ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 6
எப்பொழுதும் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த தேவ மனிதர்
விக்கிள்ஸ்வொர்த், பாவ மாந்தர்பாலும், வியாதியஸ்தர்கள், பிசாசின் பிடியில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மக்கள்பாலும் தனது ஆண்டவரைப் போல மனதுருக்கமும், அன்பும் கொண்டு அவர்களுக்காக உள்ளம் உருகினார். காரணம், அவர் தனது பெரும்பாலான நேரத்தை தனது ஆண்டவர் இயேசுவின் சமூகத்தில் செலவிட்டதுதான்.
யாரோ ஒருவர் அவரைப் பார்த்து, நீண்ட மணி நேரங்களை தேவனுடன் ஒழுங்காக ஜெபத்தில் செலவிட்டு வருகின்றீர்களா என்று கேட்டபோது அவர் பிரதியுத்தரமாக "நான் ஒரே சமயத்தில் அரை மணி நேரத்துக்கும் கூடுதலாக ஜெபிப்
பதில்லை. ஆனால், அரை மணி நேர இடைவெளிக்கும் அதிகமாக என்னால் ஜெபிக்காமல் இருக்க முடிவதில்லை" என்றார். ஜெபமே அந்த தேவ மனிதரின் ஜீவனாக இருந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் ஜெபத்தையே அவர் அதிகமாக வாஞ்சித்துக் கதறினார். ஜெபம் ஒன்றே அவரது வல்லமையின் இரகசியமாக இருந்தது.யாரோ ஒருவர் அவரைப் பார்த்து, நீண்ட மணி நேரங்களை தேவனுடன் ஒழுங்காக ஜெபத்தில் செலவிட்டு வருகின்றீர்களா என்று கேட்டபோது அவர் பிரதியுத்தரமாக "நான் ஒரே சமயத்தில் அரை மணி நேரத்துக்கும் கூடுதலாக ஜெபிப்
மரித்தோரை உயிரோடு எழுப்புவதே அற்புதங்களில் எல்லாம் மாபெரும் அற்புதம் என்று ஒருவர் நினைக்கலாம். எனினும் பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் அகிரிப்பா ராஜாவிடத்தில் பேசும்போது "தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" (அப் 26 : 8) என்று கேட்பதை நாம் பார்க்கின்றோம்.
எனக்குத் தெரிந்த வரை 14 தடவைகள் விக்கிள்ஸ்வொர்த் மரித்தோரை உயிரோடு எழுப்பியிருக்கின்றார். சில வேளை அவர் மரித்தோருக்காக ஜெபித்து அவரை உயிரோடு எழுப்புவார். மற்ற வேளை தேவனுடைய வார்த்தையைக்கூறி அதிகாரத்தோடு மரணத்தைக் கடிந்து கொண்டு மரித்தோரை மீண்டும் உயிர்பெறச் செய்வார். இரண்டு சம்பவங்களை கவனியுங்கள்.
ஒரு தடவை விக்கிள்ஸ்வொர்த் 5 வயதான ஒரு சிறுவனுடைய மரண வீட்டிற்குச் சென்றிருந்தார். அந்த வீட்டின் மக்கள் அந்தக் குழந்தைக்காக அழுது கதறிக் கொண்டிருந்தனர். சிறுவன் வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டி அருகில் தேவ மனிதர் சென்றதும் அந்த சிறுவனின் தகப்பன் அவன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கி குழந்தையின் முகத்தை அவர் பார்க்கும்படியாகச் செய்தான். அதைக் கண்டதும் மரணமானது ஒரு சிசுவின் மேல் செலுத்தியிருந்த ஆதிக்கத்தின் கொடுமையை அவர் கண்டு ஆவிக்குள் கலங்கினார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.
சற்று நேரம் சென்ற பின்னர் அந்தக் குழந்தையைச் சுற்றிலும் அமர்ந்து அழுது கொண்டிருந்த யாவரையும், ஏன், அதின் தந்தையையும் கூட அறையை விட்டு வெளியே போகச் செய்து கதவைத் தாழ்ப்பாழிட்டு உள்ளே இருந்து கொண்டார். மரித்துப் போன அந்த பாலகனை பிரேதப் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எடுத்து அறையின் ஒரு மூலையில் அந்தச் சடலத்தை நிற்கும் விதத்தில் தலையணைகள், துணிகள் போன்றவற்றை பயன்படுத்தி வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் மரணத்தைக் கடிந்து கொண்டு அது பறித்துக் கொண்ட அந்தச் சின்னஞ்சிறு பாலகனின் உயிரை திருப்பிக்கொடுக்குமாறு கட்டளையிட்டபோது சிறுவன் உயிர் பெற்றான். அவனை அவனுடைய துயரம் நிறைந்த பெற்றோர்களிடம் ஜீவனுள்ளவனாக மகிழ்ச்சியோடு அவர் ஒப்புவித்துச் சென்றார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் மரித்துப் போன ஒரு மனிதரை உயிரோடு எழுப்புவதற்காக விக்கிள்ஸ்வொர்த்தை மரித்துப் போன வீட்டினர் அழைத்தனர். தேவ மனிதர் அந்த மனிதனுக்காக ஜெபித்த போது அவன் உயிரோடு எழும்பிவிட்டான். எனினும், அவனை முன்பு கொன்ற அதே வியாதி திரும்பவும் வாதித்து வேதனைப்படுத்துவதை அந்த மனிதன் கண்டான். அதைக் கண்ட விக்கிள்ஸ்வொர்த் அந்த மனிதனின் குடும்பத்தினரைப் பார்த்து அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவாக வேண்டியவர்களோடு ஒப்புரவாகி தேவனுக்கு முன்பாக காரியங்களை சரி செய்யாத பட்சத்தில் அந்த மனிதன் திரும்பவும் மரித்துப் போவான் என்று கூறிவிட்டார். அவருடைய வார்த்தையின்படி அந்தக் குடும்பத்தினர் தங்களுடைய பாவ அக்கிரமங்களை தேடிக் கண்டு பிடித்து கர்த்தருக்கு முன்பாக அவைகளை அறிக்கையிட்டு காரியங்களை சீர் செய்ததின் காரணமாக அந்த உயிர்பெற்ற மனிதன் திரும்பவும் 30 ஆண்டு காலம் இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்தான். விக்கிள்ஸ்வொர்த் ஆண்டவருடைய ஊழியத்தில் இத்தனை வல்லமையாக விளங்கியது திடீரென்று அவருக்கு வந்து கிடைத்த ஒரு அதிசய அற்புதமல்ல. பல்லாண்டு காலமாக ஆண்டவருடைய பாடசாலையில் பற்பலவிதமான பாடுகள், போராட்டங்கள், தேவப் பகைஞரால் அவருக்கு நேரிட்ட நெருக்கங்களின் ஊடாக கடந்து கடந்து வந்து பெற்ற முதிர்ச்சியானதொரு தேவ ஊழியமாகும். "தேவனை நான் வாஞ்சித்துக் கதறாமல் இருந்த ஒரு காலத்தை என்னால் நினைவுகூர்ந்து பார்க்க இயலவில்லை. நான் ஆண்டவரை எப்பொழுதும் தாகத்தோடும் தவனத்தோடும் தேடிக்கொண்டேயிருக்கின்றேன். ஒரு பலசாலியான இளவயது வாலிபனைப் போன்று தேவ சமூகத்தில் நான் நின்று அவரது உதவிக்காக கெஞ்சிக்கொண்டே இருக்கின்றேன்" என்று ஒரு தடவை தேவ மனிதர் சொன்னார்.
