முறையான இறையியல் (Systematic Theology )
Lesson 5
தேவனின் பண்பியல்புகள்
தேவன் பரிசுத்தமுள்ளவர்
தேவனின் பண்புகளில் முதன்மையானது பரிசுத்தமாகும். அவர் முற்றிலும் பாவம் இல்லாதவர் நீதியுள்ளவர் (லேவி 11:44-45; சங் 85:13; 145:17; மத் 5:48) வேதாகமம் முழுவதும் தேவனுடைய பரிசுத்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அதாவது சீனாய்மலையின்மேல் தேவன் இறங்குதல் (யாத் 19:22-25) ஆசரிப்புக் கூடாரத்திலும் தேவாலயத்திலும் உள்ள பிரிவுகள் (பரிசுத்த ஸ்தலம் மகா பரிசுத்த ஸ்தலம்) (யாத் 26:33; 1இரா 6:16-19) அங்கே விசேஷமான பலிகள் இஸ்ரவேலர்கள் தேவனை சந்திக்க கடந்து வரும்போது கொண்டுவரப்பட வேண்டும். தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் ஒரு விசேஷித்த ஆசாரியத்துவம் காணப்படுகிறது. தேவன் பரிசுத்தமானவர் என்று
அழைக்கப்பட்டார்.
அழைக்கப்பட்டார்.
புதிய ஏற்பாட்டில் (யோவான் 17:11; எபே 12:16; 1பேது 1:15) ஆதாமும் ஏவாளும் பாவம் இல்லாதவர்களாக அ
படைக்கப்பட்டனர் இன்னொரு வகையில் பார்ப்போமானால் தேவனும் பாவம் இல்லாதவர். (எண் 23:19; 2தெச 2:13; தீத் 1:2; எபே 6:18) அவருடைய பரிசுத்தமானது தேவன் தம்முடைய மக்களுக்கு வைத்துள்ள திட்டங்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதில் உள்ளது.
செயல்படுத்துதல்
தேவனுடைய பரிசுத்தத்தை குறித்து மூன்று காரியங்களை பார்க்கலாம். பாவிகளுக்கும் தேவனுக்கும் இடையில் இடைவெளி காணப்படுகிறது (ஏசாயா 59:11). மனிதனுடைய வீழ்ச்சிக்கு முன்பு வரையில் தேவனுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது ஆனால் அந்த தொடர்பு உடைக்கப்பட்டு விட்டது அதை புதுப்பித்தல் கூடாத காரியம் ஆகும் ஆனால் அதிலிருந்து முற்றிலும் விளக்கப்படும் ஒருவர் தேவனோடு கூட ஐக்கியம் கொள்ள முடியும்.
மனிதன் தேவனோடு கண்டிப்பாக நெருங்கிய ஆக வேண்டும் மனிதன் ஒரு போதும் பாவம் இல்லாத நிலையை தேவனுக்கு சேராத நிலையில் இல்லாத வரையிலும் அடைய முடியாது. ஆனால் (ரோம 5:2) கிறிஸ்துவின் மூலமாக நாம் தேவனிடத்தில் சேறுகிறோம்.
தேவனுக்கு பயப்படும் பயத்தோடும் பக்தியோடும் நாம் தேவனிடத்தில் சேர வேண்டும் (எபி 12:22-29).
தேவன் நீதியுள்ளவர் (உபா 32:4; 2யோவா 1:9)
எல்லா அநியாயத்திற்கும் விலக்கி மீட்க அவர் உண்மையுள்ள வரும் நீதி உள்ளவருமாய் இருக்கிறார் மனிதன் மனம் திரும்பும் போது அவர்களை எல்லாம் தண்டனைகளிலிருந்து அவர்களை விடுதலை ஆக்குகிறார். பாவிகளை மரணத்தினால் நியாயம் தீர்க்கிறார். (ரோம 5:12).
அவர் பாவிகளை நேசிக்கிற படியினால் நீதி உள்ளவராய் இருக்கிறபடியினால் அவர் பாவிகள் மேல் சினம் கொள்கிறார் (ரோம 3:5-6; நியா 10:7) அவர் துன்மார்க்கர் மேல் கோபத்தை வெளிப்படுத்துகிறார் (ரோம 1:8) மிக முக்கியமாக விக்கிரக ஆராதனை அவிசுவாசம் போன்ற மக்களுக்கு நியாயக் கேடு செய்தல் (1இரா 14:9; 15:22; சங் 96:21-22; ஏசாயா 10:1-4; ஆமோஸ் 2:6).
இயேசு கிறிஸ்து நீதியுள்ளவர் என்று அழைக்கப்படுகிறார்.
தேவனுடைய நீதி என்பது
அக்கிரமத்தை கண்டித்தல் (வெளி 14:5-7)
தீயவர்களிடமிருந்து தம் மக்களை மீட்டு கொள்ளுதல் (சங் 129:1-4)
பாவிகளை மன்னித்தல்
தம் பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்களை கொடுத்தல்
உண்மை உள்ளவர்களுக்கு பிரதிபலன் அளித்தல்
ஆகிய ஐந்து வழிகளில் தேவனுடைய நீதி வெளிப்படுத்தப்படுகிறது.
தேவன் நல்லவர் (சங் 25:8; 106:8; மாற் 10:18)
தேவன் சிருஷ்டித்தவைகள் எல்லாம் நல்லவைகளாகவே கண்டார் (ஆதி 1:4,10,12,18). மேலும் தேவன் நல்லவர் என்பதை அவருடைய படைப்புகளை காப்பாற்றுவதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம் (சங் 104:10,28; 145:9). தேவன் பக்தி இல்லாதவர்களையும் அவர் போஷிக்கிறார் (மத் 5:45! அப் 14:17) மேலும் தேவன் மிக முக்கியமாக உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் நல்லவராகவே இருக்கிறார் (சங் 145:8-20).
தேவன் அன்புள்ளவர்
ஏசாயா 4:8 அவருடைய அன்பு எல்லாம் பாவம் மனுகூலத்தையும் அனைத்து கொள்ளுகிறது (யோவான் 3:16; ரோம 5:8) அவருடைய அன்பின் வெளிப்பாடு தம்முடைய ஒரேபேரான குமாரனை பாவிகளுக்கு கொடுத்ததிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. உண்மையான அன்பு உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. உணர்வு இல்லை என்றால் அங்கு தேவனுடைய அன்பு இல்லை. நம்முடைய தேவன் தெய்வம் என்று அழைக்கப்படுகிற மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர். பிதாவும் குமாரனும் அன்பாயிருக்கிறார் குமாரனும் பிதாவின் மேல் அன்புள்ள வராக இருக்கிறார் தேவன் அன்புள்ளவர் ஆகவே இருக்கிறார். (மத்தேயு 3:16; யோவான் 14:31)
தேவன் கிருபையும் இரக்கமும் உள்ளவர்
தேவ கிருபையினால் தகுதியற்றவர்களுக்கு அவர் நல்லவராகவே வெளிப் படுத்த பட்டுள்ளார். கிருபை பாவியாகிய மனுஷனுக்கு குற்ற உணர்வை கொடுப்பதின் மூலம் வெளிப்படுகிறது. இறக்கம் அவனுக்கு பரிதாபத்துக்குரியதாக காணப்படுகிறது. நம்முடைய பாவங்களுக்கு தக்கதாக நம்மை தள்ளி விடவோ அல்லது அழிக்கவோ அவர் விரும்பவில்லை. (சங் 103:10) ஆனால் நாம் கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் பாவமன்னிப்பு என்னும் கிருபையை நமக்கு தேவன் கொடுக்கிறார்.
தேவனுடைய கிருபைக்கு காத்திருப்பவர்களுக்கு அவர் அளிக்கும் விசேஷித்த கிருபைகள்
- தெரிந்து கொள்ளுதல் (எபே 1:4-6)
- மீட்பு (எபே 1:7-8)
- இரட்சிப்பு (அப் 18:27)
- பரிசுத்தமாகுதல் (ரோம 5:21)
- பாதுகாத்தல் (2கொரி 12:9)
- சேவை (எபி 12:28)
- இறுதி பிரதிபலன் (1கொரி 1:3)
தேவன் மனதுருக்கம் உள்ளவர்
தேவன் எல்லாம் ஜனங்கள் மேலும் மனதிற்கும் உள்ளவராயிருக்கிறார் (2இரா 13:23; சங் 86:15) மனதை உருக்கும் என்றால் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு வருத்தப்படுவது ஆகும். இயேசு கிறிஸ்துவும் மனதுருக்கம் உடையவராய் காணப்பட்டார் (லூக்கா 4:18; மத் 9:36; 14:14; 15:32; 20:34; மாற் 1:41; அப் 6:34).
தேவன் பொறுமை உள்ளவர்
தேவன் பொறுமையுள்ளவரும் கோபப்படுவதற்கு தாமதம் உள்ளவருமாய் இருக்கிறார். (யாத் 34:6; எண் 14:18; ரோம 2:4; 1தீமோ 1:16). தேவன் உலகத்தை அழிக்கும்படியாக நியாயத்தீர்ப்பு செய்வது இல்லை ஏனென்றால் அவர் தம்முடைய பொறுமையினால் பாவிகள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்கு தருணத்தை தருகிறார்.
தேவன் சத்யம் உள்ளவர்
(உபா 32:4; சங் 31:5; யோவான் 3:33) இயேசு கிறிஸ்துவும் தன்னை சத்தியம் என்று அழைத்துள்ளார் (யோவான் 14:16) ஆவியானவரை சத்திய ஆவியானவர் என்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால் தேவன் நம்பத்தக்க வரும் அவள் சொல்லிலும் செயலிலும் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவருடைய வார்த்தைகளும் சத்தியம் என்று விளக்கப்படுகிறது (சங் 119:43; ஏசாயா 45:19; யோவான் 17:17).
தேவன் உண்மையுள்ளவர்
(யாத் 34:6; உபா 7:9; எபி 10:23) தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் எதை செய்கிறாரோ செய்வேன் என்று கூறினாரோ அதை செய்கிறார். ஆனால் அவர் எப்பொழுதும் அவருடைய வாக்குத்தத்தங்களை யும் எச்சரிப்பு உடையவராகவும் இருக்கிறார் (எண் 35:1-15; 2தீமோ 2:13).
- தேவன் தம்முடைய சிநேகிதர்களுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராயிருக்கிறார் (ஆதி 15:4; 2சாமு 7:15; 1இரா 21:17)
- சோதனை நேரத்திலும் (1கொரி 10:13) பாவங்களை மன்னிப்பதிலும் (1யோவா 1:9) ஜெபத்திற்கு பதில் கொடுப்பதிலும் (சங் 143:3) உண்மையுள்ளவராயிருக்கிறார்.