ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் உண்மையா?

ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் உண்மையா?

ஆதியாகமம் கூறும் பூமியின் தோற்றம் உண்மையா?



அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் அறிவியல் படி பூமி உருவாக வேண்டுமெனில் நான்கு விடயங்கள் முக்கியம் - அவை திடப்பொருள் (MATTER), வெற்றிடம் (SPACE), நேரம் (TIME), ஆற்றல் (ENERGY). இதனை பைபிள் நிறைவேற்றுகிறதா?

முதல் வசனமே நிறைவேற்றுகிறது. - ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1:1)

ஆதி - நேரம்
தேவன் - ஆற்றல் (சக்தி)
வானம் - வெற்றிடம்
பூமி - திடப்பொருள்

"பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று." - (ஆதியாகமம் 1:2,3)

அண்டம் உருவான போது, எதிர்பாராமல் திடப்பொருள்களும், வெளிச்சமும் வெடித்து சிதறியதை விஞ்ஞானம் "பெருவெடிப்பு கொள்கை" என்று விவரிக்கிறது.

"தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று." -ஆதியாகமம் 1:4

பூமி உண்டான நாள் முதல் நாள் ஆயிற்று.

"பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று." - ஆதியாகமம் 1:6-8

பூமி உண்டான பின் நீரும் மேகங்களும் தோன்றின என்று அறிவியல் கூறுகிறது. நீரையும் மேகங்களையும் பூமி பெற்ற நாள் இரண்டாம் நாள் ஆயிற்று.

"பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்." - ஆதியாகமம் 1:9,10

நிலப்பகுதி சமுத்தரத்தில் இருந்து விலகி வெளிப்படுகிறது. முதலில் நிலப்பகுதிகள் அனைத்தும் சிதறுண்டு விளங்காமல்'பேஞ்சியா' என்ற ஒரே பகுதியாக விளங்கியதாக அறிவியல் கூறுகிறது.

"அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று." - ஆதியாகமம் 1:11-13

விலங்குகளுக்கு முன் தாவரங்கள் தோன்றியதாக அறிவியல் கூறுகிறது. தாவரங்கள் தோன்றின நாள் மூன்றாம் நாள் ஆயிற்று.

"பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்" - ஆதியாகமம் 1:14-16

"உண்டாக்கினார்" - இவ்வசனங்கள் நிறைவேறி முடிந்த முதல் நாளை மீண்டும் விவரித்து கூறுகின்றன.

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று." - ஆதியாகமம் 1:14-19

"வைத்தார்" - முதல் நாளில் உண்டாக்கப்பட்ட சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் பூமிக்கு ஒளி வீசும் படி இறைவனால் தகுந்த இடத்தில் நிலை பெற்றன. இந்த நாள் நாலாம் நாள் ஆனது. நாலாம் நாளில் மேகங்கள் விலகி சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் வானில் தென்பட்டன.

"பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று." - ஆதியாகமம் 1:20-23

முதல் விலங்கினம் நீரில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நுண்ணுயிரிகள் ஆரம்பித்து மீன்கள், தவளைகள், நீர்ப்பாம்புகள், ஆமைகள், முதலைகள் என அனைத்தும் நீரிலேயே தோன்றின. அதன் பின், பறவை இனம் தோன்றியிருக்க வேண்டும் என்று அறிவியல் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தை புவி அடைந்த நாள் 5ஆம் நாளானது.

"பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று." - ஆதியாகமம் 1: 24-31

அறிவியல் இறுதியாக தோன்றியவை நிலவாழ் உயிரினங்கள் என்கிறது. பூமியில் உண்டான உயிர்களில் மிகவும் தேறி, மற்ற அனைத்து உயிர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவனாக விளங்குபவன் மனிதன்.

- பூமி 6 மிகப்பெரிய மாற்றங்களை முழுமையாக அடைந்த நாட்களை 1,2,3...என்று வேதம் வரிசைப்படுத்துகிறது. ஆதியாகமம் எழுதப்பட்டு 3500 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த காலத்தில் படைப்பை குறித்து சிறந்த விளக்கத்தை தந்த ஒரே நூல் ஆதியாகமம் தான். 3500 வருடங்களுக்கு முன்பு விளங்கிய படிப்பறிவற்ற மக்களால் எழுதப்பட்ட படைப்பை இன்றைய அறிவியல் கூறுவது வியப்பிற்குரியது அல்லவா?

இது இவர் யார் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.