இப்புத்தகத்தைப் படிக்கு முன் இவற்றில் சிலவற்றைஆராய்வோம்.
தீத்துவில் மக்கள்
அப்பொல்லோ
"நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒருகுறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்துவழிவிட்ட னுப்பு ” (3:13).
இந்த மனிதருக்கும், அப். 18 மற்றும் 19ன் சாதுரியவானானஅலெக்சந்திரிய நகரின் யூத போதகருக்கும் இடையில் வித்தியாசம் எதுவும்ஏற்படுத்தப்படாதபடியால், இந்த அப்பொல்லோ அதே மனிதராயிருக்கலாம் என்று நாம் யூகிக்கின்றோம். இவர் அப். 18:24; 19:1; 1 கொரி. 1:12;3:4-6; 3:22; 4:6; 16:12 ஆகிய வசனங்களிலும் குறிப்பிடப்படுகின்றார்.
அர்த்தெமா
"நான் அர்த் தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில்அனுப்பும்போது, நீ நிக்கொப்போவிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்” (3:12).
பவுலின் இந்தத் துணையாளர் பற்றி இந்த ஒரே ஒரு குறிப்பிடுதல்மட்டுமே உள்ளதால், நாம் இவரைப் பற்றி வேறு வகையில் அறிவதில்லை.
தீத்து
"... பொதுவான விசுவாசத்தின்படி உத்தம் குமாரனாகிய தீத்துவுக்குஎழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும்சமாதானமும் உண்டாவதாக" (1:1, 2).
பவுலுடன் பதினைந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள்நம்பிக்கைக்குரிய உடன் அளழியராய் இருந்த தீத்து ஒரு நண்பராக, உயர்வாகமதிக்கப்பட்டவராக இருந்தார். அவரது பெயர், நடபடிகள் புத்தகத்தில்காணப்படுவதில்லை , இருப்பினும் அப். 15:2ல் "வேறு சிலர்" என்றுகுறிப்பிடப்படும் இடத்தில் தீத்து குறிப்பிடப்பட்டார் என்று கலா. 2:3உறுதிப்படுத்துகிறது. யூதர்களுக்கும் புறஜாதியார்களுக்கும் இடையிலானஐக்கியத்தின் மீதான எருசலேம் மாநாட்டின் போது யூதத்துவ வாதிகளால்(பவுலிடம்) தீத்து விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்ட பொழுது பவுல் அதைச் செய்விப்பதற்கு மறுத்துவிட்டார். இது கலா. 2:3ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீத்து ஒரு புறஜாதியாராயிருந்தார். ஆபிரகாமுடனான விருத்தசேதன.உடன்படிக்கையானது (ஆதி. 17) புறஜாதியாருக்கு யூதத்துவ விருத்தசேதனம் செய்வித்தலைக் கேட்டுக் கொண்டிருக்க முடிந்திராது. ஏனெனில்அது எபிரெயர்களுடன் எபிரெயர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது.கிறிஸ்தவ/கிறிஸ்துவின் சுவிசேஷமானது எவரொருவருக்கும் விருத்தசேதனம் செய்விக்கும்படி கேட்டுக் கொள்வதில்லை. ஆகையால், இப்படிப்பட்ட ஒரு சடங்காச்சாரத்திற்குக் கீழ்ப்படியும்படி தீர்த்துவை எவரொருவரும் கேட்டுக் கொள்வதற்கு உறுதிப்பாடுகள் எதுவும் இல்லாதிருந்தன,இது சட்டப்பூர்வமான வாதத்திற்கு எதிரான முக்கியமான சாட்சியாயிற்று.
தீத்து, பிலிப்பி, தெசலோனிக்கே, பெரேயா, கிரேத்தா மற்றும்தல்மாத்தியா ஆகிய இடங்களில் இருந்த சபைகளுடன் /சபைகளில்ஊழியம் செய்திருந்தார். இவர் வேதாகமத்தில் மொத்தம் பதிமூன்றுமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளார் - 2 கொரிந்தியரில் எட்டு முறைகள்குறிப்பிடப்பட்டுள்ளார், அங்கு அவர் யூதேயாவின் பரிசுத்தவான்களில்ஏழைகளுக்காக நிவாரண நிதி சேகரிப்பதில் உதவினார் என்பது தெளிவாகஉள்ளது. பவுல் 2 கொரிந்தியர் நிருபத்தை எழுதுமுன்பு, கொரிந்துவில்இருந்த சூழ்நிலையை அறிவதற்காக தீத்துவைச் சந்திப்பதற்குஎபேசுவிலிருந்து மெக்கதோனியாவுக்குப் பயணப்பட்டார்.
தீகிக்கு
"நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில்அனுப்பும் போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிக்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்” (3:12).சிறிய ஆசியாவிலிருந்து வந்த கிறிஸ்தவரான தீகிக்கு, கிரேக்கத்திலிருந்துஎருசலேமுக்குப் பவுலுடன் துணையாளராக வந்தார், இவர் எபேசு,கொலோசே பட்டணங்களுக்கும் பிலேமோனுக்கும் நிருபங்களைக் கொடுக்கும்படி பவுலினால் அனுப்பப்பட்டார். இவரே கொலோசெயர்களுக்குப் போதித்தார் மற்றும் கொலோசெயில் பின்னாளில் ஏற்பட்டதேவனை மறுக்கும் விஷயம் ஒன்றைக் கையாள்வதில் பவுலின் உதவியைநாடினார் என்பவை உறுதியானவைகளாகும். வேத வசனங்களில் இவர்ஐந்து முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளார் (அப். 20:4; எபே. 6:21;கொலோ . 4:7; 2 தீமோ . 4:12; தீத்து 3:12).
சேனா“நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒருகுறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்ட னுப்பு ” (3:13).இந்த நியாயசாஸ்திரி (அநேகமாக இவர் யூதத்துவப் பிரமாணத்தில்வல்லுநராய் இருந்திருக்கலாம்) அறியப்படாத ஒரு இடத்திற்குஅப்பொல்லோவுடன் பயணப்பட்டிருந்தார். அவர்கள் தீத்துவுக்குஎழுதப்பட்ட இந்த நிருபத்தை கொண்டு சென்றிருக்க சாத்தியக் கூறுஉள்ளது. இவர்கள் கிரேத்தாவைக் கடந்து செல்லுகையில் இவர்களின்பயணத்திற்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவும்படி பவுல்தீத்துவிடத்தில் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

