இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் ஊழியமும் பாடம்-2



இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் ஊழியமும் பாடம்-2


இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் ஆரம்ப நாட்களும்



முன்னுரை



இயேசுவின் பிறப்பு சம்பவம் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தின் கீழே ஆரம்பமாகிறது. மத்தேயுவின் கூற்றுப்படி அந்த நட்சத்திரம் ஜனங்களை கிழக்கிலிருந்து பெத்லகேமுக்கு நேராக நடத்தியது. பெத்தலகேம் தாவீதின் ஊராகும் அங்கே அவர்கள் யூதருக்கு ராஜாவாக திறந்திருந்த குழந்தையாகிய இயேசுவைக் கண்டு அவரைப் பணிந்துகொண்டார்கள்.


வம்சாவழி பட்டியல்


வம்ச பரம்பரை என்பது யூதர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான விஷயமாய் கருதப்பட்டது. குறிப்பாக மேசியா தாவீதின் வம்சத்தில் தான் வருவார் என்று பெரிய எதிர்பார்ப்பாய் இருந்தது. மத்தேயுவும் லூக்காவும் இயேசு தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதை காட்டுவதற்காக வம்சாவளி பட்டியலை குறிப்பிட்டனர் (மத் 1:1-17; லூக் 3:23-38). மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே இயேசுவின் கன்னிப்பிறப்பு வம்சாவளி பட்டியலின்படி யோசேப்புக்கு பின் வருகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கமாக வம்சாவளிப் பட்டியல் என்பது வரலாற்று சான்றுகளை விட மேன்மையானது என நம்பப்பட்டது. சுவிசேஷங்கள் எழுதப்பட்ட போது இயேசு தாவீதின் குமாரன் என்று மக்கள் வி சுவாசித்தனர். இதுவே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன நிறைவேறுதலாகவும் , யூதர்கள் மேசியாவை குறித்து கொண்டிருந்த நம்பிக்கையையும் இருந்தது. எனவே மத்தேயுவும் லூக்காவும் தங்கள் சுவிசேஷங்களை ஆரம்பிக்கும்போது இயேசு கிறிஸ்து தான் மேசியா என்றும் அவர் தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்றும் யூதர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வம்சாவளிப் பட்டியல் எழுதினர்.


இயேசுவின் பிறப்பு


மத்தேயுவின் கூற்றுப்படி இச்சம்பவம் ஒரு சொப்பனத்தில் ஆரம்பிக்கிறது. மரியாளின் கர்ப்பத்தில் இருக்கிற நிலையை அறிந்து இருக்கிற யோசேப்பு தன் உள்ளத்தில் கலக்கத்தோடு இருக்கையில் தேவதூதன் சொப்பனத்தில் தோன்றி மரியாளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு வந்த நீண்ட பிரயாணத்தை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் நேரடியாக கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டு யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை கண்டு வெகுமதிகளை காணிக்கையாக செலுத்தி ஏரோதின் இடத்திலிருந்து திரும்ப செல்லாமல் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பினதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இயேசுவும் அவரின் பெற்றோரும் எகிப்திற்கு போனதையும் அநேக குழந்தைகள் பெத்தலகேமில் படுகொலை செய்யப்பட்டதையும் எகிப்திலிருந்து நாசரேத்துக்கு சென்ற பயணத்தையும் மத்தேயு சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லூக்காவின் குறிப்பு மத்தேயு சொன்னவைகளை காட்டிலும் நீண்ட தான் இருக்கிறது லூக்கா யோவான் ஸ்நானகனின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறார். இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கொண்டு வரும் மேசியா வுக்கான வழியை ஆயத்தப்படுத்த வந்தவனாக அவன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். மேலும் நோக்கா நாசரேத்திலிருந்து பெத்லகேம் இருக்கு செய்யப்பட்ட பயணத்தையும் மக்கள் கூட்டம் நிறைந்த சத்தியத்தையும் இயேசு பிறந்த தொழுவத்தையும் விவரிக்கிறான். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் இயேசுவின் பிறப்பைக் குறித்து சுவிசேஷ புத்தகங்களில் எழுதப்பட்டு அவைகளை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.



1). இயேசு பிறந்தார்

கிறிஸ்துவை விசுவாசிக்கும் அநேகர் இயேசுவைக் குறித்து சொல்லும் போது அவர் இயற்கைக்கு மேற்பட்ட பார்வையாளராக வேறு உலகத்தில் இருந்து இந்த உலகத்திற்கு வந்து மனிதர்களுடைய வேதனைகளையும் வருத்தங்களையும் பாடுகளையும் அனுபவிக்கிற மனிதனாய் பிறந்தார் என்று கூறுகின்றனர்.

2). அவர் தாழ்மையான சூழலில் பிறந்தார்

அவருடைய பிறப்போடு சம்பந்தப்பட்ட அனேக காரியங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. தொழுவத்தின் முன்னணை யோசேப்பின் தச்சுத் தொழில் ஆலயத்தில் அவருடைய பெற்றோர் செலுத்தின ஏழைகளின் பலியாகிய ஒரு ஜோடி காட்டுப்புறா அல்லது இரண்டு ஜோடி புறா குஞ்சுகள் முதலியன தேவன் தமது மக்களை சந்திக்க தாழ்மையான சூழலில் அவதரித்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.

3). அவர் யூதனாக பிறந்தார்

நவீன கால கிறிஸ்தவர்கள் யூதர்கள் இயேசுவை கொலை செய்தார்கள் என்று எண்ணுகின்றனர். ஆனால் அந்த யூதர்கள்தான் இயேசுவை உலகத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவருடைய பிறப்பு சம்பவங்கள் யூதர்களின் பாரம்பரிய முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகின்றன. மரியாளின் தாழ்மை தெய்வபக்தி நிறைவேறிய தீர்க்கதரிசனம் நியாயப்பிரமாணம் மேசியா எதிர்பார்ப்பு ஆலயத்தில் தொழுது கொள்ளுதல் முதலியன சான்றுகளாகும்.

4). அவர் கிமு 7 முதல் கிமு 4 க்குள் பிறந்தார்

ஏரோது ராஜா கிமு 4 மரித்தான் ஆகையால் அதற்கு முந்தைய நாட்களில் தான் ஏசு பிறந்திருக்க வேண்டும் எப்பொழுது என்று சரியாக தெரியாவிட்டாலும் 7 முதல் 4க்குள் அவர் பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


5). இயேசுவின் பிறப்பு விசேஷமான பார்வையாளர்களையும் அற்புதங்களையும் கற்பிக்கிறது.

லூக்கா மேய்ப்பர்களின் வருகையை குறிப்பிடுகிறான். மத்திய கிழக்கில் இருந்து வந்த ஞானிகளை குறிப்பிடுகிறான். இயேசுவின் பிறப்பின் போது தூதர்களின் வருகையையும் பிரகாசமான நட்சத்திரம் தோன்றினதையும் காண்பிக்கிறோம்.

6). அவருடைய பிறப்பின் சம்பவத்தின்போது பெத்தலகேமில் அநேக ஆண் குழந்தைகள் ஏரோதுவினாள் கொலை செய்யப்பட்டனர்.

ஞானிகள் தேவ வழிநடத்துதலை மீறி தங்கள் சுய ஞானத்தை சார்ந்து ஏரோதின் அரண்மனைக்குள் பிரவேசித்த தினால் இவ்வளவு பெரிதாக படுகொலை நடந்தேறியது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.