அப்போஸ்தலர் நடபடிகள் 1:2 இல் கூறப்பட்டுள்ள பிரபந்தம் என்பதன் அர்த்தம் என்ன…?
பிரபந்தம் என்னும் வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை லோகோஸ் (logos) என்பதாகும் . இதற்கு மூன்று விதமாகப் பொருள் கூறலாம்.
பேச்சுடன் தொடர்புடைய பயன்பாடு
அ). ொல் (யாக்கோபு 3:2)
ஆ). வார்த்தை (மத்தேயு 19:22)
இ). நிரூபம் (2கொரி 10:10)
ஈ). உபதேசம் (1தீமோ 6:3)
உ). பிரபந்தம் (அப் 1:1-2)
ஊ). பேச்சு (யோவான் 21:23)
எ). உள்ளான மனது வெளிப்படுவதையும் இந்த வார்த்தை குறிக்கும் (எபிரேயர் 4:2)
02. சிந்தையுடன் தொடர்புடைய பயன்பாடு
புரிந்துகொள்ளும் சக்திகள் எபிரேயர் 4:12
03. நபருடன் தொடர்புடைய பயன்பாடு
அ). தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை (யோவான் 1:1,14)
ஆ). எல்லா ஞானத்தின் வெளிப்பாடுகள் (எபே 1:8)
கிரேக்க மொழியில் சிந்தையை வெளிப்படுத்துவதற்கு ரேமா என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. வார்த்தைகளை இலக்கண ரீதியாக முறையாக வெளிப்படுத்துதல் என்பது இதன் பொருள்.
சுவிசேஷ புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை நாம் வாசிக்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் இயேசு கிறிஸ்து தமது விசுவாசிகளின் மூலமாக தனது ஊழியத்தை தொடர்ந்து நிறைவேற்றி வருவதை நாம் வாசிக்கிறோம்.