தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை
டாக்டர். மீட்டர் மாஸ்டர்ஸ்
தமிழாக்கம் : டாக்டர். டேவிட் இளங்கோவன்
அத்தியாயம் 1
நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரைநாம் எப்படி நடத்துகிறோம்?
"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலேபெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்தஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள்உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1கொரி 6:19).நித்தியமான, மாறாத பரிசுத்த ஆவியானவர் ஒருவிசுவாசிக்குள் தங்கியிருப்பதின் உன்னதமான சிலாக்கியத்தைஎவரும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாது. அநுதினமும்நாம் சந்திக்கும் பலவிதமான சந்தோஷங்கள், துக்கங்கள்,சோதனைகள், பாடுகள் போன்ற அனைத்தும் பலவிதமானவிளைவுகளை நம்மில் ஏற்படுத்துகிறது. பல சமயங்களில்,பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார் என்றும்நம்முடைய எண்ணங்களினால் மற்றும் செயல்களினால் அவர்சந்தோஷமோ அல்லது துக்கமோ அடைகிறார் என்றும் நாம்உணருவதில்லை . அவர் எப்பொழுதும் நமக்குள் இருக்கிறார்என்று நாம் அறியாமலேயே, பலவிதமான தவறுகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.
ஒரு உண்மையான விசுவாசியின் சரீரமானதுகர்த்தருக்கே சொந்தமானது. அது உலக ஆசை அல்லது பாவஆசைக்குள்ளாக சென்றாலும், நமக்குள்ளே வாசமாயிருக்கும்பரிசுத்த ஆவியானவர் அதினால் துக்கப்படுகிறார் என்று பவுல்பின்வருமாறு கூறுகிறார். "அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரை
யாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" (எபே 4:30). அல்லதுஇன்னும் தெளிவாக கிரேக்க வேதாகமத்தில் "பரிசுத்தநபராகிய, பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்”என்று கூறப்பட்டுள்ளது.
ஆவிக்குரிய வாழ்க்கையில் உள்ள இந்த மகத்துவமானஉண்மையை விளங்கிக்கொள்ளாதவர்களாய் நாம் எப்படி இருக்கமுடியும்? தேவன், ஒவ்வொரு மீட்கப்பட்ட இருதயத்திலும்தங்கி தாபரித்து, "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,கைவிடுவதுமில்லை" என்று அறிவிக்கும்போது, நாம் எப்படிஇதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியும்? மனமாற்றம்நிகழும் அட்சண நேரத்திலிருந்து, ஒவ்வொரு கிறிஸ்தவனிலும்பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறவராய் இருக்கிறார்.இதைத்தான் வேதமும் பின்வருமாறு கூறுகிறது. "கிறிஸ்துவின்ஆவியில்லாதவன் அவருடையவனல்ல"(ரோமர் 8:9).
பரிசுத்த ஆவியானவரை அவமதிப்பதைக்குறித்து மூன்றுவிதமான பதங்களில் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.அவரை ஒன்று நாம் எதிர்க்கலாம் அல்லது இரண்டவதாகஅவித்துப் போடலாம் அல்லது மூன்றாவதாக துக்கப்படுத்தலாம்.இந்த ஒவ்வொரு வார்த்தையும், நம்மில் வாசமாயிருக்கிறவரைபாதிக்கும்படியான அளவாகும். அவர் நம்மில் வாசமாயிருக்கிறார்என்பதையும் அவருக்கு கொடுக்க வேண்டிய கனம், மரியாதை,சார்ந்திருத்தல், நன்றிகள் அனைத்தையும் நாம் எவ்வளவுசீக்கிரத்தில் மறந்துவிடுகிறோம்!
முதலாம் இரத்த சாட்சியாய் மரித்துப்போனஸ்தேவான், சுய நீதிக்காரராய் இருந்த பரிசேயர்களுக்குகொடுத்த தன்னுடைய மகத்தான பிரசங்கத்தில் பின்வருமாறுசொல்லுகிறார். "நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும்எதிர்த்து நிற்கிறீர்கள்” (அப் 7:51). கிரேக்க மொழியில், ஒன்றிற்குஎதிராக விழுதல் அதாவது திறக்க வேண்டிய கதவைத்திறக்கவிடாமல், தன்னுடைய தோள்பட்டையை வைத்துதடுத்து நிறுத்துவதைக் குறிக்கிறது. எதிர்த்தல் என்பது பரிசுத்தஆவியானவருக்கு எதிராக செயல்படுவது ஆகும். ஸ்தேவானுடைய
பிரசங்கத்தை கேட்டவர்கள் இரட்சிப்பை எதிர்த்தார்கள். ஒருபெரிய பாவத்தை அப்புறப்படுத்தாமல் மறுப்பதினாலோ, சுயஇஷ்டமான பாதையை தெரிந்துகொள்ளுவதினாலோ, மற்றும்ஊழியத்திற்கு கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம்தெளிவான அழைப்பை விடுக்கும்பொழுது, சுய இஷ்டமானபாதையை தெரிந்து கொள்ளுவதினாலோ, மற்றும் ஊழியத்திற்குகர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் தெளிவானஅழைப்பை விடுக்கும்பொழுது, அதை தவிர்ப்பதினாலோ,விசுவாசிகளாகிய நாமும் அவருடைய தெளிவான சித்தத்தைசெய்வதில் எதிர்க்கிறவர்களாய்க் காணப்படலாம். நமக்குசரி என்று நன்றாகத் தெரியும். இருந்தும் நம்முடைய முழுபாரத்தையும் கீழ்ப்படியாமை என்ற கதவுக்கு எதிராகவைக்கிறோம். நமக்குள் கிரியை நடப்பிக்கிற தேவத்துவத்தின்அங்கமாய் இருக்கிற, நம்முடைய ஆத்துமாவிற்கு நித்தியமானஅன்பும், மகிமையான பாதுகாவலருமாய் இருக்கிற ஒரு நபரைஎதிர்க்கிறோம்.
பரிசுத்த ஆவியானவரை எதிர்த்தல் என்பது.பைத்தியகாரத்தனம் அல்லது நம்மை நாமேகாயப்படுத்துகிறதாகும். நிச்சயமாக நமக்குள் வாசம் பண்ணுகிறதேவன் நம்மை வேதத்தின் சத்தியத்திற்குக் கீழ்ப்படியஎதிர்பார்க்கும் கடமைக்கு நாம் கீழ்படியாமல் போகும் போதுதேவனுக்கு நம்முடைய இதயக் கதவை அடைக்கிறோம்.
இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவரைபாதிக்கும்படியான செயல் 1 தெச 5:19 -ல் "ஆவியைஅவித்துப்போடாதிருங்கள்” என்று பார்க்கிறோம். இங்கேசொல்லப்படும் பரிசுத்த ஆவியானவரின் பணி, இருதயத்தில்எழும்பும் நெருப்புதழல் போன்ற பரிசுத்தவாஞ்சை, வைராக்கியம்,திடநம்பிக்கை ஆகியவற்றைச் சுட்டிக் காண்பிக்கிறது. தேவன்தம் பணிக்கென்று, நம்மை இன்னுமாய் ஒப்புக்கொடுக்கவும்,ஆழமாய் அவருக்காக ஊழியஞ்செய்யவும் நம்மைத் தூண்டச்செய்யும் பொழுது, அதற்கு இணங்க மறுக்கும்படியான
செயல், ஆவியை அவித்துப்போடுதலைக் குறிக்கிறது. நாம்முதல் குறிப்பில் பார்த்தது போல, அவர் வலுகட்டாயமாகஎதிர்க்கப்படுகிறவராய் அல்ல, ஆனால் அவருடைய உந்துதலும்,வற்புறுத்துதலும் அடக்கப்படுகிறதைக் காட்டுகிறது. அதாவது,நம்முடைய மனதில் அப்படியான உந்துதல், வற்புறுத்தல்எழும்பினாலும் நாம் அதைக் கண்டுகொள்ளாமல் அதைவிட்டு கடந்து போவதைக் குறிக்கிறது. விசுவாசி உபதேசத்தில்(Doctrine) உண்மையாய் இருக்கலாம். ஆனால், அவனுடையநடைமுறை வாழ்க்கையில் உள்ள செயல்கள் கடவுளோடுஒத்துப்போகாததாய் இருக்க வாய்ப்புண்டு.
இழந்து போன ஆத்துமாக்களைக் குறித்தோ,சத்தியத்தைக் குறித்தோ, ஆண்டவரைக் குறித்தோ வைராக்கியம்மற்றும் அன்பு ஆகியவை பரிசுத்த ஆவியானவரால்உண்டாக்கப்படுகிற நெருப்பு அல்லது நெருப்பு தழலாய்இருக்கிறது. அதுமாத்திரமல்ல, பரிசுத்த ஆவியானவரால்உண்டாக்கப்படுகிற இந்த காரியம், தொடர்ந்து நம் வாழ்வில்,பாவத்தைக் குறித்த உணர்வையும், தேவனுக்கேதுவானமனந்திரும்புதலையும், நம்முடைய தவறான நடத்தையின்மீது கோபத்தையும் உண்டாக்கி, நம்மை சீர்ப்படுத்துவதற்குஏதுவான வைராக்கியம், வாஞ்சை மற்றும் ஜாக்கிரதையைக்கொண்டவர்களாய் நம்மை மாற்றுகிறது. (இதை நாம் 2கொரி7:11 -ல் பார்க்க லாம்).
ஆவியானவருடைய அனல் அல்லது நெருப்புத் தழல்,நம்மை சாட்சியாய் இருப்பதற்கும், மற்றவர்களுக்கு உதவியாகஇரக்கத்துடன் செயல்படுவதற்கும் நம்மை வற்புறுத்தலாம்.ஆனால் ஆவியானவரால் நம்முடைய இருதயத்தில்எழுப்பப்படுகிற தெய்வீக வாஞ்சை மற்றும் நோக்கங்களைநாம் அவித்துப் போடுகிறோமா? மனசாட்சியின் நிமித்தம்எழும்புகிற துரித செயல்களை நாம் அடக்குகிறவர்காளாகவும்,அவித்துப் போடுகிறவர்களாகவும் இருக்கிறோமா? ஆவிக்குரியவைராக்கியத்தை வளர்க்கும் போது, சில நேரங்களில் நமக்கு அது
அசெளகரியமாகவும், நம்முடைய விருப்பத்திற்கு எதிர்மாறாகவும்அல்லது அதிகவிலை கொடுக்க வேண்டியதாகவும் இருக்கிறதா?நற்செயல்கள், ஒப்புக்கொடுத்தல், நன்றியுள்ளவர்களாய்இருத்தல், துதி மற்றும் ஜெபம் ஆகியவற்றிலிருந்து விலகிப்போகிறவர்களாய் இருக்கிறோமா?
கிறிஸ்தவர்களாய் இருந்துவிட்டு இதை நாம் எப்படிசெய்ய முடிகிறது? தெய்வீகமான அனைத்து உணர்வுகளுக்கும்,உந்துதலுக்கும் காரண கர்த்தராய் இருக்கிற வல்லமையானபரிசுத்த ஆவியானவரான தேவன் தாமே, என்றென்றும் நம்மில்தங்கித் தாபரிக்கிறவராய் இருக்கிறார் என்பதை நாம் எப்படிஎளிதில் மறக்கிறவர்களாய் இருக்கிறோம்?
அவ்வப்பொழுது சந்தித்துவிட்டுப் போகிறவராய்இருக்கிற பரிசுத்த ஆவியானவரை நாம் கொண்டிராமல், அதைவிட மேலான, நம்மில் நித்தமும் தங்கயிருக்கிற தெய்வீகம்பொருந்திய நபராய். நம்மில் மரித்துக் கொண்டிருக்கிறஆவிக்குரிய காரியங்களை, முழுமையாக எழுச்சிக்குள்ளாககொண்டுவரும்படி புதுப்பிக்கிறவராய் இருக்கிறார். ஆனால், நாம்அவருடைய உண்மையான பிரசன்னத்தையும், மகிமைகரமானஉபதேசத்தின் பார்வையையும் இழந்துவிடுகிறோம். மேலும்நமக்குள் கிரியை நடப்பிக்கிற பரிசுத்த ஆவியானவரின்உற்சாகமும், உத்வேகமும், எழுப்புதலையும் அடக்குகிறவர்களாய்இருக்கிறோம்.பரிசுத்த ஆவியானவரை நாம் இழிவுபடுத்தும்படியானமூன்றாவது காரியம் எபேசியர்4:30-ல் பார்க்கிறோம். "அன்றியும்,நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்றதேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்”,இந்த கடிந்து கொள்ளுதல்
பரிசுத்த ஆவியானவர் நம்இருதயத்தில் மறைந்திருப்பதைக் காண்பிக்கிறதாக இருக்கிறது.நிச்சயமாக அவர் துக்கப்படுகிறார் என்பதின் வெளிப்பாடாகஅது இருக்கிறது. அதாவது, அவமரியாதையான மற்றும்தாறுமாறான போக்கைக் கொண்ட விசுவாசியினால், பரிசுத்த ஆவியானவர் வருத்தம் மற்றும் கவலைக் கொள்ளுவதைக்குறிக்கிறது. நமது வித்தியாசமான போக்கினால், நித்தியமான,என்றென்றும் நம்மில் தங்கித் தாபரிக்கிற நமதாண்டவர்பாதிக்கப்படுகிறார், காயப்படுத்தப்படுகிறார். நம்மில்அவருடைய பணியானது அசட்டை பண்ணப்படும் பொழுதுபரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார். உண்மையாகச்சொல்லப்போனால், பரிசுத்த ஆவியானவர் நாம் நினைப்பதற்குமேலாக, அதிகமான வேதனைக்குள்ளாக்கப்படுகிறார்.வேதமும் இப்படித்தான் சொல்லுகிறது. நம்மீதுள்ள பரிசுத்தஆவியானவரின் அன்பு, கிறிஸ்துவின் அன்பைப் போல மிகப்பெரிதானது. ஆம்! அவருக்கு முன்பாக, சிறு தூசி போலகாணப்படுகிற நம்மைக் குறித்து அக்கறை கொள்ளுகிறவராய்இருப்பதினால், அவருடைய அன்பு எவ்வளவு பெரியது என்றுபாருங்கள்.
ஒரு வினோதமான கேள்வி யாக்கோபு 4:5 -ல்கேட்கப்படுகிறது. "நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்றுவேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?", அதாவது நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்நம்மிடத்தில் வைராக்கியத்தையும் ஏக்கத்தையும் கொண்டவராய்இருக்கிறார். நமக்கு அன்புக்குரியவர்களோ அல்லதுநம்முடைய சொந்த பிள்ளைகளோ தவறு செய்யும்போது, நாம்எவ்வளவு வருத்தப்படுகிறோமோ, அதேபோல நம்முடையதவறுகளினாலும், பின்வாங்குதலினாலும் மிகுந்த அன்புகொண்ட பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார். பரிசுத்தஆவியானவர் நம்மேல் எவ்வளவு அக்கறையாக உள்ளார்என்பதை நாம் உண்மையாய் புரிந்துகொள்ளுவோமானால்,அது எவ்வளவு பெரிய தாக்கத்தை நம்மில் ஏற்படுத்த முடியும்.
பவுல் தன்னுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவருக்குதான் எவ்வளவாய் கடன்பட்டிருக்கிறார் என்பதைநன்றாய் அறிந்திருப்பதை பின்வரும் வசனங்களின்
மூலம் பார்க்கமுடிகிறது. "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும்,உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்" (ரோமர் 15:32). பவுல்,பரிசுத்த ஆவியானவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதைஇப்பகுதியில் சொல்லுகிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைநேசிப்போம் என்றால், அவரை துக்கப்படுத்தமாட்டோம்,மாறாக முன் எப்போதும் இல்லாதபடி சுவிசேஷத்தின்வளர்ச்சிக்காக ஜெபிப்போம். "பரிசுத்த ஆவியானவரைதுக்கப்படுத்தாதிருங்கள்" என்ற அறிவுறுத்தல் எதைகுறிக்கிறதென்றால் பரிசுத்த வாழ்க்கையைக் குறிக்கிறது. அதாவதுபழைய மனுஷனைக் களைந்து போட்டு, புதிய மனுஷனைஅணிந்து கொள்ளுவதைக் குறிக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில்அசிங்கமான பேச்சுக்கள் இருக்கக்கூடாது. அது பெருமையுள்ளபேச்சாக இருக்கலாம், உலகப் பேச்சாக இருக்கலாம், இழிவானபேச்சாக இருக்கலாம், மிகைப்படுத்தப்பட்ட பேச்சாகஇருக்கலாம் அல்லது அசுத்தமான, கசப்பு எண்ணங்களைக்கொண்ட, காயப்படுத்துகிற, வெட்டிப் பேச்சு பேசுவதாகக்கூட இருக்கலாம். இவை அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்.
நாம் எப்படி பரிசுத்த ஆவியானவரைதுக்கப்படுத்துகிறோம்? பரிசுத்த ஆவியானவர் நம்மில்கிரியை செய்யும்போது, மனசாட்சி பாதிக்கப்படுவதைத்தவிர்க்கும்போதும், நம்மில் காணப்படும் பாதகமானவார்த்தைகளையும், செயல்களையும் சரி பார்க்க நாம் தவறும்போதும் அவர் துக்கப்படுகிறார். இப்படியான செயல்களைநாம் தொடர்ந்து செய்யும்போது அது எப்பேர்ப்பட்டபாவமாக இருந்தாலும், கடைசியாக மனசாட்சிசெயலற்றதாய்ப் போய்விடும். மேலும் நாம் கண்மூடித்தனமாகபாவ பேச்சுகளைப் பேசுகிறவர்களாய், பாவ செயல்களைச்செய்கிறவர்களாய் காணப்படுவோம். அதோடு மாத்திரமல்ல,தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதத்தையும், அவருடன்கொண்டிருக்கும் ஐக்கியத்தையும் இழந்துவிடுவோம்.அதேபோல மற்றவர்களிடத்தில் மெல்லிய இருதயமும்,
தனிப்பட்ட அன்பையும் காண்பிக்கவும், அதற்காகஜெபிக்கவும் தவறும்போது, இப்படியான ஒழுக்கங்களைநம்மில் வளரச்செய்யும் பரிசுத்த ஆவியானவரை நாம்துக்கப்படுத்துகிறோம் (எபேசியர் 4:29-32).
பரிசுத்த ஆவியானாவர் நம்மீது ஏன் துக்கப்படுகிறார்?அதற்கான முக்கிய காரணங்களை நாம் பார்ப்போமேயானால்,மிக உதவியாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் வருத்தத்திற்குதெளிவான முதல் காரணம் என்னவென்றால் அவர் பரிசுத்தராய்இருக்கிறார் என்பதே. பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகநாம் அருவருப்பான காரியங்களைச் செய்யும்பொழுது அவர்துக்கப்படுகிறார். ஆகமொத்தம் பரிசுத்தமும், தூய்மையும்கொண்ட ஒருவர் உயர்ந்த ஸ்தானத்திலிருந்து இறங்கி, நம்மில்வாசம் செய்கிறார். ஆனால் நம்முடைய எண்ணங்களிலும்,இருதயத்திலும் பல்வேறு இழிவான காரியங்களுக்குஇடங்கொடுத்து அவரைக் காயப்படுத்துகிறோம்.
நம்முடைய ஆத்துமாக்களில், அவர் செய்த கடந்தகாலசெயல்களை மிதிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர்மேலும் துக்கப்படுகிறார். இந்த பரிசுத்த ஆவியானவர்தான்சுவிசேஷத்திற்கு செவிசாய்க்கும்படியாக நம்முடையஇருதயத்தை திறந்தார். நம்மில் காணப்பட்ட முரட்டாட்டமானகுணத்தை மிருதுவாக்கினார். ஆவிக்குரியவைகளை கண்டறியநம்முடைய கண்களைத் திறந்தார். பாவத்தைக்குறித்ததானஆழமான உணர்வுக்கு நம்மைக் கொண்டுவந்தார். கிறிஸ்துவைஒரே இரட்சகராகிய ஆண்டவராக நமக்குக் காண்பித்தார்.பிறகு நாம் அவருக்கு இணங்கி நம்மையே முற்றிலுமாகஅவருக்கு அர்ப்பணித்தோம். ஆனால், இப்பொழுதோ நம்மில்வல்லமையாய் கிரியை நடப்பித்த அந்த பரிசுத்த ஆவியானவரின்வழிநடத்துதலுக்குச் செவிசாய்க்கக் கஷ்டப்படுகிறோம்.முக்கியமாக சொல்லப்போனால், அவர் இருக்கிறார் என்றஉணர்வற்றவர்களாகக்கூடக் காணப்படுகிறோம்.
ஆம்! நிச்சயமாக கிறிஸ்துவானவர் நமக்காக மிகப்பெரியகாரியத்தைச் செய்ததினால், பரிசுத்த ஆவியானாவர்துக்கப்படுகிறவராய் காணப்படுவார். ஒவ்வொரு ஆத்துமாவின்இரட்சிப்புக்காக, இரட்சகராகிய இயேசுவானவர் எவ்வளவுபெரிய விலைக்கிரயத்தைச் செலுத்த வேண்டியதாய் இருந்ததுஎன்று பரிசுத்த ஆவியானாவர் மற்றும் பிதாவானவரைத் தவிரவேறு யாருக்குத்தெரியும்? நம்மை மீட்பதற்காக, நம்மீதுகாணப்பட்ட நித்தியமான தேவனுடைய கோபாக்கினையையும்,பாவத்தின் சாபத்தையும் கிறிஸ்துவானவர் சிலுவையில் சுமந்தார்.அதினால், அவர் நம்முடையவராக நித்தியமான மகிமையின்இராஜாவாக என்றென்றும் நமக்கு காணப்படுகிறார். இவ்வளவுபெரிய மகத்தான காரியத்தை நமக்கு செய்திருக்கிற அவருக்கு,நாம் எந்த விதத்தில் பதிலுக்கு திருப்பி செலுத்துகிறவர்களாய்இருக்கிறோம்? பல சமயங்களில் முறையற்ற செயல்களினால்,பரிசுத்தத்திற்கு ஏதுவான வாழ்க்கை வாழ்வதற்கு நாம் அக்கறைகொள்ளாதவர்களாயும், தேவனுக்கடுத்த காரியங்களைவிட, உலகப் பிரகாரமான காரியங்களில் அதிகம்செலவிடுகிறவர்களாயும் இருக்கிறோம்.
பரிசுத்த ஆவியானாவர் நமக்காக அதிகமாகதுக்கப்படுகிறவராய் இருக்கிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும்இல்லை. ஏனென்றால், நம்மில் காணப்படும் பரிசுத்தஆவியானவரின் தூண்டுதல்களைப் புறக்கணிக்கும் பொழுதுநாம் சந்திக்கும் விளைவுகள் மற்றும் இழப்புகளைக் குறித்துஅவருக்குத் தெரியும். உதாரணமாக, தேவனுடன் கொண்டுள்ளஐக்கியத்தின் இழப்பு, சுவிசேஷத்திற்காக கொடுக்கும் உழைப்பில்இழப்பு, ஜெபத்திற்குண்டான ஆர்வத்தில் இழப்பு மற்றும்ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியில் இழப்புபோன்றவைகளைக் கூறலாம்.
மேலும் நம்மில் காணப்படும் ஆவிக்குரிய மந்தத்தினால்விளையும், பரிசுத்தமற்ற, வைராக்கியமற்ற வாழ்க்கையைஇளம் விசுவாசிகள் பார்ப்பதினாலும், நம்மைச் சுற்றியிருக்கிறது
இரட்சிக்கப்படாத மக்கள். நம்முடைய குளிர்ந்து போனநிலையையும், தாறுமாறான வாழ்க்கையையும் பார்க்கிறதினால்பரிசுத்த ஆவியானாவர் மிகுந்த துக்கப்படுகிறார்.ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த மீறுதல், நம்முடையஇருதயத்தில் நிகழும்போது, பரிசுத்த ஆவியானாவர் நிச்சயமாகதுக்கப்படுகிறவராய் காணப்படுகிறார். கர்த்தர் நமக்குக்கொடுத்துள்ள முழுமையான கிறிஸ்துவப் பொறுப்பிலிருந்துவிலகி, அதை மீறும் பொழுதும், பெருமை, சுய பற்று,பொருளாசை, நன்றியற்றத் தன்மை ஆகிய அனைத்தும்நம்மில் ஆரம்பிக்கும் பொழுதும், பரிசுத்த ஆவியானாவர் நாம்புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு துக்கப்படுகிறார்.
நாம் இங்கே சொல்லப்பட்ட பரிசுத்த ஆவியானவரின்அனைத்து செயல்களின் தூண்டுதல்களும், வேதத்திற்குவெளியிலிருந்து ஒருபோதும் வராது. அவர் நமக்குஅதிகாரப்பூர்வமான சத்தியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.நாம் எதையெல்லாம் அறிந்து கொள்ளவேண்டுமோ அவை,அனைத்தையும் கர்த்தருடைய வேதத்தில் முழுமையாககொடுக்கப்பட்டுவிட்டது என்று வேதம் தெளிவாய்போதிக்கிறது. தேவனுடைய ஞானம், இரட்சிப்பு, கிறிஸ்தவவாழ்வு மற்றும் சபையின் செயல்பாடுகள் அனைத்திற்கும் இந்தவேதம் முழுமையானதும், நிறைவானதும், போதுமானதும்அதிகாரம் கொண்டதுமாய் இருக்கிறது. இன்றைய நாட்களில்காணப்படும் நவீனமான அனைத்தும் அதாவது, தரிசனம்மற்றும் நேரடி வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு புதிதுபுதிதாக வெளிப்படுத்துகிற அனைத்தும் பொய்யானவைகள்மற்றும் தவறானவைகள் ஆகும்.
பரிசுத்த ஆவியானாவர் மனசாட்சியைத்தொடர்ந்து தூண்டுகிறவராகவும், வேதத்தை நமக்குநினைவுபடுத்துகிறவராகவும், அவற்றைப் புரிந்து கொள்ள உதவிசெய்கிறவராகவும், மனதை தெளிவாக்குகிறவராகவும், நாம்மறந்து போகிற ஆவிக்குரிய கடமைகளையும், முக்கியமான
காரியங்களையும் நினைவுபடுத்துகிறவராகவும் இருக்கிறார்.நாம் தேவனுடைய வார்த்தையின் சிலாக்கியங்களைஅனுபவிக்கும் பொழுது பரிசுத்த ஆவியானாவர் மிகப்பெரியசந்தோஷத்தையும், வார்த்தையில் இருக்கும் ஆறுதலையும்நமக்கு பொழிந்தருளுகிறவராய் இருக்கிறார். நமக்குள்வாசம் பண்ணுகிற வல்லமையான பரிசுத்த ஆவியானாவர்,ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட தம் வார்த்தையின் மூலம்விசுவாசிகளோடு தொடர்ந்து தொடர்புக்குள்ளாக இருக்கிறாரேதவிர, வேதத்தை விட்டு, குறுக்கு வழியில் செயல்படுகிறவராகஅல்ல. ஒருவன் கற்பனை பண்ணிக்கொண்டு அதினால்,கர்த்தர் என்னோடு பேசினார் என்று சொல்லுவானாகில்அவன் தேவனுடைய வார்த்தையின் அளவைவிட்டு வெளியேதிரிகிறவனாய் இருக்கிறான்.
ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் காணப்படுகிற கிருபைமிகுந்த பரிசுத்த ஆவியானாவரின் பணியானது கலாத்தியர்5:16-18ல் பவுல் விளக்கப்படுத்தியுள்ளார். நாம் மாம்சஇச்சைகளை நிறைவேற்றாமல், ஆவிக்கேற்றபடி நடக்கவலியுறுத்தப்படுகிறோம். நம்மில் தங்கியுள்ள பழைய மாம்சஎச்சமானது, பரிசுத்த ஆவியானாவரால் கொடுக்கப்பட்ட புதியசுபாவத்திருக்கு எதிராக போராடுகிறது. இதை பவுல் இருதயத்தில்உள்ள போர் என்று சொல்லுகிறார். இருந்தபோதிலும் பரிசுத்தஆவியானாவர் இவ்விதமான பாவ இச்சையை எதிர்க்கிறவராய்"நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச்செய்யாதபடிக்கு" என்று சொல்லுகிறார். நாம் வேண்டுமென்றேபாவ செய்கைகளை செய்வதிலும், பாவ வார்த்தைகளைப்பேசுவதிலும் மிக இலகுவாய் ஈடுபட முடியாதபடிக்கு பரிசுத்தஆவியானாவர் நம்முடைய மனசாட்சியில் செயல்படுகிறார்.
ஆனால் இந்த தடுப்புச் சுவரைத் தாண்டி நாம்கடந்து செல்லுவோமானால் என்ன பிரயோஜனம்? பரிசுத்தஆவியானாவர் நமது மனசாட்சியை தூண்டி செயல்படவைத்தும், நாம் பாவம் செய்வோமானால் என்ன பிரயோஜனம்?
அது ஒருவேளை, பெரிய சோதனையாக இருக்கலாம் அல்லதுசிறிய சோதனையாக இருக்கலாம். அப்பொழுது நாம்தொடர்ச்சியாக பாவ செயலை செய்து பரிசுத்த ஆவியானவரைஎதிர்க்கிறவர்களாய் இருப்போம். மேலும் அவ்விதமானவேளையில் எந்தவிதமான வருத்தமும் காட்டாதபடிஇருப்போமானால், நிச்சயமாக பரிசுத்த ஆவியானாவரைஅவித்துப்போடுகிறவர்களாயும், துக்கப்படுத்துகிறவர்களாயும்இருப்போம்.
"ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள்நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டவர்களல்ல" என்றுபவுல் சொல்லுகிறார். அதாவது பரிசுத்த ஆவியானாவர்ஒருவனில் தங்கி செயல்படும் செயல்களுக்கு, அவன்கருத்தாய் இருக்கிறவனாகவும், மனசாட்சிப் பூர்வமாககீழ்ப்படிகிறவனாகவும் இருக்கிறான். இதினாலே அவன்உண்மையாலுமே இரட்சிக்கப்பட்டவன் என்றும், இனிமேல்நியாயப்பிரமாணம் கூறும் ஆக்கினைத் தீர்ப்புக்கு கீழானவன்அல்ல என்றும் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நிச்சயமாகநியாயப்பிரமாணம் நம்முடைய வாழ்க்கைக்கு நீதியானசட்டமாக இருந்தாலும், இயேசுவானவர் நமக்காக வந்து,இரத்தம் சிந்தி மரித்து, நம் மேல் இருந்த நீதியான தண்டனையைஅவர் சுமந்ததினாலே, நாம் இனிமேல் நியாயப்பிரமாணத்தினால்தீர்க்கப்படோம்.
நாம் ஆவியில் வாழ்வோம் என்றால், "ஆவிக்கேற்றபடிநாம் நடப்போம்” என்று பவுல் எழுதுகிறார். ஆகவே நாம்அவர் நம்மில் வாசம் செய்யும் அன்பான பிரசன்னத்திற்காகநன்றியுள்ளவர்களாக இருப்போமானால், பரிசுத்தஆவியானாவரின் வல்லமையையும், ஆசீர்வாதத்தையும்நிரூபிக்கிறவர்களாகவும், அவற்றை ருசி பார்க்கிறவர்களாகவும்இருப்போம். மேலும் பரிசுத்த பக்தி, சந்தோஷம், சமாதானம்,விளங்குதல், உபயோகத் தன்மை போன்றவற்றை நாம்அனுபவிப்போம். இருதயத்தில் நிகழும் ஆவியானவரின்
தூண்டுதல்களை எதிர்க்காதீர்கள், அது உங்களை தேவனுக்குஇன்னும் அதிகமாய் ஒப்புக்கொடுக்கவும், அவருக்கென்றுபணியாற்றவும் செய்யும்படியான அழைப்பாக இருக்கிறது.பரிசுத்த ஆவியானாவரின் வற்புறுத்தல்களை அவித்துப்போடாதிருங்கள். மேலும் அவரை புறக்கணித்துதுக்கப்படுத்தாதிருங்கள்.
கடைசியாக ஜெபத்தில், மன்றாடுதலில்இருக்கும்படியான சிலாக்கியங்களை புறக்கணித்து பரிசுத்தஆவியானாவரை எதிர்க்காதீர்கள், அவித்துப் போடாதீர்கள்,துக்கப்படுத்தாதீர்கள். எந்தவித கடமையையும் எதிர்க்காதீர்கள்அல்லது எந்தவித வற்புறுத்தல்களையும் அவித்துப்போடாதீர்கள். ஏனென்றால் பரிசுத்த ஆவியானாவர் நம்ஜெபத்தைப் பூரணப்படுத்தி பரலோக வார்த்தையாக மாற்றி,நமது பலவீனங்களில் உதவி செய்கிறவராய், வாக்குக்கடங்காதபெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறவராகவும்,மகிமையான கடவுளுடைய சித்தத்திற்கு நம்முடைய ஜெபத்தைஒத்துப்போகச் செய்கிறவராயும் இருக்கிறார். (ரோமர் 8:26-27).
வில்லியம் பண்டிங் என்ற அருமையான பாமாலைபக்தனும், 19 ஆம் நூற்றாண்டு வெஸ்லியன் பிரசங்கியுமானவர்,ஒரு உண்மை விசுவாசி பரிசுத்த ஆவியானவரோடு உள்ளதொடர்பை பற்றி மிக அழகாக பின்வருமாறு எழுதுகிறார்.
பரிசுத்த ஆவியானவரே! என்னில் பரிதாபம் கொள்ளும்உம்மைத் துக்கப்படுத்தினதை எண்ணி வேதனைப்படுகிறேன்.நீர் தூரத்தில் உள்ளவர் போல இருந்தாலும்துக்கத்துடன் கூடிய என் இருதயத்தைக் கேட்டருளும்.
எண்ணிலடங்காத என் பாவங்களை அறிக்கையிடுகிறேன்என் அசுத்தமான பாவத்தன்மையோடே கூட,உமக்கு எதிராக மாத்திரமே செய்த பாவங்களைசர்வத்திலும் வியாபித்திருக்கும் நீரே அறிவீர்.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்தும்தீட்டானவற்றை ருசித்தேன்.பரத்திலிருந்து ஊறும் ஊற்றிலிருந்துஎன் தேவையை சந்தித்தருளும்.
இரக்கமுள்ள பிதாவே!உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்.பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக செய்த பாவங்களைஉம்முடைய குமாரன் நிமித்தம் எனக்கு மன்னியும்.

