*சிலுவையின் உபதேசம்*



*சிலுவையின் உபதேசம்*


*சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,  இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.* - (1 கொரிந்தியர் 1:18).


அன்பார்ந்தவர்களே,  இயேசுகிறிஸ்துவிடம் வரும்போது,  நாம் இலவசமாக இரட்சிக்கப்படுவது மட்டுமன்றி,  நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் முழுவதிலும் முழு சுகத்தையும்,ஆறுதலும் அடைகிறோம். அதற்கு கி



றிஸ்துவின் ஆரோக்கியமான உண்மை சத்தியம் உறுதிபடுத்துகிறதல்லவா?

*சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது*. இந்நாட்களில் கிறிஸ்துவை குறித்து, உபதேசங்களை கேட்கும்போது,  அநேகருக்கு அது பைத்தியமாக தோன்றுகிறது. இந்த கிறிஸ்தவர்களுக்கு வேறுவேலையில்லை என்று கூறுகிறவர்களும் உண்டு. ஆனால் அந்த *இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறவர்களுக்கோ, அது தேவபெலனாய்,  நமது நம்பிக்கையாய், நமது எதிர்காலமாய், நமது ஜீவியத்தையே மாற்றுகிறதாக இருக்கிறது.*

கிறிஸ்துவினுடைய உபதேசம், ஒரு வேளை சிறந்த சொற்பொழிவாற்றுபவர்களால் கூறப்படாமல் இருக்கலாம், ஆனால், *சுவி,வசனத்தினால் மட்டுமே அது பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது.*

ஒருவேளை அது பெரிய தொழில் சம்பந்தபட்டதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அநேக தொழிலதிபர்களும், கோடீஸ்வரர்களும் தங்கள் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புகொடுக்க காரணமாய் இருக்கிறது. அந்த உபதேசம்,  மருந்து கொடுக்கிற சீட்டாக இல்லாமல் இருந்தாலும், ஆனால் எத்தனையோ கோடிக்கணக்கானவர்கள், *அந்த உபதேசத்தினால் ஆத்மீக சரீர சுகமடைந்திருக்கிறார்கள். ஏன் அந்த உபதேசத்திற்கு அத்தனை திருவசன வல்லமை ஆற்றல் என்றால்,  அது இயேசுகிறிஸ்துவாகிய உலக இரட்சகரை பற்றினது*. அவரே நமது விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார், அவரே ஆதியும் அந்தமுமாக, வழியும் சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார். *அவரே நமது இரட்சிப்பின் தலைவராக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பவராக, அவரே நமது சமாதான கர்த்தராக, தேவனுடைய ஒரே பேறான குமாரனாக, இருப்பவராகவே இருக்கிறவர். அவருடைய நாமமே அன்றி இரட்சிக்கப்படவதற்கு வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,  அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.* - (யோவான் 1:12).  இந்த அருமையான தேவனை போல் வேறு யாருண்டு?  நமது பாவங்களை கழுவி நம்மை இரட்சித்து, நம்மை கிறிஸ்துவின் சரீரமான சபையாகிய ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இந்த நமது தேவனை போல யாருண்டு?  




இயேசு:நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மத்தேயு 28:20




பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

மத்தேயு 9;35

நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப்பேசு.
தீத்து 2:1

எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
தீத்து 2:8




நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவாகளை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

1 தீமோத்தேயு 5:17

ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
1 தீமோத்தேயு 6:3

அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
அப்போ11;26

தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 5:42

ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
அப்போஸ்தலர் 16:13

அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.
அப்போஸ்தலர் 13;12

சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 1:18

முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ரோமர் 6:17


மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ;யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர் 28:31

பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கப் பிரசங்கித்து உபதேசம்பண்ணி,
அப்போஸ்தலர் 20:20


தேவகுமாரனை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை.  அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, *தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று*. - (யோவான் 3:18).

*இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை*

*இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை*  


*ஒரு மனிதனால் இரட்சிப்பு வராது,
முடியாது

*நியாயப்பிரமாணத்தினால் இரட்சிப்பு வராது

*தேவதூதர்களால் இரட்சிப்பு வராது

*ஸ்தீரியினாலே இரட்சிப்பு வராது

*பணம்,பொருள்,செல்வம் ஆஸ்தி போன்றவற்றாலும் இரட்சிப்பு வராது

*நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தினாலே மாத்திரம் இரட்சிப்பு வரும்*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.