இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் ஊழியமும் வேத பாடம் 01


இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் ஊழியமும்

சார்லஸ் சதீஷ் குமார்


முன்னுரை :-


நமக்கு சுவிசேஷங்களின் அடிப்படையிலான ஆர்வமும் நோக்கமும் என்னவென்றால் ஏதோ ஒரு வரலாற்றைக் கூறி மனிதர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் இயேசு கிறிஸ்துவின் முழு வாழ்க்கை சரித்திரத்தையும் எடுத்துரைப்பதே ஆகும். இன்னும் சரியாக கூறினால் சுவிசேஷங்களின் பெரிதான ஆர்வமே அவருடைய உபதேசங்கள் ஆகும். சுவிசேஷங்களின் ஆகியோர்கள் இயேசு கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிதாவினால் வாக்குதத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க முயற்சித்தனர். கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் அவருக்குள் தங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக்கொள்ளவும் மக்கள் எல்லோருக்கும் கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன் என்பதையும் முழு உலகிற்கும் அவரே ரட்சகர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சித்தனர். மேலும் சுவிசேஷங்கள் மக்களை இயேசு உடனே கூடிய ஆழமான உறவுக்கு நேராய் நடத்தி முழு நம்பிக்கையும் கீழ்ப்படிதலையும் உள்ளவர்களாக மாற்றவும் உதவுகின்றன

பாடம் : 01

பூகோள, சரித்திர, அரசியல் மற்றும் சமய பின்னணி



முன்னுரை


காலம் நிறைவேறியபோது (மாற்கு 1:15) இயேசு பிறந்தார் என்று வேதம் கூறுகிறது. நான் மேற்கூறப்பட்ட பின்னணி எங்களை படிக்கும்போது தேவகுமாரனை பெற்றுக் கொள்வதற்கு இந்த உலகம் ஆயுதத்தோடு இருந்ததை அறிந்து கொள்ள முடியும்.

பூகோள பின்னணி


பாலஸ்தீனம் என்கிற வார்த்தை பிளீஸ்தியா என்ற வார்த்தையிலிருந்து வந்தது. பாலஸ்தீனம் வளமான பகுதியில் அமைந்திருந்தது. இதனுடைய மேற்கு எல்லை மத்தியதரைக்கடல் கிழக்கே யோர்தானும் வடக்கே  லீபனோன் மற்றும் எர்மோன் மலைகளும் தெற்கு யூதேயாவின் மலைகளும் இருந்தன.

பாலஸ்தீனம் மலைகளாலும் புல்வெளிகளிலும் நிறைந்த தேசமாக இருந்தது. நீளமான கலிலேயக் கடல் தேசத்தின் முக்கியமான பகுதியாய் இருந்தது. மேலும் பிரகாசமான யோர்தானின் சமவெளிகளும் ஒளிரும் உறை பனி நிறைந்த எர்மோன் மலைகளும் முக்கிய பகுதிகளாகும். கலிலேயா பாலஸ்தீனத்தின் தோட்டம் என்று அழைக்கப்பட்டது செழிப்பும் நீர்வளமும் நிறைந்ததாய் அது இருந்தது.

இயேசுவின் நாட்களில் கலிலேயா மிகுந்த மக்கள் தொகை உள்ள பகுதியாகவும் எல்லா இடங்களிலும் அலைகள் நிறைந்த பகுதியாகவும் கிரேக்க செல்வாக்கு நிறைந்ததாகவும் காணப்பட்டது. கலி லேயர்கள் மதப்பற்று மிக்கவர்களாகவும் இருந்தார்கள் கலிலேயா கடல் பேரிக்காய் வடிவமானதும் 13 மைல் நீளமும் 8 மைல் அகலமும் ஆனதாய் இருந்தது இயேசுவின் நாட்களில் இங்கு மீன் பிடிக்கும் தொழில் பெருவாரியாக காணப்பட்டது கலிலேயாவிற்கு தெற்கே சமாரியா அமைந்திருந்தது.

சரித்திர பின்னணி


சுவிசேஷ வரலாற்றின் பின்னணியை நோக்கும்போது ஏரோதியர்களும்  ரோமர்களை நாம் காண முடிகிறது. மேலும் இயேசுவின் நாட்களில் பாலஸ்தீனத்தை அந்த ஆட்சியாளர்களை குறித்து அறியமுடிகிறது.

இயேசு ஆகஸ்துராயனின் ஆட்சிக்காலத்தில் பிறந்தார். அகுஸ்து ராயன் ரோம பேரரசின் முதல் பேரரசர் ஆவார். அனேக சரித்திர வல்லுனர்கள் அவருடைய நிர்வாகத் திறமையையும் ராஜ்ஜியத்தை நடத்தி சென்ற விதத்தையும் வைத்து இவன் ரோமாபுரியின் மிக சிறந்த பேரரசன் என்று அழைத்தனர். இவன் கிமு 27 முதல் கிபி 14 வரை அரசாண்டான். இவன் உலகமெங்கிலும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று சட்டத்தை கொண்டு வந்தான் (லூக் 2:1). இந்த சட்டம் இயேசு பிறந்த பெத்லகேமுக்கு நேராக யோசேப்பையும் மரியாளையும் நடத்தியது. இயேசு பெத்லகேமில் பிறந்த போது ஏரோது யூதேயாவுக்கு ராஜாவாக இருந்தான்.

யூதர்கள் ரோமர்களின் அடிமைத்தனத்திற்கு கீழோ அல்லது அவர்களோடு தொடர்புடைய ஏரோதியர்களுக்கு கீழோ கொடுமையாக நடத்தப்பட்டார்கள். யூதர்கள் ரோமர்களை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை இரண்டு வகைப்பட்ட மனிதர்கள் உபத்திரவ படுகிற மக்களாக யூதர்களில் காணப்பட்டனர். ஒரு கூட்டத்தினர் சுதந்திரத்தை தேடும் மதவெறியர்களாய் இருந்தனர் செலோத்தே  கூட்டத்தார் என்று அழைக்கப்பட்டனர். இன்னொரு கூட்டம் அமைதியாக தேசத்தின் சுதந்திரத்தை விரும்புகிறவர்களை இருந்தனர் இவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விடுதலையை தங்களுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர்.

அரசியல் ஆயத்தம்


இயேசு பிறந்த பொழுது அரசியலில் பாலஸ்தீனம் காலம் நிறைவேறின சமயத்தில் இருந்தது. அந்நாட்களில் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் நிலை உலகத்தோடு ஒத்துப்போகிறதா இருந்தது. இதுவே ரோமப் பேரரசர்களின் குறிக்கோளாக இருந்தது. உரோமைப் பேரரசர்கள் உலகத்தோடு ஒத்து போக மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம் ரோம சமாதானம்.

இயேசு கிறிஸ்து ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு பின்பாகவோ வந்திருந்தாலும் அவருடைய சுவிஷேஷம் தடை செய்யப்பட்டிருக்கும். மக்கள் மத்தியில் நிலவிய சமாதானமின்மை கலவரங்கள் பேதங்கள் முதலியவை அவரின் சுவிசேஷ பணிக்கு இடையூறாக இருக்கும். ஆனால் எங்கும் சமாதானம் நிலவிய ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் அவர் வந்தது காலம் நிறைவேறிற்று என்கிற பதத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது.

இரண்டாம் காரணம் சிறந்த சாலை வசதி

உலகம் ஒற்றுமையா இருந்ததற்கு இரண்டாம் காரணம் சிறந்த சாலைகள் ஆகும். ஒருமுனை துவங்கி அடுத்த முறை வரைக்கும் சிறந்த நெடுஞ்சாலைகள் இருந்தன. அந்நாட்களில் எல்லா சாலைகளும் ரோமை புரிக்கு அழைத்து செல்கின்றன என்று கூறப்பட்டது. இதன் வழியாக ரோமப் பேரரசர்கள் தங்களின் சேனையை எல்லா பகுதிகளுக்கும் எளிதாக அனுப்ப முடிந்தது கிறிஸ்துவின் நாட்களிலும் அவருக்குப் பிந்தைய அப்போஸ்தலர் நாட்களிலும் எல்லாப் பகுதிகளுக்கும் கடந்து சென்று சுவிசேஷத்தை அறிவிக்க இந்த சாலைகள் பெரிதும் உதவியாக இருந்தன.

மூன்றாம் காரணம் பொதுவான மொழி

ரோம பேரரசின் ஆட்சிக் காலத்தில் எல்லா இடங்களிலும் வாழ்ந்த மக்கள் பரவலாக கிரேக்க மொழி பேசுகிறவர்கள் இருந்தனர் அது ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் உதவியாய் இருந்தது இதனால் சுவிசேஷத்தையும் எல்லா மக்களுக்கும் எளிதாக அறிவிக்க முடிந்தது.

மேற்கூறப்பட்ட மூன்று காரணங்களும் உலகை ஒரு ஒற்றுமைக்கு வைத்திருந்தது இது இயேசுவின் பிறப்பிற்கும் ஊழியத்திற்கு ஒரு ஆயத்தம் ஆக்கப்பட்ட சூழ்நிலையாய் அமைந்தது.

பொருளாதார ஆயத்தம்


இயேசுவின் நாட்களில் அவர் வருகைக்கு பாலஸ்தீனம் அரசியலில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் ஆயத்தமான நிலையில் இருந்தது. ரோமாபுரியின் தெருக்களில் மூன்றில் 2 பேர் அடிமைகளாக இருந்தனர். யுத்தங்களின் விபரீதங்கள் பின்விளைவு பாழ்நிலம் ஏரோது ராஜாவின் பிரம்மாண்டமான வீண் செலவு அரசாங்கத்திலும் மனரீதியிலும் சுமத்தப்பட்ட வரிச்சுமை மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்கள் தேசத்தில் வாழும் மக்களுக்கு தேவையான உணவைக் கூட தர முடியாத ஒரு பொருளாதார நெருக்கடியில் பாலஸ்தீனம் காணப்பட்டது மக்கள் வாழ்க்கையை மிகுந்த வருத்தத்துடன் களித்தனர்.


தற்சமயம் ஒரு கேள்வி எழுப்ப வாய்ப்பு உண்டு. மதரீதியான எழுப்புதல் தேசத்தில் பொருளாதார செழிப்பு நேரத்தில் வருமா? அல்லது பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் வருமா?

இதில் எந்த தயக்கமும் இல்லை பொருளாதார வீழ்ச்சி நேரத்தில்தான். பொருளாதார நெருக்கத்தில் தான் ஒரு நாளின் உணவுக்காகவும் அன்றாட சேவைக்காகவும் கவலையடைந்து மனிதன் தேவனைத் தேட மனதளவில் திரும்புவான் மனிதனின் முடிவுதான் (இயலாத நிலை) தேவனின் தருணமாய் காணப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட பொருளாதார நிலையில் பாலஸ்தீனத்தில் இயேசுவின் ஊழியம் மக்களிடம் செல்வாக்கை பெற்றது. இவ்வாறு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாலஸ்தீனம் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாக பட்ட நிலையில் இருந்தது.


நீதி அறநெறி வாழ்வில் ஆயத்தம்


இயேசு உலகத்திற்கு வந்தபோது பாலஸ்தீனம் நீதியற்ற நிலையில் அவர் வருகைக்கு ஆயத்தமாக இருந்தது. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரிக்கு எழுதிய நிருபத்தில் முதல் அதிகாரத்தில் அந்நாட்களில் வாழ்ந்த மக்களின் பாவ நிலையை விளக்குகிறார். உலகம் நீதியின் ஒரு நம்பிக்கையற்ற நிலையில் இருந்ததாக கூறுகிறான். மக்கள் சகலவித அணியாய் கத்தினாலும் வேசித்தனத்தினால் துரோகத்தினால் பொருள் ஆசையினாலும் பொறாமையினாலும் வாக்குவாதங்களும் வாழ்ந்து வந்தததினாலும் வன்மத்தினால் நிறைந்தவர்களாய் இருந்தார்கள். இப்படிப்பட்ட கால சூழ்நிலையில் இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு அடுத்தவர்களை ஸு விசேஷமாக அறிவித்து அவர்களை புதிய வாழ்விற்கு அழைத்தார். எனவே மக்களின் தனிப்பட்ட வாழ்விலும் பாலஸ்தீனம் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாய் இருந்தது என்று தெரியவருகிறது.

சமயப் பின்னணி


இயேசுவின் நாட்களில் ரொம்ப மக்களின் பழைய கடவுள்கள் எல்லாம் மதித்தோ கொண்டோ இருந்தன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு இரண்டு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று புதிய கடவுள்கள் கிழக்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மற்றொன்று ராயனை (ரோமப் பேரரசன் ) தொழுது கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடவுளுக்கு செலுத்தப்படும் மரியாதை ராயனுக்கு செலுத்தப்பட்டது. ஜனங்களுடைய எல்லா முயற்சிகளும் தோற்றுப் போயின எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும் மனிதனின் ஆத்தும பசியை அவைகள் கனிக்கவில்லை.



சமயம்


இயேசுவின் நாட்களில் யூதர்கள் மத்தியில் பரிசேயர்கள் சதுசேயர்கள் போன்ற இரு முக்கிய சமய பிரிவினர் இருந்தனர். பரிசேயர்கள் கூட்டம் மிகுதியாய் இருந்தனர் பரிசேயன் என்றால் வேறு பிரிக்க பட்டவன் என்று பொருள் இவர்கள் சமய சடங்காச்சாரங்கள் கடைப்பிடிப்பதில் உயர்ந்த நிலையில் இருந்தனர். இவர்களிலே செலோத்தே இன்னும் கூட்டத்தார் காணப்பட்டனர். இவர்கள் ஆர்வத்தோடு செயல்படுவதாகவும் தீவிரவாத பரிசேயர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

சதுசேயர் களும் ஜனங்களில் கூட்டமாய் இருந்தனர் இவர்களில் அநேகர் செல்வாக்கு உடையவர்களாகவும் கனம் உடையவர்களாகவும் இருந்தனர் மரணத்திற்கு பின்பு உயிர்த்தெழுதல் உண்டு என்பதை இவர்கள் விசுவாசிக்கவில்லை.

பரிசேயர் சதுசேயர் இவர்களோடு கூட சுவிசேஷ புத்தகங்களில் ஏரோதியர்கள் பற்றியும் கூறுகிறது. இவர்கள் பரிசேயர் களோடு இணைந்து இரண்டு முறை இயேசுவை எதிர்த்தார்கள் (மாற் 3:6; 12:13). இவ்வாறு அநேக சமயப் பிரிவுகள் இருந்தாலும் ஒரு ஊரிலும் ஒரு முறைப்படியான தேச பக்தி விசுவாசம் இல்லாதிருந்தது.


ஜெப ஆலயம்


யூதர்களுக்கு ஜெப ஆலயங்கள் இருந்தது. ஜெப ஆலயம் என்ற வார்த்தைக்கு ஜனங்களின் கூடுகை அல்லது ஜனக்கூட்டம் என்று பொருள். யூதர்கள் பாபிலோனில் சிறையிருப்பின் காலத்தில் இருந்தபோது தேவாலயத்தை விட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். எனவே ஜெபிப்பதற்கும் நியாயப்பிரமாணத்தை கற்பதற்கும் விவாதிப்பதற்கும் சிறு சிறு குழுக்களாக கூடினர் அந்த இடமே ஜெப ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

பலியிடும் இடமல்ல ஆராதிக்கவும் கற்கவும் ஜெபிக்கவும் மக்கள் கூடினர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.