வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 விளக்கவுரை


வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 விளக்கவுரை





வெளிப்படுத்தின விசேஷம் முழு புத்தகத்திற்கும் இந்த முதல் மூன்று வசனங்களும் முன்னுரையாக அமைகிறது. இதில் 7 அடிப்படை அம்சங்கள் குறிக்கப்பட்டு இருப்பதை பாருங்கள். இந்த அடிப்படை அம்சங்களை நாம் பின்பற்றாவிட்டால் இதன்மூலம் தவறான நோக்கத்தையே பெற்று தவறான அணுகு முறையில் தவறான கருத்துக்களையே கற்றுக்கொள்ளும் அபாயத்தில் விழுந்துவிடுவோம். ஆகவே இந்த ஏழு அடிப்படை அம்சங்களை கருத்துடன் வாசியுங்கள்.

  1. முதலாவது தேவனே நமக்கு வெளிப்படுத்தி காண்பிக்க வேண்டும்.



வெளிப்படுத்தப்பட்ட என்ற வார்த்தையின் கிரேக்க பதமானது அப்போகிளாப்ஸஸ் என்பதாகும். இதன் பொருள் என்னவெனில் திரை விலகியது என்பதா
கும். அதாவது இதுவரை மூடியிருந்த திரை இப்போது விலகி திறந்துவிட்டது இதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த புத்தகத்தில் வலுசர்ப்பம் குத்துவிளக்குகள் மிருகங்கள் கோப கலசங்கள் தூதர்களின் எக்காலங்கள் போன்றவைகளை நாம் வாசிக்கிறோம். இவைகளையெல்லாம் நாம் மனுஷீக சாமர்த்தியத்தால் அறிந்து கொள்ளவே முடியாது ஆம் இவைகளை நமக்கு தேவனே திரைவிலக்கி வெளிப்படுத்த வேண்டும்.




ஒரு வேளை இந்த உலகத்தில் நீங்கள் ஓர் பிஎச்டி பட்டம் பெற்ற அறிவுப் பெட்டகம் ஆயினும் இதில் காணும் சத்தியங்களை அறிந்து கொள்வதற்கு உங்களின் உலக அறிவு சிறிதும் பயன்படாது. தேவன் தன் காரியங்களை நமக்கு வெளிப்படுத்துவதற்கான அடிப்படைத் தகுதி என்ன தெரியுமா? அவருக்கு பயப்படுகிற பயமும் தாழ்மையுமே அதாவது தன் ஆண்டவரை எல்லாவற்றிலும் த
பிரியப்படுத்துவதற்காக பாவம் செய்வதற்கு பயந்து ஜீவிப்பவர்கள் தேவன் மேல் கொள்ளும் இந்தவித பயபக்தியே நம்மை இப்புத்தகத்தின் வெளிப்பாட்டிற்கும் நடத்த தகுதி படுத்துகின்றன.

  1. தன் ஊழியர்களுக்கே (அடிமைகளுக்கு) காண்பிக்கிறார்



இவைகளை தம்முடைய ஊழியக்காரரை களுக்கு காண்பிக்கும் பொருட்டு…. இன்று முதல் வசனம் குறிப்பிடுவதை கவனியுங்கள். இவைகள் எல்லோருக்கும் காண்பிக்கப்பட மாட்டாது ஊழியர்களுக்கு அதாவது தன் அடிமைகளுக்கு அவர் காண்பிக்கிறார். ஓர் ஊழியன் என்பதற்கும் ஓர் அடிமை என்பதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற வரையறையோடு தன் உரிமைகளை மனதில் கொண்டு சம்பளத்திற்காக வேலை செய்பவன் தான் ஒரு ஊழியன். ஆனால் அடிமையோ தன்னையே தன் எஜமானுக்கு சொந்தமாக்கி அவன் ஆண்டவரே என் முழு ஜீவியமும் உன்னுடையது என் நேரங்கள் உன்னுடையது என் வீடு படிப்பு நான் சொந்தமாக வைத்திருக்கும் அத்தனையும் உமக்கே உரியது என்று முழுமையாக தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் அடிமைகள். நீங்கள் இந்த புத்தகத்தை உட்கார்ந்து வாசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் மேல் கூறியபடி தன்னை ஒப்புக் கொடுத்த அடிமைகளுக்கே மாத்திரமே வெளிப்பாடு தருவதற்கு இயேசுகிறிஸ்து வாஞ்சையோடு ஆயத்தமாய் உள்ளார்.


  1. அடையாளங்கள் சின்னங்கள் (signs and symbols) மூலம் காண்பிக்கிறார்



தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரராகிய யுவனுக்கு அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்தினார் என்று king james version முதல் வசனத்தின் கடைசிப் பகுதி குறிப்பிடப்படுகிறது. இந்த புத்தகம் முழுவதிலும் அடையாளங்களும் சின்னங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது உதாரணமாக குத்துவிளக்குகள் வலுசர்ப்பம் மிருக ஜீவன்கள் கோப கலசங்கள் போன்றவைகள். இவைகளை எழுத்தின்படி பொருள் படுத்த முடியாது அவைகள் ஆவிக்குரிய அர்த்தங்கள் பொதிந்தவை. புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் இப்புத்தகத்தில் மாத்திரமே அடையாள சின்னங்கள் மூலமாக தேவன் பேசுவது குறிப்பிடத்தகுந்த விசேஷமாகும் இந்த அடையாளங்களுக்கு சரியான வியாக்கியானத்தை பரிசுத்த ஆவியின் உதவியை நமக்கு முற்றிலுமாய் தேவைப்படுகிறது.





  1. இது தேவனிடத்திலிருந்து புறப்பட்ட நேரடியான வார்த்தைகள்



இவன் தேவனுடைய வசனத்தை குறித்து அறிவிக்கிறான் (வசனம்.2) எல்லா வேதம் வாக்கியங்களும் தேவனுடைய வார்த்தைகள் தான் ஆனால் ஆணித்தரமாக இது தேவனுடைய வார்த்தைகள் என ஆங்கில மொழிபெயர்ப்பு குறிப்பிடுகிறது. உதாரணமாக 19ம் அதிகாரம் 9 ஆம் வசனம் இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் இன்று குறிப்பிடப்படுவதை கவனியுங்கள் இதுபோல வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லப்படவே இல்லை. அதற்குக் காரணம் என்னவெனில் இந்த வெளிப்படுத்தின விசேஷத்தை வாசிக்கும் அநேகருக்கு இதில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் உண்மையாகவே தேவனுடைய வார்த்தைகள் தானா? என்ற சந்தேகம் எழும்புவதற்கு வாய்ப்பு உண்டு எனவே தான் இது தேவனுடைய வார்த்தைகள் என வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 22 ஆம் அதிகாரம் 18 மற்றும் 19 ஆம் வசனம் இந்த புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களை கேட்கிற யாவருக்கும் எச்சரிக்கை அதாவது ஒருவன் இவைகளோடு எதையாகிலும் கூட்டினால் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார் ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவ புத்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார் என்று கடுமையாக கூறுவதை கவனியுங்கள். இது போன்ற கடும் எச்சரிக்கை வேதாகமத்திலுள்ள வேறு எந்த புத்தகத்திற்கும் தரப்படவில்லை. பார்த்தீர்களா தேவன் இந்த புத்தகத்திற்கு தான் எத்தனை அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஆம் இவைகள் தேவனுடைய நேரடி வார்த்தைகள் இவைகள் நமக்கு தரப்பட்டது நோக்கம் என்ன? 2தீமோ 3:16-17 அதற்கான விடையை கூறுகிறது.

இந்த வெளிப்படுத்தின விசேஷ புத்தகமும் நம்மைப் பூரனராக்கும் நோக்கத்திற்காகவே தரப்பட்டுள்ளது இதற்கு மாறாக எதிர்காலம் எப்படி என்ன துருவி ஆராய்வதற்காக அல்ல.


  1. இந்த புத்தகம் இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பிரகடனப்படுத்துகிறது



இந்த புத்தகம் எதிர்காலத்தைப் பற்றிய சாட்சியை அல்ல இயேசு கிறிஸ்துவையே சாட்சியாக பிரகடனம் செய்கிறது இந்த புத்தகத்தை முற்றிலும் கற்றுக் கொள்ளப் போகும் நம் எதிர்காலத்தை எப்படி நோக்கப் போவது கிடையாது. ஆனால் எதிர்காலத்தை ஆளுகை செய்யும் இயேசு கிறிஸ்துவையே உற்று நோக்க போகிறோம் நாம் எதிர்காலத்தை நோக்கம் என்றால் என்னை எதிர்காலத்தில் தடுக்கும் அல்லது பூரண சமாதானமும் இளைபாறுதலுமே என்னை தழுவிக் கொள்ளும் . இதை உறுதி செய்யும்படி வெளிப்படுத்தின விசேஷம் 10 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனம் இயேசுவைப்பற்றிய சாட்சியே தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது சொல்லுகிறது. உண்மையான எந்த தீர்க்கதரிசனமும் இயேசு கிறிஸ்துவையே எப்போதும் சாட்சியாக பிரகடனப்படுத்தும் எனவே நாம் பிரதானமாக சம்பவங்களை அல்ல சம்பவங்களை தனக்குள் கீழ்ப்படுத்தி ஆளுகை செய்யும் இயேசு கிறிஸ்துவையே நாம் மனதில் நிறுத்தி அவரையே உற்று நோக்க போகிறோம் அப்படி என்றால் இந்த புத்தகத்தை கற்று முடிக்கும்போது இயேசு கிறிஸ்துவின் நிறைவான தரிசனத்தால் நாம் ஆட்கொள்ள போடுவோம் என்பது உறுதி.


  1. இவைகளைக் கேட்டு கீழ்ப்படிவதற்கு என்று தரப்பட்டுள்ளது (இதன்மூலம் ஆசிர்வாதம் வாக்களிக்கப்பட்டுள்ளது)



இந்த தீர்க்கதரிசன வசனங்களை கேட்கிறவர்களும் இதில் எழுதி இருக்கிறவங்களை கைக்கொள்கிறவனும் பாக்கியவான் (வசனம்.3) இது மிகவும் முக்கியம் நாம் இந்த புத்தகத்தை நன்றாய் புரிந்து கொள்ள வேண்டும் என்பது பிரதானம் அல்ல. கீழ்ப்படிதல் பிரதானம் ஆனால் இன்று அநேகர் இந்த புத்தகத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வாசிக்கிறார்கள். அது தவறு அதில் எந்தவித ஆசீர்வாதமும் கிடைக்காது இந்த மூன்றாம் வசனத்தை சற்று கவனித்து வாசியுங்கள் அதில் இதில் எழுதியிருக்கிற கோப கலசங்கள் எதைப் பற்றி எடுத்துக் கூறுகிறது என்பது பற்றியும் கோபகாலங்கள் எதைப் பற்றி எடுத்துக் கூறுகிறது என்பது பற்றியும் மிருகங்கள் எதைப் பற்றி எடுத்துக் கூறுகிறது என்பது பற்றியும் நன்றாய் புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள் என்றா எழுதப்பட்டிருக்கிறது? இல்லவே இல்லை இதில் எழுதி இருக்கிற வைகளை கை கொள்கிறவர்களே பாக்கியவான்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. கேட்கிற காதும் காண்கின்ற கண்ணும் உடையவர்களாய் தேவனுடைய வார்த்தைகளை கண்டு அதை கை கொள்ளுகிறவர்கள்.






  1. மற்றவர்களும் வாசித்துப் பிரகடனம் செய்யும்படி தரப்பட்டுள்ளது (இதன் மூலமாகவும் விசேஷ ஆசீர்வாதம் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது)




மூன்றாம் வசனத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ள இந்த தீர்க்கதரிசன வசனங்களை  வாசிக்கிறவனும் என்பதின் பொருள் என்னவெனில் இந்த புத்தகத்தை மற்றவர்களுக்கும் உரத்த குரலில் வாசித்து காட்ட வேண்டும் என்பதே ஆகும் அவ்வாறு செய்பவர்கள் பாக்கியவான்கள். முதலாம் நூற்றாண்டில் அச்சுக் கூடங்கள் இல்லாமல் இருந்தது அந்நாட்களில் சபைகளில் இருந்த விசுவாசிகளும் இப்போது நாம் அனைவரும் கையில் வைத்திருப்பது போல வேதாகமும் வைத்திருக்கவில்லை. யோவான் தன் கையினால் எழுதின ஒரு பிரதியை தான் மற்ற சபைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பினால் சபையிலுள்ள ஒருவர் வாரத்திற்கு ஒருநாள் சபையை கூடிவரச்செய்து நிருபத்தில் எழுதப்பட்டிருப்பதை எல்லா ஜனங்களுக்கும் வாசிப்பார் நாம் இந்த புத்தகத்தின் மூலம் கற்றுக் கொள்ளப் போவதை பிறருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே இந்த வசனத்தின் பொருளாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.