இறைவன் உள்ளார் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இறைவன் இருக்கிறார் என்ப

இறைவன் உள்ளார் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள்

இறைவன் இருக்கிறார் என்பதை மனப்பூர்வமாக நம்பலாம். ஏன் எனில் அது உண்மை. இறைவன் இருக்கிறார் என்பதற்கு சில அறிவியல் ஆதாரங்களை காண்போம்.

இறைவன் உள்ளார்
இறைவன் உள்ளார்

1) நமது அண்டத்தின் அமைப்பு நம்மை இறைவனை நோக்கி சிந்திக்க வைக்கிறது. நமது அண்டத்தை உருவாக்கியதோடு நின்று விடாமல் அதனை பராமரித்தும் வருகிறார்...

பூமிநமது பூமி நேர்த்தியான அளவை பெற்றுள்ளது. பூமி மிகசரியான அளவையும் புவியீர்ப்பு விசையையும் பெற்று இருப்பதனால் தான் பூமியை சுற்றி 50 மைல் தூரம் வரை நைட்ரஜென் - ஆக்சிஜென் வாயுகள் நிறைந்து காற்று மண்டலம் உருவாகி உள்ளது. இதுவே மெர்குரி கோள் போன்ற சிறிய அளவினை பூமி அடைந்திருந்தால் இன்று பூமி காற்று மண்டலத்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை. அதுவே, ஜுபிட்டர் கோள் போன்ற பெரிய வடிவை பூமி பெற்றிருந்தால் வெறும் ஹைட்ரஜென் வாயு மட்டும் தான் இருந்திருக்க முடியும். பூமி ஒன்றே சரியான காற்று மண்டலத்தை பெற்று தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் வாழ ஏற்ற இடமாக விளங்கும் ஒரே கோளாகும்.

பூமி சூரியனில் இருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ளது. அதனால் தான் உயிர்கள் வாழ ஏற்ற தட்ப வெப்ப நிலைகளை அடைந்துள்ளது. சூரியனை விட்டு தொலைவில் பூமி இடம் பெற்றிருந்தால், பனி போல உறைந்து விடும். அதுவே சூரியனின் அருகில் பூமி அமைந்திருந்தால் வெப்பம் அதிகமாகி உயிர்கள் வாழ முடியாத கோளாக மாறிவிடும். இன்று அமைந்துள்ள வட்டப்பாதையில் இருந்து கடுகளவு பூமி நகர்ந்தாலும் உலகில் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை! பூமி 67,000mph என்ற சரியான வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அது மட்டும் அன்றி தன்னை தானே சுற்றி கொண்டு தினமும் சரியான அளவில் அனைத்து இடத்திலும் சூரிய கதிர்களை விழ செய்து மீண்டும் குளிரூட்டி கொள்கிறது.

பூமிக்கு உள்ள ஒரே துணை கோள் சந்திரன் மட்டுமே. சந்திரன் சரியான அளவை பெற்று பூமியை சுற்றி வருவதால், பூமியில் உள்ள பெருங்கடல்களில் அலைகளை உண்டாக்கி, சமுத்திரங்கள் தேங்கி கிடக்காமல் பாதுகாக்கிறது. மேலும் அலைகள் மிகுதியாகி நிலப்பரப்புகளை தாண்டி மூழ்கடிக்காத படியும் காத்து கொள்கிறது.

தண்ணீர்
தண்ணீர்....நிறமற்று, மணமற்று, சுவையற்று இருந்தாலும் நீர் இன்றி அமையாது உலகு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிர்களும் தங்கள் உடலில் கணிசமான அளவில் தண்ணீரை கொண்டுள்ளன. வழக்கத்திற்கு மாறாக கொதிநிலையையும் உறைநிலையையும் தண்ணீர் கொண்டுள்ளது. வேறுப்பட்ட சூழ்நிலையில் நாம் நுழையும் போது நீர் தான் அந்த மாற்றங்களில் இருந்து நம்மை காக்கிறது. உடலின் வெப்பநிலையை 98.6 டிகிரி என்ற நிலையான அளவில் நீரே வைத்துள்ளது. தண்ணீர் ஒரு சிறந்த கரைப்பானாக விளங்குகிறது. நீர் மூலமாகத்தான் உடலில் ஜீரணமும் நடக்கிறது. தண்ணீர் தனிப்பட்ட புறப்பரப்பு விசையை பெற்றுள்ளது. எனவே, தண்ணீரால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி செல்ல முடிகிறது. மிகவும் உயரமான மரங்களால் கூட தண்ணீரை உறுஞ்சு நுனிவரை மேல்நோக்கி எடுத்து செல்ல முடிகிறது. குளிர் காலத்தில், நீர் மேல் பரப்பில் முதலாவதாக உறைவதால் பனிக்கட்டி நீருக்கு மேலாகவே மிதக்கிறது. இதனால் மீன்களால் நீரடியில் வாழமுடிகிறது. உலகில் 97% தண்ணீர் கடலில் தான் உள்ளது. ஆனால் கரைந்துள்ள உப்புகளில் இருந்து நீராவியாகி மீண்டும் புவியில் மழையாக பொழிகிறது.

மனித மூளை
மனித மூளை..... ஒரே நேரத்தில் பல தகவல்களை பரிமாறிகொள்கிறது. ஒரே நேரத்தில் நம் கண்கள் காணும் பொருட்களின் வடிவங்களை, நிறங்களை உணர்கிறது, நம் சுற்றுப்புறத்தின் தட்ப வெப்ப நிலையை உணர்கிறது, நம் கால்கள் பூமியின் மீது ஊன்றி நிற்பதை அழுத்தத்தின் மூலம் உணர்கிறது, நம்மை சுற்றி ஏற்படும் சப்த ஒலிகளை உணர்கிறது, நம் உதடுகள் வறண்டு போவதை உணர்த்துகிறது, அதே நேரத்தில் நம் கைகளை தட்டச்சு பலகையில் செயல்பட வைக்கிறது! நம் சிந்தனைகள், நம் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள், உணர்ச்சிகள் என அனைத்தையும் தேக்கி வைக்கிறது. அதே நேரத்தில் நம் உடலில் சுவாசித்தல், கண் இமைத்தல், பசித்தாகம் என பல செயல்களை நமக்கே தெரியாமல் நடத்துகிறது! 1 மில்லியன் அளவிற்கும் மேலாக செய்திகளை ஒரே நொடியில் கடத்தும் ஆற்றலை மூளை பெற்றுள்ளது. தேவையான தகவல்களை மட்டும் வைத்து கொண்டு தேவையில்லாதவற்றை அதுவே காலப்போக்கில் அழித்து கொள்கிறது! இதனால் நம்மால் நேர்த்தியாக இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற படி நடந்து கொள்ள முடிகிறது. நம்மை கனவு காண செய்கிறது, ஏதாவது தவறு நிகழ்ந்தால் அதற்கு காரணத்தை கூற வழிகாட்டுகிறது, யோசிக்க வைக்கிறது, இன்னும் பல..... இது கணினிக்கும் மேற்ப்பட்ட ஒரு அதிசயம்.

கண்.... ஏழு மில்லியன் வண்ணங்களை பகுத்தறியும் திறன் கொண்டது! தானாக செயல்பட்டு 1.5 மில்லியன் செய்திகளை ஒரே நேரத்தில் கடத்தும் திறன் கொண்டது. இன்று நிலவி வரும் அறிஞர் டார்வின் அவர்களது பரிமாண கொள்கை கூட எப்படி கண்ணும் மூளையும் இப்படிப்பட்ட திறன்களை பெற்றது என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணருகிறது, உலகில் உயிர்கள் எப்படி தோன்றின என்பதற்கும் டார்வினால் பதில் கூற முடியவில்லை! ஏன் எனில் தானாக நுண்ணுயிர்கள் மண் மற்றும் தண்ணீரில் இருந்து தோன்ற முடியும் என்று டார்வின் கூறியதை தவறு என்று 2 ஆண்டுகளுக்குள்ளாகவே லூயி பாஸ்டர் அறிவியல் படி நிரூபித்து காட்டினார். அதன் படி, உயிர்கள் தானாக தோன்ற வாய்ப்பே இல்லை!

2) அண்டம் எப்படி தோன்றியது? அண்டத்தின் ஆரம்பம் என்ன?
விஞ்ஞானிகள் 'பிக் பேங்' என்ற பெருவெடிப்பு கொள்கையை அண்டத்தின் ஆரம்பம் என முன் வைக்கின்றனர். பெரு வெடிப்புக் கோட்பாட்டின்படி அண்டம் மிக அதிக அடர்த்தி கொண்ட ஒரு தீப்பிழம்பாக ஆரம்பித்தது. இது காலப்போக்கில் விரிவடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது (தமிழ் விக்கிபீடியா).

பெருவெடிப்பு கொள்கை
பெருவெடிப்பு கொள்கை

இந்த கொள்கையை கணக்கில் கொண்டாலும் இறைவன் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஏன் எனில், அடர்த்தி கொண்ட தீப்பிழம்பாக ஆரம்பத்தில் விளங்கிய அண்டம் எப்படி தோன்றியது? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் வேண்டும், எனவே எதனால் தீப்பிழம்பாக இருந்த அண்டம் விரிவைடைய தொடங்கியது? இந்த கேள்விகளுக்கு விஞ்ஞானத்தால் பதில் கூற முடியவில்லை! அது மட்டும் அன்றி பெருவெடிப்பு கொள்கை 100% உறுதி செய்யப்பட்ட அறிவியல் உண்மை அல்ல! "இப்படி இருக்கலாம்" என்ற யூகம் தான்!

3) அண்டம் எப்படி இயங்குகிறது?

அண்டம்

வாழ்க்கை உறுதியற்று தான் விளங்குகிறது. ஆனால் நம்மை சுற்றி ஒரு முறை பாருங்கள். புவியீர்ப்பு விசை மாறுவதில்லை, சூடாக மேஜையின் மீது வைக்கப்பட்ட காபி மீண்டும் தணிந்து விடுகிறது, ஒளியின் வேகம் மாறுவதில்லை, இந்த நிலை பூமியில் மட்டும் இல்லை! வான்வெளிகளிலும் இதே தான்! ஏன் இயற்கையை நம்மால் மாற்ற முடிவதில்லை? ஏன் அண்டம் சீராக விளங்குகிறது?

4) டி.என்.ஏ அமிலங்கள் நம் ஒவ்வொரு உயிரணுவையும் வழி நடத்துகிறது!
0&1
அனைத்து செயல்களும், அனைத்து எண்ணங்களும், அனைத்து முயற்சிகளும் ஏதாவது நோக்கத்துடன் தான் தோன்றுகின்றன. ஒருவன் எந்த செயலையும் காரணமின்றி செய்வதில்லை. ஏதாவது ஒரு காரணம் அவன் செயலுக்கு பின்னால் இருக்கிறது. உங்களுக்கு தெரியுமா? கம்ப்யூட்டர் போல தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்! கம்ப்யூட்டரை 0 மற்றும் 1 என்ற இரண்டே எண்கள் தான் வழிநடுத்துகின்றன, அது போல நம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவையும் டி.என்.ஏ என்ற அமிலம் தான் வழிநடத்துகிறது. இந்த டி.என்.ஏ அமிலங்கள் A, T, C, G என்ற நான்கு வேதி பொருட்களால் ஆனது. 0,1 என்ற நம்பர்கள் கணினியை ஒவ்வொரு செயலை செய்ய தூண்டும் போதும் அதற்கு ஏற்ற படி வரிசையாக அமைந்து கொள்கின்றன - உதாரணத்திற்கு ஒரு செயலுக்கு 1010001111101111011 என்பது போல. அது போல இந்த டி.என்.ஏ அமிலங்கள் நமது உயிரணுக்களை ஒரு செயலை செய்ய சொல்லி தூண்டும் போது அதற்கேற்ற படி தன் நான்கு வேதிப்பொருட்களை மாற்றி அமைத்து கொள்கின்றன - உதாரணத்திற்கு ஒரு செயலுக்கு CGTGTGACTCGCTCCTGAT என்பது போல. 

A,T,C,G
இவ்வாறு ஒவ்வொரு உயிரணுவிலும் மூன்று பில்லியன் டி.என்.ஏ அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அமைப்பு பயன்படுகிறது! இது போன்ற அமைப்புகள் நம் உயிரணுவில் தானாய் பரிமாண கொள்கை படி தோன்ற வாய்ப்பே இல்லை! ஒரு மின் சாதன தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறிய போது அதிலிருந்து வீசப்பட்ட மின்சாதன உறுப்புகள் தற்செயலாக இணைந்து கணினி தானாய் தோன்றியது என்று கூறினால் யாரவது நம்புவார்களா? அது போல தான் இந்த டி.என்.ஏ அமிலங்களும் நம்மை வியக்க வைக்கின்றன! இன்னும் சொல்ல போனால் உயிரற்ற கணினியை விட இவை இன்னும் வியப்புக்குரியவை!

நியூட்டன்
நியூட்டன் 
இன்று வாழும் நம்மை போன்ற உயிர்களும், உலகமும், கோள்களும், வான்வெளி மண்டலங்களும் இப்படிதான் ஒரு அதிசய ஆற்றலால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக நாம் தானாய் தோன்ற வாய்ப்பே இல்லை! கற்பனை - அப்படியே தோன்றினாலும், இந்த அளவுக்கு நேர்த்தியாக அமைந்திருக்கவும் வாய்ப்பே இல்லை! எப்படி நம்மால் கணினி உருவானதோ, அது போல கணினியை விட பல கோடி மடங்கு வியப்புக்குரிய இந்த அண்டத்தை உருவாக்க இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு அதிசய ஆற்றல் இருந்தாகவே வேண்டும்! இதனை நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கெப்லர், கலிலியோ, லூயி பாஸ்டர் போன்ற மிகப்பெரிய அறிவியல் மேதைகள் தான் கூறுகின்றனர்!

EVERYSTUDENT.COM என்ற வலைதளத்தில் ஆங்கிலத்தில் இடம்பெற்ற கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.