பரிசுத்த. கிலெமெந்த்
வேதாகம களஞ்சியம்
சுவிசேஷங்களிலும் நிருபங்களிலும் ஒரு சிலருடைய வாழ்க்கை சரித்திரங்கள் மட்டுமே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நமது ஆண்டவர் பாலஸ்தீனத்தில் இருந்த நாட்களிலும் அவருடன் சுற்றித்திரிந்து பின் சுவிசேஷத்தை பரவச் செய்த அப்போஸ்தலரின் காலத்திலும் இயேசு கிறிஸ்துவின் அடியார்களாக சுவிசேஷ வேலை செய்த பலரை குறித்து நம் வேதாகமத்தில் அதிகமாக கூறப்படவில்லை. பரிசுத்த. கிலெமெந்தை பற்றியும் வேதாகமத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இருப்பதைக் காண முடிகிறது.
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
பிலிப்பியர் 4:3
பிலிப்பியர் 4:3
கிலெமெந் யூத குலத்தை சேர்ந்தவர். அவர் தன்னைக் குறித்து தான் யாக்கோபின் சந்ததியார் என்று கூறியிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பேதுரு அல்லது பவுல் ஆகிய இவர்களில் ஒருவரால் இவர் இரட்சிக்கப்பட்டவர் என கருதப்படுகிறது. இவர் லூக்கா தீமோத்தேயு ஆகியோருடன் இணைந்து பல சுவிசேஷ பயணங்களில் பங்கு எடுத்து பல துன்பங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவர். ஆகையால் அப்போஸ்தலனாகிய பவுல் அவரைக் குறித்து எழுதும் பொழுது அவர் சுவிசேஷ ஊழியத்தில் பெரும் முயற்சியுடன் உழைத்தவர் என்றும் அவருடைய நாமும் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று சொல்லுவதில் ஆச்சரியமில்லை.
இவர் அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களோடு இணைந்து ரோமாபுரிக்கு சென்றார் என்றும் அங்கு அப்போஸ்தலனாகிய பேதுரு நடத்தி வந்த வேதாகம கல்லூரியில் பயிற்சி பெற்றார் என்றும் சரித்திர வாயிலாக அறிகிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகமெங்கும் பரவ செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு இரவு பகலாக உழைத்த உத்தமர் சீடர் இவர். இவர் சபையின் தலைவராக அதை நிர்வாகம் செய்யும் படி நியமிக்கப்பட்டு அப்போஸ்தலனாகிய பேதுரு வெளிநாடுகளுக்கு ஊழியம் செய்ய போகையில் அந்த சமயங்களில் ரோமாபுரியை சபையை இவர் கண்காணித்து வந்தார் என்றும் சிலர் கருதுகின்றனர். அப்போஸ்தலனாகிய பேதுரு பவுல் இரத்த சாட்சிகளாக மரித்த பின்னர், பரிசுத்த. வின்னஸ் என்பவரும் பரிசுத்த கிலேட்டஸ் என்பவரும் முறையே ரோமாபுரியில் அத்தியட்சகர் களாக பணியாற்றிய பின்னர், பரிசுத்த. கிலெமெந்து சுமார் 10 ஆண்டுகளாக அத்தியட்சகராக தொண்டு புரிந்தார்.
கொரிந்து சபையில் இருந்த பிரிவினைகளை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நிருபங்களில் எழுதியது போல சில நாட்களுக்குப் பின்பு இவரும் கொரிந்து சபைக்கு ஒரு நிருபத்தை எழுதியதாக கருதப்படுகிறது. ஒரு குழுவினர் அந்த சபை போதகருக்கு விரோதமாக எலும்பினதை குறித்து இவர் கேள்விப்பட்டார். அதைக் கேட்டவுடன் அந்த சபைக்கு இவர் துயரத்துடன் ஒரு நிருபத்தை எழுதியுள்ளார். அதில் சபையோர் எல்லாவித பகைமையும் கோபத்தையும் விட்டு கிறிஸ்துவின் அடியாராக தாழ்மையை அனிந்து விண்ணுலகத்தை படைத்த கடவுள் கிறிஸ்துவின் மூலமாய் மானிடருக்கு காட்டிய மிகுந்த பொறுமையும் தாழ்மையையும் நாம் அணிய வேண்டும் என்று எழுதினார். உங்கள் பிள்ளைகள் கிறிஸ்து இயேசுவின் போதனைகளால் போஷிக்கப்பட்டு அவர் காட்டிய மிகுந்த தாழ்மையின் வல்லமையை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையும் பிறரிடத்தில் அன்பும் எவ்வளவு மகிமையாக கிரியை செய்யும் என்று கடவுளிடத்தில் பயமும் பற்றுதலும் எத்தகைய மேன்மை உள்ளது என்றும் அவர்கள் கண்டுகொள்ளட்டும் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்த சிறப்பான நிர்வாகம் வேதாகமத்துக்கு அடுத்த படியாக வைக்கப்பட்டுள்ளது.
கொரிந்து சபையில் சரீர உயிர்தெழுதலை பற்றி சில தவறான கருத்துக்கள் இருந்து வந்ததாகவும் அதை குறித்து இவர் விவரமாகவும் எழுப்புதல் ஆகவும் சபைக்கு எழுதினார் என்றும் கருதப்படுகிறது. இவ்வுலகை உருவாக்கின சிருஷ்டிகர் தம் சிருஷ்டிதலை நல்லது என்று கண்டு மகிழ்ந்தது போல நாம் செய்யும் வேலைகளை செவ்வனே உற்சாக மனதோடு செய்து நாம் மகிழ வேண்டும் என்று தன் நிருபத்தில் எழுதி இருக்கிறார். கொரிந்து சபையில் இருந்து பார்ச்சுடேனஸ் என்பவர் ரோமாபுரிக்கு வந்து அங்குள்ள சபை பிரிவினைகளை குறித்து கிலெமெந்துக்கு அறிவித்த போது அவருடன் 4 ஊழியரை போதித்து அனுப்பி இவர்கள் மன சந்தோஷத்துடன் திரும்பி வரவும் அந்த சபையின் சமாதானமும் அன்னியோன்யமும் பரவிய செய்தியை அவர்கள் வெகு சீக்கிரம் கொண்டுவரவும் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. சபையின் நல்வாழ்வுக்காக இந்த பக்தனைப் போல் பாடுபட்டவர்கள் சிலரே உள்ளனர்.
இவர் கொரிந்து சபைக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தின் பெரும்பாலும் மற்ற வேதாகம எழுத்து சான்றுகளுடன் கிடைத்தன என்றும் அவைகள் சபைகள் முன் வாசிக்கப்பட்டு வந்தனர் என்றும் தெரிகிறது. பரிசுத்தமான வாழ்க்கையும் நம் சிற்றின்பங்களை அடக்குவதும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படை என்று அவர் தம் நிருபங்களில் எழுதியிருக்கிறார்.
டாமிஷியன் கிறிஸ்தவ மக்களை அழிக்க செய்த முயற்சியில் கிலெமெந்த் அகப்படவில்லை. மூன்றாம் முயற்சி என்று சொல்லப்படும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக 100 ஆண்டுகள் நடந்த கிளர்ச்சியில் இவர் இரத்தசாட்சியாக மரித்தார் என்று கூறப்படுகிறது.
திருச்சபை பணியில் ஈடுபட்டு அதில் உள்ள ஊழல்களை திருச்சியும் பிரிவினைகளை நீக்கியும் கிறிஸ்தவ வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்பதை தம் நிருபங்கள் மூலமாய் எடுத்துக்காட்டியும் தொண்டாற்றிய இந்த பக்தன் திருச்சபையின் ஒளி குன்றா மணிமகுடமாக விளங்கினார்.