எபேசியர் 6:10-18 தியானம்
சார்லஸ் MSK
பரிசுத்தவான்களுக்கு கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்
- கத்தரியில் பலப்படுங்கள் (எபே 6:10)
- கர்த்தருடைய சத்துவத்தின் வல்லமையில் பலப்படுங்கள் (எபே 6:10)
- தேவனுடைய சர்வ ஆயுதத்தை தரித்துக்கொள்ளுங்கள் (எபே 6:11)
- சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நில்லுங்கள் (எபே 6:13-14)
- சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டிக் கொள்ளுங்கள் (எபே 6:14)
- நீதி என்னும் மார்க் கவசத்தை தரித்துக்கொள்ளுங்கள் (எபே 6:14)
- சமாதானத்தின் சுவிசேஷத்திற்கு உரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை உங்கள் கால்களில் தொடுத்து கொள்ளுங்கள் (எபே 6:15)
- விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கள் )எபே 6:16)
- இரட்சணியம் என்னும் தலை சீராவை எடுத்துக்கொள்ளுங்கள் (எபே 6:17)
- தேவ வசனம் ஆகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபே 6:17)
- ஆவியினாலே ஜெபம்பன்னுங்கள் (எபே 6:18)
- மிகுந்த மன உறுதியோடும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள் (எபே 6:18)
தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தின் ஆசீர்வாதங்கள்
- பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணி உள்ளவர்களாகலாம் (எபே 6:11-14)
- தீங்கு நாளில் எல்லா போராட்டங்களையும் எதிர்த்து நிற்கலாம் (எபே 6:13)
- பொல்லாங்கன் எய்யும் அக்கினி யாஸ்திரங்களை எல்லாம் அவித்துப் போடலாம் (எபே 6:16)
நாம் போராட வேண்டிய காரியங்கள்
- துரைத்தனங்கள்
- அதிகாரங்கள்
- இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்
- வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேவைகள்
சர்வாயுதவர்க்கத்தின் இரண்டு வகைகள்
- தற்காப்பிற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஆயுதங்கள்
- தலை சீரா
- கச்சை
- மார்க் கவசம்
- பாதரட்சை
- கேடகம்
- வெற்றி பெறுவதற்காக சத்துருக்களை தாக்கும் ஆயுதம்
- பட்டயம்
கிறிஸ்துவ விசுவாசிகளுடைய சர்வாயுதவர்க்கம்
- சத்தியம் என்னும் கச்சை (எபே 6:14)
- நீதி என்னும் மார்க்கவசம் (எபே 6:14)
- சமாதானத்தின் சுவிசேஷத்திற்கு உரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை (எபே 6:15)
- விசுவாசம் என்னும் கேடகம் (எபே 6:16)
- இரட்சணியம் என்னும் தலை சீரா (எபே 6:17)
- தேவ வசனம் ஆகிய ஆவியின் பட்டயம் (எபே 6:17)