அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
பாடம் 2: கிறிஸ்துவைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்
அவர் மனிதர்களோடு சஞ்சரித்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை உலகில் வாழ்ந்த மனிதர்களுடைய வாழ்க்கையைவிட உயர்ந்ததாக இருந்தது. எக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பழுதற்றதும், குறையற்றதுமான அவருடைய வாழ்வு அவருடைய எதிரிகளும் புகழ்ந்த கூறுவதாக இருக்கிறது. அவருடைய வாழ்வு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய தனிச் சிறப்பு மிக்கது. குறைபாடுள்ள மனிதன் அவரைக் கண்டுபிடிக்க முடியாது. நாத்தீகன் எவனும் அவரைக் குறித்து விளக்கம் தரமுடியாது. அவர் இந்த உலகில் வாழ்ந்தபொழுது எந்த நூலையும் எழுதவில்லை. அனால் வரலாற்றிலேயோ எந்த மனிதனைவிடவும் அதிகமாக இவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. எந்த மனிதனையும்விடவும் உலகவரலாற்றிலேயே இவருடைய தாக்கம் மிகப் பெரியதாக இருக்கிறது. உலக அரசியலில் இவர் எந்தப் பங்கும் வகிக்கவில்லை. பெரிய இராணுவத்தின் தளபதியாகவும் இருந்ததில்லை. ஆனால் எலக வரலாற்றை கி.மு. என்றும் கி.பி. என்றும் (கிறிஸ்துவுக்குப் முன், கிறிஸ்துவுக்குப் பின்) என்றும் இரண்டாகப் பிரிப்பதற்குக் காரணமானார். உலக வரலாற்றிலே ஒரு மிகப் பெரிய பிரச்சனைக்குரியவராகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டவராகவும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டவராகவும், கொடுரமான முறையில் கொலைசெய்யப்பட்டவராகவும் இருக்கிறர்ர். இவ்வாறு கஷ்டங்கள் அனுபவித்தபோதிலும் அகிம்சையைக் குறித்தும் பழிக்குப் பழி செய்வதற்கு எதிராகவும் ஆயுதம் எடுத்தலுக்கு எதிராகவும் போதித்து, அவர் கூறினார். என்னுடைய இராஜ்ஜியம் இவ்வுலகத்திற்குரியதல்ல. அவரின் நற்சாட்சி அவருடைய ஒழுக்கத்திலான உயர்ந்த வாழ்வாகும். அவருடைய வாழ்நாட்கள் நித்தியமாக இருக்கிறது. அவர் இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாய் இருக்கிறார். அவருடைய வாழ்வுக்கு முடிவே இல்லை.
1) அவருடைய நாமங்கள்
அவர் இயேசு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். ஏனென்றால் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்.1:21). இயேசு என்றதன் பொருள் கர்த்தர் (யேகோவா) இரட்சிக்கிறார், அவர் இரட்சிக்கிறார், அவர் இரட்சகர் (தீத்து 2:13 ; ஏசா.43:11). இந்த இரட்சகர் கர்த்தராகிய கிறிஸ்து (லூக்.2:11). கிறிஸ்துவாக அல்லது மேசியாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவராக இருக்கிற வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மீட்பர் (யோ.4:25-26). அவர் தன்னை மனுஷகுமாரன் என்று அழைக்கிறார் (லூக்.19:10). இது அவர் மனிதத்தன்மையைக் குறிக்கிறது. அவர் தேவனுடைய குமாரன். இது அவருடைய தெய்வீகத்திற்குப் பிரகடனம். இதை அவருடைய பகைவர்கள் புரிந்திருந்தார்கள் (யோ.10:33,36). அவர் தேவனுடைய வார்த்தை (யோ.1:1,14). தேவஆட்டுக்குட்டி (யோ.1:29). அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார் (வெளி22:13). இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் என மேன்மையாக அழைக்கப்படுகிறார் (வெளி19:16).
2) அவரின் கடந்தகால நித்தியம்
அவர் படைக்கப்படவில்லை. ஆனால் அவரால் எல்லாம் படைக்கப்பட்டது (யோ.1:3,10; கொலோ.1:16-17 ; 1.கொரி.8:6 ; எபி.1:2,10). நித்தியமாகவே அவர் தேவனோடு இருந்தார், தேவனாக இருந்தார் (யோ.1:1-2). பேறானவர் என்ற சொல் பிறந்தவர் என்பதைக் குறிப்பதில்லை. ஒரேபேறானவர் (யோ.1:14,18 ; 3:16,18) என்பது அவரின் இணையற்ற ஒப்பற்ற நிலையைக் குறிக்கிறது. ஈசாக்கைப் பற்றிக் கூறுவதுபோல கூறப்பட்டுள்ளது (எபி.11:17). ஈசாக்கு மட்டுமே ஆபிரகாமின் பிள்ளையல்ல. முதற்பேறுமானவர் என்கின்ற சொல் முன்னுரிமையைக் காட்டுகிறது. கொலோசேயர் 1:18 லும் வெளிப்படுத்தின விசேஷம் 1:5 லும் இது சொல்லப்பட்டுள்ளது. கர்த்தர் பூர்வகாலத்திலேயே அநாதியாய் இருக்கிறார் (மீகா.5:2 ; ஏசா.9:6 ; நீதி.8:22-23). நான்
இருக்கிறேன் என்ற சொல் இவர் எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது (யோ.8:58 ; யாத்.3:14). இவர் உலகம் உண்டாவதற்கு முன்னே பிதாவினுடைய மகிமையில் பங்குள்ளவராயிருந்தார் (யோ.17:5).
3) பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் தோற்றங்கள்
முதன் முறையாகப் புதிய ஏற்பாட்டில்தான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது சரியல்ல. அவரைப் பற்றி மோசேயின் ஆகமங்களிலும், தீர்க்கதரிசனப் புத்தகங்களிலும் கூறப்பட்டுள்ளதை தன்னுடைய சீஷர்களுக்கு அவரே விளக்கிக் கூறினார் (லூக்.24:27,44). கிறிஸ்துவே வேதவாக்கியத்தின் நோக்கமும் நிறை வேறுதலுமாய் இருக்கிறார். அவரைக் குறித்து நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளது. அவைகளில் அவர் பிறந்த இடம் (மீகா 5:2). பிறப்பின் தன்மை (ஏசா.7:14). இறப்பின் தன்மை (ஏசா.53ல்) கூறப்பட்டுள்ளது. எப்பொழுதும் ஊழியம் செய்கின்ற ஆசாரியன் (1.சாமு.2:35). தாவீதைவிட மிகப் பெரிய இராஜா. அவரின் சிங்காசனம் என்றென்றும் நிலைத்துநிற்கும் (2.சாமு.7:12-13). பலிகளிகளிலும் பண்டிகைகளிலும் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் நிறைவேற்றுவார். பஸ்கா ஆட்டுக்குட்டி அவரைக் குறிக்கிறது (1.கொரி.5:7). பழைய ஏற்பாட்டிலே நாம் காணும்படியாக தேவனுடைய தோற்றம் காணப்படுகிறது. பொதுவாக கர்த்தருடைய தூதராகக் காட்சியளிக்கிறார். இப்படிப் பழைய ஏற்பாட்டில் காணப்படும் கிறிஸ்துவின் தோற்றத்தை தீயோபோனிஸ் என்று அழைக்கப்படுகிறது. கர்த்தருடைய தூதனுடைய செயல்களும், கிரியைகளும் தேவனுடைய செயலாகவும் கிரியையாகவும் தெளிவாகத் தெரிகிறது. ஏதோ படைக்கப்பட்ட உயிரின் செயலாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக (ஆதி.22:11-18 ; 32:24-30 ; ஓசி.12:4-5 ; யாத்.3:2-6; மாற்.12:26 ; யோசு.5:13-16 ; நியா.6:11-14 ; 13:18-22) இவற்றில் நாம் கிறிஸ்துவை மாதிரியாகக் காணமுடியும். பழைய ஏற்பாட்டில் காணப்படும் மாதிரிகளின் விளக்கம் புதிய ஏற்பாட்டில் ஆவிக்குரிய சத்தியங்களையும் மேசியாவைப் பற்றியும் விளக்குகிறது. எண்ணாகமம் 21:6-9 ல் கூறப்பட்டுள்ள வெண்கலசர்ப்பம் புதிய ஏற்பாட்டில் சிலுவையில் தொங்கிய கிறிஸ்துவைப் படமாகக் காட்டுகிறது (யோ.3:14-16 ; யாத்.17:6 ; எண்.20:8-12 ) அடிக்கப்பட்ட கன்மலை, சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரைக் காட்டுகிறது (1.கொரி.10:4). மெல்கிசேதேக் இயேசு கிறிஸ்து மகா பிரதான ஆசாரியர் என்பதற்கு மாதிரியாக இருக்கிறார் (ஆதி.14:18-20 ; எபி.5-7ம் அதிகாரங்கள்).
4) கிறிஸ்து மனிதனாக வருதல்
வார்த்தை மாமிசமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார் (யோ.1:14). கிறிஸ்து மாமிசத்திலே வெளிப்பட்டார் (1.தீமோ.3:16). இதுவே இங்கு அவதாரம் என்று கூறப்படுகிறது. ஒரே தேவன் மனிதனாக வந்தபொழுது தெய்வீகத்தன்மையும், மானிடத்தன்மையும் வியக்கத்தக்க வண்ணம் ஒரே நபரில் சேர்ந்து காணப்பட்டது. அவரில் மானிடத்தன்மை பரிபூரணமாக இருந்தது. என்றாலும் பாவமில்லாதவராக இருந்தார் (எபி.4:15 ; பிலி.2:6-11 ; ரோ.1:4-5 ; 9:5 ; எபி.2:14) ஆகியவை கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் மானிடத்தன்மையின் ஐக்கியத்தைக் கூறுகிறது.
சுவிசேஷங்களில் இவற்றைப்பற்றி உறுதிப்படவும் வரிசைக்கிரமமாகவும் சொல்லப்படவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு சுவிசேஷமும் வேறுபட்ட கோணங்களில் கிறிஸ்துவைப் பார்க்கிறது. மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேலின் இராஜா என்கின்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது. மாற்கு சுவிசேஷத்தில் பரிபூரணமான ஊழியக்காரராகவும், லூக்காவில் மனுஷகுமாரனாகவும், யோவானில் தேவனுடைய குமாரனாகவும் கிறிஸ்து அளவிடப்படுகிறார். தேவனுடைய ஆவியினால் கிறிஸ்து அற்புதமாக கன்னி மரியாளின் வயிற்றில் உற்பத்தியானார் (ஏசா.7:14 ; மத்.1:21 ; லூக்.1:34-35) குழந்தை நல்ல முறையில் வளர்ந்தது (லூக்.2:52). நமக்கு அவருடைய குழந்தைப் பருவத்தைப் பற்றி ஒரேயொரு
எழுதப்பட்ட ஆதாரமே உள்ளது (லூக்.2:42-51). இஸ்ரவேலில் உள்ள பெத்லகேமில் அவர் பிறந்து, சிறிது காலம் குழந்தையாக இருந்தபொழுது எகிப்திலே தங்கியது தவிர அவருடைய முப்பது வயது வரையிலும் இஸ்ரவேல் தேசத்திலுள்ள நாசரேத் என்னும் ஊரில் தங்கியிருந்தார்.
5) கிறிஸ்து தன்னை வெளிப்படுத்துதல்
மேசியா இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்னே அவர் வருகையை முன்னறிவிக்கவேண்டும். வழியைச் செவ்வைபண்ணப்படவேண்டும் (ஏசா.40:1-5). யோவான்ஸ்நானகன் அந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார் (மத்.3:10-12 ; மாற்1:1-11 ; லூக்.3:2-18 ; யோ.1:19-36). யோவான்ஸ்நானகனின் ஊழியம் இரட்சிக்கப்படும்படியாக மனந்திரும்புதலுக்கு அழைப்புவிடுகின்ற ஊழியமாயிருந்தது. மனந்திரும்புதல் இல்லாமல் இரட்சிப்பு இல்லை (லூக்.13:3). யோவான்ஸ்நானகன் கிறிஸ்துவே பிறருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டுமென்று கூறுகின்றார் (மத்.3:14-16) ஆனாலும் இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானகன் மூலம் ஞானஸ்நானம் பெற்று தன்னுடைய வெளிப்படையான ஊழியத்தை ஆரம்பித்தார். கிறிஸ்து ஏன் இவ்வாறு செய்தார் என்றால் எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்காக. அவர் ஒருவருக்கு மட்டுமே மனந்திரும்புதல் தேவையில்லை. அவருடைய ஞானஸ்நானத்தின்போது தேவஆவியானவர் ஊழியத்திற்கு அவரை அபிஷேகம்பண்ணினார். பிதா அவரை மகிமைப்படுத்தினார். இத்துடன் மறைவாக கிறிஸ்து ஜீவித்தகாலம் முடிந்தது. அவர் பன்னிரண்டு சீஷர்களைத் தேர்வுசெய்து தன்னுடைய ஊழியத்தைத் தொடக்கினார். ஏறக்குறைய மூன்றாண்டு காலம் ஊழியம்செய்தார்.
6) கிறிஸ்து சோதிக்கப்படுதலும், மறுரூபமடைதலும்
கர்த்தராகிய இயேசு இஸ்ரவேல் தேசத்தைவிட்டு வெளியே செல்லாமல், கலிலேயா யூதேயா, யோர்தானின் மறுபக்கம் போன்ற இடங்களில் ஊழியம் செய்தார். இக் கால கட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகள் கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடந்தாலும் அவருடைய மகிமைக்கு ஆதாரமாக இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவேண்டும். முதலாவதாக வனாந்தரத்திலே நாற்பதுநாள் உபவாசம் இருந்தபோது பிசாசானவனின் சோதனைக்கு உட்படவேண்டியிருந்தது (மத்.4:1-11 ; லூக்.4:1-13). இந்தச் சோதனை யில் பசியைப் போக்குவதற்காக வேண்டுகோளும், ஆவிக்குரிய மேன்மையை உண்டுபண்ணுவதற்கும் அகந்தையான செயல்களைச் செய்வதற்கும் பிசாசானவன் கிறிஸ்துவைத் தூண்டினான். வெற்றிகரமாக பிசாசை அவர் எதிர்த்ததே அவருடைய பாவமற்ற தன்மையைக் காட்டுகிறது. இரண்டாவது கிறிஸ்துவின் கண்கவரும் தெய்வீக மகிமையை அவருடைய மூன்று சீஷர்கள் மறுரூபமலையில் காண்பதாகும் (மத்.17:1-8; மாற்.9:2-9 ; லூக்.9:28-36). அங்கு தேவனுடைய மகிமை மிகப் பிரகாசமான ஒளியாகப் பிரகாசித்தது. பிதா தம்முடைய நேசகுமாரனாகிய கிறிஸ்துவில் பிரயமாயிருக்கிறேன் என்று சத்தமாகக் கூறினார். சோதனையும் மறுரூபமடைந்ததும் கிறிஸ்துவின் முழுமையான தனித்தன்மையைக் காட்டுகிறது.
7) கிறிஸ்துவின் அற்புதங்களும், அவரின் போதனையும்
மோசே, எலியா, எலிசா போன்று கர்த்தராகிய இயேசு வல்லமையான கிரியைகளைத் தன் ஊழியக்காலத்தில் முந்தைய காலத்தில் செய்தார். இச் செயல்கள் அவரை நம்புவதற்கு ஆதாரமாக இருக்கிறது என்று கூறினார் (யோ.14:11). கிறிஸ்துவின் அற்புதங்கள் மனிதனுக்குத் தெரிந்த இயற்கையான விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகக் காணப்பட்டது. நிக்கொதேமு இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை விசுவாசித்து அவரைத் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதை அறிந்துகொண்டான் (யோ.3:2). வேறுவிதமான அற்புதங்களைச் செய்தார். குருடர்களையும், முடவர்களையும், குஷ்டரோகிகளையும் குணமாக்கினார். அவர் செய்த அற்புதங்கள் உடனடியாக நிகழ்வதாகவும் நோய்கள் உடனே சொஸ்தமானதாகவும் காணப்பட்டது. இயற்கையின்மீது தன்னுடைய வல்லமையை விளங்கப்பண்ணினார். (தண்ணிர்மேல் நடந்தார். புயலை அமரச்செய்தார்) அவர் உணவுப் பொருட்களை உண்டுபண்ணினார்.
(ஐயாயிரம் பேரைப் போஷித்தார், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்), அசுத்த ஆவிகள் வெளியேறக் கட்டளையிட்டார், மரித்தவர்களை உயிரோடு எழும்பினார் (லூசரு, நாயீனூர் விதவை மகன், யாவீருவின் மகள்) அவருடைய அற்புதங்கள் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தியது. தேவாவக்கியங்களை நிறைவேற்றியது. மேலும் இவைகள் துன்பத்தைக் கண்டு இரங்குகின்ற அவரின் மனதைக் காட்டியது. ஒருபோதும் மக்களைக் கூட்டி வருவதற்காகவோ அல்லது அவர்களுடைய ஆவலைத் தூண்டுவதற்காகவோ அற்புதங்களை அவர் செய்யவில்லை. பெரும்பாலும் சுகம் பெற்றவர்களைப் பார்த்து இதைக் குறித்து யாரிடமும் கூறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கிறிஸ்து உவமைகள் மூலம் ஜனங்களுக்குப் போதித்தார். உவமைகள் ஆவிக்குரிய சத்தியங்களை விளக்குகின்ற மனிதனைப் பற்றிய சிறுகதைகளையோ அல்லது இயற்கையான நிகழ்ச்சிகளையோ கொண்டு காணப்பட்டது. அவரின் மலைப்பிரசங்கத்திற்கு ஈடுஇணை கிடையாது (மத்.5-7). இது கேட்டவர்களை ஆச்சரியப்படுத்தியது (மத்.7:28-29). யோவான் சுவிசேஷத்தில் காணப்படும் அவரின் வல்லமையான பிரசங்கங்களான நானே என்பது எந்த மனிதனிடமிருந்தும் இதுவரை வந்ததில்லை. தன்னுடைய சீஷர்களிடம் தான் போதித்தவற்றை உண்மையாய்க்கடைப்பிடிக்கச்சொன்னார். மேலும் இவற்றின்மூலம் வீடுகளிலும் குடு;பங்களிலும் பிரிவினை உண்டாகும் என்று எச்சரித்தார் (லூக்.12:51-53).
8) கிறிஸ்து சந்தித்த எதிர்ப்புக்கள்
கர்த்தராகிய இயேசு நன்மையையும் நீதியையும் செய்பவராக இருந்தார். ஆனால் நன்மைகள் தீமையால் எதிர்க்கப்பட்டது. வேதம்சொல்கிறது எதிர்ப்புக்களைத் தலைமைதாங்கி நடத்துவது வீழ்ந்துபோன சாத்தான் அல்லது பிசாசு என்று (வெளி 12:9). சாத்தான் குழந்தை இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினான். அவரின் ஊழியக்காலமெல்லாம் எதிர்த்தான். இறுதியாக அவரை இல்லாமற்செய்வதற்குச் சதிசெய்தான் (லூக்.22:2-4). சாத்தான் கிறிஸ்துவை எதிர்ப்பதற்கு பல வகைகளில் பிறரைப் பயன்படுத்தினான்.
9) கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல்
நான்கு சுவிசேஷங்களிலும் கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்தும் மரணத்தைக் குறித்தும் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. தேவத்தில் வேறு எந்தப் பகுதிக்கும் இவ்வளவு அதிகமான அளவு இடம்கொடுக்கப்படவில்லை. இயேசு கிறிஸ்து மரிக்கவில்லையென்றால் பாவமன்னிப்பில்லை. இரட்சிப்பு இல்லை. வரப்போகின்ற ஜீவியத்தைக் குறித்தும் நம்பிக்கை இருக்காது. இதுவே சுவிசேஷத்தின் நோக்கமும் சுவிசேஷப் பிரகடனத்தின் மைய செய்தியுமாகும். கிறிஸ்து பலியாகியது ஏசாயா 53, சங்கீதம் 22 மற்றும் பிற வேதவாக்கியங்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதல் ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய மரணத்தைக் குறித்து சீஷர்களுக்கு முன்னதாகவே கூறியிருந்தார். ஆனால் அதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை (மத்.16:21 ; 17:9-12,22-23 ; 20:18-19). அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று உறுதியாகக் கூறியதை அவருடைய எதிரிகள் அறிந்துகொண்டார்கள். ஆகையால் ரோமப்போர்ச்சேவகர்கள் கிறிஸ்துவின் கல்லறையில் காவல் நிற்க வேண்டுமென்று வேண்டினர் (மத்.27:63-66). கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்கள் தன்னுடைய வார்த்தையை நம்பவில்லை என்று அவர்களைக் கடிந்துகொண்டார் (லூக்.24:25-27). வரப்போகிற மரணத்தையும் அதனால் உண்டாகிற இரட்சிப்பையும் கிறிஸ்துதான் சிலுவையில் அடிக்கப்படுகிறதற்கு முன்னால் நினைவுகூரும்படியாக ஒரு இராவிருந்தை ஏற்படுத்தினார் (மத்.26:26-28; மாற்.14:22-24 ; லூக்.22:19-20). யூதாசால் காட்டிக்கொடுத்ததுமுதல் காட்டிக்கொடுப்பதற்கு அவன் வாங்கிய தொகை ஆகியவை தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டு நிறைவேறியது (சகரி.11:12-13). கிறிஸ்து இயேசுவின் ஜீவியத்தின் இறுதிக்கட்டம் ஜெபமும் வியாகுலமுமாக கெத்சமனேயில் ஆரம்பித்து, எதிரிகளின் சதி பரிகாசத்துக்குரிய விசாரணை ஆகியவற்றால் முடிந்தது. ரோம ஆளுனரால் ஒரு
தவறைக்கூட அவர்மீது கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் பொதுமக்களின் வற்புறுத்துதலுக்கு இணங்கி கொல்கொதாமலைக்கு அவர் தன் சிலுவையைத் தூக்கிச் செல்லும் தண்டனையை நிறைவேற்றினார். அங்கு அவர்பட்ட பாடுகள் இறுதியாகக் கூறிய ஏழு வார்த்தைகள் ஆகியவற்றின் விளக்கங்கள் பின்பகுதியிலேயே கூறப்படுகிறது. இறுதியாக சத்தமாய்ச் சொன்ன வார்த்தை முடிந்தது (யோ.19:30). இது அவரின் இரட்சிப்பின் வேலை நிறைவேறினது என்பதைக் குறிக்கிறது. துன்மார்க்கத்தால் நிறைந்த மனிதனின் இச் சம்பவம் தேவனுடைய நித்திய நோக்கமாகிய இரட்சிப்புக்கு வழி வகுத்தது. மனிதனால் கிறிஸ்து கொலைசெய்யப்பட்டாலும் அம் மனிதன் அவரை விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான். தேவனால் அடிக்கப்பட்டு வாதிக்கப்பட்டார் என்ற வாக்கியம் இதனால் நிறைவேறியது (ஏசா.53:4). அவரின் மரணம் இரண்டு கள்ளரின் மத்தியில் இருந்தும் அவருடைய சரீரம் ஐஸ்வரியவானின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டதும். தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் (ஏசா.53:9). இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவேன் என்று கூறியதாலேயே ரோமப்போர்ச் சேவகர்கள் கல்லறையின்மீது பெரிய கல்லைவைத்து முத்திரை போட்டார்கள் (மத்.28 ; மாற்.16 ; லூக்.24 ; யோ.20). எனினும் அவைகளால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை தடைசெய்யமுடியவில்லை. சீஷர்களின் கண்களுக்குமுன்னால் பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் வரையிலும் நாற்பது நாட்கள் நூற்றுக்கணக்கான தன்னுடைய சீஷர்களுக்குக் காட்சியளித்தார் (1.கொரி.15:6 ; அப்.1:3-9). ஆணிகடாவப்பட்ட கரங்கள் தோமாவிற்குக் காட்டப்பட்டது. சந்தேகங்களை நீக்கிற்று. கிறிஸ்து உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார் (யோ.20:25-28).
10) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் அவரின் எதிர்கால இராஜ்ஜியமும்
கிறிஸ்து உயிர்ததெழுந்து பரலோகத்திற்குச் சென்றார். இவ்விரு நிகழ்சிகளோடு இணைந்துள்ள ஒரு பெரிய வாக்குத்தத்தம் நான் போனால் திரும்பவும் வருவேன் (யோ.14:3). இதைக் கர்த்தர் பலமுறை கூறியுள்ளார். சீஷர்கள் அவரிடத்தில் உம்முடைய வருகையின் அடையாளங்கள் என்ன என்று கேட்டனர் (மத்.24:3). பழைய ஏற்பாட்டில் மேசியாவின் வருகை இரண்டுகட்டங்களாகப் பிரிகப்பட்டிருக்கிறது.
(1) பாடுபடவும், புறக்கணிக்கப்படவும் வருதல்
(2) ஆட்சி செய்யவருதல்
சில இடங்களில் இவ்விரண்டு நிகழ்சிகளும் ஒன்றோடொன்று இணைந்துள்ளதுபோல் காணப்படுகிறது (ஏசா.61:1-2 ; லூக்.4:18-21). தீர்க்கதரிசிகளுக்குக் கூட இந்நிகழ்ச்சி திகைப்பை ஏற்படுத்தியது (1:பேது.1:10-12). இப்பொழுது மிகத்தெளிவாக உள்ளது. பாடுபடுவதற்கு வருகின்ற மேசியாவின் முதல் வருகை எழுத்துப+ர்வமாக தேவவாக்கியங்கள் அனைத்தையும் நிறைவேற்றியது. அதேபோல் பூலோகத்திலே சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டவருகின்ற அவரது இரண்டாவது வருகை எழுத்துபூர்வமாக அனைத்து வேதவாக்கியங்களையும் நிறைவேற்றும் (ஏசா.11:6-9 ; 65:18-25). இரண்டாம் வருகையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள்:
(1) உயிரோடிருக்கிற மற்றும் மரித்த விசுவாசிகள் வானத்திலே எடுத்துக் கொள்ளப்படுதல். கிறிஸ்துவை அவர்கள் மேகத்திலே சந்திப்பார்கள். இதுவே ஆங்கிலத்தில் றேப்சர் என்று அழைக்கப்படுகிறது (1.தெச.4:16-17).
(2) பூமியிலே மகா உபத்திரவகாலம் தொடங்கும் (வெளி7:14).
(3) உபத்திரவகாலத்தைத் தொடர்ந்து மகிமையோடும் நியாயத்தீர்ப்போடும் விசுவாசிகளோடு கிறிஸ்து வருவார். இதை வெளிப்பாடு என்கிறோம் (வெளி 19:11-16).
4) வெளிப்பாட்டைத் தொடர்ந்து பூலோகத்தில் கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டுகால ஆட்சி நடைபெறும் (வெளி 20:4-6).
தேவனுடைய இராஜ்ஜியம் கிறிஸ்துவின் இராஜ்ஜியம் இவ்விரு வார்த்தைகளும் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் விசுவாசிகள் அடிக்கடி குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள். அவருடைய இராஜ்ஜியம் எதைக் காட்டுகிறது என்றால் அவருடைய ஐனங்களின் மீதான அவருடைய ஆட்சியைக் குறிக்கிறது. இப்பொழுதுள்ள நிலையில் விசுவாசிகள் அவருடைய இராஜ்ஜியத்தில் இருக்கின்றனர் (கொலோ.1:13). கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபொழுது இராஜ்ஜியம் கிறிஸ்துவில் நிலைபெற்றிருந்தது (லூக்.17:20-21 ; 11:20 ; மத்.12:28) இந்த வார்த்தை வருங்கால நிகழ்ச்சியைக் குறிப்பதாகவும் உள்ளது. அதில் கிறிஸ்து எல்லாரும் காணும்படியாக ஆட்சிசெய்வதாகும் (அப்.1:6 ; வெளி11:15) புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும் (வெளி21:1 ; ஏசா.65:17) சமுத்திரம் ஐலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல் ப+மி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஆபகூ.2:12). முழங்கால்கள் எல்லாம் அவருக்கு முன்பு முடங்கும் (பிலி.2:10-11). இப்பொழுது கிறிஸ்து பரலோகத்தில் தொழுதுகொள்ளப்படுகிறவராக இருக்கிறார் (வெளி 5:8-14). வரும்நாட்களில் இறுதியான நியாயத்தீர்ப்பு உண்டு. நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் தேவனுடைய குமாரனுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது (யோ.5:22). வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருந்து மரித்தோரை அவர்கள் பாவத்தினிமித்தம் நியாயம்தீர்ப்பார் (வெளி22:11-15). கிறிஸ்துவின் நியாயாசனத்திலிருந்து கிறிஸ்து விசுவாசிகளை நியாயம்தீர்ப்பார் (2.கொரி.5:10 ; 1.கொரி.3:11-15).
முடிவுரை
இங்கு கூறப்பட்டுள்ள சத்தியங்களைப் பற்றி தேவனை நம்பாதவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் கூறுகிறார்கள் கிறிஸ்து வரலாற்றின்மூலமாக நிரூபிக்கப்படாதவர் என்று. ஆனால் முதல் நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்களான யூத வரலாற்று ஆசிரியர் யோசிபஸ் ரோம எழுத்தாளர்கள் டார்சி டட், குட்டோனியஸ் மற்றும் பிளினி போன்றோர் கிறிஸ்துவைப் பற்றி எழுதியுள்ளனர். புதிய ஏற்பாட்டின் மூல நகல்களும் ஆவணங்களும் பலமுறைசோதிக்கப்பட்டு அதன் உண்மைத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. யோவான் சுவிசேஷத்தின் மூலநகல் இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் நூலகத்தில் உள்ளது. உலகில் உள்ள எந்த நூல்களை விடவும் புதிய ஏற்பாடே பலமுறை சோதிக்கப்பட்டதும் விமர்சனங்களை எல்லாம் முறியடித்ததுமாகும். மேலும் வரலாற்றாலும் புதைபொருள் ஆராட்சியாலும் இப்பொழுது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஊர்ஜீதம் செய்யப்பட்டு வருகின்றது. தேவனுடைய வார்த்தையாக இது இருப்பதால் அதுவே நம்முடைய பெரிய நம்பிக்கைக்கு அடிப்படையாகும். எழுதப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள்; நிறைவேறிவருதல் உண்மை நிலையைக் காட்டுகிறது. ஜீவிக்கிற வார்த்தையாகிய கிறிஸ்து நம்மை அவரில் விசுவாசிக்க வற்புறுத்துகிறார். அவருக்குமேல் நமக்கு ஒன்றும் தேவையில்லை (யோ.6:67-68). அவரே கிறிஸ்தவ நம்பிக்கையின் இருதயமாக இருக்கின்றார்.
பாடம் 2 ற் கான கேள்விகள்
1) பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் பெயர்கள் எப்படி அவரின் நிலையையும், குணத்தையும், வேலையையும் காட்டுகிறது?
மத்.1:21
லூக்.2:11
லூக்.19:10
யோ.1:1,14
யோ.1:29
யோ.10:36
வெளி19:16
வெளி22:13
உங்களுக்குப் பிடித்தமான பெயர் என்ன? நீங்கள் விரும்பக் காரணம் என்ன?
2) கொலோசேயர் 1:16-17யை உங்கள் சொந்த வார்த்தையில் எழுதுக.
எவ்வளவு காலமாக இயேசு கிறிஸ்து வாழ்ந்து வருகிறார் (யோ.1:3,10 ; ஏசா.9:6 ; மீகா 5:2)? உங்களிடத்தில் யாராவது இயேசு கிறிஸ்து பிதாவினால் முதலில் படைக்கப்பட்டவர் என்று கூறினால், நீங்கள் என்ன கூறுவீர்கள்?
3) எபிரெயர் 1ம் அதிகாரத்தைப் படிக்கவும். அதில் பின்வரும் வசனங்கள் எவ்வாறு இயேசுவைத் தேவன் என்று காட்டுகிறது?
வசனங்கள் 2, 3, 10
வசனம் 5ஐ லூக்கா 4:8 ஒப்பிடவும்.
வசனம் 8
வசனம் 11-12
4) பின்வரும் வசனங்கள் இயேசுவின் தெய்வீக நிலையை எப்படிக் காட்டுகிறது?
மத்.28:18,20
மாற்.2:5-7
யோ.1:1 ; 17:15
யோ.5:22,27
யோ.6:64
எபி.13:8
5) கிறிஸ்து எத்தகைய பணிகளைச் செய்யவேண்டுமென்று முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது (உபா.18:18-19 ; 1சாமு.2:35 ; 2.சாமு.7:12-13)?
6) இயேசு ஒரு பரிபூரண மனிதனாக இருந்தபடியால், என்னென்ன வழிகளில் உங்களைப்போல் இருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
மத்.4:2
மாற்.4:38
லூக்.2:52
யோ.4:6
7) இயேசு கிறிஸ்து எவ்வாறு பிற மனிதரிலிருந்து வேறுபடுகிறார்?
மத்.1:23
லூக்.7:22
யோ.7:46
யோ.8:46
8 ) கிறிஸ்து உலகத்திற்கு வந்ததின் நோக்கம் என்ன? அவ்வாறு வந்தபடியால் வேதவாக்கியங்களை எப்படி நிறைவேற்றினார் (மாற்.10:45ன் பின்பகுதி ; ஏசா.53)?
எப்பொழுது கிறிஸ்துவின் மரணம் தீர்மானிக்கப்பட்டது (1.பேது.1:19-20)? கிறிஸ்துவின் மரணத்திற்கு இறுதியாக யார் பொறுப்பாளியாக இருந்தது (அப்.2:23)?
9) கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் (1.கொரி.15:14-19)? உங்கள் இரட்சிப்பிற்கு கிறிஸ்துவின் மரணமும், உயிர்த்தெழுதலும் ஆற்றிய பங்கினை எழுதுக.
10) யோவான் 14:3 ; 1.தெச.4:16-17 ; வெளி 19:6-9 ஆகிய வசனங்களில் கிறிஸ்தவர்களுக்குக் கூறப்பட்டுள்ள நம்பிக்கை என்ன?
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர் என்ன செய்வார் (யோ.5:22-23 ; வெளி 22:11-15)?