சங் 121:7 இல் கூறப்பட்டிருக்கும் வாக்குதத்தம் உண்மையானதாக இருந்தால் தேவன் தம் பிள்ளைகளுக்கு விபத்து நேரிட அனுமதிப்பது ஏன்?




சங் 121:7 இல் கூறப்பட்டிருக்கும் வாக்குதத்தம் உண்மையானதாக இருந்தால் தேவன் தம் பிள்ளைகளுக்கு விபத்து நேரிட அனுமதிப்பது ஏன்?


ஆம் தேவனுடைய வாக்குதத்தம் நிச்சயமாகவே உண்மையானது தான் கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (சங் 121:7) என்று திரு வசனம் கூறுகிறது ஆனால் இந்த வாக்குவாதத்தில் தீங்கு என்பது நமது ஆத்துமாவிற்க்கு வரக்கூடிய தீங்கை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒத்தாசை நாடி நாம் நம்முடைய கண்களை கர்த்தருக்கு நேராக ஏறெடுக்கும் பொழுது (வச.1) எ
ல்லா சூழ்நிலைகளிலும் நம் ஆத்மாவை பாதிக்கக்கூடிய அல்லது நம்மை தேவனைவிட்டு பிரிக்கக்கூடிய எல்லா தீங்குக்கும் நம்மை விலக்கி காப்பதாக அவர் வாக்கு பண்ணியிருக்கிறார்.

சில சமயங்களில் நம் சரீரத்தை பாதிக்கக்கூடிய தீங்குகளை (வியாதிகள் விபத்துகள் சிறைவாசம்  இரத்த சாட்சி மரணம் போன்றவை) நமக்கு தேவன் அனுமதிக்கலாம். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இப்படிப்பட்ட விபத்துகள் நேரிட்டன ஆறுகளால் வந்த மோசங்களிலும் சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும் இருந்தேன் (2கொரி 11:26-27) என்று அவர் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் சந்தித்த பயங்கரமான கப்பல் விபத்தை பற்றி அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:41-44 இல் வாசித்துப் பாருங்கள்.

நிச்சயமாகவே இவையெல்லாம் அப்போஸ்தலனாகிய பவுல் உக்கிரமாக அதிகமான மாடுகளை கொண்டு வந்தன எனினும் அவருடைய ஆத்துமா சோதனைகலினால் தேவனை விட்டு பிரிக்கப்படவில்லை தேவனோடு உள்ள நெருங்கிய ஐக்கியத்திற்க்கே அவரை வழி நடத்தின.

தேவன் நம்மை சரீரபிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் பாதுகாக்க இருப்பினும் அவரது முதன்மையான கரிசனை நம் ஆத்மா பாதுகாப்பதை குறித்து ஆகும். அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் என்பது அவருடைய வாக்குதத்தம் ஆகும் அழிவுக்குரிய நம் சரீரத்தை அவர் என்றென்றைக்குமாக பாதுகாக்காமல் போனாலும் நித்தியமான தாக்கிய நம் ஆத்மாவை அவர் பாதுகாப்பது தின்னம்
நம் எல்லா சோதனைகளிலும் நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து இருப்போம் அதில் அவர் நம் ஆத்மாவை பாதுகாப்பார். நம்முடைய தேவன் நம்முடைய அளவற்ற இறங்கினாள் நம்மை எத்தனையோ முறை சரீரப்பிரகாரமான தீங்குகளிலிருந்து பாதுகாத்து இருக்கிறார் என்பது உண்மையே அதற்காக நாம் அவருக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

யோகி ஒரு நீதிமான் தேவனுடைய நீதியை குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார் அவன் தனது 10 பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொரு நாளும் ஜெபம் பண்ணி கொண்டு இருந்தான் பிள்ளைகள் அனைவரும் ஒரே நாளில் திடீரென ஒரு விபத்துக்குள்ளாகி மரித்து போயினர். இருப்பினும் அவனுடைய பத்து பிள்ளைகளும் பரலோகத்திற்கு சென்றார்கள் என்பதை யோபு 42:10-13 இல் நாம் அறிந்து கொள்ளலாம். தேவன் எல்லாவற்றையும் அவனுக்கு இரண்டத்தணையாக கொடுத்தார் மிருக ஜீவன்கள் ஆகிய ஆஸ்திகள் யாவும் இரண்டு மடங்காக அவனுக்கு கிடைத்தன ஆனால் பிள்ளைகளை பொறுத்தவரை அவனுக்கு பத்து பிள்ளைகளை மட்டுமே தேவன் கொடுத்தார் ஏனெனில் அவனுடைய முதல் பத்து பிள்ளைகள் பரலோகத்தில் ஜீவனோடு இருந்தார்கள் இவ்வாறு பிள்ளைகளின் எண்ணிக்கை இருபது ஆயிற்று. செத்துப்போன மிருகங்கள் ஒன்றும் பரலோகத்துக்கு போகவில்லை ஆதலால் மிருகங்கள் இரண்டு மடங்காக அவனுக்கு கிடைத்தன.

அன்பான தேவ பிள்ளையே ஒருவேளை உன் சினேகிதர் அல்லது குடும்பத்தின் அங்கத்தினர் சிலர் விபத்துகளை சந்தித்து போயிருக்க கூடும் தேவன் கோபமடைந்து அவர்களை அல்லது உன்னை தண்டித்து விட்டார் என்று நீ ஒருபோதும் எண்ண வேண்டாம் நாம் பரலோகம் ஆகிய அக்கரையை சென்றடையும் வரை அவர் நம்முடனே கூட இருப்பதாக வாக்களித்து இருக்கிறார் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்து அவரது வார்த்தையில் ஆறுதல் அடைவோமாக….

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.