பரிசுத்த வேதாகமத்தின் மகிமை
- பரிசுத்த வேதாகமம் 40 வெவ்வேறு மனிதர்களால் ஆயிரத்தி இருநூறு வருடங்களாக கொஞ்சமாய் எழுதப்பட்டிருந்தாலும் அதன் சாரம்சம் மனிதனின் இரட்சிப்பு என்பது முதலில் இருந்து கடைசி வரை துடித்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.
ஏனென்றால் இப் பரிசுத்த வேதாகமம் முழுவதிலும் தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள் (2பேது 1:21). ஆகையினால் பரிசுத்த வேதாகமம் முழுவதும் ஆண்டவருடைய வார்த்தைகள் அடங்கியது தவறு இல்லாதது என்பதை நாம் உணர வேண்டும். இயேசு கிறிஸ்துவே அதைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார் (யோவான் 5:39). வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே என்றும் கூறியிருக்கிறார்.
- பரிசுத்த வேதாகமம் 66 தனிப்பட்ட பிரிவுகள் அடங்கிய ஒரு தொகுப்பு என்று நாம் எண்ணினாலும் அது ஒரே புத்தகம் என்பதை அது நிரூபித்துக் காட்டுகிறது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சிருஷ்டி போடு ஆரம்பிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமம் சிருஷ்டிப்பின் முடிவோடு நிறைவு பெறுகிறது என்பதை காணலாம்.
ஆதியாகமம்
|
வெளிப்படுத்தின விசேஷம்
|
1:1 - ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்
|
21:1 - பின்பு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன் முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின
|
1:10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும் சேர்ந்த ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பேரிட்டார்
|
21:1 சமுத்திரமும் இல்லாமல் போயிற்று
|
1:4-5 வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார் இருளுக்கு இரவு என்று பேரிட்டார்
|
21:25 அங்கே இராக் காலமும் இல்லாதபடியால் (அதன் வாசல்கள் அடைக்கப்படுவதில்லை)
|
1:16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்
|
20:11 அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின அவர்களுக்கு இடம் காணப்படவில்லை
21:23 நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை தேவனுடைய மகிமையே அதை பிரகாசித்தது ஆட்டுக்குட்டியானவர் எதற்கு விளக்கு
|
2:17 அதை (நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி) நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்
|
21:4 இனி மரணமும் இல்லை ( தூக்கம் இல்லை அலருதலும் இல்லை வருத்தமும் இல்லை) முன்பின் அவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது
|
3:16 உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்
|
21:4 இனி அலருதலும் இல்லை வருத்தமும் இல்லை
|
3:17 பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்
|
22:3 இனி ஒரு சாபமும் இராது
|
3:1-4 சாத்தான் மனுகுலத்தை ஏமாற்றுபவன் ஆக உலகத்துக்குள் வருகிறான்
|
2:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ள தீர்க்கதரிசியுமாயிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமும் ஆன கடலிலே தள்ளப்பட்டான்
|
3:22-24 ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்காத படிக்கு ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டார்கள்
|
22:2 நகரத்து வீதியின் மத்தியிலும் நதியின் இருகரையிலும் 12 விதமான கனிகளைத் தரும் ஜீவவிருட்சம் இருந்தது அது மாதந்தோறும் தன் கனியை கொடுக்கும் அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியம் அடைவதற்கு ஏதுவாக வகைகள்
|
3:24 தேவனுடைய சந்நிதியிலிருந்து மனிதன் துரத்திவிடப்பட்டான்
|
22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து அவருடைய சமூகத்தை தரிசிப்பார்கள்
|
2:10 மனிதனின் முதல் குடியிருப்பு ஒரு ஆற்றின் கரையில்
|
22:1 மனிதனின் நித்திய வீடும் ஒரு நதியின் பக்கத்தில்
|
இப்படியாக ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களில் கூறப்பட்ட படைப்பும் மனிதனின் வாழ்வும் வெளிப்படுத்தின விசேஷம் கடைசி மூன்று அதிகாரங்களில் முடிவடைகிறதை காண்கிறோம்.
அதுமட்டுமல்ல வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் கடைசி வசனங்களை கொஞ்சம் கவனிப்போம்:
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:18
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:19
இப்படியாக வேதபுத்தகத்தில் எதையாவது எடுத்துப் போடவோ அல்லது கூட்டவோ கூடாது என்று எச்சரித்த தேவன் இருபதாம் வசனத்தில் இவைகளை சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார் ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும் என்று இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்தும் நம்மை எச்சரித்து விட்டு கடைசியாக பரிசுத்த வேதாகமத்தின் கடைசி வசனம் ஆக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென் என்ற ஆசீர்வாதத்தோடு பரிசுத்த வேதாகமத்தை முடித்திருக்கிறார் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் என்று பாருங்கள்.
- ஆரம்பம் - பரிசுத்த வேதாகமத்தின் ஆரம்பமே நாத்திகர்களுக்கும் பரிணாம கொள்கைக்காரருக்கும் ஒரு சவாலாய் ஆண்டவர் எழுதிக் கொடுத்திருக்கிறார் அதைப் பார்ப்போம்:
ஆதி 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்
ஐந்து வார்த்தைகளை அடங்கிய இந்த வசனத்தில் நான்கு காரியங்களை ரத்தின சுருக்கமாக ஆண்டவர் நமக்கு கூறியிருக்கிறார்.
1). ஏதோ ஒரு துவக்க காலத்திலேயே தேவன் (ஆதியும் அந்தமும் மாணவர் அல்பாவும் ஓமெகாவும் மாணவர்) வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2). வானமும் பூமியும் தானாக உருவாகவில்லை தேவன் இவைகளை படைத்தார்.
3). தேவன் படைத்தது வானமும் அதில் உள்ள நட்சத்திர கூட்டம் எல்லாம் பூமியும் அதிலுள்ள தாவரங்களும் மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் முதலான எல்லாம்.
4). இவைகளெல்லாம் பரினாம காரர் கூறுவதுபோல் தாமாகவே படிப்படியாய் முன்னேறி இப்பொழுது உள்ள நிலைமைக்கு வரவில்லை இவைகளெல்லாம் ஆண்டவரால் படைக்கப்பட்டவையே.