விலைபோகும் ஊழியங்கள்



விலைபோகும் ஊழியங்கள்

வின்சென்ட் செல்வக்குமார்

சமீபகாலமாக ஒரு பெரிய கும்பல் கோணிப் பைகளில் நிரப்பிக் கொண்டு ஷாப்பிங் செய்ய புறப்பட்டு இருக்கிறது.

இவர்கள் வாங்க புறப்பட்டு இருப்பது எது தெரியுமா…? சபைகளையும் ஊழியங்களையும்.

“அட சபைகளையும் ஊழியங்களையும் கூட விலைக்கு வாங்குகிறார்களா யார் அவர்கள்..”

பொறுங்கள் சொல்லுகிறேன் நீங்கள் ஜெபிக்க போகிறவர்கள் காரியங்களை தெளிவாக தெரிந்து கொண்டால் தான் உங்களால் சிறப்பாக ஜெபிக்க முடியும் எனவே துவக்கத்திலிருந்தே உங்களிடம் விளக்கமாக சொல்லி விடுகிறேன்.

சமீப காலமாக உலக அரங்கில் இக்யூமினிக்கல் இயக்கம் ( Eccumenical movement) மற்றும் உலக சபைகளின் கூட்டமைப்பு (World Council of churche ) போன்ற வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. இந்த இரண்டு இயக்கத்தாலும் தான் சபைகளையும் ஊழியங்களையும் சகாய விலைக்கு விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


இக்யூமினிக்கல் இயக்கம் என்பதற்கு உலக பொது மத அமைப்பு என்று அர்த்தம் சொல்கிறார்கள். இந்த இயக்கத்தின்
நோக்கம் உலகில் உள்ள எல்லா பெரிய மதங்களையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய மதக் கொள்கையை உருவாக்குவது. அப்படி உருவாக்கப்பட்ட மதக்கொள்கைகளை எல்லா மதத்தவரும் பொதுவாக வைத்து அவர்களை ஏற்றுக்கொள்ள செய்வது. இருக்கிற மதங்கள் போதாதென்று இன்னொன்று…?

அடுத்து, எழும்பியிருக்கும் உலக சபைகளின் கூட்டமைப்பு. இது உலகிலுள்ள எல்லா பிரிவு கிறிஸ்தவ சபை களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பு. இதன் World Council of churches என்ற விரிவான பெயரை சுருக்கி (WCC) என்கிறார்கள். இந்த அமைப்பினரின் உயரிய நோக்கம் கத்தோலிக்க பிரிவினர் புராட்டஸ்டன்ட் பிரிவினர் உட்பட எல்லா கிறிஸ்தவ சபை பிரிவுகளையும் ஒருங்கிணைத்து அவை எல்லாவற்றிற்கும் ஒரே தலைமை பீடம் அமைத்து எல்லா கிறிஸ்தவ பிரிவுகளையும் ஒன்றாக்குவது.

இது கூட பெரிய பாதகம் இல்லை ஆனால் இவர்களுடைய நோக்கத்திற்கு இரண்டாவது முகம் ஒன்றும் இருக்கிறது அதுதான் பயங்கரம்.

ஒன்றாக இணைக்கப்பட்ட சபைகளின் அமைப்பை இக்யூமினிக்கல் இயக்கத்தார் கண்டுபிடித்து வைத்திருக்கிற போதும் அதே கொள்கையை ஏற்றுக் கொள்ள செய்வதே அவர்களின் இரண்டாவது திட்டம்.

“இதனால் இவர்களுக்கு என்ன லாபம்..?”

இதனால் இவர்களுக்கு லாபம் ஒன்றும் இல்லை ஆனால் இவர்களை இயக்குகிற சாத்தானுக்கு நிறையவே லாபம் இருக்கிறது.

ஒன்றை மாத்திரம் நீங்கள் மனதில் நன்கு பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தற்காலத்தில் க்ளோபலிகேஷன் என்று சொல்லப்படும் ஒருங்கிணைப்பு சமாச்சாரங்கள் எல்லாமே சாத்தானின் திட்டங்கள்தான்.

ஏனென்றால் உலகம் தோன்றியது முதல் இதுவரை இல்லாத முழு உலக அரசாங்கம் இனிமேல்தான் தோன்றப் போகிறது. அந்த முழு உலக அரசாங்கத்தின் ஆளுநராக சாத்தான் 7 வருடம் ஆட்சி செய்வான் என்பது வேதம் நமக்கு காட்டும் உண்மை. அப்படி ஒரு முழு உலக ஆட்சியை ஏற்படுத்த தான் முதற்கட்டமாக முழு உலகையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் சாத்தான் இறங்கி இருக்கிறான்.

முழு உலக ஆட்சி ஏற்பட சாத்தான் ஒருங்கிணைக்க வேண்டிய முக்கிய காரியங்கள் மூன்று இருக்கிறது. ஒன்று முழு உலக அரசாங்கம். இரண்டாவது முழு உலக வியாபாரம். மூன்றாவது முழு உலக மத அமைப்பு.

இதில் முழு உலக மத இணைப்பு சமாச்சாரத்திற்கு தான் இந்த இரண்டு இயக்கங்களும் பாடுகின்றன.

பார்வைக்கு இது இரண்டும் தனி தனி அமைப்பு போல தோன்றினாலும் இரண்டும் ஒன்றே.

இவர்களுடைய திட்டம்தான் என்ன…?


இக்யூமினிக்கல் இயக்கத்தார் உலகப் பொது மதக் கொள்கைகளை உருவாக்க வேண்டியது. அவர்கள் அதைச் செய்யும்போது இங்கே wcc இயக்கத்தார் கிறிஸ்தவ சபைகளை இணைக்க வேண்டியது. இந்த இணைப்பு முடிந்தவுடன் போது மதக் கொள்கைகளை இந்த ஒருங்கிணைந்த கிறிஸ்தவ சபைகளை ஏற்றுக்கொள்ள செய்வது. இது தான் இவர்களுடைய மாஸ்டர் பிளான்.

இதற்காக இப்பொழுது மதங்களின் இணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகத்தில் உள்ள எல்லா முக்கிய மதங்களின் கொள்கைகளையும் தத்துவங்களையும் ஒருங்கிணைத்து புதிய வேதாகமம் ஒன்றை வெளியிட இந்த இயக்கத்தார் முயன்று கொண்டிருக்கிறார்கள். புத்த மத கோட்பாடுகள் இந்திய மதங்களின் நூல்களான ராமாயணம் மகாபாரதம் பகவத் கீதை மற்றும் சமண மதங்கள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் கொள்கைகளை எடுத்து தாளித்து போட்டு ஒரு புதிய வேதாகமத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதையடுத்து இவர்கள் பிற மதத்தவரின் சடங்காச்சாரங்கள் ஐயும் பண்பாடுகளையும் கடைப்பிடிக்கவும் அதிகரிக்கவும் வலியுறுத்துகிறார்கள்.

இது இப்படி இருக்க உலக சபைகளின் கூட்டமைப்பு இயக்கத்தார் இன்னும் ஒரு படி மேலே போய் பகுதிகளை இணைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் உள்ள காண்டர்பரி என்ற இடத்தில் உள்ள ஆங்கிலேயன் சபைகளின் தலைமை பிஷப் ராபர்ட் லூயின்ஸி எல்லா புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கும் கொடுத்திருக்கிற அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் “எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே தலைமையின் கீழ் ஒருங்கிணைய வேண்டும். ரோமாபுரியை நாம் நமக்கு தலைமை பீடமாகவும், கத்தோலிக்க சபையின் தலைவரான போப் அவர்களையே நாம் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் உபதேச கொள்கைகள் எதுவாக இருந்தாலும் நாம் அதையெல்லாம் மறந்து ஒன்றிணைய வேண்டும்”.

1980ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த பிஷப் டாக்டர் ராபர்ட் ருயின்ஸி அங்குள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த பேட்டி இப்படி ஆரம்பிக்கிறது.

“புரோடஸ்டன்ட் சபைகள் கத்தோலிக்க சபைகள் உடன் இணைக்கப்படுமா…?”

“உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் “புரோடஸ்டன்ட் சபைகள் கத்தோலிக்க சபைகள் உடன் இணைக்கப்படுமா”  என்று கேட்பதை மாற்றி எப்போது இணைக்கப்படும் என்று கேட்க வேண்டும்..”

புரோடஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க சபைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று இத்தனை பாடு படுகிறார்கள் அப்படி இணைக்கப்பட்டால் நீங்கள் அதன் தலைவராக இருப்பீர்களா…?

இல்லை எனக்கு அதில் ஈடுபாடு இல்லை அதன் தலைமையிடமாக ரோமாபுரியை யும் அதன் தலைவராகப் ஆண்டவரே உம்மை நாங்கள் வழிமொழிகிறோம்.

“நாங்கள் என்றால்…?”

நானும் என்னைப் போலவே பரந்த மனது உள்ள இன்னும் பல நூறு சபை பிரிவுகளின் தலைவர்களும்….

“இதுவரை கொள்கை ரீதியில் பிரிந்து கிடந்த இரு பிரிவுகள் இணைவதில் கொள்கை வித்தியாசங்கள் தடையாய் இருக்குமே..”

சபைகளுக்கு நடுவில் இருக்கும் கொள்கைகளை மாத்திரமல்ல எல்லா மதங்களுக்கும் நடுவில் இருக்கும் கொள்கைகளுமே ஒன்றாக்கி கொண்டிருக்கிறோம் எப்படி எனில் எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பான கொள்கைகளையும் பாரம்பரியங்களையும் இணைந்து உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாய் ஒளி படும்படியான சமத்துவ மதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.”

இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய மதக் கொள்கையின் படி இயேசு கிறிஸ்து மாத்திரமே தேவன் என்பதை மாற்றி ஒரு தேவன் என்று கொண்டு வரப் போகிறார்கள். இயேசுவே வழி என்பதை மாற்றி இயேசுவும் ஒரு வழி என்று போதிக்க போகிறார்கள்.

உலக சபைகளின் கூட்டமைப்பு இயக்கத்தார் உருவாக்கியிருக்கும் கொள்கைகளின் சாரம்சத்தை வெளியிட்டிருக்கிறார்கள் படித்துப் பாருங்கள்.

  1. இயேசு கிறிஸ்து மாத்திரமே இரட்சிப்புக்கு ஒரே வழி என்று பிரசங்கிக்க கூடாது இயேசுவும் ஒரு வழி என்று தான் அறிவிக்க வேண்டும்.
  2. பரிசுத்த வேதாகமமும் மாத்திரமே கடவுளுடைய வார்த்தை என்றும் வேதாகமத்தில் இருப்பதெல்லாம் கடவுளின் வார்த்தைகள் மாத்திரமே என்றும் சொல்லக் கூடாது கிறிஸ்தவர்களின் வேதாகமத்தில் கடவுளுடைய வார்த்தைகளும் இருக்கிறது என்று சொல்லவும் நம்பவும் வேண்டும்.
  3. கிறிஸ்துவ மதத்தின் கொள்கைகள் மாத்திரமே சிறந்தது என்று சொல்லக்கூடாது எல்லா மதங்களிலும் கடவுளுடைய வார்த்தையும் நல்ல கொள்கைகளும் இருக்கிறது என்பதை அறிவிக்கவும் வேண்டும் அவற்றையும் வாசிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
  4. கம்யூனிஸ்டுகள் மற்றும் நாஸ்திகர்களின் கொள்கைகளுக்கும் மதிப்பளித்து அவற்றில் உள்ள சிறந்த கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவும் பயன்படுத்தவும் வேண்டும்.
  5. கிறிஸ்தவர்களுடைய கொள்கைகளின்படி சாத்தன் என்பவன் வெறுக்கப்பட தகவலும் இல்லை சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும் கூட சிறந்தவை உயர்ந்தவை ஆக இருக்கிறது. அவற்றையும் நாம் பாரபட்சம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுளாக இருந்தாலும் சாதாரண இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அளவிற்கு ஏற்ப மனிதர்களின் நன்மைக்காகவே செயல்படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தீமைகளுக்கெல்லாம் தானே காரணம் என்று நம்பக்கூடாது.

இவர்கள் கிறிஸ்து மாத்திரமே தேவன் என்று கிறிஸ்தவர்கள் நினைப்பதால் தான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு எதிர்த்து நிற்கிறார்கள் என்று நீ கிறிஸ்துவின் மேன்மையை குறைப்பதற்கும் கிறிஸ்துவை பற்றி யோசிப்பதற்கு நிறைய காரியங்களை தயாரித்து வைத்து இருக்கிறார்கள். ஆனாலும் அதை வெகு நாசூக்காக செய்கிறார்கள். உலக பொது சபைகளுக்கு வேதாகமும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை இப்போதே பல தியாலிஜிக்கல் கல்லூரிகளில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

கடவுளுடைய வார்த்தை யூதர்களுக்கு மாத்திரமல்ல எல்லாருக்குமே வெளிப்படுத்தி இருக்கிறது. அதை அவரவர் தொகுத்து தங்கள் வேதங்கள் என்று வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களின் கொள்கைகளையும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதேபோல முழு உலக சபைக்கான புதிய பாமாலை பாடல்களையும் இயற்றி இருக்கிறார்கள். அதில் கிறிஸ்துவின் தரத்தை குறைப்பதற்கு என்ன வழி உண்டோ அதை எல்லாவற்றையும் ரொம்பவும் ஞானமாய் புகுத்தியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒரு பாடலை மாத்திரம் தருகிறேன் படித்து பாருங்கள்.

  1. அது ஒரு வெள்ளிக் கிழமையின் காலை. அவர்கள் என்னை என் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.

நான் பார்த்தபோது சிலுவையில் அறைவதற்கு ஒரு தச்சனை அவர்கள் தங்களிடம் வைத்திருந்தது தெரிந்தது.

இதற்காக நீங்கள் பிலாத்துவை குற்றம் சொல்வீர்கள். இதற்காக நீங்கள் சாத்தானை குற்றம் சொல்வீர்கள்.

ஆனால் உண்மையில் குற்றவாளி கடவுளே. நான் அவரையே குற்றம் சொல்வேன்.

2. இதற்காக ஆதாமை நீங்கள் குற்றம் சொல்வீர்கள் ஏவாளையும் நீங்கள் குற்றம் சொல்வீர்கள்.

அவர்கள் தின்ற பலத்தையும் நீங்கள் குற்றம் சொல்வீர்கள் ஆனாலும் நான் அதை நம்ப மாட்டேன்.

அந்தக் குற்றத்திற்கு காரணம் கடவுளே அவர்தானே சர்வத்தையும் படைத்து மனிதனையும் படைத்து அவனுக்கு துணையாக பெண்ணையும் படைத்தார்.

பலம் அங்கே இல்லாதிருந்தால் பாவமும் அங்கே இருந்திராதே.

3. பரபாஸ் என்பவன் கொலைகாரன் அவனை விடுவிக்க ஆள் உண்டு.

உன்னை சிலுவையில் அறைவது என்றால் ஏன் என்று கேட்க நாதியில்லை. பரலோகத்தில் தேவன் இதை பார்த்தால் அவரோ ஒன்றும் செய்யவில்லை.

தென்றலாய் தூதர்கள் பார்த்தார்கள் அவர்கள் விடுதலைக்காக தங்கள் செட்டைகளை கூட அசைக்கவில்லை.

இதுதான் இனிவரும் கால சபைகளில் பாடப்பட போகிற பாடல் இது மாதிரி இன்னும் ஏராளம் பாடல்கள் இருக்கின்றன.

சரி சபைகளை ஒருங்கிணைப்பதற்கு இவர்கள் இப்போது என்ன விதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

முதலாவது சபைகளை குறிவைத்து நிறைய பண உதவிகளை செய்கிறார்கள் சபைகளிலிருந்து விடுதிகள் நடத்தவும் பள்ளிகள் நடத்தவும் மருத்துவமனைகள் நடத்தவும் சபையில் போதகர்கள் தங்களை நடத்திக் கொள்ளவும் எண்ண முடியாத அளவுக்கு பண உதவியை செய்கிறார்கள்.

ஒரு சபை இவர்களிடத்தில் பணம் வாங்கி அனாதை விடுதியை முதியோர் இல்லம் ஆரம்பித்து விட்டது என்று வைத்துக்கொள்வோம் பின்னர் அதைத் தொடர்ந்து நடத்த அவர்களிடம் நிரந்தரமாக நிதி உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டும் அவர்கள் நிறுத்திவிட்டால் இங்கே சபை தள்ளாட ஆரம்பித்து விடும்.

அவர்கள் ஆரம்பித்திருக்கிற ஊழியத்தில் வேறொன்று இருக்கிற வரைக்கும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் வேறு ஒன்றிய பிறகு தங்கள் டிமாண்டை வைப்பார்கள். இவர்கள் அவர்கள் சொல்லும் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவும் பிரசங்கிக்கவும் பரவச் செய்யவும் வேண்டும். இப்போது இவர்களால் எதிர்த்துப் பேச முடியாது அவர்கள் சொல்வது தவறான கொள்கை என்று தெரிந்தாலும் அதை வழிமொழிந்து ஆக வேண்டும். எதிர்த்தால் அவர்களுடைய உதவிகள் நிறுத்தப்படும் இங்கே பணத்தை மையமாக வைத்து துவங்கப்பட்ட பணிகள் சிதறிப் போகும் ஓவர் நைட்டில் நடத்தியவர் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்.

“கொடுக்கிறவன் சொன்னால் கூலியையும் மயில் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்”.

இந்த சபை இணைப்பிற்காக முதலில் பெரிய அளவில் வேறு ஒன்றிப்போன ஸ்தாபனங்களை மாத்திரம் குறிவைத்து பணம் கொடுத்து கொண்டிருந்த இவர்கள் இப்போது பெந்தேகோஸ்தே அனுபவமுள்ள சபைகளையும் குறிவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சுவிசேஷகர்கள் மிஷனரிகள் போன்றவற்றையும் குறிவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய அளவு நிறுவனங்கள் சுவிசேஷங்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டால் தங்கள் கொள்கைகளை மக்கள் மனதில் விதைக்க வலி உண்டாகும் என்று கருதுகிறார்கள். மிஷினரி நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதன் மூலம் அவர்களை நிர்பந்தித்து எளியவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டாம் உதவிகள் செய்தால் மாத்திரம் போதும் என்று சொல்லப் போகிறார்கள். பல போதகர்கள் இவர்களுடைய தந்திரம் தெரியாமல் பெட்டியை தூக்கிக் கொண்டு தேடி போய் பணம் வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.

பொதுவாகவே பாருங்கள் பணத்தை நம்பி அல்லது விரும்பி ஊழியம் செய்கிற யாவரும் கொள்கைகளில் பிடிப்பு உள்ளவர்களாய் இருக்க மாட்டார்கள். பரலோகத்தின் மேல் ரொம்பவும் நம்பிக்கை வைக்க உதவும் இருக்க மாட்டார்கள் எந்த அளவுக்கும் துணிவாள்.

இவர்களை வளைப்பது வெகு சுலபம் பணத்தை கட்டினால் கேள்வி குறியாய் வளைந்து விடுவார்கள். இதை தெரிந்து தான் பணத்தைக் காட்டி அவர்களை சிக்க வைக்கிறார்கள் இவர்களை தங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள செய்யவும் இவர்களை கொண்டு இவர்களை பின்பற்றும் ஜனங்களை தங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள செய்யவும் சபைகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிடுகிறார்கள்.

இரண்டாவது காரியமாக இவர்கள் வேதாகம கல்லூரிகளை குறிவைக்கிறார்கள் இதில் தங்கள் மூக்கை நுழைத்து தங்கள் கருத்துக்களை இனி ஊழியம் செய்ய வரும் ஊழியர்களுடைய உள்ளங்களில் வைப்பதன் மூலம் எதிர்கால ஊழியங்களை தங்கள் சொற்படி செய்ய வைக்க எளிது என்று நினைத்து காரியங்களில் இறங்கி வருகிறார்கள். இவர்களுடைய கருத்துக்களும் சிந்தனைகளும் ரொம்பவும் ஞானம் உள்ளவை போல தோன்றுவதாலும் சிந்திக்க வைப்பதாக இருப்பதாலும் ஏராளமான வேதாகம கல்லூரியில் நியூ ஏஜ் சிந்தனைகளுக்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் விசுவாசிகளான ஜனங்களுக்கும் ஊழியம் செய்ய புறப்படப் அவர்களுக்கும் தான் விழிப்புணர்வு அதிகம் வேண்டும் கருத்துக்களை போதிக்கும் சபைகளையும் கருத்துக்களை முன் மொழியும் ஊழியர்களையும் கண்டுகொண்டு விலக வேண்டும். வேதாகம கலாசாலையில் இழுக்கு போக விரும்புகிறவர்கள் அதன் உபதேசங்களும் கற்பிக்கும் காரியங்களும் எப்படிப்பட்டவை என்பதை நன்கு அறிந்து பின்னர் சேரவேண்டும் கதவு திறந்திருக்கிறது என்பதற்காக நுழைந்துவிடக் கூடாது அது டீயின் களாகவும் இருக்கலாம்.

ஊழியங்களும் நிறுவனங்களும் வெளிநாட்டு நீதிக்காக அலையக்கூடாது இப்படிப்பட்டவர்கள் தான் அவர்களுடைய முதல் இலக்கு. போதுமென்ற மனதுடன் கூடிய தெய்வபக்தி மிகுந்த ஆதாயம்.

நான் சேகரித்து இருக்கிற ஆதாரங்களின் அடிப்படையில் இப்போது நம் நாட்டில் நிறைய சபைகளும் வேதாகம கல்லூரிகளும் விலை போக ஆரம்பித்து விட்டன இவைகள் இந்த இயக்கத்தினுடைய கருத்துக்களையும் உபதேசங்களையும் மெல்ல மெல்ல ஜனங்களிடையே புகுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேகமாய் பரவி வரும் இந்த அலையை நம்மால் தடுக்க முடியாது காரணம் இது வேதத்தில் முன்னுரைக்கப்பட்ட காரியம் ஆனால் இதை கட்டுப்படுத்தவும் நாமும் நம்மை சேர்ந்தவர்களும் அதில் விழாமல் பாதுகாக்கலாம் இதற்காக நாம் அதிகம் ஜெபிக்க வேண்டும் ஜெபம் மாத்திரமே ஜெயிக்க வழி இல்லையா…?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.