பைபிள் அகராதி: அகசியா
அகசியா என்ற எபிரேய பெயருக்கு Achazyah, Achazyahuw -274 யெகோவா தாங்குகிறார், ஆதரிக்கிறார் Jehovah (Yah) holds (possesses)என்று பொருள்.
- ஆகாபின் குமாரன்.
ஆகாப் ராஜாவுக்கு பிறகு அகசியா இஸ்ரவேலின் ராஜாவானான் (1இரா 22:40,49,51). இவனுடைய ஆட்சிக் காலம் கிமு 853 இலிருந்து 852 வரை ஆகும்.
இவனுடைய தாயாரின் பெயர் யேசபேல் இவள் அன்னிய தெய்வங்களை ஆராதனை செய்கிறவளாய் இருந்தாள். தன் தாயைப் போலவே அகசியா ராஜாவும் விக்கிரக ஆராதனையில் ஈடு பட்டான். இவன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அரசாண்டான் தனக்கு சமாரியாவில் இருந்த மேல் வீட்டில் இருந்த பொழுது அங்கிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தான் (2இரா 1:27). agasthiya தன் வியாதி நீங்க நான் பிழைப்பேனா மாட்டேனா இன்று விசாரிக்க எக்ரோனின் தேவனான பாகால்சோபூபிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினான்.
இவர்களுக்கு எதிர்ப்பட்டு போய் எலியா தீர்க்கதரிசி அகல்யாவின் மரணத்தைக் குறித்து முன்னறிவுப்பு கூறினாள். எலியாவின் முன்னறிவிப்பை அகசியா கேட்டு மிகுந்த கோபம் கொண்டு எலியாவை பிடித்து காவலில் வைக்கும்படி ஆட்களை அனுப்பினான். எலியாவை பிடிக்க வந்தவர்கள் மேல் வானத்திலிருந்து அக்கினி வந்து பட்சித்துப்போட்டது எலியாவின் தீர்க்க தரிசனம் ஆகும் (2இரா 1:9-17).
மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடு மாடுகளை அதிகமாக வைத்திருப்பவன் ஆக இருந்தான். அவன் ஆசியாவின் தாத்தாவாகிய உம்ரிக்கு பகுதி பணம் கட்டினான். ஆகாப் மரணம் அடைந்த பிறகு அகசியாவுக்கு விரோதமாக மேசா கலகம் பண்ணினாள் (2இரா 1:1; 3:4-5). அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தோடு உடன்படிக்கை செய்துகொண்டு கப்பல்களை கட்டி மற்ற தேசங்களுடன் வியாபாரம் செய்ய முயற்சி செய்தான். கர்த்தர் இவர்களுடைய செயல்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்ததினால் கப்பல் கட்டும் முயற்சி வெற்றி பெறவில்லை (1இரா 22:49).
2. யோராமின் குமாரன்
இவன் யோராமிற்கு பிறகு ராஜாவான் ஆகா பின் குமாரனாகிய அகசியாவிற்கு உறவினர் ஆவார் (2இரா 9:24-26). ஆகாபிற்க்கு யோவகாஸ் (2நாளா 21:7; 25:3 (Azariah) (2நாளா 22:6) என்னும் மறு பெயரும் உள்ளது இவன் யூதாவின் ஆறாவது ராஜா ஆவான். இவன் ஒரு ஆண்டு மட்டும் அரசாட்சி செய்தான் இவன் அரசாட்சி செய்த காலம் கிமு 841 ஆகும்.
அகசியா தனது 22வது வயதில் அரசனானான் இவனுடைய தாயின் பெயர் அத்தாளியாள் (2இரா 8:26; 2நாளா 22:3). அகசியா தாயின் சொல்லைக் கேட்டு துன்மார்க்கமான ஆட்சி செய்தான் அவன் ஆகாப் வீட்டாரின் வழியில் நடந்து ஆகாப் வீட்டாரை போல கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து ஆகா வீட்டாரோடு சம்பந்தம் கலந்திருந்தான் (2இரா 8:27).
அகசியா இஸ்ரவேல் தேசத்தை ஒரு நெருங்கிய உறவு வைத்திருந்தான் தன் உறவினரான யோராமோடு சேர்ந்துகொண்டு சீரிய தேசத்து ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம் செய்தான் (2இரா 1:17: 9:24; 2நாளா 22:5-7). கிலேயாத்திலுள்ள உள்ள ராமோத்தில் யுத்தம் நடைபெற்றது யுத்தத்தில் சீரியர் யோராமை காயப்படுத்தினர். தனக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ள யோராம் யெஸ்ரேலுக்கு திரும்பினான். இது கில்போவா மலைக்கு அருகில் உள்ளது. அகசியா யோராமை பார்ப்பதற்கு யெஸ்ரேலுக்கு போனான். அப்பொழுது இஸ்ரவேலின் படைத்தலைவனாகிய யெகூ அகசியாவை கொன்று போட்டான். கர்த்தர் ஆகாபின் குடும்பத்தை சங்கரிக்க நிம்சியின் குமாரனாகிய யெகூவை அபிஷேகம் செய்து வைத்திருந்தார். இதனால் அகசியா யோராமை பார்க்க வந்தது தேவனால் அவனுக்கு உண்டான கேடாக லபித்தது (2இரா 9:4-10).