மன்றாட்டு அபிஷேகம்


மன்றாட்டு அபிஷேகம்

L.ஜோசப்

  1. மன்றாட்டு அபிஷேகம் ஒருவரை தேவனுடைய சினேகிதர் ஆக்குகிறது (யாத் 33:11; ஏசாயா 41:8; யாக்கோபு 2:23)
  2. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தர் ஆக்குகிறது (உபா 5:5; 9:19; 10:10; யோபு 9:33; சங் 106:23; 1தீமோ 2:5)
  3. தேவ சித்தத்திற்கு முதலிடம் கொடுக்க வைக்கிறது (யோவான் 4:34)
  4. தேவனின் இருதயத்தை நன்கு அறிய வைக்கிறது (ஆதி 18:22,23; யாத் 32:12; உபா 9:20)
  5. தேவனை நம்ப வைக்கிறது (எண் 12:7-9)
  6. தேவனிடம் உரிமையை கொண்டு வருகிறது (யாத் 32:10)
  7. தேவனுக்கு முன்பாக தைரியமாய் வழக்காட வைக்கிறது (யாத்திரை 32:32; யோபு 16:21)
  8. தேவாதி தேவனுக்கு முன்பாக நிற்கும் கிருபையை கொண்டு வருகிறது (ஆதி 18:22; சங் 106:23)
  9. திறப்பில் நிற்கும் தகுதியை கொண்டு வருகிறது (ஆதி 18:20-21)
  10. தேவனிடம் ஜனங்கள் செய்த அருவருப்பு காக மன்றாடி ஜெபிக்கும் உரிமையை கொண்டு வருகிறது (எசேக்கியேல் 9:4)
  11. தேவனுடைய உறவை கொண்டு வருகிறது (எண் 12:13)
  12. மாம்சத்தை தோற்கடிக்கிறது (1இராஜா 17:20)
  13. தேவனைப்போல பார்க்க வைக்கிறது (1சாமு 16:7; லூக்கா 8:21)
  14. தேவனைப் போல பேச வைக்கிறது (மத் 26:71; 1கொரி 11:1)
  15. இயேசுவைப்போல ஜெபிக்க வைக்கிறது (மத் 20:34; அப் 22:13)
  16. மனிதனிடம் வைராக்கியமும் தேவனிடம் கெஞ்சவும் வைக்
    கிறது (யாத் 32:12,26)
  17. கண்ணில் கண்ணீர் குறையாமல் இருக்க வைக்கிறது (எரே 9:1)
  18. ஜெபிக்கிற வாஞ்சியை பெருக வைக்கிறது (1சாமு 12:23)
  19. முழங்காலில் குறையாமல் இருக்க வைக்கிறது (லூக்கா 22:44)
  20. நெற்றியில் அடையாளம் போட்டு பிரித் தெடுக்கிறது (எசேக்கியேல் 9:4)
  21. வரவிருக்கும் அறிவை முன்னறிவிக்கிறது (எரே 9:12; லூக்கா 19:42)
  22. தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவைக்கிறது (தானியேல் 9:23)
  23. தேவனுக்காக செயல்பட வைக்கிறது (நெகே 1:4)
  24. பரிதவிக்கும் இருதயமாய் மாற்றுகிறது (யாத் 32:12; ஓசி 11:8)
  25. உபவாசிக்க வைக்கிறது (உபா 9:9; 10:10)


மேலும்……..


  1. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் அழிந்து போகாதபடிக்கு மனந்திரும்புதலை கொண்டு வருகிறது
  2. துன்மார்க்கனை ரத்த பள்ளிக்கு நீங்கலாக்கி விடுவிக்கிறது
  3. சத்துருவின் பட்டயத்தினால் ஜனங்கள் வாரி கொள்ளாதபடி காத்துக் கொள்கிறது
  4. ஜனங்களை தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்ப வைக்கிறது

மன்றாட்டு வீரனை உருவாக்குதல்…….



  1. உங்கள் திருச்சபையில் தேசத்தின்மேல் ஆத்ம பலமும் கரிசனையும் உள்ளவர்களை கண்டுபிடியுங்கள்
  2. அப்படிப்பட்டவர்களை தேசத்திற்காக அழுது ஜெபிக்கிற மன்றாட்டு வீரர்களாக உருவாக்கலாம்
  3. தேவனின் பாரத்தை பகிர்ந்து கொண்டு அவர்களை தேவனின் பாரத்தை சுமக்கிற வர்களாக மாற்றலாம்
  4. ஆத்ம மீட்பின் அவசியத்தை விளக்கி கூறி அவர்களை தேசத்திற்காக திறப்பின் வாசலில் நின்று மற்றவர்களாக மாற்றலாம்
  5. தேசங்களில் நடக்கும் அருவருப்புகளை பெரிய காட்டி அவர்களை தேவபாரத்திற்கு நேராய் நடத்தலாம்
  6. இரவில் விழித்திருந்து ஜாமம் காத்து ஜெபிக்க பயிற்சி கொடுத்து பழக்கவும் செய்யலாம்
  7. ஒரு நாள் முழுவதும் உபவாசித்து ஜெபிக்க பயிற்சி கொடுக்கலாம்
  8. மூணு , ஏழு , 21 நாட்கள் உபவாசித்து தேவ சமூகத்திற்கு முன்பாக நின்று கருத்தோடு ஜெபிக்க பயிற்றுவிக்கலாம்
  9. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களை மாற்றும்போது தேவ பாரத்தை சுமந்து தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் நின்று மன்றாடி ஜெபிக்கிற மகிமையான மன்றாட்டு வீரர்களாக உருவாக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.