அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி Post பாடம் 4: ஞானஸ்நானத்தில் அடக்கம்பண்ணப்படுதல்

அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 4: ஞானஸ்நானத்தில் அடக்கம்பண்ணப்படுதல்

சபை பாரம்பரியத்திலும், செயற்பாடுகளிலும் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பல வித்தியாசங்களும், முரண்பாடுகளும் உள்ளன. தேவபக்தியுள்ள மனிதர்களும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனாலும் ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுத்த அடிப்படைக் கட்டளைகளில் ஒன்றாகும். மத்.28:19ல் இயேசு சொன்னார்: நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஐhதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்தஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் (மாற்.16:16). ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு இதைப் பற்றி உண்மையாகவும், ஒழுங்காகவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் (அப்.2:38,41 ; 8:12,36-39 ; 9:18 ; 10:47-48 ; 16:15,33 ; 18:8 ; 22:16). ஞானஸ்நானம் கீழ்ப்படிதலின் முதற்படி. புதிய விசுவாசிகள் இதன்மூலம் தங்களை சில வேளையில் பாடுகளுக்குப் பங்குள்ளவராக்கினார்கள். அவர்கள் கிறிஸ்துவைக் கர்த்தரென்றும் இரட்சகர் என்றும் அறிக்கையிட்டு, ஞானஸ்நானத்தின் மூலம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்கிறார்கள்.

வேறு ஞானஸ்நானம் உள்ளனவா ?

மேற்கூறப்பட்டுள்ள வேதவாக்கியங்களைப் பார்த்தால், அவற்றை விசுவாசிகளின் ஞானஸ்நானம் என்று அழைக்கிறோம். இதுதான் இப் பாடத்தின் நோக்கமாகும். ஞானஸ்நானம் என்ற வார்த்தையைத் தெளிவுற அறியவேண்டும் என்பதற்காக கீழ் வருகின்றவைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது நலம்.

1) யூதர்களின் சடங்காச்சார சுத்திகரிப்பு (லூக்.11:38-39 ; எபி.6:2 ; 9:10 ; மாற்.7:4)பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் இப்படிப்பட்ட முறையில் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டார்கள். சாப்பிடுகின்ற, குடிக்கப் பயன்படுத்துகின்ற பொருட்களைக் கழுவுதல், சடங்காச்சாரமாக சாப்பிடுவதற்கு முன்பாக கைகழுவுதல் இதில் அடங்கும். யூதர்கள் அல்லாதோர், ய+தராக மாறும்பொழுது தீட்டில் இருந்து தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள ஞானஸ்நானம் பெற்றார்கள்.

2) யோவானின் மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் (மாற்.1:2-4 ; லூக்.3:5-6 ; யோ.1:31 ; அப்.13:24)
இது இஸ்ரவேலருடைய மனம் திரும்புதலுக்கான அழைப்பாக இருந்தது. மேசியாவின் முன்னோடி என்பதால், யோவான் கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுகிறவராக இருந்தார். இந்த ஞானஸ்நானம் கிறிஸ்தவர்களின் ஞானஸ்நானம் போன்றது அல்ல (அப்.19:3-5). இந்த ஞானஸ்நானத்திற்கு தண்ணீரில் மூழ்கவேண்டியதாயிருந்தது (மத்.3:16 ; யோ.3:23). கர்த்தராகிய இயேசுவுக்கு மனந்திரும்புதல் தேவையில்லாது இருந்தபோதும் நீதியை நிறைவேற்றும்படி யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் (மத்.3:14-15). யோவானால் பெற்ற ஞானஸ்நானத்தோடு கிறிஸ்து வெளிப்படையான தன் ஊழியத்தைத் தொடங்கினார்.

3) கிறிஸ்துவின் பாடுகளுக்குரிய ஞானஸ்நானம் (லூக்.12:50 ; மாற்.10:38-39 ; மத்.20:22)
நம்முடைய பாவங்களுக்காய் அவர் பாடுபட்டார் (1.பேது.3:18 ; ஏசா.53:4). சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தபோது தேவனுடைய கோப அலைக்குள்ளாக மூழ்கடிக்கப்பட்டார் (சங்.42:7).

4) ஆவியின் ஞானஸ்நானம் (மத்.3:11-12 ; லூக்.3:16 ; யோ.1:33 ; அப்.1:4 ; 11:16)
யோவானால் இது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டு, பெந்தேகோஸ்தே நாளில் துவங்கப்பட்டது (அப்.2). இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் விசுவாசிகளை கிறிஸ்துவின் சரீரத்தில் நிலைப்படுத்துவதாகும் (1.கொரி.12:13).

நாம் ஞானஸ்நானம் என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டுள்ள அக்கினி (மத்.3:11-12 ; லூக்.3:16-17), மோசே (1.கொரி.10:2), மரித்தவர் (1.கொரி.15:29) ஆகியவை குறித்து இங்கு ஆராயவில்லை. ஏனென்றால் இப் பாடத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

யார் ஞானஸ்நானம் பெறவேண்டும் ?

கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிட்ட பின்னரே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவேண்டும். ஏராளமான சபைகளில் இரட்சிப்புக்கு முந்தியது ஞானஸ்நானமாக இருக்கிறது. இது வேதத்தின் மூலம் நிரூபிக்க முடியாததாக இருக்கிறது. வேதாகமத்தில் முதலில் விசுவாசம், பின்னரே ஞானஸ்நானம் என்கிற முறை உள்ளது. நாம் கிறிஸ்துவின் கட்டளையைப் பார்ப்போமாயின் சீஷராக்கி.... ஞானஸ்நானம் கொடுத்தல் (மத்.28:19). விசுவாசம், ஞானஸ்நானம் (மாற்.16:16). பெந்தேகொஸ்தே நாளில் இரட்சிப்பைப் பெறவேண்டும் என ஆவல் கொண்ட ஐனங்களைப் பார்த்து பேதுரு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார் (அப்.2:37-38). பிலிப்பு, எதியோப்பிய மந்திரி இயேசு கிறிஸ்துவைத் தேவகுமாரன் என்று விசுவாசித்தபின்னர் ஞானஸ்நானம் கொடுத்தார் (அப்.8:36-37). கொரிந்தியர்கள் முதலில் விசுவாசித்தார்கள், பின்னர் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்.18:8). நாம் சுவிசேஷத்தை விசுவாசித்ததால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் (எபேசி.1:13 ; 1.கொரி.15:1-4). இதில் ஞானஸ்நானம் ஒரு பகுதியாக இல்லை (1.கொரி.1:17). மனந்திரும்பலும், கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தலும் முதலாவதாக இருக்கவேண்டும் (அப்.20:21).

குழந்தை ஞானஸ்நானம் 

வேதத்திலேயே குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தலைப் பற்றி எந்த விளக்கமும் இல்லாத பொழுதும், நூற்றாண்டுகளாக ஏராளமான சபைகள் இம் முறையைப் பின்பற்றுகின்றன. வரலாற்று ரீதியாக மூன்று காரணங்களால் குழந்தைகளுக்கு இச் சபைகள் ஞானஸ்நானம் கொடுக்கிறது.
• நரகத்தில் இருந்து குழந்தையை மீட்டுக் கொள்வதற்காக,
• பிற்காலத்தில் திடப்படுத்தல் மூலம் இரட்சிப்பைச் சுதந்தரித்துக்கொள்ள இது இரட்சிப்பின் துவக்கமாக இருக்கிறது, அல்லது
• குழந்தையைக் கிறிஸ்துவுக்குள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தைப் பெற்றோர்களின் மனதில் பதிய வைப்பதற்கு குழந்தை ஞானஸ்நானத்தைச் செய்கின்றார்கள்.
ஞானஸ்நானம் பெறாத குழந்தைகள் நரகத்திற்குப் பாத்திரவான்கள் என்பது தேவனைப் பற்றிய பயங்கர எண்ணத்தை உண்டுபண்ணுகிறது. மேலும் ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு வழிவகுக்கிற ஒன்று என்ற வேதத்தில் ஆதாரம் இல்லை. குழந்தைகள் அற்பணிப்பு ஆராதனை என்பதும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஒன்றாகும். இருந்தாலும் குழந்தை ஞானஸ்நானத்தைக் குறித்த விவாதங்கள் வேதத்தில் இருந்தே எழுப்பப்படுகிறது.

1)குழந்தை ஞானஸ்நானத்திற்கு ஆதாரமாக வேதத்தில் தோன்றுபவை
மாற்.10:13-16 ; மத்.19:13-15 ஆகிய இரு பகுதிகளும் குழந்தை ஞானஸ்நானத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. பெற்றேர்ர்கள் தங்கள் பிள்ளையை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர் கூறினார்: சிறு பிள்ளைகளை என்னிடத்தில்

வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடைபண்ணாதிருங்கள். பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. இயேசு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, ஆனால் அவர்களை ஆசீர்வதித்தார். இயேசுவும் சீஷர்களும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தால், சீஷர்கள் சிறுபிள்ளைகள் இயேசு அண்டை வருவதற்குத் தடைசெய்திருக்கமாட்டார்கள். ஒருவர் கூறுகிறார்: இயேசுவை நாம் இங்கு பார்க்கிறோம், ஆனால் தண்ணீரைக் காணவில்லை. மத்தேயு 18:2-6ல் இயேசு கூறுகிறார்: மனந்திரும்பி சிறுபிள்ளைகள்போல் நீங்கள் ஆகாவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள். இங்கு தன்னிடத்தில் நிற்கின்ற குழந்தையை மையமாக வைத்து இக் கருத்தைக் கூறுகிறார். இங்கு தாழ்மைக்கு அடையாளமாக குழந்தையை கூறப்படுகிறதே தவிர, ஞானஸ்நானத்தைக் குறிக்கவில்லை. 1.கொரிந்தியர் 7:14ல் மேற்கோள் காட்டப்படுகிறது. விசுவாசிகளின் குழந்தைகள் இங்கு பரிசுத்தம் உள்ளவர்கள் என அழைக்கப்படுகிறர்ர்கள். பரிசுத்தம் என்பது பிரித்தெடுக்கப்பட்ட என்ற பொருளைக் குறிக்கிறது. இங்கு விசுவாசிகளின் குழந்தைகளின் சிறப்பு நிலை குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட நிலை ஞானஸ்நானத்தால் ஏற்பட்டதல்ல. கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்ததால் ஒருவன் சபையில் பிறந்தவன் என்று வேதம் சொல்லவில்லை. மறுபடி பிறத்தலே இரட்சிப்பு. மாமிசமான பிறப்பில் இருந்து அல்ல (யோ.1:13 ; 3:5,7).

2)விருத்தசேதனத்தை அடிப்படையாகக் கொண்ட விவாதம்
ய+தர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்வார்கள் (லூக்.1:59). விருத்தசேதனத்தின்மூலம் பிள்ளைகள் ய+தஐhதிக்குள் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு கிறிஸ்தவர்கள் குழந்தை ஞானஸ்நானத்திற்காக வாதிக்கின்றனர். கொலோசேயர் 2:11-12ல் கிறிஸ்துவைப் பற்றும் விருத்தசேதனம் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் கிறிஸ்து தன்னுடைய மரணத்தின் மூலம் பாவத்தை நீக்க வல்லவர் என்பதைக் குறிக்கிறது. இப் பகுதியில் குழந்தை ஞானஸ்நானத்தை ஆதரிக்கிற பகுதிகள் இல்லை.

3) வீட்டார் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்ற அடிப்படையில் விவாதம்
லீதியாள் (அப்16:14-15), பிலிப்பி பட்டணத்துச் சிறைச்சாலைக்காரன் (அப்.16:30-33), கிறிஸ்பு, ஸ்தேவான் (1.கொரி.1:15-16 ; 16:15) ஆகியவர்களின் வீட்டார்கள் பற்றிக் கூறுகின்றபொழுது அவர்கள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். இவர்கள் வீடுகளில் குழந்தைகள் இருந்திருப்பார்கள் என பலர் ய+கிக்கின்றனர். மேலும் வீட்டார் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று கூறுகின்றபொழுது குழந்தைகளும் இதில் அடங்கும் என ய+கிக்கின்றனர். ஆனால் இதை வலியுறுத்திக்கூற இப்பகுதியில் ஆதாரம் இல்லை. புரிந்துகொள்கின்ற வயதில் உள்ளவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியை விசுவாசித்தவர்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்.16:33-34).

விசுவாசிகளுடைய ஞானஸ்நானத்தின் சிறப்பு என்ன ?

தண்ணீர் சுத்திகரிப்போடு தொடர்புடையது, ஆனால் விசுவாசிகள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகிறார்கள். ஞானஸ்நானம் மரித்தல், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் சாயலாக இருக்கிறது (ரோ.6:3-5). கிறிஸ்து நம்முடைய பாவத்திற்காக மரித்தார், நம்முடைய நீதிக்காக உயிர்த்தெழுந்தார். தேவன் நம்முடைய இரட்சிப்பில், மரித்தல், அடக்கம்பண்ணப்படல், உயிர்த்தெழல் ஆகியவற்றை நமக்குப் பதிலாக கிறிஸ்துவில் அவைகளை ஏற்றுள்ளார். தேவனுடைய கண்களுக்கு முன்பாக நாம் கிறிஸ்துவோடே மரித்து, அவரோடுகூட உயிர்த்தெழுந்திருக்கிறோம் (கொலோ.3:1-3 ; ரோ.6:6-11). விசுவாசி களைப் பொறுத்தவரையில், ஞானஸ்நானம் ஏற்கெனவே நடந்துமுடிந்த நிகழ்ச்சியின் ஒரு சித்திரம் அல்லது தெளிவான விளக்கம். தண்ணீரினாலே பெறுகின்ற ஞானஸ்நானத்தின்மூலம் விசுவாசி மரணத்தையும், அடக்கத்தையும், உயிர்த்தெழுதலையும் அடையாளமாக கடந்து வருகிறான். இவ்வாறான ஞானஸ்நானத்தின்மூலம் ஒரு விசுவாசி கிறிஸ்துவின் மரணத்தோடும், அடக்கத்தோடும், உயிர்த்தெழுதலோடும் தன்னை இணைத்துக்கொள்கிறான். அதன்மூலம் அவன் கிறிஸ்துவோடு கூட இருப்பதாக அறிக்கைபண்ணுகிறான். ஞானஸ்நானம் தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது (1.பேது.3:21). விசுவாசி வெளிப்படையாக இவ்வாறு கூறுகிறான்: என்றுடைய இரட்சிப்பிற்கு தேவையான அனைத்தையும் கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் செய்துமுடித்தார். நான் இதை இருதயத்தில் விசுவாசிக்கிறேன். அதை அவர் கட்டளையிட்டபடி ஞானஸ்நானத்தின்மூலம் வெளிக்காட்டுகிறேன். நான் அவரோடு என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன். இப்படிக் கிறிஸ்துவோடுகூட தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர்கள் ஞானஸ்நானப்பட்ட வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறார்கள். அதாவது அவரோடுகூட நாம் நடக்கவேண்டும்.

வேதவாக்கியங்களில் சொல்லப்படாத வார்த்தைகளைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் இவை மனிதனால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அவைகள் சாக்கிரமந்து சடங்கு, மரபுமுறைகள், ஏற்றுக்கொள்ளுதல், கிருபையின் முத்தரிப்பு, சுத்திகரிப்பின் அடையாளம், வாக்குறுதி.

ஞானஸ்நானம் இரட்சிக்குமா ?

அநேக சபைகள் தண்ணீரினாலே எடுக்கப்படுகின்ற ஞானஸ்நானம் புதிய பிறப்பிற்கு காரணமாயிருக்கிறது என்றும், பாவத்தைப் போக்குகின்றது என்றும் நம்புகின்றனர். இந்த வேதபகுதிகளை அவர்கள் இதற்கு ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.

1) யோவான் 3:5 
ஐலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல் என்கிற வார்த்தை புதிய பிறப்பு அல்லது மறுபடி பிறத்தல், தண்ணீரில் எடுக்கின்ற ஞானஸ்நானத்தால் நிகழக்கூடிய ஒன்று என்று நினைக்கக்கூடுகிறது. இங்கு ஞானஸ்நானம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். தண்ணீர் எப்பொழுதும் ஞானஸ்நானத்தைக் குறிப்பதாக அர்த்தம்கொள்ளக்கூடாது. யோவான் 7:38-39ல் தண்ணீர் பரிசுத்தஆவியைக் குறிப்பதாக உள்ளது. யோhவன் 3:6,8 ஆவியினால் பிறப்பதைக் குறித்துச் சொல்கிறது. வேறுசிலர் கூறுகின்றார்கள் தண்ணீர் தேவனுடைய வார்த்தையைக் குறிப்பதாக, யோவான் 15:3 வார்த்தையினாலே சுத்தமாகுதலைப் பற்றிச் சொல்கிறது. எபேசியர் 5:26 தண்ணீராகிய வசனத்தையும், 1.பேதுரு 1:23 வசனத்தால் மறுபடி பிறத்தல் பற்றியும் கூறுகிறது. கர்த்தர் ஜீவதண்ணீரைக் குறித்துப் பேசும்போது தண்ணீரைப் பற்றிக் கூறுகிறார் (யோ.4:14). யோவான் மூன்றாம் அதிகாரத்தில் மறுபடி பிறத்தல் அல்லது புதிய பிறப்பிற்கு காற்று, வெண்கல சர்ப்பமும் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. இரண்டுமே தண்ணீரினால் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானத்தைக் குறிக்கவில்லை. காற்று வீசுகிறதைப் பார்க்கமுடியாது, நிதானித்து அறியமுடிகிறது. இங்கு இப் பகுதிக்கும் ஞானஸ்நானத்திற்கும் சம்பந்தம் இல்லை.

2) தீத்து 3:5
இந்த வசனம் மறுஜென்மமுழுக்கு பற்றிக் கூறுகிறது. இங்கு ஞானஸ்நானம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இதன் பின் பகுதியில் பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் பற்றி சொல்லப்படிட்டிருக்கிறது. மேலும் முழுகல் என்கிற வார்த்தை பாப்டிஸ்மாஸ் (டியிவளைஅரள) என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல, லௌட்ரான் (டழரவசழn) என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. இது குளிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தை.

3) 1.பேது.3:21
ஞானஸ்நானம் நம்மையும் இரட்சிக்கிறது என்ற பகுதி ஞானஸ்நானத்தால் இரட்சிப்பு என்ற கூற்றை உறுதிப்படுத்துவதாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் இதன் முந்தின பகுதியைப் படிக்கின்ற பொழுது ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குவதாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது என்கிற பகுதி ஞானஸ்நானத்தால் இரட்சிப்பு உண்டாகிறது என்ற கருத்தைப் பலவீனப்படுத்துகிறது. இங்கு நோவாவின் காலத்தில் தேவன் ஐலத்தின் மூலமாக ப+மியை அழித்தார். ஆனால் நோவாவின் குடும்பத்தாரை ஐலத்தின் மூலமாக பேழையை மிதக்கச் செய்து காப்பாற்றினார் (1.பேது.3:20 ம் வசனம்). இங்கு கிறிஸ்து பாதுகாப்பின் பேழையாக இருக்கிறார். நம்முடைய இடத்தில் கிறிஸ்து மரணஐலத்தை அனுபவித்தார். நாமும் அவரின் மரணத்திலே கடந்து சென்றோம். இவ்வாறு நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை கிறிஸ்து பாதுகாக்கிறதற்கும், இரட்சிக்கிறதற்கும் இது சாயலாக இருக்கிறது. நாம் ஞானஸ்நானத்தால் பாதுகாக்கப்படாமல், கிறிஸ்துவில் பாதுகாப்பாக உள்ளோம்.

4) மாற்கு 16:16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்கிற பகுதி ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறதாகத் தெரிகிறது. ஆனால் இந்த வசனத்தின் பகுதியை நாம் பார்க்கின்றபொழுது விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்றே கூறுகிறது. ஞானஸ்நானம் பெறாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்று கூறவில்லை.

5) அப்போஸ்தலர் 22:16
இந்த வசனம் கூறுகிறது ஞானஸ்நானம் பெற்று உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். இவ் வசனத்தை நாம் பார்க்கினற பொழுது, ஞானஸ்நானம் பாவத்தைப் போக்குகிறது போல காணப்படுகிறது. இது சரியென்றால் கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே சகல பாவங்களையும் நீக்கும் என்கிற சத்தியம் இக் கூற்றை மறுக்கிறது (1.யோ.1:7 ; எபி.9:22). இவ் வசனம் பவுல் மனம் மாறியதைப் பற்றிக் கூறுகின்றபொழுது உள்ள வசனமாகும். அனனியா பவுலிடம் ஞானஸ்நானம் எடுக்கும்படி கூறினார். மேலும் கர்த்தரின் நாமத்தைத் தொழுதுகொள்ளவும் வேண்டினான் (ரோ.10:13). ஞானஸ்நான தண்ணீர் பாவத்தைக் கழுவாது (வெளி 1:6).

பின்வருகின்ற எடுத்துக்காட்டுக்கைள பார்க்கின்ற பொழுது தண்ணீர் அல்லது ஐலம் நம்முடைய இரட்சகர் அல்ல என்பதை
• சிலுவையில் அறையப்பட்டிருக்கிற திருடன் தண்ணீர் இல்லாமல் இரட்சிக்கப்பட்டான் (லூக்.23:43). பவுல் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினவர்கள் அனைவருக்கும் ஞானஸ்நானம் அவன் கொடுக்கவில்லை. ஒருவேளை ஞானஸ்நானமானது மறுபடி பிறத்தலுக்கு காரணமாக இருக்குமானால் இது மன்னிக்கமுடியாத ஒரு பெரும் குறை (1.கொரி.1:14-17).
• இயேசு இரட்சகராக இருந்தபொழுதும் கூட அவர் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை (யோ.4:3).
• புறஐhதிகள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்னாலே இரட்சிப்பையும், பரிசுத்தஆவியையும் பெற்றார்கள் (அப்.10:44-48).

எப்படி ஒருவரை ஞானஸ்நானப்படுத்துவது ?

1) ஞானஸ்நானம் கொடுக்கும் விதம்
முதல் கிறிஸ்தவர்கள் அல்லது ஆதிக்கிறிஸ்தவர்கள் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர். இரண்டாம் நூற்றாண்டில்தான் தெளித்தல் முறை தோன்றியது, ஏறக்குறைய பதின்மூன்றாம் நூற்றாண்டில் இம்முறை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒன்றாக மாறியது. வேதவாக்கியங்களின்படி பார்த்தால், முழுக்கு ஞானஸ்நானந்தான் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக யோவான்ஸ்நானகன் கொடுத்த ஞானஸ்நானம் (யோ.3:23 ; மத்.3:16), பிலிப்பு கொடுத்த ஞானஸ்நானம் (அப்.8:38-39), இவைகளுக்குச் சான்று. ஞானஸ்நானத்தின் அடையாளம் கூட மூழ்கி எடுத்தலையே உணர்த்துகிறது. கிறிஸ்துவோடுகூட அடக்கம்பண்ணப்படல் (கொலோ.2:12 ; ரோ.6:4) என்கிற சொல் தலையிலே சில துளி தண்ணீரை தெளிப்பதைவிட, முழுவதுமாக தண்ணீருக்குள் செல்வதைக் குறிக்கிறது. தெளித்தல், அடக்கம்பண்ணலைக் குறிப்பது மிகவும் கடினமாகும். ஞானஸ்நானம் என்கிற சொல்லின் அர்த்தம் மூழ்குதலைக் குறிக்கிறது. ஆவியானவர் தெளித்தலைப் பற்றிக் கூறியிருக்கவேண்டுமென்றால் ரென்டிசோ (சாயவெணைழ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆதிச்சபை பின்பற்றி முறை ஞானஸ்நானத்தின் அடையாளம், அதன் விளக்கம் ஆகியவை முழுகலையே குறிக்கிறது.

2) சூத்திரம்
சூத்திரம் அல்லது ஞானஸ்நானம் கொடுக்கும்போது சொல்லவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால், பிதா குமாரன் பரிசுத்தஆவியின் நாமத்தினாலே என்பதாகும் (மத்.28:19). இயேசுவின் நாமத்தினாலோ கர்த்தரின் நாமத்தினாலோ என்கிற வார்த்தைகளும் அப்போஸ்தலர் 2:38 ; 8:15 ; 10:48 ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக யோவானின் ஞானஸ்நானத்திலிருந்து வித்தியாசப்படுத்த கூறப்பட்டதாகக் காணப்படுகிறது (அப்.19:2-5).

3) ஞானஸ்நானம் கொடுப்பவர்
ஞானஸ்நானம் கொடுப்பவர் விசுவாசியாக இருக்கவேண்டும். கர்த்தரையும், சபையையும் பிரிதிநிதிப்படுத்துபவராக இருக்கவேண்டும். தகுதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் சாதாரணமக்கள் மதகுருமார் என்ற பாகுபாடு கிடையவே கிடையர்து.

ஏன் ஞானஸ்நானம் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது ?

நாம் நமக்குள்ளே ஒருவேளை இக் கேள்விகளைக் கேட்கலாம். ஞானஸ்நானம் நம்முடைய பாவங்களைக் கழுவாவிட்டால், அல்லது சபையில் சேர்க்காவிட்டால், அல்லது இரட்சிப்பைத் தராவிட்டால் ஏன் இது இவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது? இவைகளுக்கான விடைகளைப் பின்வரும் பகுதிகளிலிருந்து பார்ப்போம்.

1) கிறிஸ்து கொடுத்த பெரிய கட்டளையிலிருந்து ஞானஸ்நானத்தைப் பிரிக்கமுடியாது.கர்த்தருடைய பெரிய கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றபொழுது, நாம் கர்த்தருக்குள் ஞானஸ்நானத்திற்குக் கீழ்ப்படிகிறோம். இந்த ஞானஸ்நானத்தைக் குறித்து சீஷர்கள் போதித்தார்கள், செயற்படுத்தினார்கள். கிறிஸ்து கட்டளையிட்ட யாவைக்கும் நாம் கீழ்ப்படிந்து அவற்றை உபதேசிக்கவேண்டும் (மத்.28:19-20).

2) ஞானஸ்நானம் இந்த உலகத்திற்கு ஒரு சாட்சி
ஞானஸ்நானம் நம்முடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஒரு சக்தி வாய்ந்த சாட்சியாகும்.

3) ஞானஸ்நானம் பிறவிசுவாசிகளுக்கு ஒரு சாட்சி
ஞானஸ்நானம் கிறிஸ்துவோடும், அவர் செய்கையோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக வெளிப்படையான ஒரு விளக்கமாக இருக்கிறது. மேலும் இது பிற விசுவாசிகளோடும் தான் யார் என்று சாட்சிபகர்கிறது. சில நாடுகளில் விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தின் காரணமாக துன்புறுத்தப்படுகிறார்கள். ஞானஸ்நானத்தின்

மூலம் வெளிப்படையாக அறிக்கை பண்ணாத கிறிஸ்தவர்களைக் குறித்து விசுவாசிகள் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள்.

முடிவுரை

நாம் ஞானஸ்நானம் பெறவேண்டு என கிறிஸ்துவால் கட்டளையிடப்பட்டுள்ளோம். கிறிஸ்துவத்தின் முதல் நாளிலேயே விசுவாசிகள் ஞானஸ்நானத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். நாம் நற்கிரியை செய்வதற்காகவும், நல்வாழ்க்கை வாழவும், கிறிஸ்துவை அப்பம்பிட்குதல் மூலம் நினைவுகூருவதற்கும், நாம் கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தைச் சாட்சியாக அறிவிக்கிறதற்கும், சக விசுவாசிகளோடு தங்களைச் சேர்த்துக்கொள்ளவும் ஞானஸ்நானம் பெறவேண்டும் எனக் கட்டளை பெற்றிருக்கிறோம். ஞானஸ்நானம் கீழ்ப்படிதலுக்கு தேவையாயிருக்கிறது. நம்முடைய விசவாச வாழ்க்கையை மேலும் வெளிக்காட்ட ஞானஸ்நானப்பட்ட வாழ்க்கை நடத்த வேண்டும்.

பாடம் 4 ற் கான கேள்விகள் 

1) கிறிஸ்து ஞானஸ்நானத்தில் என்ன மதிப்பு வைத்திருந்தார் (மத்.28:19-20)?

யோவான் 14:21 மேலே தரப்பட்டுள்ள பகுதிக்கு எப்படித் தொடர்புடையது?

(அப்போஸ்தலர் 2:41 ; 8:12,36-39 ; 10:47-48 ; 16:14-15,30-33 ; 18:18 ஆகிய வசனங்களைப் படித்து, கேள்விகள் 2-4 வரை பதிலளிக்கவும்).

2) புதிய ஏற்பாட்டுக்காலத்தில் புதிய விசுவாசியின் சாதாரண பொறுப்பு என்ன?

3) விசுவாசிகளின் ஞானஸ்நானத்திற்கு முன்னால் என்னென்ன செய்யவேண்டும்?

4) புதிய ஏற்பாட்டுக்காலத்தில் மனந்திரும்பி எவ்வளவு சீக்கிரத்தில் ஞானஸ்நானம் எடுத்தார்கள்?

இப்பொழுது ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க காலம் தாழ்த்துவதற்குக் காரணம் என்ன?

5) எண்ணிறைந்த விவாதங்கள் ஞானஸ்நானம் எடுக்கும் விதம் பற்றிக் கூறப்படுகிறது (முழுக்கு, தெளித்தல்) அப்போஸ்தலர் 8:36-39ன் படி எவ்விதமான முறையில் பதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது?

6) 1.கொரிந்தியர் 15:3-4 ன் படி சுவிசேஷத்தின் அடிப்படைச் செய்தி என்ன?

1.கொரிந்தியர் 15:3-4ஐ ரோமர் 6:3-6 ; கொலோசெயர் 2.12 ஆகிய வசனங்களுடன் ஒப்பிட்டு எப்படி ஞானஸ்நானம் சுவிசேஷத்தின் அடிப்படைச் செய்தியை விளக்குகிறது?

7) சொந்த வார்த்தைகளில் கலாத்தியர் 2:20ஐ எழுதுக. இந்த வசனம் ஸ்நானப்பட்ட ஜீவியத்தை குறித்து என்ன சொல்கிறது?

8 ) கேள்விகள் 3, 6 ன் படி குழந்தை மற்றும் அவிசுவாசிகள் ஞானஸ்நானத்திற்கு மதிப்பு உண்டா?

ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு ஒத்தவாக்கிய அகராதியில் (ஊழnஉழசனயnஉந) கொடுக்கப்பட்டுள் அர்த்தத்தைப் பார்க்கவும். ஞானஸ்நானம் எப்பொழுதாவது குழந்தைகளோடு கூறப்பட்டுள்ளதா?

ஒருவர் குழந்தையாகவோ அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்போ ஞானஸ்நானம் எடுத்தால், அவர் விசுவாசியான பின் ஞானஸ்நானம் பெறவேண்டுமா? விளக்கவும்!

9) சில குழுக்கள் விசுவாசிகளின் ஞானஸ்நானம் இரட்சிப்புக்குத் தேவை என்று மாற்கு 16:16ன் அடிப்படையில் கூறப்படுகின்றன. நீங்கள் எப்படி அப்போஸ்தலர் 10:44,47-48 ஆகிய வசனங்களின் அடிப்படையில் மறுத்துப் பதிலளிப்பீர்கள் (ரோ.8:9)?

எது பாவங்களை மட்டும் போக்கும் (எபி.9:14,22 ; 1.யோ.1:7 ; வெளி 1:6)?

10) பின்வருகின்றவைகளைப் படித்து விடையளிக்கவும்!
• இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக்கொண்டதும் நான் ஞானஸ்நானம் பெற்றேன்.
• நான் கிறிஸ்தவன் ஆன பின்பு ஞானஸ்நானம் பெறவில்லை. ஞானஸ்நானத்தைப் பற்றி ஒரு வளர்ந்த சகோதரனிடம் பேச விரும்புகிறேன்.
• எனக்கு இன்னும் விசுவாசிகளின் ஞானஸ்நானத்தைக் குறித்து சில கேள்விகள் இருக்கிறது. மேலும் விபரங்கள் தேவைப்படுகிறது.
• இதைக் குறித்துப் பிற கருத்துக்கள்:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.