பைபிள் அகராதி: அகங்காரம் Pride




பைபிள் அகராதி: அகங்காரம் Pride

பெருமை ஆணவம் அகங்காரம்

மனுஷர் கர்த்தருடைய சமுகத்தில் மனத்தாழ்மையோடும் பயத்தோடும் இருக்கவேண்டும் அகங்காரமோ ஆணவமோ அகந்தையோ மனமேட்டிமையோ இருக்கக் கூடாது.

நீதிமொழிகள் புத்தகத்தில்
மனுஷனிடத்தில் காணப்பட வேண்டிய நல்ல சுபாவங்களை பற்றியும் மனுஷர் இடத்தில் காணப்படக் கூடாத தீய சுபாவங்கள் பற்றியும் பல இடங்களில் பல ஆலோசனைகளாக கூறப்பட்டிருக்கிறது.




அகந்தை வந்தால் இலச்சையும் வரும்: தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

நீதிமொழிகள் 11:2

அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்: ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

நீதிமொழிகள் 13:10


அழிவுக்கு முன்னானது அகந்தை: விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
நீதிமொழிகள் 16:18





மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
நீதிமொழிகள் 29:23



அகங்காரம் என்பதற்கான எபிரேய வார்த்தைகள் gah-ah-yone (1349), zaw-done (2087), zood (2102), ro’-kes (7407), shakh’-ats (7830), ro’-ah (7455)  என்பவைகள் ஆகும்.


இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். மனுஷர்களை தீட்டு படுத்தக்கூடிய பொல்லாத சுபாவங்களை குறித்து இயேசு கிறிஸ்து உபதேசம் செய்து இருக்கிறார். பெருமையும் மேட்டின்மையும் பொல்லாத சுபாவங்கள் ஆகும்.

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
மாற்கு 7:20

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்.
மாற்கு 7:21

களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.
மாற்கு 7:22

பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
மாற்கு 7:23






இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் எப்பொழுதும் மனத்தாழ்மையோடு இருக்க எச்சரிப்போடும் கவனத்தோடு இருக்க வேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இருமாப்பு வந்துவிட்டால் அவர்கள் பிசாசு அடைந்த ஆக்கினையில் விழுந்து விடுவார்கள். மேலும் இருமாப்பு அடைந்தவர்கள் நூதன சீஷராக அதிக வாய்ப்பு உள்ளது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறியிருக்கிறார் (1தீமோ 3:6).

ஜீவனத்தின் பெருமை பிதாவினால் உண்டானவை அல்ல அது உலகத்தினால் உண்டானவை என்று யோவான் தன் நிருபத்தில் எழுதியிருக்கிறார் (1யோவா 2:16). புதிய ஏற்பாட்டில் அகங்காரம் என்பதற்கான கிரேக்க வார்த்தை authadees (829) என்பதாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.