புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது
சார்லஸ் சதீஷ் குமார்
புதிய ஏற்பாடு முழுவதுமாக இயேசு கிறிஸ்துவை குறித்து போதிக்கிறது இயேசு கிறிஸ்துவை எவ்வாறு காண்பிக்கிறது என்பதனை நாம் பார்க்கலாம்.
அ). இயேசு தேவனுடைய குமாரன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றில் ஒரு மனிதன் உருவெடுத்தார் மற்ற எந்த நபரையும் போலவே அவரும் இந்த உலகத்தில் பிறந்து முழு மனிதனாக வளர்ச்சி அடைந்தார் ஆனால் இந்த மனிதன் மற்ற எவரையும் விட வேறுபட்டவர் ஆகவும் இருந்தார் அவர் சாதாரண மனிதர் அல்ல…!
ஒரு கன்னிகை பரிசுத்த ஆவியானவரால் கர்ப்பம் தரித்து அவரை பெற்றெடுத்தார் அவர் மனித உருவில் உலகத்திற்கு வந்த தேவனாகவே இருந்தார் அவர் தேவனுடைய குமாரன் ஆக இருந்தார். (லூக்கா 1:26-35; யோவான் 1:1,14)
ஆ). ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்.
- சாத்தானின் சக்தியில் இருந்து மனுகுலத்தை மீட்பதற்காக இயேசு வந்தார். (லூக்கா 19:10; கொலோ 1:13)
- நம்மை மீட்கும் பொருளாக தமது ஜீவனை கொடுப்பதற்காக இயேசு வந்தார். (மத் 20:28)
- நமது வாழ்க்கையில் சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்காக இயேசு வந்தார். (1யோவா 3:8)
- நமக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காக இயேசு வந்தார். (1யோவா 5:11-12; யோவான் 3:16-17; 10:10)
- தேவனுடைய குடும்பத்தில் நமக்கு மறுபிறப்பு கொடுப்பதற்காக இயேசு வந்தார். (யோவான் 1:12; 1யோவா 3:1-2)
- பிதாவாகிய தேவனோடு நமது உறவை புதுப்பிப்பதற்காக இயேசு வந்தார். (1யோவா 1:3)
இ). தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு காட்டுவதற்காக இயேசு வந்தார் (யோவான் 14:7-11; 1:8)
- அவர் ஆண்டவருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தினார். (1யோவா 4:9-10; ரோம 5:8)
- ஆண்டவருடைய வல்லமையை அவர் நமக்கு காண்பித்தார்.
- அவர் நோயாளிகளையும் ஊனமுற்றவர்களையும் பார்வையற்றவர்களும் குணமாக்கினார். (மத் 4:24; யோவான் 19:1-7)
- அவர் அசுத்த ஆவிகளை விரட்டினார். (மாற் 1:34; 5:1-17)
- அவர் அற்புதங்களைச் செய்தார். (மாற் 4:37-41; யோவான் 6:1-21)
- அவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். (யோவான் 11:43-44)
ஈ). இயேசு தமது வாழ்க்கையில் நமது துன்பங்களை பகிர்ந்து கொண்டார்
இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து சோதனைகளையும் தாமும் அனுபவித்தார் எனவே நமது உணர்வுகளை அவர் அறிந்திருக்கிறார். (எபி 4:15; மத் 8:14)
உ). இயேசு நமக்காக சிலுவையில் மரித்தார்
தீய மனிதர்கள் நமது ஆண்டவராகிய இயேசுவை பிடித்து ஒரு சாதாரணமான குற்றவாளியை போல அவரை ஒரு மர சிலுவையில் ஆணியினால் அறைந்தார்கள் அவரால் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடிந்து இருந்தும் அவர் அதை செய்யவில்லை ஏனெனில் சிலுவையில் அவரது மரணத்தின் மூலமே இந்த உலகத்தை ரட்சிக்க வேண்டியிருந்தது இயேசு நமக்காக மரித்தார். (1பேது 2:24; ஏசாயா 53:5-6)
ஊ). இயேசு நமக்காக மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்
கல்லறையில் வைக்கப்பட்ட மூன்றாம் நாளான போது தேவன் தமது குமாரனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். (மத் 28அதி; எபே 2:4-7; ரோம 6:4)
எ). இயேசு நமக்காக பரலோகத்தின் கதவுகளை திறந்தார்
இந்த உலகத்தில் தமது பணி முடிவடைந்தவுடன் இயேசு தமது பிதாவானவர் கூட இருக்கும்படி பரலோகத்துக்கு திரும்பினார் இதுவும் நமக்காகவே ஏனெனில் ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருக்கும்படி அவர் நமக்கு வழியை திறந்துள்ளார் அங்கு நாம் இன்றும் என்றும் நிரந்தரமாக ஜீவிக்க முடியும். (எபிரேயம் 10:19-22; யோவான் 14:1-3).