ஆவி வடிவில் இருப்பவர்கள் 01


ஆவி வடிவில் இருப்பவர்கள்

சார்லஸ் MSK


பொருளடக்கம்


01
தேவதூதர்கள் - தேவனிடமிருந்து செய்தியை கொண்டு வருபவர்கள்
02
பிசாசுகள் - சாத்தானின் தூதர்கள்
03
சாத்தான் - பெயர்களும் வரலாறும்
04
சாத்தான் - சக்தியும் கிரியையும்
05
பிசாசுகளும் பிசாசுகளைப் பற்றிய இயலும்
06
தீமை மற்றும் மந்திரவாதம் செய்பவர்கள்



தேவதூதர்கள் - தேவனிடமிருந்து செய்தியை கொண்டு வருபவர்கள்

அ). தேவதூதர்கள் யார்?

தேவதூதர்களை பற்றி வேதாகமத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவதூதர்களை பற்றி நமக்கு போதனை அளிப்பதற்காக இவை கொடுக்கப்படவில்லை. ஆனால் இவற்றின் மூலம் தேவனோடும் அவரது நோக்கங்களோடு தேவதூதர்கள் கொண்டுள்ள தொடர்பை நாம் அறிந்து கொள்கிறோம்.
  • எபிரேயம் , கிரேக்கம் இருமொழிகளிலும் தேவதூதர் என்ற பதம் செய்தியை கொண்டு வருகிறவர் என்று பொருள் படுகிறது.
  • இவர்கள் ஆராதனைக்கு உரியவர்கள் அல்லர். (நியா 13:16-18; கொலோ 2:18; வெளி 19:10; 22:8-9)
  • இரண்டு வகைகள் உண்டு. 1 நல்லவர் மற்றொன்று கெட்டவர். (வெளி 12:7)
  • கெட்டவர்களை குறித்து பொருளடக்கம் 2 மற்றும் 5 தலைப்புகளின் கீழ் விரிவாக பார்க்கலாம்.
  • தேவதூதர்கள் இவ்வாறு குறிப்பிடப் படுகின்றனர்:
    • காவலாளர் (தானியேல் 4:13,17,23)
    • பரலோகத்தில் உள்ள தூதர்கள் (மத் 24:36)
    • பரம சேனையின் திறள் (லூக்கா 2:13)
    • ஆவிகள் (சக 6:5; எபிரேயம் 1:4,14)
    • தேவ புத்திரர் (யோபு 1:6; 2:1; 38:7)
    • சிங்காசனங்கள் , கர்த்தர்த்துவங்கள் , அதிகாரங்கள் , வல்லமைகள் (கொலோ 1:16; ரோம 8:38; 1கொரி 15:24; எபே 6:12; கொலோ 2:15)
  • வேதாகமத்தில் 3 தேவதூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • காபிரியேல் (தானியேல் 8:16; 9:21; லுக்கா 1:11-20, 26-38)
    • மிகாவேல் (தானியேல் 10:13,21; 12:1; யூதா 9 வெளி 12:7)
    • சாத்தான் (இவனுக்கு மேலும் பல பெயர்கள் உண்டு அவைகளை பொருளடக்கம் மூன்றாம் தலைப்பின் கீழ் பார்க்கலாம்)
  • ஆவி வடிவில் இருப்பவர்கள் வெவ்வேறு தகுதி வரிசையில் இருக்கிறார்கள்.
    • வல்லமையுடைய தேவதூதர்கள் (2பேது 2:10-11)
    • சேராபீன்கள் (ஏசாயா 6:2,6)
    • கேருபீன்கள் (ஆதி 3:24; யாத் 25:18; சங் 18:10; எசேக்கியேல் 10:2-9)
    • சாத்தான் ஒரு கேருபீனாக இருந்தவன். (எசேக்கியேல் 28:14-16)
    • பிரதானத் தூதன் (1தெச 4:16; யூதா 9)
  • இவர்கள் பிதாவாகிய தேவனாலும் குமாரனாகிய தேவனாலும் படைக்கப்பட்டவர்கள். (நெகே 9:6; கொலோ 1:16)
    • மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே படைக்கப்பட்டு இருந்தார்கள் (யோபு 38:4-7)
  • ஆவி வடிவில் இருப்பவர்கள் (மாம்சமும் இரத்தமும் அல்ல) (எபே 6:12; எபி 1:14; சங் 104:4)
    • ஆனால் அடிக்கடி கண்ணுக்கு தெரியும் மனித வடிவில் காட்சி அளிக்கிறார்கள் (ஆதி 18:2-33; 19:1-22; நியா 6:11-22; யோவான் 20:12)
    • நாம் நம்மை அறியாமலே தேவதூதர்களை உபசரிக்கலாம் (எபி 13:2)
  • திரளானவர்கள் (உபா 33:2; தானியேல் 7:10; மத் 26:53; லூக்கா 2:13; எபி 12:22)
  • மகா வல்லமை உள்ளவர்கள் (2இரா 19:35; சங் 103:20; 2தெச 1:7; 2பேது 2:11; ஏசாயா 37:36)
  • ஞானம் உள்ளவர்கள் ஆனால் அனைத்தையும் அறிந்தவர்கள் அல்ல (2சாமு 14:20; மத் 24:36; 1பேது 1:12)
  • இயேசு கிறிஸ்து தேவதூதர்களை விட மகா மேன்மையானவர் (எபி 1:4-2:15)

ஆ). நல்ல தேவதூதர்கள் என்ன செய்கிறார்கள்?

  • தேவனைத் தொழுது கொண்டு அவரை துதிக்கிறார்கள் (எபி 1:6; வெளி 5:11-12)
  • தேவ தூதர்கள் மூலமாக மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப் பட்டது (கலா 3:19; சங் 68:17; அப் 7:53)
  • இயேசுவுக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள் (எபே 1:20-22; கொலோ 2:10; 1பேது 3:22)
  • ரட்சிப்பை சுதந்தரிப்பவர்களுக்கு பணிவிடை செய்கிறார்கள் (எபி 1:7,14)
    • தேவனை நோக்கி ஜெபிப்பதன் மூலம் அவர்களது உதவியைப் பெறலாம் (மத் 26:53; அப் 12:5-7)
  • தேவனுடைய நியாயத்தீர்ப்பை செயல்படுத்துகிறார்கள் (2சாமு 24:16; 2இரா 19:35; சங் 35:5-6; அப் 12:23; வெளி 16:1)
  • உலகின் முடிவில் அறுவடை செய்பவர்கள் (மத் 13:39-41,49-50; 24:31)
  • சிறுவர்களை விழிப்போடு காக்கிறார்கள் (மத் 18:10)
  • தேவனுடைய மக்களை காக்கிறார்கள் (தானி 6:22; சங் 34:7; 91:11)
  • இயேசுவின் இரண்டாம் வருகை அவரோடு கூட வருவார்கள் (மத் 16:27; 25:33; மாற் 8:38; 1தெச 4:16; 2தெச 1:7)
  • இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சிகளை அறிவித்தார்கள்
    • உற்பவித்தல் (லுக் 1:31)
    • பிறப்பு (லூக்கா 2:10-12)
    • உயிர்த்தெழுதல் (லூக்கா 24:23)
    • பரத்துக்கு எழுதல் (அப் 1:11)
    • இரண்டாம் வருகை (அப் 1:11)

இ). தேவதூதர்கள் அநேக மக்களுக்கு பணிவிடை செய்கிறார்கள்

  • ஆகாஷ் சாலையை விட்டு முதலில் ஓடி சென்றபோது (ஆதி 16:7-13)
  • லோத்து சோதோம் அளிக்கப்படுவதற்கு முன்பு (ஆதி 19:1-22)
  • ஆகார் இஸ்மவேல் (ஆதி 21:17-19)
  • ஆபிரகாம் ஈசாக்கோடு மலைக்குச் சென்றபோது (ஆதி 22:11-18)
  • யாக்கோபு ஏணியை கண்ட  தரிசனத்தில் (ஆதி 28:12)
    • லாபானின் ஆடுகள் பற்றிய தரிசனத்தில் (ஆதி 31:11)
    • லாபானை விட்டு ஏசாவை சந்திக்க சென்ற போது (ஆதி 32:1)
  • மோசே எரியும் முட்செடியில் (யாத் 3:2)
  • இஸ்ரவேலர்கள் உடன் மேக ஸ்தம்பத்தில் (யாத்திரை 14:19-20)
  • பீலேயாமும் அவனது கழுதையும் (எண் 22:22-35)
  • யோசுவாவும் இஸ்ரவேலரும் (நியா 2:1-5)
  • இஸ்ரவேலரை வழிநடத்த கிதியோனை தெரிந்து கொள்வதற்காக (நியா 6:11-22)
  • சிம்சோனின் பெற்றோர் (நியா 13:2-23)
  • தாவீது ஜனங்களை கணக்கீடு செய்தபோது (2சாமு 24:15-17)
  • எலியாவை பலப்படுத்துவதற்காக (1இரா 19:5-8)
  • அசீரியர்களை அளிப்பதற்காக (2இரா 19:35; 2நாளா 32:21; ஏசாயா 37:36)
  • சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அவர்களை அக்கினி சூலையில் போட்ட போது (தானியேல் 3:25-28)
  • தானியேல் ஐ சிங்க கெபியில் போட்ட போது (தானியேல் 6:22)
  • தானியேலுக்கு தரிசனத்தை விளங்க பண்ண (தானியேல் 8:16; 9:21)
  • சகரியா விற்கு தேவ தூதர்கள் மூலம் பல காரியங்கள் காட்டப்படுகிறது (சகரி 1:9; 4:1-6)
  • யோசேப்பு மரியாள் அவர்களுக்கு தரிசனம் அவர்கள் எகிப்துக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் தூதர்கள் செயல்ப்பட்டார்கள் (மத் 1:20-21; 2:13,19)
  • இயேசுவுக்கு தூதர்கள் பணிவிடை செய்தார்கள் (மத் 4:11; மாற் 1:13)
  • சிறுவர்கள் தமக்கென தூதர்களை பெற்றிருக்கிறார்கள் (மத் 18:10)
  • கல்லறையின் அருகே பெண்களோடு தூதர்கள் வந்தார்கள் (மத் 28:2-8; யோவான் 20:11-13)
  • சகரியா தேவாலயத்தில் தூதனை பார்த்தார் (லூக்கா 1:11-19)
  • இயேசுவின் தாயாகிய மரியாள் தூதனை பார்த்தார் (லூக்கா 2:26-38)
  • இயேசுவின் பிறப்பின் போது மேய்ப்பர்கள் தூதனை பார்த்தார்கள் (லூக்கா 2:8-16)
  • கெத்சமனே தோட்டத்தில் இயேசு இருந்த இடத்திற்கு தூதர்கள் வந்தார்கள் (லூக்கா 22:43)
  • பெதஸ்தா குளத்தை கலக்குவதற்கு தூதர்கள் வந்தார்கள் (யோவான் 5:4)
  • அப்போஸ்தலர்களை சிறையில் இருந்து விடுவிக்க (அப் 5:19-20)
  • பிலிப்பு எத்தியோப்பியனுக்கு சாட்சி  கொடுக்கும் படி (அப் 8:26)
  • கொர்னேலியு பேதுருவை அழைப்பதற்காக (அப் 10:3-8)
  • பேதுருவை சிறையில் இருந்து விடுவிக்க (அப் 12:6-11)
  • எரோதுவை அடிப்பதற்காக (அப் 12:21-23)
  • கப்பல் சேதத்திற்கு முன்பு பவுலுடன் (அப் 27:23-24)
  • யோவான் அநேகமுறை (வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் முழுவதும்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.