அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
பாடம் 3: கிறிஸ்துவின் கர்த்தத்துவம்
இயேசு கிறிஸ்து உமக்கு யார்?....... இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடமும் பிறரிடமும் சில கேள்விகளைக் கேட்டார்.
• நான் யார் என்று ஐனங்கள் சொல்லுகிறார்கள் (மத்.16:13 ; 22:41-42 ; மாற்.12:35-37).
• நான் யாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்?
கிறிஸ்து கர்த்தராக இருக்கிறார். இதைத்தான் சீஷர்கள் வேதத்தில் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் இயேசு என்று அவரை அழைக்கவில்லை. அவர்களால் அதை நினைத்தும் பார்க்கக்கூடாத ஒன்றாக இருந்தது. அவர்கள் போதகர் என்று அழைத்தனர். இது போதிப்பவர் என்ற அர்த்தத்தில் மட்டுமல்லால், கட்டளையிடுபவர் என்ற அர்த்தம் உடையதாகவும் இருக்கிறது. கிறிஸ்து பலமுறை தன்னுடைய தெய்வீகத்தன்மையைக் கூறினபொழுதும், சீஷர்களால் சீக்கிரமாக அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. பழைய ஏற்பாட்டின் பகுதிகளாக சங்கீதம் 110:1 ஐ மேற்கோள்காட்டியபின்பும் அவர்கள் இதை உணர்ந்துகொள்ளவில்லை (யோ.14:8-11 ; யோ.8:24,58). அவரே எல்லா மனிதனின் நித்திய முடிவின் மீதும் கட்டுப்பாடு உள்ளவர் என்பதைச் சீஷர்களுக்குத் தெரிவித்தார் (மத்.7:21-22). அறிவில் அவர்கள் குறையுள்ளவர்களாக இருந்தபொழுதிலும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கையிட்டனர். அவரை மற்றவர்கள் விட்டுச் சென்றபொழுதிலும், இவர்கள் பின்பற்றினர் (யோ.6:66-67).
கர்த்தர் என்ற வார்த்தை மூன்று விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவின் அந்தஸ்த்தையும், அவருக்கு உரியதையும், அவரின் ஆட்சியையும் குறிக்கிறது. தீர்க்கன், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பதைக் கண்டான் (ஏசா.6:1). இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவைக் குறிக்கிறது (யோ.12:41). அவரின் நிலை அல்லது அந்தஸ்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் ஆவார். பவுல் எழுதுகிறார் ப+மியும் அதின் நிறைவும் கர்த்தருடையது (1.கொரி.10:26). இந்தக் கிரகத்தில் காணப்படும் அனைத்தும் அவருக்குரியதாக இருக்கிறதைக் காட்டுகிறது. பேதுருவினிடத்தில் திரும்பவும் வலையைப்போட கர்த்தர் கூறியபோது அவன் சொல்லுகிறான்: ஐயரே இராமுழுதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆயினும் உம்;முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான் (லூக்.5:5). இது அவரின் ஆட்சியைக் காட்டுகிறது.
கர்த்தர் என்ற நிலையில் கிறிஸ்துவின் அந்தஸ்து
1) அறிவிக்கப்பட்டார்
தேவனுடைய வழியை அறியும்படி பேதுருவிடம் வந்த ரோம அதிகாரிக்கு அவர் இயேசு கிறிஸ்து எல்லோருக்கும் கர்த்தராய் இருக்கிறார் என்று கூறுகிறான் (அப்.10:36). சிலுவையில் அறையப்பட்ட இயேசு அபிஷேகம்செய்யப்பட்ட இரட்சகர், அவரே ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆவார் (அப்.2:36). எல்லாவற்றையும் படைத்தவர் (யோ.1:3 ; கொலோ.1:16) தூதர்களும், அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக் கிறது (1.பேது.3:22). எல்லாத் துரைத்தனங்களையும், அதிகாரங்களையும், வல்லமையையும், கர்த்தத்துவத்தையும் எப்பொழுதும் ஆளுகிறார் (எபேசி.1:20). ஆசீர்வதிக்கப்பட்ட இராஜாதி இராஜவும், கர்த்தாதி கர்த்தாவுமாக இருக்கிறார் (வெளி 17:14 ; 19:16). அனைத்தும் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக விழுந்து ஆராதிக்கும் (வெளி 4:10-11 5:12-14).
2) தள்ளப்பட்டார்
உலகத்தைப் படைத்த சர்வ வல்லமையுள்ளவர் கலகத்தை அனுமதிக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்க ஒன்றாய் இருக்கிறது. இது எப்பொழுதுமே ஒரு இரகசியமாகவே உள்ளது. மனிதனால் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. முதல்முதலாகச் சாத்தான் தேவனுக்கு சமமாக வரவேண்டும் என்று ஆவல் கொண்டு அதை நிறைவேற்ற கலகத்தில் இறங்கினான் (ஏசா.14:12-14 ; எசேக்.28:13-17). இக் கலகம் பிறதூதர்களையும் பற்றிக்கொண்டது (2.பேது.2:4). கலகம் செய்த தூதன் மனிதன் வாழ்கின்ற ப+லோகத்திற்கு கொண்டுவரப்பட்டான் (ஆதி.3 ; ரோ.5:12). தேவன் மிகவும் கவலையாக கூறுகிறார்: நான் வளர்த்து ஆதரித்தேன். அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் (ஏசா.1:2). தேவனால் நியமனம் செய்யப்பட்ட தலைவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் வெறுத்துத்தள்ளியபோது, அது தன்னையே தள்ளியதாக தேவன் கருதினார் (1.சாமு.8:7). தேவன் தன்னுடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பியபோது அவரையும் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டார்கள் (ஏசா.53:3). ஐPவாதிபதியைக் கொலைசெய்தார்கள் (அப்.3:15).
3) ஏற்றுக்கொள்ளப்பட்டார்
பரந்த உலகில் தேவனை ஏற்றுக்கொள்ளாமல் அவரைத் தள்ளியவர்கள் சில கூட்டமாகத்தான் இருந்தார்கள். ப+மியிலே காற்றும், கடலும், அவருக்குக் கீழ்ப்படிந்தது (மத்.8:27). அசுத்த ஆவிகள் அவருக்குக் கீழ்ப்படிந்தது (மாற்.1:27). அவர் கட்டளையிட தூதர்கள் கீழ்ப்படிந்தார்கள் (மத்.26:53). எண்ணிலடங்கா ஏராளமான மக்கள் அவர் சிலுவையில் முடித்த அன்பின் தியாகத்தால் அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். அவரின் விரோதிகள் அவரைத் துதிப்பார்கள் (சங்.76:10-12). பாதாளத்திலுள்ள சேனைகள் பரலோகத்தில் உள்ளவர்களோடு சேர்ந்து முழங்கால்களை முடக்கி இயேசு கிறிஸ்துவைக் கர்த்தர் என்று அறிக்கையிடுவார்கள் (பிலி.2:10-11). இயேசு சொன்னார்: நீங்கள் என்னை போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே. நான் அவர்தான் (யோ.13:13).
கர்த்தர் என்ற நிலையில் அவருக்கு உரியவைகள்
1) சொல்லப்பட்டார்
உலகைப் படைத்தார் என்கிற நிலையில் உலகிலுள்ள அனைத்தும் தேவனுக்குரியது (சங்.50:10-12). குயவனுடைய கையிலிருக்கிற களிமண்ணை அவன் தான் விரும்பியபடி செய்வதுபோல கர்த்தரும் தன் ஐனத்தை தனக்குப் பிரியமான முறையில் நடத்துகிறார் (எரேமி.18:6). விலையேறப்பெற்ற கிறிஸ்துவின் இரத்தத்தால் மனிதர்கள் மீட்கப்பட்டதால் மனிதன் அவருக்குரியவன் ஆகிறான் (1.பேது.1:19). உலகத்தின் பாவத்திற்காக மரித்தார் (1.யோ.2:2). அவரை நிராகரித்த கள்ளப்போதகர்களையும் அவர் கிரயத்திற்கு வாங்கினார் (1.பேது.2:1). இவ்வாறு மனிதன் தனக்குரியவனாக இருந்தபோதிலும் மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்....... என் ஐனமோ உணர்வில்லாமல் இருக்கிறார்கள் என்று கர்த்தர் கூறுகிறார் (ஏசா.1:3).
2) ஏற்றுக்கொள்ளப்பட்டார்
இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரும், இரட்சகருமாக ஏற்றுக்கொள்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் (யோ:1:12). ஆகையால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசி அவனுக்குச் சொந்தமாய் இராமல் அவனை வலைகொடுத்து வாங்கிய கிறிஸ்துவுக்கே சொந்தமாயிருக்கிறான் (1.கொரி.6:19-20). தோமாவைப் போல கிறிஸ்துவைத் தேவன் என்றும் ஆண்டவர் என்றும் அறிக்கையிடுகிறான் (யோ.20:28). நான் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், ஆனால் கர்த்தராக அல்ல என்கிற கொள்கைக்கு ஆதரவாக வேதத்தில் வசனங்கள் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அல்லது இயேசு கிறிஸ்து நம்முடைய கர்த்தர் என்கிற வார்த்தை இயேசு நமது இரட்சகர் என்ற வார்த்தையைவிட அதிகமான நேரங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது, தேவனை ஏற்றுக்கொள்வதற்குச் சமம். ஒருவன் இரட்சிக்கப்பட்டதும் கிறிஸ்துவின் கர்த்தத்துவத்திற்கு உரிய அனைத்தையும் அறியாமல் இருக்கலாம், அவன் ஆண்டவனின் சித்தத்தைச் செயல்படுத்த முடியாதவனாக இருக்கலாம், தடுமாறலாம், விழலாம். ஆனால் உண்மையான விசுவாசி அவரின் கர்த்தத்துவத்தை ஒருபோதும் மறுதலிக்கமாட்டான், அல்லது அவரை இரட்சகர் மட்டும் என்று பிரித்துக்கூறமாட்டான்;.
3) சாட்சிகொடுக்கப்பட்டார்
ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும் நான் சொல்கிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? என்று ஆண்டவர் ஒரு கேள்வி கேட்டார் (லூக்.6:46). அவருடைய பார்வையில் அவரின் சித்தத்தைச் செய்யாமல் ஆண்டவரே! ஆண்டவரே! என்று அழைப்பது உண்மையான விசுவாசியின் அடையாளம் அல்ல. ஒருநாள் அவர் சொல்லுவார் நான் உங்களை ஒருபோதும் அறியேன் (மத்.7:21-23 ; லூக்.13:25-27). விசுவாசி என்று கூறி தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலிக்கிறவன் பொய்யன் (1.யோ.2:3-4). உண்மையான தேவனுடைய பிள்ளைகள் தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக இயேசு கிறிஸ்துவை கர்த்தராக அறிக்கை செய்கிறார்கள்.
கர்த்தர் என்ற நிலையில் அவரின் ஆட்சி
நாம் என்ன செய்யவேண்டும்? ஏராளமானோர் இயேசு கிறிஸ்துவைக் கர்த்தராக வார்த்தையால் மட்டுமே ஏற்றிருக்கிறார்கள். பிறர் தங்களைத் தாங்களே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அவரின் ஆட்சிக்கு எப்பொழுதுமே எதிர்ப்பு இருக்கிறது (லூக்.19:14,27). இன்றைய சமுதாயம் மனிதனை மையமாக வைத்து ஏராளமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்திருக்கின்றன. மனிதன் மேன்மையானவன், அவன் அவனைப் பற்றி நல்லதையே நினைக்கவேண்டும். தன்னையே உணர்தல், தன்னையே அறிதல், தன்மீதே அன்பு செலுத்தல், தன்னையே வளர்த்தல், தானே மகிழ்ச்சியாயிருத்தல் போன்ற ஏராளமான கொள்கைகள் வளர்ந்துள்ளது. தேவனை Nநிசித்தல், நம்மை நாமே நேசித்தல் அல்ல, தேவனே மையப்பொருள். நாம் அல்ல. வேதாகமமுறைப்படி நான் முதலில் அல்ல, அனால் தேவன்தான் முதல் மற்றவையெல்லாம் அவருக்குப் பின்னால்த்தான். இன்று ஏராளமானோர் கிரேக்ககதையில் வருகின்ற நார்சீஸைப் போல் இருக்கிறார்கள். தண்ணீரிலே தான் கண்ட அவனுடைய நிழலின்மீதே காதல்கொண்டு நாட்களை வீணாக்கினதால் அவன் தன் காதலை நிறைவேற்றமுடியவில்லை. ஏனென்றால் அது அவனுடைய சுயநிழல். கடைசிகாலத்தில் ஒழுக்கச்சீர்கேட்டிற்கு காரணம் தன்மீது அன்புகூறுதல் ஆகும் (2.தீமோ.3:2). இன்றைய நாட்களில் படைத்தவரைவிட படைக்கப்பட்டவைகளைப் பெரிதாக தொழுதுகொள்கிறார்கள் (ரோ.1:25).
இயேசு கிறிஸ்துவைக் கர்த்தர் என்று ஏற்றுக்கொள்வது வாழ்க்கையிலும், செயலிலும் காட்டப்படவேண்டும். நாம் நம்மை ஆளுகை செய்வதை விட்டுவிட்டோம் என்பதைப் புரிந்துகொள்ளுதல் கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். மக்கதோனியர் தங்களைக் கர்த்தருக்குக் கொடுத்தார்கள் (2.கொரி.8:5). நாம் பாவத்திற்கு மரித்திருக்கிறோம் என்று எண்ணி (ரோ.6:11), நாம் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும் (ரோ.6:13). நாம் நம் சரீரங்களை ஐPவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (ரோ.12:1-2), அதன்மூலம் நம் வாழ்க்கையில் தேவன் ஆட்சி செய்வதை அனுபவ ரீதியாக உணர்ந்துகொள்ளமுடியும். தேவனின் உன்னத தன்மையை அறிகின்றபொழுது அவரே நம் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் முதல்வராய் இருப்பார் (கொலோ.1:18). கர்த்தருடைய ஜெபத்திலே உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக (மத்.6:10) என்று சொல்லி இருப்பதுபோல நம் வாழ்விலும் அவரின் சித்தம்செய்யப்படவேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
பின்வருகின்ற பகுதிகளில் தேவனுடைய ஆளுகை நமக்கு மிக அவசியம். அதுவே நற்சாட்சியாகவும் இருக்கும்.
1) முன்னுரிமை
முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் (மத்.6:33). கிறிஸ்து ஒருபோதும் இரண்டாவது இடத்தில் இருக்கமாட்டார்.
2) சரீரம்
நாம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறோம். அந்த விலையில் நம்முடைய சரீரமும் சேர்ந்து விற்கப்பட்டது (1.கொரி.6:19-20). நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம்.
3) நமக்கு உரியவைகள்
எல்லாம் உம்மால் உண்டானது (1.நாளா.29:14). நாம் உக்கிராணக்காரர்கள் (1.கொரி.4:2). நமக்குரியவைகள் தாலந்துகள், நேரம் அனதை;தும் கர்த்தருக்கு உரியது. அவைகள் நமக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
4) உறவுகள்
நான் உங்களில் அன்பாய் இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று கிறிஸ்து கட்டளையிட்டார். இதுவே இயேசு கிறிஸ்துவுக்குச் சீஷராய் இருப்பதற்கு அறிகுறியாக இருக்கிறது (யோ.13:35). அன்பு தியாகத்தைக் குறிக்கிறது. நாம் பிறரைக் குறித்து அக்கறை உள்ளவராய் இருக்கவேண்டும், ஏனென்றால் கிறிஸ்துவும் அப்படியே இருந்தார். அவர் பாவிகளுக்கு விலகியிருந்தார் (எபி.7:26), இருந்தாலும் பாவிகளோடு போஜனம்பண்ணினார் (லூக்.15:2). அன்பும், பரிசுத்தமுமே நாம் பிறரோடு கொண்டுள்ள உறவை ஆளவேண்டும். வேதம் உலகோடு உள்ள நட்பைத் தடை செய்கிறது (யாக்.4:4). ஏனென்றால் உலகில் உள்ளவர்கள் தேவனுக்குரியவர்கள் அல்ல (1.யோ.2:15-16). நமக்கு வீடுகளிலும் ஒழங்கான உறவு முறை இருக்கவேண்டும் (எபேசி.5:22-25 ; 6:1-2).
5) வியாபாரம், வீடு, படிப்பு
வேலைசெய்பவராக இருந்தாலும், அல்லது வேலைகொடுப்பவராக இருந்தாலும், நாம் நீதியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று அழைக்கப்பட்டிருக்கிறோம் (எபேசி.6:5,9 ; யாக்.5:4). நாம் கர்த்தருக்கென்றெ எல்லாவற்றையும் செய்யவேண்டும் (கொலொ.3:24).
6) பேச்சும், சிந்தையும்
கர்த்தர் நாவுக்கும் மனதுக்கும் தேவனாயிருக்கவேண்டும். நாம் அவரை அனுமதித்தால், அவர் நம் மூலம் பேச விரும்புகிறார் (மத்.10:20). நாம் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருப்போம் (யாக்.1:19). நாம் பிறரைப்பற்றி மோசமாகப் பேசக்கூடாது (யாக்.4:11). நம்முடைய சிந்தனைகளைத் தேவன் பார்த்து, தீட்டானவைகளைக் கண்டுகொள்கிறார் (மத்.15:19-20).
7) நம்பிக்கையும், நோக்கமும்
நித்தியத்தில், கர்த்தர் ஒருவனின் செயல்களைச் சோதித்து மதிப்பிடும்போது எதன் அடிப்படையில் அவனை மதிப்பிடுகிறார் (1.கொரி.3:11-15)? கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளை நாம் தேடவேண்டும் (கொலோ.3:1). அப்படியானால் ப+மியிலுள்ளவைகளில் எவை நித்தியத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது?
நம் வாழ்வில் எப்பகுதியை நாம் வளர்த்துக்கொள்வது தேவை என்பதை அறிந்துகொள்ள பின்வருகிற ஆலோசனைகள் நமக்கு உதவியாக இருக்கலாம்.
• கர்த்தருக்கு வாழ்வில் முதலிடம் கொடுக்கிறோமா?
• நம்முடைய தீர்மானங்களில் கர்த்தரை நினைவில்கொள்கிறோமா?
• நம்முடைய ஒவ்வொரு உறவும் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?
• நம்முடைய ஒவ்வொரு செயலிலும் கர்த்தர் பிரசன்னமாகிறாரா?
• நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் கர்த்தரின் கட்டுப்பாட்டில் உள்ளதா?
• ஒவ்வொருநாளும் நம்முடைய சரீரத்தில் கர்த்தருக்கென்று பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அந்நாளை ஆரம்பிக்கிறோமா?
• நம்முடைய ஒவ்வொரு பொறுப்புக்களும் கர்த்தருக்கு நாம் ஆற்றவேண்டிய பொறுப்புகளோடு ஒத்தள்ளதா?
முடிவுரை
இயேசு கிறிஸ்து மூலம் நம்மில் இருக்கிற சுயத்தை வென்றால் ஒழிய விசுவாசியின் வாழ்வில் சீரான வளர்ச்சி இல்லை. குறைவான பரிசுத்தம், பரிப+ரணம் இல்லாத பக்தி, இவையே இன்று பல விசுவாசிகளிடமும், சபைகளிடமும் காணப்படுகின்ற வியாதியாகும். கர்த்தர் சொல்கிறார்: என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா (நீதி.23:26). இருதயமே நம்மை ஆளுகின்ற பகுதி. இங்கு கிறிஸ்து நம்முடைய ஆண்டவராக ஆளவேண்டும்.
முற்காலத்தில் இப்படியொரு எண்ணம் இருந்தது, என்னவென்றால் மனிதனுடைய பெரிய எதிரி கூறினான். தேவன் தன்னுடைய சித்தத்தை முன்னாக வைத்து மனிதனின் முதன்மையான இடத்தைப் பறித்துப்போட்டார் என்று (ஆதி.3:5). இவ் வார்த்தைக்குச் செவிகொடுத்தபடியால் மிகப் பெரிய தண்டனை பெற்றாகிவிட்டது. நம்முடைய எதிர்காலம் கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதாலும், இயேசு கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்வதாலும், நித்தியமானவர் நம்மை ஆட்சிசெய்வதற்கு ஒப்பக்கொடுத்தலையும் சார்ந்துள்ளது. இது நம்முடைய நித்திய நன்மைக்கு முக்கியமானதாகும்.
பாடம் 3 ற் கான கேள்விகள்
1) பின்வரும் வசனங்களில் இருந்து இயேசு கிறிஸ்துவின் அந்தஸ்து அல்லது நிலை என்ன என்பதைக் கற்றுக்கொள்கிறீர்கள் (எபேசி.1:20-21 ; கொலோ.1:18 ; 1.பேது.3:22 ; வெளி 4:10-11 ; 5:12-13)?
2) கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொண்டிருக்கிற, ஏற்றுக்கொள்ளப்போகிற நபர்களையோ அல்லது பொருட்களையே பட்டியலிடுக.
மத்.8:27
மத்.26:53
மாற்.1:27
ரோ.14:9
பிலி.2:10-11
3) கர்த்தர் இந்த உலகிற்கு வந்தபோது எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டார் (யோ.1:10-12)? லூக்கா 19:14,27ல் ஐனங்களின் அடிப்படை ஆட்சேபணை என்ன? இது எப்படி இயேசு கிறிஸ்துவை புறக்கணித்தவர்களுக்குப் பொருந்தும் என்பதை விபரிக்க.
4) யோவான் 20:28ல் தோமாவினுடைய அறிக்கையின் முக்கியத்துவம் என்ன?
இரட்சிக்கப்படுவதற்கு ஒருவன் கண்டிப்பாய்ச் செய்யவேண்டியது ஒன்று எது (ரோ.10:9-10)?
இயேசு இரட்சகர் என்று ஏற்றுக்கொண்டு, கர்த்தர் என்று ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது இரட்சிப்படையப் போதுமானதா? விளக்கவும்.
5) இயேசுவை கர்த்தர் என்று சொல்லிய பின்பும், இரட்சிக்கப்படாமல் இருப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதா (மத்.7:21-23 ; லூக்.6:46 ; 13:25-27 ; 1.யோ.2:3-4)?
6) ரோமர் 12:1-2 ஐ உங்கள் சொந்த நடையில் எழுதுக. இப் பகுதியில் நடைமுறையில் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு என்ன செயல்பாடுகள் தேவையாக இருக்கிறது?
7) கீழ்ப் பகுதியிலே இடது பக்கம் இயேசு கிறிஸ்துவை வாழ்க்கையில் கர்த்தராக ஏற்றுக்கொண்டவர்கள் பற்றி விளக்கமும், வலது பக்கம் அப்படிச் செய்யாதவர் பற்றியும் கூறப்பட்டுள்ளது?
பொதுவான நடக்கை
கொலோ.2:6 எபேசியர்
பால் உறவு
1.கொரி.6:18-20 1.கொரி.6:9-10
பேச்சு
கொலோ.4:6 கொலோ.3:8-9
வேலை
கொலோ.3:23-24 கொலோ.3:22
குடும்ப உறவு
கொலோ.3:18-21 கொலோ.3:22
8 ) கிறிஸ்தவன் என்று கூறிக்கொண்டும், கிறிஸ்துவை தன் வாழ்வில் அதிகாரம் செலுத்த விடாதவரை நீங்கள் பார்த்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?
9) வெளிப்படுத்தின விசேஷம் 3:20ல் நம்முடைய இருதயமாகிய வாசல் அண்டையில் நின்று தட்டுகிறார். கிறிஸ்துவை என் வாழ்க்கையில் கர்த்தராக ஏற்றுக்கொள்ள எடுத்துவைக்கவேண்டிய முதல்படி என்ன? உங்கள் வீட்டில் இன்னும் கிறிஸ்துவை அனுமதிக்க வேண்டிய அறை யாது? இதற்கு நீங்கள் என்ன செய்ய நோக்கமாக இருக்கிறீர்கள்? விளக்கவும்!
10) தனிப்பட்டமுறையில் கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை (ஆளுகையை) பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? விளக்குக!