கவனமாய் இருங்கள்
Charles MSK
இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,
உபாகமம் 31:12
உபாகமம் 31:12
கர்த்தருடைய வார்த்தையின் படி செய்ய கவனமாய் இருங்கள் (உபா 12:32)
- நோவா கர்த்தருடைய வார்த்தையின் படி செய்ய கவனமாயிருந்தார் (ஆதி 6:22)
- மோசே கர்த்தர் காண்பித்த மாதிரியின் படி செய்ய கவனமாயிருந்தார் (எண் 8:4)
- பேதுரு ஆண்டவரின் வார்த்தையின்படி செய்ய கவனமாயிருந்தார் (லூக்கா 5:5)
- தானியேல் பரிசுத்தமாய் வாழ கவனமாயிருந்தார் (தானியேல் 1:8)
- யோசேப்பு பாவம் செய்யாதபடி கவனமாயிருந்தார் (ஆதி 39:9)
கவனமாய் இருக்க என்ன செய்வது…?
நாம் கவனமாய் இருக்க வேண்டுமானால் வேதத்தில் கவனமாய் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பார்த்து அதை கை கொள்ளும் பொழுது நாமும் கவனமாய் இருப்போம்.
எ.கா
நோவா
- கர்த்தரின் கிருபை அவனுக்கு கிடைத்த படியினால் கவனமாய் இருந்தான் (ஆதி 6:8)
- நீதிமானாய் வாழ்ந்த படியினால் கவனமாய் இருந்தான் (ஆதி 6:9)
- உத்தமனாய் இருந்தபடியினால் கவனமாய் இருந்தான் (ஆதி 6:9)
- தேவனோடு சஞ்சரிக்கும் அனுபவம் இருந்தபடியினால் கவனமாய் இருந்தான் (ஆதி 6:9)
- தேவன் தனக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்தபடியினால் கவனமாய் இருந்தான் (ஆதி 6:22)
மோசே
- சாந்தகுணம் உள்ளவனாய் இருந்தபடியினால் கவனமா இருந்தான் (எண் 12:3)
- உண்மையுள்ளவனாக இருந்தபடியினால் கவனமாய் இருந்தான் (எண் 12:7)
- அனுதினமும் தேவனுடைய சாயலை தரிசித்த படியினால் கவனமாய் இருந்தான் (எண் 12:8)
கவனமாய் இருப்பதினால் வரும் ஆசீர்வாதங்கள்
- நோவா அழிவிலிருந்து காக்கப்பட்டன் (ஆதி 7:7)
- மோசே இயேசுவை சந்திக்கும் பாக்கியம் பெற்றான் (மாற்று 9:4)
- பேதுரு பிரதான அப்போஸ்தலன் ஆனான்
- யோசேப்பு உயர்வை பெற்றான் (ஆதி 41:39-40)
- தானியேல் ஜெயத்தை பெற்றான் (தானியேல் 6:28)
நடையின் மேல் கவனமாய் இருங்கள் (நீத 14:15)
- நடைகள் வழுவாதபடிக்கு ஸ்திரப்பட கவனமாய் இருங்கள் (சங் 17:5)
- நடைகள் ஒன்றும் பிசகாதிருக்க கவனமாய் இருங்கள் (சங் 37:31)
- சமனான பாதையை விட்டு நடைகள் விலகாதிருக்க கவனமாய் இருங்கள் (நீதி 16:17)
கர்த்தருடைய நியமங்கள் மேல் கவனமா இருங்கள் (1பேது 2:9)
- நியமங்கள் யாவையும் கைக்கொள்ள கவனமாயிரு (யாத் 15:26)
- நியமங்களை கை கொண்டு நடக்க கவனமாயிரு (1இரா 3:14)
- நியமங்களை மீறி நடக்காமல் இருக்க கவனமாய் இரு (சங் 89:31)