யாக்கோபு நிருபம் ஒரு கண்ணோட்டம்

யாக்கோபு நிருபம் ஒரு கண்ணோட்டம்
நோக்கம்:

கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் இன்று அறிவுறுத்தவும் தனிப்பட்ட வாழ்வில் ஆவிக்குரிய வளர்ச்சியும் சமுதாய வாழ்வில் நேர்மையும் கொண்டிருப்பதற்கு அழைப்பு கொடுக்கவும் இந்த நிருபம் எழுதப்பட்டது.

ஆசிரியர் :-

யாக்கோபு இவர் இயேசு கிறிஸ்துவின் சகோதரரில் ஒருவர்.
எழுதப்பட்ட காலம் :-

ஏறத்தாழ கிபி 48 லிருந்து 62 இதற்குள்.

பின்னணி :-

கிறிஸ்தவர்களாய் இருந்த யூதர்கள் பல எதிர்ப்புகளையும் பாடுகளையும் சந்தித்து பல நாடுகளுக்கு சென்று
விட்ட நிலையில் எழுதப்பட்டது (1:1)

திறவுகோல் வசனம் :-

அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
யாக்கோபு 2:26

குறிப்பிடத்தக்க நபர்கள் :-

யாக்கோபு ஆபிரகாம் ராகாப் யோபு

நிருபத்தின் சிறப்பு :-

விசுவாசம் நல்ல செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுவது இந்த நிருபத்தின் சிறப்பு ஆகும்.

நிருபத்தின் சுருக்கம் :-

சந்தேகத்துடன் இருப்பவர்கள் தேவனிடத்தில் எதையும் பெற முடியாது (1:6-8). அனைவருக்கும் சோதனைகள் உண்டு. இச்சை நம்மை இழுக்க முயலும்போது இருக்கும் நிலை பாவ நிலை ஆகாது.  இச்சைக்குள் இருந்து ஆவியானவரின் பலத்தால் நாம் வெளியே வருவது வெற்றியாகும். ஆனால் இச்சைக்குள்ளே தொடர்ந்து இருந்தால் பாவம் உண்டாகும் (1:13-16). நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் நம்முடைய திறமையினால் பெற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அது பிதாவினால் பரலோகத்திலிருந்து கொடுக்கக்கூடியது (1:17). சமுதாயத்தில் ஏழை எளிய ஜனங்களுக்கு உதவி செய்வதும் பரிசுத்தமாய் வாழ்க்கை வாழ்வதும் இல்லாவிட்டால் பக்தி பயனற்றதா இருக்கும் (1:27). சட்டங்கள் ஒன்றை மீறினாலும் குற்றவாளியாக கருதப்படுவார்கள் (2:9-12). சபையில் உள்ள எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் (2:15-17). நற்கிரியைகள் நம்மிடத்திலிருந்து வெளிப்படவில்லை என்றால் நம்முடைய விசுவாசம் பயனற்றது அது ஜீவன் அற்றதாய் இருக்கும் (2:17,20,26). நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமல் போனால் அது நமக்கு பாவமாக இருக்கும் (4:17).


இந்த நிருபத்தில் உள்ள தேவனை பற்றின செய்திகள் :-


தேவன் தம்மிடத்தில் கேட்கிற அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கிறார். அவர் தம்மிடம் கேட்பதற்காக யாவரையும் கடிந்து கொள்வது இல்லை (1:5). தேவன் பொல்லாங்கினால் ஒருவரையும் சோதிக்கிற வரல்ல ஒருவனையும் அவர் சோதிப்பதும் இல்லை (1:13). நம்மை பரிசோதித்து உயர்த்துவதே அவரது செயல். தேவன் ஒளியின் தந்தை அவர் நல்ல ஈவுகளை தருகிறவர். அவர் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையும் இல்லாதவர் (1:17). அவர் நம்மை வசனத்தினாலே பிறப்பித்தார் (1:18).
நாம் அனைவரும் தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமைகள். இவ்வாறு நம்மை கருதுகிறோமா (1:1)?. கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலே நாம் எந்த இனத்தவராக இருந்தாலும் எந்த பொருளாதார நிலையில் இருப்பவர் இருந்தாலும் ஒன்றாகவே இருக்கிறோம் (2:1). கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டோம் என்ற ஒரு தகுதி மட்டுமே நமக்கு உண்டு. கிறிஸ்துவின் வருகைக்கு நாம் எப்பொழுதும் ஆயத்தமாய் இருப்போமாக (5:7-9). ஊழியங்கள் யாவும் இயேசுவின் நாமத்தினால் செயல்பட வேண்டும் (5:14-15). ஆவியானவர் நம்மில் வாசமாய் இருப்பதோடு நாம் சரியாக வாழ வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் உள்ளவராய் இருக்கிறார் (4:5).


இந்த நிருபத்தின் அளவு

அதிகாரங்கள் 4 வசனங்கள் 108

இந்த நிருபத்தின் உட்பிரிவு

1:1-27 உண்மையான பக்தி (மதம்).
2:1-3:12 உண்மையான விசுவாசம்.
3:13-5:20 உண்மையான ஞானம்.

நான் படித்த புத்தகங்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

1.  வேதாகம ஜாதிகள் என்கிற இந்த புத்தகத்தில் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய இனக்குழுக்களின் முழு விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும் (காணனியர், அமலேக்கியர், அம்மோனியம், பெலிஸ்தியர், மோவபியர், எகிப்தியர்........, 

2. கடைசிக்கால ஆபத்துகள் இந்த புத்தகத்தில் கடைசி காலம் ஆகிய இந்த காலத்தில் எப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் சபையையும் கர்த்தருடைய பிள்ளைகளையும் தாக்குகின்றன போன்ற ஆய்வு பூர்வமான தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

3. எச்சரிக்கை செய்திகள் இந்த புத்தகத்தில் அந்தி கிறிஸ்துவின் அடையாளங்கள் பல சொல்லப்பட்டிருக்கிறது உலகம் அந்திக்கிறிஸ்து வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற பல தகவல்கள் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

 இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமானால் அதில் லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது அதன் வழியாக நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

பரிந்துரை புத்தகம் 1 பரிந்துரை புத்தகம் 2 பரிந்துரை புத்தகம் 3
வேதாகம ஜாதிகள் கடைசி கால செய்திகள் எச்சரிக்கை செய்திகள்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. இந்த நிருபத்தில் 4 அதிகாரங்கள் உள்ளதாக எழுதியுள்ளீர்கள். ஆனால் 5 அதிகாரங்களும் 108 வசனங்களும் உள்ளன.

    ReplyDelete