கர்த்தருடைய வார்த்தை (ஆய்வு கட்டுரை)


கர்த்தருடைய வார்த்தை (ஆய்வு கட்டுரை)

சார்லஸ் M சதீஷ் குமார்


வேத வசனங்களின் நோக்கம்


நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதமல்லாமல்,
2 தீமோத்தேயு 3:14

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
2 தீமோத்தேயு 3:15

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோத்தேயு 3:16

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:17

நம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
2 பேதுரு 1:3

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 1:4

கர்த்தருடைய வார்த்தை ஜீவனை உருவாக்குகிறது


நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
யோவான் 6:63

  1. அது படைக்க கூடியது

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
சங்கீதம் 33:6

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
சங்கீதம் 33:9

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
எபிரேயர் 11:3

கர்த்தருடைய வார்த்தை தண்ணீரைப் போன்றது

  1. அது சுத்திகரிக்கிறது


தேவ வார்த்தையினால் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட வர்களாக நாம் கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் வாழ்க்கையை துவங்குகிறோம்.

நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
யோவான் 15:3

(எபேசியர் 5:25-27 இவைகளையும் படியுங்கள்)
  1. அது சுத்தமாக வைத்திருக்கிறது


நமது இருதயங்களில் விதைக்கப்பட்ட தேவ வார்த்தை பாவம் செய்வதில் இருந்து நம்மைக் காக்கிறது

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
சங்கீதம் 119:9

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
சங்கீதம் 119:11

கர்த்தருடைய வார்த்தை நமது வாழ்க்கைக்கு ஒளியாக இருக்கிறது

தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள். எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
2 பேதுரு 2:19

இருள் அடைந்த உலகில் அது நமக்கு புரிந்து கொள்ளும் அறிவை இருக்கிறது

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:8

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
சங்கீதம் 119:130

கர்த்தருடைய வார்த்தை ஆவிக்குரிய ஆதாரமாய் இருக்கிறது

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4:4

அது ஆவிக்குரிய வளர்ச்சியை அளிக்கிறது

மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று
1 கொரிந்தியர் 3:1

நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஐனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன். இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
1 கொரிந்தியர் 3:2

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1 பேதுரு 2:3

கர்த்தருடைய வார்த்தை விதையாக இருக்கிறது

லூக்கா 8:14-15 வசனங்களில் இயேசு தமது சீடர்களுக்கு விதைப்பவன் ஐ பற்றி உவமையை கூறினார். பதினோராம் வசனத்தில் அவர் விதை தேவனுடைய வசனம் என்று கூறுகிறார். நாம் தருபவர்களாக இருப்பது நமது வாழ்க்கையை பற்றிய கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது (சங் 1:3).

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
2 கொரிந்தியர் 9:10

கர்த்தருடைய வார்த்தை பட்டயத்தை போன்றது

இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6:17

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரேயர் 4:12

இயேசு வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டபோது அவர் எவ்வாறு இந்தப் பட்டயத்தை சாத்தானுக்கு எதிராக பயன்படுத்தினார் என்பதை லூக்கா 4:1-14 கூறுகிறது .

கர்த்தருடைய வார்த்தை நாம் ஜெபிப்பதற்கு உதவுகிறது

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
யோவான் 15:7

நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ என்ற சொற்தொடர் உரிமை உள்ள ஒருவனை போல அதிகாரத்தோடு கேள் என்றே பொருள்படுகிறது. இப்போது படைக்கும் திறனுடைய வார்த்தை நமது நாவிலேயே இருக்கிறது.

கர்த்தருடைய வார்த்தை நமக்கு பலமாக இருக்கிறது

ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:24

பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை, ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
மத்தேயு 7:25

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
மத்தேயு 7:26

பெருமழை சொரிந்தது, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
மத்தேயு 7:27

அவருடைய வார்த்தை கேட்டு அதற்கு கீழ் படிகிறவர்களை   கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனோடு ஒப்பிடுகிறார். கர்த்தருடைய வார்த்தை நமது வாழ்க்கையில் உள்ளான அஸ்திவாரத்தை கட்டி எழுப்புவதால் நமக்கு எதிராக எது வந்தாலும் நம்மால் உறுதியாக நிலைத்து நிற்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.