முறையான இறையியல் Lesson 4


முறையான இறையியல்

Lesson 4

தேவனின் இயல்புகள்


தேவனுடைய இயல்புகளும் குணாதிசயங்களும் ஒரே அர்த்தத்தை கொண்டு வருவதாக நாம் உணர்கிறோம். ஆனால் குணாதிசயங்கள் என்பது அவரை மதிப்பிற்குரிய அல்லது மதிக்கக் கூடிய காரியங்கள். இயல்பு என்பது முடிவு இல்லாதவை.

தேவனுடைய இயல்புகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்

  1. Natural Attributes பொதுவான இயல்புகள்
  2. Moral Attributes பண்பு இயல்புகள்

Natural Attributes பொதுவான இயல்புகள்

தேவன் எங்கும்
நிறைந்தவர் Omni Present

அதாவது ஒரே நேரத்தில் எங்கும் இருக்கிறவர். Pantheism என்ன கூறுகிறது என்றால் கடவுள் எங்குமிருக்கிறார் எல்லாமே கடவுள் என்று இதை சரியாய் புரிந்து கொள்ளாவிட்டால் ஆபத்தாகிவிடும். Pantheism முழுவதும் தவறானது. A.H.Strong என்ற இறையியல் வல்லுனர் இறைவனுடைய முழு சாராம்சமும் முழு உலகத்தையும் அதிலுள்ள வகைகளையும் நிரப்பியுள்ளது என்று கூறியுள்ளார். சங்கீதக்காரன் நான் எங்கே போனாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர் என்று கூறுகிறார். (சங் 139; எரே 23:23; அப் 17:27-28).

தேவன் எல்லாம் அறிந்தவர்




நாம் செய்யும் ஒவ்வொன்றையும் தேவன் காண்கிறார் என்று உணரும் ஒருவர் தன் தீய வழிகளை சரி செய்து நல்ல வழியில் நடக்க தேவனையே நோக்கி பார்ப்பார். ஒரு விசுவாசிக்கு எங்கும் நிறைந்திருக்கும் தேவன் ஆறுதலுக்கு காரணம் ஆகையால் அவர் இருக்கிறார் என்று சிந்தை அவருக்கு நம்மை ஒப்புக் கொடுக்கவும்  உற்சாக படவும் செய்கிறது. இது லத்தீன் மொழியில் உள்ள Ominis என்ற பதத்தில் இருந்து வந்தது இதன் பொருள் எல்லாம் All.

Scintia (அறிவு) (science means stnoty) தேவன் எல்லாம் அறிந்தவர் மூன்று காலங்களையும் அறிந்தவர் ( கடந்த காலம் நிகழ்காலம் வருங்காலம் ) பின்னால் நடக்கும் காரியங்களை முன்கூட்டியே கூறும் தேவஞானத்தை வேதத்தில் காணலாம் (அப் 2:23; ஏசாயா 49:2; 1பேது 4:3). கடந்த காலத்தில் எப்படி இருந்ததோ நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறதோ வருங்காலத்தில் எப்படி இருக்கப் போகின்றதோ அவைகளை அப்படியே தேவன் அறிவார்.


செயல்முறை படுத்துதல்

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் விரோதமாய் வந்தாலும் அவனுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை கர்த்தர் அவனோடு இருக்கிறார் (மத் 10:31) தலையில் உள்ள மயிர் என்ன பட்டிருக்கிறது. (அப் 15:18; மத் 6:18,38; சங் 139:4).

தேவன் எல்லா ஆற்றலும் உடையவர்

தேவன் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் உடையவர் இதனால் அவர் விரும்புகிற எல்லாவற்றையும் அவர் செய்வார் இதன் பொருள் தவறானவை எதையும் செய்வார் என்பது அல்ல அதனால் அவருடைய வல்லமை கட்டுப்பாட்டுக்குட்பட்டது அல்ல. அவர் எல்லா சிருஷ்டிகள் மேலும் சர்வ வல்லமையும் அதிகாரமும் உடையவராய் இருக்கிறார். (சங் 147:13-18; எரே 32:17; மத் 19:26; லூக்கா 1:37; ஆதி 1:17; ரோம 4:8; யோபு 42:2).இயற்கையின் மேல் (யோபு 1:17; 42:2) இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்தார் (ஆதி 1:4) ஆகாய பிரிவிலிருந்து தண்ணீரை பிரித்தார் (ஆதி 1:9-10) தண்ணீரை தன் கைப்பிடியினால் அளக்கிறார் (ஏசாயா 40:12) ஜாதிகள் ஏற்றசாலில் எண்ணுகிறார் (ஏசாயா 40:15)
மனிதன் மேல் (தானி 4:30-32)
தூதர்கள் மேல் (சங் 103:20)
சாத்தானின் மேல் (யோபு 12:2,6)
மரணத்தின் மேல் (எபே 2:14)




செயல்படுத்துதல்

ஒரு விசுவாசி தன் ஒவ்வொரு நடக்கையிலும் தேவனையே நம்ப வேண்டும் ஏனென்றால் சிருஷ்டிபுக்கும் பாதுகாத்தலுக்கும் தேவையானதை சந்திப்பதற்கும் ஆறுதலுக்கும் நம்பிக்கைக்கும் அவரே மூல காரணமாய் இருக்கிறார். அவிசுவாசி எப்பொழுதும் பயந்து தத்தளித்துக் கொண்டு இருப்பான்.  (சங் 99:1) பிசாசு தேவனுடைய நாமத்தை சொல்லும்போதே நடுங்குவான் தேவன் அவன் மேல் அதிகாரம் உடையவராய் இருக்கிறார் (எசேக்கியேல் 2:19; வெளி 6:15 19)

தேவன் இணையற்றவர்

அவர் தம்முடைய சிருஷ்டிப்புக்கு தனித்தன்மை வாய்ந்தவர். (ஏசாயா 6:1-3; 46:12-26; 55:5-9)

எல்லா சிருஷ்டிகளை பார்க்கிலும் பெரியவராகவும் உயர்ந்தவராகவும் இருக்கிறார் (1இரா 8:2; ஏசாயா 66:12).  அவர் மிகவும் பரிசுத்தமான இடத்தில் வாசம் பண்ணுகிறார். தன்னை தெய்வமாய் கொண்ட அவருடைய பிள்ளைகள் மத்தியில் வாசம் பண்ணுகிறார் (லேவி 26:11-12; யாத் 37:27; 2கொரி 6:6)

செயல்படுத்துதல்

ஒரு விசுவாசி தேவன் எல்லா சிருஷ்டிபுகளுக்கும் மேலானவர் என்று அறிந்திருக்கிற படியினாலே உன்னதமான தேவன் என்னை படைத்திருக்கிறார் என்று அறிந்து அவருக்கு நன்றி செலுத்துகிறவனாய் இருக்க வேண்டும்.

தேவன் நித்தியமானவர்

அவர் நித்தியத்திற்கும் நித்தியமானவர் (சங் 90:2; 102:12; ஏசாயா 15:15). தேவன் காலங்களுக்கு உட்பட்டவர் அல்ல அவரின் கடந்த காலம் எதிர்காலம் என்று ஒன்றுமில்லை என்றும் இருப்பவர் முடிவில்லாதவர் (சங் 90:14; 2பேது 3:8) ஆகவே வேதத்தில் நானே என்று வர்ணிக்கப்படுகிறார் (யோபு 8:58).

தேவன் மாற்றம் இல்லாதவர்




தேவனின் இயல்புகளில் அவர் மாற்றம் இல்லாதவர் அவர் தன் ஜனங்களுக்கு செய்யும் காரியங்களில் முழுமையானவர் (எண் 23:19; சங் 102:26,28; ஏசாயா 47:14; மத் 3:6; எபே 1:11,12; யாக் 1:1). இதனால் தேவன் உடனடி காரியங்களுக்கு விழிப்பு உள்ளவராய் காணப்பட மாட்டார் என்பது பொருளல்ல. உதாரணமாக நினிவேயின் மக்கள் முற்றிலும் மனம் திரும்பிய பொழுது தன்னுடைய தீர்மானத்தை மாற்றினார். (யோனா 3:6-10).

நீதிமான்களின் ஜெபத்திற்கு தேவன் தன் சிந்தையை மாற்றுகிறாய் இருக்கிறார் (2இரா 20:2-6; ஏசாயா 30:26).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.