பாடம் 1: சுவிசேஷத்தின் பரந்த காட்சி
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்துப் பரிசுத்த ஆவியானவர்; அருளுகிறபொழுது இவ்வாறு தொடங்குகிறார். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம் (மாற்.1:1). கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்; (1.கொரி.15:3-4), என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் அசைக்கமுடியாத அடிப்படைக் கருத்தும், இம் மனித சமுதாயத்தினரால் கேட்கப்பட்டுள்ள மிகப்பெரிய நற்செய்தியும் ஆகும். நற்செய்தி யோவான் 3:16ல் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனே, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உண்மையிலேயே இது ஒரு நற்செய்திதான் (சுவிசேஷம்தான்). மனிதன் உண்மையிலேயே தேவனிடத்தில் வருவதற்கு ஒரு வழி திறக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி பூமியிலுள்ள சகல சிருஷ்டிகளிற்கும் கூறுவதற்கு தேவன் கட்டளையிட்டுள்ளார் (மாற்.16:15).
நமக்கு சுவிசேஷத்தைப் பற்றி என்ன தெரியும்? சுவிசேஷத்தின் ஆதாரம் தேவன். மனிதன் அல்ல. இது தேவனுடைய சுவிசேஷம் (ரோ.1:1 ; கலா.1:11 ; 1.தெச.2:2,9). இதன் மைய நோக்கம் ஜீவனுள்ள ஒரு நபரைப் பற்றியது. தேவனுடைய குமாரனும், நம்முடைய தேவனுமாகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் (ரோ.1:4; 5:19). இது நம்முடைய இரட்சிப்பின் சுவிசேஷம் (எபேசி.1:13). தேவனுடைய கிருபையின் சுவிசேஷம் (அப்.20:24). நித்திய சுவிசேஷம் (வெளி 14:6) என நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
வாழ்வா, சாவா என்கிற இச் செய்தியை ஒரு மனிதனும் அலட்சியம் செய்யமுடியாது. தேவன் மனிதனை சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிய அழைக்கிறார். கீழ்ப்படிய மறுப்பவர்கள் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளாவார் என எச்சரிக்கிறார்;. (2.தெச.1:7; 1.பேது.4:17 ; ரோ.10:16). விசுவாசம் மிகத் தேவையானது ஒன்றாக இருந்தாலும், சுவிசேஷத்தைத் தெரியப்படுத்துதல் உடனடித் தேவையாகும். (1.கொரி.9:16 ; அப்.1:8). மாறுபாடான வேறு சுவிசேஷத்தை ஒருவன் சொல்வானாகில் அவன் சபிக்கப்பட்டவன் (கலா.1:7-9). இரட்சிக்கப்படுவதற்கு விசுவாசத்தோடு, கிரியைகளும் அல்லது சடங்குகளும் வேண்டும் என்று கூறுகிறவர்களுக்கு இவ் வசனம் பொருந்துவதாய் இருக்கிறது.
சுவிசேஷம் எந்த முன்னறிவிப்புமின்றி தேவனிடத்திலிருந்து பூமிக்குள் தீடிரென்று வந்ததல்ல. பரிசுத்த வேதாகமத்தில் தொடக்க அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளதுபோல மனிதன் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்கப்படவேண்டும் என்று வெளிப்படையாகவே வரலாறு தொடங்கிய காலத்திலேயே கூறப்பட்டுள்ளது. தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகர் (விடுவிப்பவர்) மூலம் தேவன் இதற்கு ஒரு பரிகாரத்தை முற்காலத்திலேயே ஏற்படுத்தியுள்ளார் (ஆதி.3:15). பழைய ஏற்பாட்டின் காலத்தில் பலிகள் மூலம் சிந்தப்பட்ட இரத்தம் கிறிஸ்துதன்னை சிலுவையில் பலியாக்கினதை சுட்டிக்காட்டுவதாகும். அப்பலி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கிற இறுதியான பலி. (எபி.10:1-4,10-12). பழைய உடன்படிக்கை ஒரு புதிய உடன்படிக்கையைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறது. அப் புது உடன்படிக்கை பழைய உடன்படிக்கையைவிட தலை சிறந்தது (எரே.31:31-33). தேவனுடைய இரட்சகர் எல்லா மனிதருக்கும் உரியவர் (ஏசா.42:1,6). தீர்க்கதரிசனமும் அதன் நிறைவேறுதலும் ஒரே தேவனோடும், ஒரே விசுவாசத்தோடும், ஒரே இரட்சிப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது (எபேசி.4:4,6). தேவனிடத்தில் சேர ஒரேயொரு வழிதான் உண்டு (யோ.14:6 ; அப்.4:12).
தேவனிடமிருந்து பிரிதல்
தேவன் மனிதனை அவருடைய மகிழ்ச்சியாகவும், மகிமையாகவும் படைத்தார் (வெளி 4:11 ; ஏசா.43:7). தேவனுடைய நித்திய நோக்கம் மனிதன் அவருடைய (தேவனுடைய) சாயலையும், ரூபத்தையும் கொண்டவனாக இருந்து அவரின் மகிமையை வெளிப்படுத்தவேண்டும் என்பதாகும் (ஆதி.1:26-27 ; ரோ.8:29). தேவன் மனிதனைச் சுயாதீனமாகப் படைத்தார். உலகில் யாரும் அவனைக் கட்டுப்படுத்துகிற நிலையில் வைக்கவில்லை. மனிதன் தேவனை நேசிக்கவும், நேசிக்காமல் இருப்பதற்கும் அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
1) மனிதனுடைய சோதனை
ஏதேன் தோட்டத்தில் மனிதன் தேவனோடுள்ள ஐக்கியத்தை அனுபவித்து வந்தான். அந்த ஐக்கியம் தொடர்ந்து நிலைத்திட ஒரேயொரு கட்டுப்பாட்டைத் தேவன் மனிதன்மீது விதித்தார்;. அவன் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிப்பதற்குத் தடைவிதித்தார். தேவனுடைய இக் கட்டளைக்கு கீழ்ப்படிவதோ அல்லது கீழ்ப்படியாமல் இருப்பதோ, நம்புவதோ அல்லது நம்பாமல் இருப்பதோ மனிதனைச் சார்;ந்ததாக இருந்தது (ஆதி.2:15-17).
2) மனிதனுடைய கீழ்ப்படியாமை
சர்ப்பத்தின் வடிவிலான சாத்தான் தேவனுடைய வார்;த்தைக்கு மாறாக விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் சாகமாட்டீர்கள் என்றது. தேவனால் நேசிக்கப்பட்ட மனிதன் சாத்தான் கூறிய பொய்யை நம்பி தேவனுடைய வார்;த்தையை நம்பாமற்போனான். இக் கீழ்ப்படியாமை மனிதனின் வீழ்ச்சிக்கு அடிகோலியது (ஆதி.3:1-7). இதன் விளைவு ஆவிக்குரிய மரணம் ஆயிற்று. அதாவது தேவனோடுள்ள ஐக்கியத்திலிருந்து மனிதன் விடப்பட்டு, அவரைவிட்டுப் பிரிந்து சென்றான் (ஆதி.3:8). இப் பிரிவு சரீரமரணத்தைக் கொண்டுவந்தது. சரீர மரணம் என்பது சரீரத்தைவிட்டு ஆத்துமா பிரிவதாகும் (ஆதி.5:3-5).
3) மனிதனுடைய பிரச்சனை
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாததால் ஏற்பட்ட விளைவு முதல் மனிதனோடுமட்டும் நின்றுவிடவில்லை. பாவமும் மரணமும் ஆதாம் மூலமாக இந்த மனிதஇனத்தை முழுவதுமே ஆளத்தொடங்கியது (ரோ.5:12). மனிதனுடைய சுபாவம் மாறியது. அவன் தேவனுக்கு விரோதியானான். சுபாவத்திலும், செயலிலும் மனிதன் பாவியாக மாறினான் (எபேசி.2:3 ; ரோ.3:23). பாவத்தின் சம்பளம் மரணம் (ரோ.6:23). மரணமே பாவத்தின் தண்டனை (எசேக்.18:4). இப்பொழுது மனிதனே அக்கிரமங்களினாலும் பாவத்தினாலும் மரித்தவன் ஆனான் (எபேசி. 2:1-5). இந்த மரணம் ஆவிக்குரிய மரணம் ஆகும். அதாவது தேவனிடத்திலிருந்து பிரிதல் என்பதாகும். மரணம் பாவத்தின் பயங்கரத்திற்கு சாட்சியாக இருக்கிறது (எபி.9:27 ; யாக்.1:15). சரீரத்திலிருந்து ஆத்துமாபிரிவது சரீரமரணம். தேவனிடத்திலிருந்து ஆத்துமா நித்தியமாகப் பிரிதல் இரண்டாம் மரணம் (வெளி 20:11-15). இந் நிகழ்கால வாழ்க்கையில்கூட பாவந்தான் நோய்களுக்கும் வேதனைகளுக்கும் தேவனைவிட்டுத் தூரமாய் இருப்பதற்கும் காரணமாகும்.
பாவிக்குப் பரிகாரம்
வேதம் கூறுகிறது தேவன் வீழ்ந்துபோன தம்முடைய சிருஷ்டியை நேசிக்கிறார் (எபேசி.2:4-5 ; 1.யோ.4:10). ஆனாலும் மனிதனுடைய ஆவிக்குரிய மரணத்திலிருந்து அவனை இரட்சிப்பதற்கு தேவன் சில கஷ்டமான பணிகளைச் செய்யவேண்டி இருந்தது. தேவன் நீதிபரர். அவர் நீதிசெய்பவர். அவர் நீதிபரராய் இருக்கிறபடியால் பாவத்தின் தண்டனையாகிய மரணத்தைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் (யாத்.34:7). தேவன் நீதிபரராக இருந்தாலும் இரக்கமுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் இருக்கிறார். வீழ்ந்துபோன தன்னுடைய சிருஷ்டி வீழ்ச்சியிலிருந்து மீட்கப்படவேண்டும் என்று மனப்பூர்வமாக ஏக்கமுள்ளவராக இருக்கிறார் (2.பேது.3:9). பரிபூரண நீதியும் இரக்கமும் ஒன்றை ஒன்று எவ்வாறு ஒப்புரவாக்க முடியும்?
1) தேவனுடைய தீர்வு
இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய நீதிக்கு வழி கண்டுபிடிக்கப்பட்டது. எப்படியென்றால் பாவத்தின் சம்பளம் அவர் மூலமாய் நிறைவேற்றப்பட்டதால் அவருடைய நீதி உறுதிசெய்யப்பட்டது. நித்திய மரணத்திலிருந்து மனிதனை மீட்டுக்கொண்டதால் தேவன் அன்புள்ளவர் என்பது நிறைவேறியது. மனிதனுக்காக அவனுடைய தண்டனையை கிறிஸ்துவே ஏற்றுக்கொண்டார். இதுவே பரிகாரமாகும் (ஏசா.53:4-6). கிறிஸ்துவே பாவத்தைச் சுமக்கிறவர் (1.பேது.2:24 ; 3:18). பாவத்தின் சம்பளம் மனிதனுடைய ஜீவனாக இருக்கிறபடியால் குமாரனே மனிதனாக வந்தார் (அப்.2:22). மனித இனத்தின்மீது காணப்படும் மரணஆக்கினையிலிருந்து மனிதனை விடுவிப்பதற்காக பாவமறியாத கிறிஸ்துவை தேவன் நமக்காகப் பாவமாக்கினார் (2.கொரி.5:21). அவருடைய ஜீவன் அளவிடமுடியாத மதிப்புடையது. ஆகையால்த்தான். எல்லோரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார் (1.தீமோ.2:6). தேவனுடைய இருதயம் எல்லோரைக்குறித்தும் அக்கறை கொண்டுள்ளதாக இருக்கிறது (1.தீமோ.2:4). தேவன் ஒருவரே மனிதனுக்கு இரட்சகராக இருக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும் (ஏசா.43:11 ; 45:21). இயேசு கிறிஸ்து பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நிறைவேற்றிமுடித்தார். ஐனங்களின் இரட்சகர் ஆனார் (மத்.1:21-23).
2) தேவனுடைய வெளிப்படுத்தல்
ஆதியாகமத்தின் தொடக்க அதிகாரங்களில் தேவனுடைய திட்டமானது விதை (வித்து) உருவில் வெளிப்பட்டது. நம்முடைய முதல் பெற்றோர்கள் தங்கள் பாவத்தை மறைப்பற்கு தங்கள் கைகளினாலே உண்டுபண்ணிய அத்திஇலை ஆடை அவர்கள் சுயமுயற்சிக்கு அடையாளமாக இருக்கிறது (ஆதி.3:7). ஆனால் அம் முயற்சி அவர்களின் நிர்வாணத்தையும், பாவத்தையும் பரிசுத்த தேவனுக்குமுன் மறைக்கவில்லை. தேவன் அவர்களுக்கு தோல் உடைகளை உடுத்துவித்தார் (ஆதி.3:21). அத்தியிலை உடைக்குப் பதிலாக தோலுடை வருவதற்கு இரத்தம் சிந்தப்பட்டது. மிருகங்களைப் பலியிடுவது இவ்வாறு ஆரம்பமானது. முதல்ப் பெற்றறோருக்குப் பின்வந்த சந்ததியினர் பலியைக் குறித்து மேலும் விளக்கம்கொடுத்தனர். காயீன் நிலத்தின் கனிகளைத் தேவனுக்குக் காணிக்கையாகப் படைத்தான். ஆபேல் இரத்தபலியைத் தேவனுக்குக் கொடுத்தான். தேவன் ஆபேலின் பலியை அங்கீகரித்தார். காயீனீன் காணிக்கை மனிதனின் சுயமுயற்சியால் தேவனை நெருங்குவதற்கு அடையாளமாக இருக்கிறது (ஆதி.4:3-5). கிரியைகளினாலே தேவனை அண்டிக்கொள்ளமுடியும் என்றும், அவ்வழியைப் பின்பற்றுகிறவர்களை காயீன் வழியைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் அழைக்கலாம் (யூதா 11). மனிதன் தேவனிடத்திற்குச் செல்லுவதற்கு அவனுடைய சுயகிரியைகள் உதவாது. ஆனால் இரத்தத்தின்மூலம் அவரண்டை செல்லலாம். இவற்றைப் பற்றிய விளக்கங்களை யூதருடைய முக்கிய பண்டிகையாகிய பஸ்கா தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்படுவதற்கு முன்னால் ஒவ்வொரு வீட்டாரும் பளுதற்ற ஆட்டுக்குட்டியைப் பலியிட்டார்கள். அதன் இரத்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து முதற்பேறானவர்களைக் காக்கும்பொருட்டு ஒவ்வொரு வீட்டுவாசலிலும் தடவப்பட்டது. இந்த இரத்தபலினால் தேவன் இஸ்ரவேல் ஐனங்களை மரணத்திலிருந்து தப்புவித்தார். இதுவே பஸ்கா ஆகும் (யாத்.12:3-14,21-17). பழை ஏற்பாட்டில் காணப்படுகின்ற பலிகள் இதை நமக்குத் தொடர்ந்து போதிக்கிறது. இவ்விதமான பலிகள் வரப்போகிற கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு நிழலாய் இருக்கிறது (கொலோ.2:17). பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள
பலிகள் பாவத்தை நிவர்த்திசெய்யாது. இருந்தாலும் அவைகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வரப்போகிற பலியாகிய கிறிஸ்துவைப் பற்றியது (எபி.10:1-4). பாவத்திற்காக என்றென்றைக்கு மாகச் செய்யப்பட்ட பலி இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்ததாகும். இந்தக் கிறிஸ்துவே ஒவ்வொரு விசுவாசியின் பாவத்தைப் போக்குகிற பலியாக இருக்கிறார் (எபி.9:12-14 ; 10:10,12). இவ்வாறாக ஆதியிலிருந்தே விசுவாசமே இரட்சிப்பின் அடிப்படை என்பதைத் தேவன் உண்டுபண்ணியிருக்கிறார் என்பதைக் காண்கிறோம். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்தில் வந்தபோது தேவனுடைய இத்திட்டம் நிறைவேறியது (எபி.1:1-2). இதுவே காலா காலமாக தேவனால் மறைத்துவைக்கப்பட்ட இரகசியமாகவும் இருந்தது (1.கொரி.2:7-8).
3) தேவனுடைய வழி
இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்துமுடித்த தியாகமே தேவனிடத்தில் நாம் செல்லுவதற்கு வழியாக இருக்கும்போது பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள். நாம் எப்படி விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமோ அவ் விசுவாசமே அவர்கள் இரட்சிப்பிற்கும் அடிப்படையாக இருந்தது. எவ்வாறெனில் கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். கிரியைகளினால் இரட்சிப்பு இல்லை (எபேசி.2:8-9). பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரட்சகராகிய மேசியாவை காணமலே விசுவாசத்தோடே இப் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் மரித்தார்கள். இவர்கள் மரிப்பதற்கு முன்னாலே கிறிஸ்துவைப் பற்றிய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்கள் உண்மை என்பதை அறிந்து விசுவாசித்து அவைகளை அணைத்துக்கொண்டார்கள் (எபி.11:13). தேவன் இப்படிப்பட்ட அவர்கள் விசுவாசத்தை நீதியாக எண்ணினார் (ரோ.4:3 ; யாக்.2:23). தேவன் எவ்வாறு நம்மைக் கிறிஸ்துவின் மூலம் இரட்சித்தாரோ அதுபோல் சிலுவையில் நிறைவேற்றப்பட்ட செயலே அவர்கள் இரட்சிப்பிற்கும் அடிப்படையாகும் (2.கொரி.5:21): பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது (எபி.3:16-4:2 ; 1.பேது.4:6). அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள் அதற்கு அடையாளமாக தேவன் அவர்களுக்குக் கூறிய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். யோவான்ஸ்நானகனும், கிறிஸ்து வெளிப்படையாக தன் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பாக இதையே பிரசங்கிக்கிறார். மனம்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என மக்களைப் பார்த்துக் கூறினார் (மாற்.1:15). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் (மத்.4:23 ; 9:35). இயேசு கிறிஸ்துவை இராஜாவாக ஏற்றுக்கொள்ளல் அவருடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதாகும். ஆகவேதான் அவர் கூறுகிறார். தேவனுடைய இராஜ்ஜியம் இதோ உங்களுக்குள் (உங்கள் மத்தியில்) இருக்கிறது என்றார். அப்பொழுது இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் இருந்தார் (லூக்.17:21).
4) தேவனுடைய திருப்தி
பிதாவாகிய தேவன் அவருடைய குமாரன்மீது பிரியமாக இருக்கிறார் (மத்.3:17). கிறிஸ்து சிலுவையில் செய்துமுடித்த வேலையில் தேவன் திருப்தி அடைந்ததால் அவரின் மரணம் பாவத்தின் சம்பளத்தைக் கொடுத்தது. நாம் தேவனுடைய சமூகத்தில் சேருவதற்கு வழிவகுத்தது. முடிந்தது என்பது (யோ.19:30) பாவத்திற்காக மேலும் பலிசெலுத்த வேண்டியதில்லை. நம்முடைய அக்கிரமங்கள் இனி நினைக்கப்படுவதில்லை (எபி.10:17-18). இயேசு கிறிஸ்துவினால் தேவன் நமக்கு அனுகூலமானவைகளைச் செய்தார் (எபி.2:17 ; 1.யோ.2:1). தேவஆட்டுக்குட்டியானவர் உலகத்தின் பாவத்திற்கான தண்டனைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார் என்பதைக் குறிக்கிறது (யோ.1:29 ; 1.யோ.2:2). கிறிஸ்து செய்துமுடித்த எல்லா வேலைகளையும் தேவன் முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதற்கு அவரின் உயிர்த்தெழல் சாட்சியாக உலகிற்குக் காட்சி அளிக்கிறது (அப்.22:24).
விசுவாசியின் இரட்சிப்பு
ஒவ்வொருவரும் இரட்சிப்பைப் பெறுவதற்கு தேவனிடத்தில் வரவேண்டும். கிறிஸ்துவைக் கர்த்தர் என்றும் இரட்சகர் என்றும் ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ.1:12-13). தேவனுக்குச் செவிசாய்த்து அவருக்குக் கீழ்ப்படிவதை அடிப்படையாக வைத்து இன்றைய நாட்களில் மக்களை இரண்டு கட்டமாகப் பிரிக்கலாம். பக்தியுள்ளவர்கள் அல்லது பக்தியற்றவர்கள். இவர்கள் வெவ்வேறான ஆவிகுரிய குடும்பத்தைச் சார்ந்தவர்களானபடியால் வௌவேறான பிதாக்களையும், கனிகளையும் நோக்கங்களையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
1) கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் - (எபேசி.2:2 5:6)
தேவனோடு இவர்கள் கொண்டுள்ள செயற்பாடு இப்படிப்பட்ட பெயரைக் கொடுக்கிறது. இவர்களைக் கோபாக்கினியின் பிள்ளைகள் (எபேசி.2:3) என வேதம் கூறுகிறது. இவர்களின் உண்மையான பிதா பிசாசு. ஆகவே இவர்கள் பிசாசின் பிள்ளைகள் (1.யோ.3:8,10) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
2) தேவனுடைய பிள்ளைகள் - (ரோ.8:16-17 ; கலா.3:26)
இவர்களை கீழ்ப்படிதலின் பிள்ளைகள் என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இவர்கள் விசுவாசத்திற்கு கீழ்படிந்தவர்களாக இருக்கிறார்கள் (ரோ.16:26). விசுவாசத்திற்குக் கீழ்ப்படிதல் என்பது இயேசு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிதல் என்பதாகும் (1.பேது.1:2). இயேசு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிதல் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் ஆகும். இவர்கள் விசுவாசமார்க்கத்தார்களாக இருப்பதனால் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவ்வாறு அழைக்கவும்படுகிறார்கள் (கலா.3:7). கர்த்தராகிய இயேசு கூறினார் ஆபிரகாமின் பிள்ளைகள் ஆபிரகாம் செய்ததைச் செய்வார்கள் (யோ.8:39). வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களினால் இவர்கள் ஒளியின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகின்றனர் (யோ.12:36 ; 1.தெச.5:5). இவர்கள் நற்கிரியைகளினால் இரட்சிக்கப்படவில்லை. ஆனால் நற்கிரியைகள் செய்வதற்கு இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் (எபேசி.2:10 ; தீத்து 3:8). இரட்சிப்பின் திட்டம் என்னவென்றால் பாவங்களுக்குச் செத்து நீதிக்கும் பிழைத்தல் ஆகும் (1.பேது.2:24).
இங்கு கூறப்பட்டுள்ள இரண்டு விதமான குடும்பங்களின் வித்தியாசம் அவர்களிடம் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் உள்ளது. கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் காயீனைப் பின்பற்றி தங்களுடைய சுயமுயற்சியில் நம்பிக்கை உள்ளவர்களாக தேவனுக்கு முன் வாழ்கிறார்கள். அவர்கள் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியமாட்டார்கள். மேலும் கிறிஸ்துவால் முடிக்கப்பட்ட செயலின் அடிப்படையில் தேவனிடத்தில் வரமாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு நன்மையானவற்றிலும் தங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட எண்ணங்களிலும் வாழ்விலும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். இதற்குமாறாக தேவனுடைய பிள்ளைகள் அவர்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை அறிந்திருப்பார்கள். பாவத்தைவிட்டு மனந்திரும்பியிருப்பார்கள் (லூக்.13:3 ; 15:7 ; 24:47 ; அப்.2:38 ; 3:20-21 ; 26:20). அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு கிறிஸ்துவின் இரத்தத்தின்மீது மட்டுமே விசுவாசமுள்ள வர்களாக இருப்பார்கள் (ரோ.3:26). அவருடைய இரத்தம் ஒன்றே நம்மை பாவமற சுத்திகரிக்கின்றது (1.யோ.1:7 ; வெளி 1:6).
முடிவுரை
உலகத்தைப் படைப்பதற்கு முன்னமே மனிதனுடைய இரட்சிப்பைக் குறித்து தேவன் மனதில் திட்டமிட்டிருந்தார். தம்மை நேசிப்போரும் தம் வார்த்தைக்குக் கீழ்படிபவரோடும் தேவன் ஐக்கியம் கொள்ளவேண்டும் என்று ஆவல் உள்ளவராக இருந்தார். மனிதனுடைய கீழ்ப்படியாமை தேவனை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. மாறாக தேவனுடைய மனதிலே தேவஆட்டுக்குட்டி உலகத்தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்டவராக குறிப்பிடப்பட்டிருந்தார் (1.பேது.1:19-20 ; வெளி 13:8). காலம்நிறை வேறினபோது தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் (கலா.4:5). பூர்வகாலத்தில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பேசப்பட்டவர் இப்பொழுது குமாரன் மூலமாய்ப் பேசப்படுகிறார் (எபி.1:1-2). சுவிசேஷம் மனிதனுக்கு இதைக் கூறுகிறது. கிறிஸ்து மனிதனுடைய பாவத்திற்காய் மரித்தார். பாவத்தின் சம்பளத்தைக் கொடுத்தார். தேவனுடைய நீதியைச் சரிக்கட்டினார். மனிதனுடைய நீதிக்காக குமாரன் உயிர்த்தெழுந்தார். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் உள்ளவர்களாய் அவரிடம் வருவோருக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார். குமாரனை ஏற்றுக்கொண்டு அவரை உடையவனுக்கு நித்தியஜீவன் உண்டு (யோ.1:12 ; 1.யோ.5:12). விசுவாசியாதவன்மீது தேவகோபம் நிலைநிற்கும் (யோ.3;:36). சுவிசேஷத்திற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? கீழ்ப்படிதலின் பிள்ளையாக ஒளியின் பிள்ளையாக தேவனுடைய பிள்ளையாக நீங்கள் நடக்கிறீர்களா?
பாடம் 1 ற் கான கேள்விகள்
1) பின்வருகின்ற வசனங்களின் அடிப்படையில் தேவன் மனிதன்மீது கொண்டுள்ள நோக்கம் என்ன?
(ஆதியாகமம் 1:26-27 ; ஏசாயா 43:7 ; ரோமர் 8:29 ; வெளி 4:11)
2) தேவனைப் பிரியப்படுத்துவதற்கு ஆதாமுக்கு இருந்த சந்தர்ப்பம் என்ன (ஆதி.2:15-17)? இந்தச் சோதனையில் ஆதாமின் பிரதியுத்தரம் என்ன? அவன் தேவனுடைய வார்த்தையின்மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் குறித்துக் கூறுக. (ஆதி.3:1-7)?
3) பாவம் என்கின்ற வார்த்தையை விளக்கப் பின்வரும் வசனங்களைப் பயன்படுத்துக.
(ஏசாயா 53:6 ; மத்.5:28 ; ரோமர் 3:23 ; 1.யோவான் 3:4 ; யாக்கோபு 3:17)
வேதாகமம் பாவத்திற்குத் தரும் விளக்கம் எவ்வாறு ஆதாமின் நிலையைப் பிரதிபலிக்கிறது (ஆதி.3:1-7) வசனங்களோடு ஒப்பிடவும்?
ஆதாமின் காலத்திலிருந்து எல்லா மனிதருடைய நிலையும் என்ன (ரோ.5:12)? ஏன்?
4) பாவத்திற்குச் சம்பளம் செலுத்தப்படவேண்டுமென்று தேவநீதி விளம்புகிறது. தேவன் தன் படைப்பில் ஆவிக்குரிய தண்டனையாக எதைப் பயன்படுத்தினார் (ஆதி.2:17 ; எசேக்.18:4)?
பாவத்திலேயே இருக்கும்போது ஒருவன் சரீரப்பிரகாரமாக மரித்தால் என்ன நிகழும் (வெளி 20:11-15; எபி.9:27)?
5) பின்வரும் பகுதி தேவனுடைய இரக்கத்தைப் பற்றியும் அவருடைய நீதியைப் பற்றியும் எதை வெளிப்படுத்துகிறது (யாத்.34:6டி-7)?
தேவனுடைய இரக்கமும் அவருடைய நீதியும் ஒன்றோடொன்று ஒப்புரவாகும்படி தேவன் செய்தது என்ன (1.பேது.3:18 ; அப்.4:10-12)?
ஏசாயா 43:11ல் இரட்சகரைப் பற்றிக் கூறப்பட்டுள்ள சிறப்பு அம்சம் என்ன? எப்படி இயேசு கிறிஸ்து இந்தத் தேவைகளைச் சந்தித்தார் (மத்.1:21-23 ; எபி.1:8)?
6) நீங்களே சொந்தமாக எழுதுங்கள். 1.கொரிந்தியர் 15:3-4 எப்படிச் சுவிசேஷத்தைச் சுருக்கமாகக் கூறியுள்ளது என்பதை விளக்கவும்.
7) காலம் நிறைவேறுமளவும் ஏன் தேவன் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை மறைத்து வைத்தார் (1.கொரி.2:7-8)?
அப்படியானால் பழைய ஏற்பாட்டுவிசுவாசிகள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள் (எபி.11:13)?
8 ) இரட்சிப்புக்கும் நற்கிரியை செய்வதற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன (எபேசி.2:8-10)?
எப்படி ஆபிரகாமின் வாழ்க்கை இதை வெளிப்படையாகக் காட்டுகிறது (ரோ.4:1-5 ; யாக்.2:18-23)?
கிரியையின் அடிப்படையிலே இரட்சிப்பு உண்டாக சாத்தியக் கூறுகள் உள்ளனவா? (தீத்து 3:5-8; எபி.9:22)?
9) ஒருவன் சுவிசேஷத்திற்குச் செவிசாய்த்து அதை ஏற்றுக்கொள்கிறான் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறான் என்பதின் அடிப்படையில் அவன் ஆவிக்குரிய குடும்பத்தில் அங்கத்தினராகின்றானா என்பது தீர்;மானிக்கப்படுகின்றது. பின்வருகின்ற வசனங்களைக் கொண்டு கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளின் அடிப்படையில் உள்ள குடும்பங்களின் வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுக.
(யோவான் 8:44 ; கலா.3:7 ; எபேசியர் 2:2-3 ; 5:6 ; 1.தெச.5:5 ; 1.யோ.3:10)
கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் - தேவனுடைய பிள்ளைகள்
எப்படி ஒருவன் குடும்ப அங்கத்துவத்தை மாற்றுகிறான்?
(லூக்.13:3 ; அப்.3:19-20 ; யோ.1:12 ; 5:24)
10) சுருக்கமாக விபரிக்கவும். எப்படி எப்பொழுது நீங்கள் கிறிஸ்தவர்களானீர்கள்? நீங்கள் இன்னும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் எது உங்களை அவ்வாறான நிலைமைக்குத் தள்ளியுள்ளது?