ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 2


ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 2


ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 1






இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்த தேவ பக்தன்



ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் தனது ஆண்டவரைப் போல மக்களை அதிகமாக நேசித்து, கஷ்டம், கண்ணீரில் இருக்கிற மக்கள்மேல் மனதுருகி அவர்களுக்குத் தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்தார். நான் ஒரு தடவை அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவருடைய மகள் அலீஸ் தனது தகப்பானாருடைய ஆச்சரியமான அனுபவத்தை இவ்விதமாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

(ஒரு குறிப்பிட்ட நாளில் அன்றைய தினம் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்துக்கு வந்த கடிதங்களில் ஒரு கடிதத்தில் "தயவுசெய்து நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் மிகுந்த வியாகுல மனக்கிலேசத்தில் இருக்கின்றோம்" என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்த எனது தகப்பனாருடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. கண்ணீர் வடிந்தவாறே அந்தக் கடிதத்தை நான் வாசிக்கும்படியாக எனக்குக் கொடுத்தார்கள். எனது உள்ளத்தில் அந்தக் கடிதம் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. "என்




ன காரியம் அப்பா?" என்று நான் அவர்களிடம் கேட் டேன். "நமக்கு தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் உதவி கேட்டு வருகின்றன. ஆனால், அந்த எல்லாக் கடிதங்களைக் காட்டிலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக உனக்குத் தெரியவில்லையா?" என்று என்னிடம் கேட்டார்கள்.

உடன்தானே தனது மேல் சட்டையை (கோட்டை) எடுத்துப் போட்டுக்கொண்டு கடிதத்தில் கண்ட முகவரியைத் தேடிக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். இறுதியாக அவர்கள் தேடிச் சென்ற வீடு கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தேச புரதான கால அந்தக் கிராமப்புற வீடு ஒரு பெரிய அரண்மனையைப் போல காட்சியளித்தது. வீட்டிற்குச் சென்ற எனது தந்தை கதவின் மணியை அடிக்கவே மிகுந்த துக்கம் நிறைந்த முகத்தோடு ஒரு வாட்ட சாட்டமான மனிதர் அந்த வீட்டின் கதவைத் திறந்தார். அவரிடம் தனது வழக்கமான பாணியில் "நான்தான் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த். உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன்" என்று கூறினார்கள். அந்த மனிதர் எனது தந்தையின் கரத்தை அன்பொழுகப் பற்றிப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், எனது தந்தையின் தோள் மேல் தனது கையைப் போட்ட வண்ணமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் தரையில் அழகான கம்பளம் விரிக்கப்பட்ட ஒரு பெரிய விசாலமான அறைக்கு அப்பாவை அழைத்துச் சென்று அந்த அறையின் கதவைத் திறந்து அவர்களை உள்ளேவிட்டுவிட்டு அறையின் கதவை மூடிவிட்டு அந்த தனவான் போய்விட்டார்.

அறையின் உள்ளே சென்ற எனது அப்பா கண்ட காட்சியை அவர்கள் என்றுமே மறக்க இயலாது. 17 வயதான ஒரு அழகான வாலிபப் பெண்ணை 3 திடகாத்திர வாலிபர்கள் தரையோடு தரையாக வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். அவள் முழுமையாக பிறந்த மேனியில்தான் இருந்தாள். அந்த வாலிபர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து அடக்குவது மிகவும் கடினமாக இருந்தது. அவள் மிகுந்த வீராவேசத்தின் கோபத்தோடு சாத்தானுடைய முழுக்கட்டுப்பாட்டிற்குள் இருந்தாள். பிள்ளையின் தகப்பன் மிகுந்த செல்வச் சீமானாக இருந்தபடியால் தனது அன்பு மகளை ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்து அவளை வேதனைப்படுத்தாமல் இவ்விதமாக தனது வீட்டிலேயே ஆட்களை வேலைக்கு வைத்து அவளை அடக்கி வைத்திருந்ததுடன் அவள் தன்னையே லேகியோனைப் போல காயப்படுத்தி, கோரப்படுத்தி அழித்துக் கொள்ளுவதிலிருந்து பாதுகாத்து வந்தார்.

எனது தகப்பனார் அந்த அறைக்குள் வந்ததைக் கண்டதும் அந்தப் பெண் தனது கொந்தளிப்பின் குமுறலையும், போராட்டத்தையும் கைவிட்டு தனது முகத்தை எனது தந்தைக்கு நேராகத் திருப்பி "நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் உன்னத தேவனுடைய ஊழியக்காரரான ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்" என்று சொன்னாள். அதைக் கேட்ட எனது தந்தை "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ உனது வாயை மூடு" என்று கட்டளையிடவும் அவள் அந்த அறையின் ஒரு மூலைக்கு பின் நோக்கி நகர்ந்து சென்றாள். எனது தந்தையும் அவளைத் தொடரவே அந்தப் பெண் பயத்தில் நடுநடுங்கி "அவள் எங்களுடையவள்" என்று கூறினாள். "அசுத்தமான பிசாசுகளே, நான் உங்களிடம் வாக்குவாதம் செய்ய வரவில்லை. அவளை விட்டு வெளியே ஓடிப்போங்கள். இனி ஒருபோதும் அவளுக்குள் பிரவேசியாதேயுங்கள்" என்ற எனது தகப்பனாரின் வார்த்தைகளைக் கேட்டதும் அவைகள் மொத்தம் 12 பிசாசுகள் அவளிடமிருந்து ஓடிவிட்டன.

உடனடியாக அந்தப் பெண் பூரண விடுதலை பெற்று தான் பிறந்த மேனியின் அலங்கோலமாக இருப்பதைக் கண்டு பெரிதும் வெட்கமடைந்து அந்த அறையிலிருந்து வெளியே ஓடினாள். அதைக் கண்ட அவளுக்குப் பாதுகாவலாக இருந்த மூன்று வாலிபரும் அவளது பின்னாக ஓடத் தொடங்கிய போது எனது தகப்பனார் அவர்களைத் தடுத்து நடந்த தேவனுடைய அதிசய செயலை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். 10 நிமிடங்கள் சென்ற பின்னர் ஒரு படுக்கை அறையின் கதவு திறக்கப்பட்டது. அந்த அறையிலிருந்து ஒரு இளம் பெண் வெளியே வந்தாள். அவளது காலடிகள் கீழே படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லுவது கேட்டது. அதற்கப்பால் எனது தகப்பனார் கீழ் அறைக்கு இறங்கிச் சென்றார். அங்கே அந்த வீட்டின் குடும்பத்தினருடன் அவர்கள் அளித்த சந்தோசமான தேயிலைப்பான விருந்தில் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஒரு தகப்பன், தாய், ஒரு அழகான இனிமையான இளம் குமாரத்தி. எத்தனை ஆனந்த பரவசக்காட்சி அது! பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் அவள் 12 கொடிய பேய்களின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து சின்னா பின்னமாக சீரழிக்கப் பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுதோ அவள் அடக்க ஒடுக்கமும், சாந்தமுமான அன்பு மகள்!




எனது தந்தை வீட்டுக்கு வந்ததும் "மகளே அலீஸ் எத்தனை மனோகரக் காட்சி அது என்று நீ எண்ணுகின்றாய்! ஆ, இயேசு இரட்சகர் எத்தனை அதிசயமான அன்பின் தேவன்!" என்று மிகுந்த பூரிப்புடன் சொன்னார்கள்.

பட்டணத்தின் எளிமையான சேரிப்பகுதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க விக்கிள்ஸ்வொர்த் செல்லும்போது அந்தப் பகுதியிலுள்ள மக்கள் உடுத்துவதற்கு போதுமான உடையில்லாமல் இருப்பதை அறிந்த அவர் தனது உடம்பிலும் குளிரைத் தாங்கிக் கொள்ளக் கூடிய ஓவர்கோட் போடாமல் சென்று அந்த ஏழை மக்கள் குளிரை அனுபவிப்பதைப் போலவே அவரும் அனுபவித்து இரட்சகர் இயேசுவை அவர்களுக்கு பிரசிங்கிப்பார்.

அவர் எந்த ஒரு மனிதனிலும் அவனது ஆள், அந்தஸ்து, பட்டம், பதவி பார்த்து மதிப்புக் கொடுப்பவரல்ல. ஏழையிடம் எப்படி அவர் நடந்தாரோ அப்படியேதான் ஐசுவரியவானிடமும் நடந்து கொண்டார். அவரிடம் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் கிடையாது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஏதுமற்ற ஒரு ஏழையைக் கண்டால் அவனுக்கு ஏதாவது உதவி செய்து அவனைப் போஷிப்பார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.