மன்றாட்டு ஜெபம்
L.ஜோசப்
இந்த வார்த்தைகளை கேட்ட போது நான் உட்கார்ந்து அழுது சில நாளாய் துக்கித்து உபவாசித்து மன்றாடி……
(நெகேமியா 1:4)
பரிசுத்த வேதாகமத்தில் மிக சிறந்த மன்றாட்டு வீரரும் நாம் யாவரும் கற்றுக் கொள்ளும்படி (மத் 11:29) கவனித்து பார்க்க வேண்டிய மன்றாட்டு வீரரும் ((எபிரேயம் 3:1) பின்பற்ற வேண்டிய (1பேது 2:21) மன்றாட்டு வீரரும் ஆகிய நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நமக்கு சிறந்த முன்மாதிரியான மன்றாட்டு வீரராக இருக்கிறார். அவருடைய ஊழியத்திலும் வாழ்க்கையிலும் இதை நாம் பார்க்க முடியும் அவருடைய மன்றாட்டு ஜெபத்தின் மூலம் அனேக ரகசியங்களையும் சத்தியங்களையும் நாம் கற்றுக் கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் ஊழியங்கள் நிறைவடைந்தாலும் அவரது மன்றாட்டு ஜெபம் ஊழியம் இன்றும்
முடிவடையாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன (ரோம 8:34; எபி 7:25; 1யோவா 2:1). வேதத்தில் பல விதமான ஜெபங்களை குறித்து எழுதப்பட்டுள்ளது அவைகளில் சில ஜபங்களுக்கு எடை அதிகமாகவும் பெரிதாகவும் இருக்கிறது இதில் மன்றாட்டு ஜெபம் சிறந்ததாகவும் மிகவும் வலிமையானதாகவும் விசேஷித்ததாகவும் இருக்கிறது.
மன்றாட்டு என்ற வார்த்தைக்கு வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள intercession என்ற ஆங்கில வார்த்தையை ஆனது intercedo, interpose என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து இறுதியாக intercede என்ற பதத்தில் சொல்லப்படுகிறது. Intercession என்பதற்கு எபிரேய மொழியில் Paga (பாகா) என்ற வார்த்தையும் கிரேக்க மொழியில் entugchano (என்ட்டுகானோ) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுவதாக வேத வல்லுனர்கள் கூறுகின்றனர் (1தீமோ 2:1; 4:15; ரோம 8:26,34).
பாகா (Paga) என்ற வார்த்தைக்கு…..
- பரிந்து பேசுதல்
- ஒருவர் மேல் விழுதல்
- சந்தித்தல்
- எல்லையை தாக்குதல்
- ஒருவர் மேல் சுமத்துதல்
என்பன போன்ற அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன பாகா என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் 46 முறை சொல்லப்பட்டுள்ளது.
entugchano (என்ட்டுகானோ) என்ற வார்த்தைக்கு…..
- எதிராக ஓடுதல்
- நேருக்கு நேர் சந்தித்த
- மற்றவர்க்கு ஆதரவாக கெஞ்சுதல்
- நோக்கி கூப்பிடுதல்
- வேண்டுதல் செய்தல்
என்பன போன்ற அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. என்ட்டுகானோ என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 6 முறை வருகிறது (ரோம 8:26,27,34; 11:2-4; 1தீமோ 2:1; 4:4-5; எபி 7:25).
மன்றாட்டு என்றால்…..
- பரிந்து பேசுதல் (1யோவா 2:21)
- மத்தியஸ்தம் செய்தல் (யோபு 16:21)
- நடுவராக இருந்து இனக்குவித்தல் (ஆதி 18:24)
- குறுக்கிடுதல் (1சாமு 25:1-35)
- சமாதான படுத்துபவராய் செயலாற்றுதல் (ஆதி 18:24)
- ஒருவருக்கு சமீபமாய் நெருங்கி போகுதல் (ஆதி 18:23,31)
- உத்தரவாதம் பண்ணுதல் (ஆதி 42:37)
மேலும்……..
- குற்றம் புரிந்த நபரை மன்னிப்பதற்காக அதிகாரத்தில் உள்ள ஒருவரை தூண்டுவதற்கு தனது செல்வாக்கை பயன்படுத்துவதை போன்றது
- தண்டனையிலிருந்து ஒரு நபரை காப்பாற்றுவதை போன்றது
- அதிகாரிகளால் ஆக்கினைக்கு உள்ளான கைதிகளின் சார்பாக பரிந்து பேசுவதை போன்றது
- தண்டனை பெற்ற குற்றவாளி குடும்பம் சார்பில் ஒருவர் உயர் அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிந்துரை செய்வதை போன்றது
- இரண்டு அல்லது மூன்று பேருக்கு இடையில் நிலவும் கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முயற்சிப்பதை போன்றது
- பிரச்சனையில் அல்லது சிக்கலில் இருக்கும் ஒருவரை மீட்பதற்காக அவரது சார்பாக நின்று துரிதமாய் செயல்படுவதை போன்றது
- தீய மனிதர்களிடம் அகப்பட்டுக் கொண்ட ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு தாமாகவே முன் சென்று ஞானமாய் பேசுவது போன்றது
- பாவம் செய்து தேவ கோபத்திற்கு ஆளான ஜனங்களுக்கும் நீதி செய்யும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் இடையில் நிற்பது
- ஜனங்கள் செய்த பாவங்களை தான் செய்த பாவமாக எண்ணி பாவத்தின் கொடூரத்தினால் தேவகோபம் அவர்கள்மேல் மூலாதபடிக்கு தேவனுக்கு முன்பாக கதறுவது
- ஜனங்களுக்கு ஆதரவாகவும் சத்துருக்களுக்கு எதிராகவும் அணுகுவது (எஸ் 4:16)
- ஜனங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தேவனுக்கு முன்பாக நிற்பது (யாத் 32:3-32)
- பரிந்து பேசும் இருதயத்தோடு தேவனுக்கு முன்பாக நிற்பது (ஆதி 18:22)
- தேவ கோபத்தை ஆற்றும்படி நிற்பது (சங் 106:23)
- தேவ கோபம் ஜனத்தின்மேல் மூளாதபடி கெஞ்சுவது (எண் 12:13)
- ஜனங்களுக்காக பரிந்து பேசி தேவை இரக்கத்தை பெறுவது (யாத் 32:13)
- தேவ பாரத்தை அறிந்து ஜெபிப்பது (ஆதி 18:18)
- தேவனுடைய பாதத்தில் விழுந்து ஜெபிப்பது (எசேக்கியேல் 9:8)