அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
பாடம் 12: அனுபவ சாட்சி
நீதிமன்ற அறையிலே வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள்தான் சாட்சி, சாட்சி சொல்லல், அத்தாட்சி போன்றவைகள். கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாக இருப்பவர்கள் இந்த உலகமாகிய நீதிமன்ற அறையிலே சாட்சியாகவும், சாட்சி பகர்கிறவர்களாகவும் அல்லது இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தில் அவரை கர்த்தர் என்றும், இரட்சகர் என்றும் அறிக்கை இடுகின்றவர்களாக இருக்கின்றனர். பவுல் தன்னுடைய இளம் சீஷனாகிய தீமோத்தேயுவுக்கு இவ்வாறு கட்டளை இடுகின்றார், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள், அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய், எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியு பிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கை பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்கு கட்டளையிடுகிறேன் (1தீமோ.6:12,14). பிறருக்கு முன்பாக கிறிஸ்துவை அறிக்கை பண்ணுதல் மிக பெரிய சிறப்புரிமையாகும், தேவன் பிறரை தனக்குள்ளாககொண்டுவர இவ்வறிக்கை பயன்படுத்த முடியும். சில வேளைகளில் இவ்வறிக்கை பாடுகளுக்கும், மரணத்திற்கும் கூட அழைத்து செல்வதாக இருக்கும். சாட்சி, சாட்சிபகர்தல் என்ற சொற்கள் இரத்தசாட்சி என்று வேத புஸ்தகத்திலே வருகின்ற ஆங்கில சொல்லோடு தொடர்புடையது. வேதத்தில் இதே பொருளில் விசுவாசி தன்னுடைய விசுவாசத்தை மரணத்திலும் கூட சாட்சியாக பகர்ந்ததை குறிப்பிடுவதாக உள்ளது (வெளி.2:13). கர்த்தர் தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்தபொழுது தெளிவாகவே அவரோடு அவர்கள் கொண்டுள்ள உறவையும் கூறி உள்ளார். மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார் (லூக்.12:8,மத்.10:32). நாம் பிறருக்கு முன்பாக வாய் திறந்து பேசுவது கூட இரட்சிப்போடு தொடர்புடையது. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9). கர்த்தராகிய இயேசுவில் கொண்டுள்ள விசுவாசம் இரகசியமாக இருக்கக் கூடாது.
உள்ளடக்கம்
நல்ல சாட்சியில் இரண்டு தன்மைகள் அடங்கியுள்ளது ஒன்று, நிகழ்ச்சியில் உண்மையிருக்க வேண்டும். தர்சு பட்டணத்து சவுலின் மனமாற்றத்தின்போது அனனியா கூறினார் நீ கண்டவைகளையும், கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷனுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய் (அப்.22:15). நல்ல சாட்சி என்பது கண்டவைகளையும் அல்லது அறிந்தவைகளையும் கொண்டதாகும், கற்பனையால் ஊகித்த ஒன்றோ அல்லது ஏதோ உணர்ச்சியால் உணரப்பட்ட ஒன்றல்ல. எப்படி கிறிஸ்துவைச் சந்தித்தான், எப்படி அவனுடைய வாழ்க்கை மாற்றப்பட்டிருக்கிறது, எந்த அதிகாரத்தின் கீழ் தேவனுடைய பிள்ளையாக தன்னை பிரகடனப்படுத்தினான் என்பவைகள் இயேசு கிறிஸ்துவில் நல்ல சாட்சி பகிர்ந்து கொள்வான். இரண்டாவதாக சத்தயத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து ஒரு சாட்சி சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறான். உங்களில் இருக்கிற நம்பிக்கையை குறித்து உங்களிடத்தில் விசாரித்து கேட்கிற யாவருக்கும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1பேது.3:15) என்று விசுவாசிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் தான் மெய் என்று அறிந்தவைகளை சாட்சியாக தருகிறார் (யோ.21:24). பவுல் எழுதுகிறார், உண்மையாகவே அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் குறித்து சாட்சி சொல்லுவதாக, அவ்வாறு இல்லை என்றால், அவர் தேவனுடைய பார்வைக்கு முன்பாக பொய் சாட்சி சொல்லுகிறவனாக காணப்படுவான் என்கிறார் (1கொரி.15:15).
ஒரு தேவனுடைய பிள்ளையின் சாட்சி அவன் கிறிஸ்துவினிடத்தில் வர வேண்டியது தேவையாயிருக்கிறது, விசேஷமாக பாவத்தின் பிரச்சனையில் இருந்து விடுபடவேண்டியதாயிருக்கிறது என்பதோடு துவங்குகிறது. விசுவாசித்தவர்கள் அனேகர் வந்து தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள் (அப்.19:18). இவையெல்லாம் தேவனுடைய பார்வையிலே தீமையாக இருந்தது. குற்ற உணர்வினால் பிடிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களையும், வாழ்க்கையின் வெறுமையினாலும், சமாதானமற்ற நிலையிலும், மரணத்தைப் பற்றியும், தனிமையைப் பற்றி பயந்திருந்தவர்களுக்கும் கர்த்தராகிய இயேசு விடுதலையை கொடுத்தார். சந்தோஷமும், நல்நோக்கமும் இவைகளுக்கு பதிலாக கிடைத்தது. பாவிகளை இரட்சிப்பதே மேலான நோக்கமாகக் கொண்டு கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் (1தீமோ.1:15). அவர்களை வரப்போகிற கோபாக்கினையிலிருந்தும் விடுவிக்கிறார் (1தெச.1:10). ஆகையால் விசுவாசிகள் இரட்சிப்புக்கு ஏதுவான சுவிசேஷத்தைக் கேட்ட அனுபவத்தைப் பற்றியும் அதை விசுவாசித்தது பற்றியும் (எபே.1:13) சாட்சி கூற வேண்டும். அவர்கள் அவருடைய கிருபையை ஐஸ்வரியத்தின்படி இவருடைய இரத்தத்தின்படியே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே.1:7).
ஒரு நல்ல சாட்சியில் கிறிஸ்துவே மையமாக இருக்கிறார் (அப்.5:31-32) எனவேதான் இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சி என்று சரியாக அழைக்கப்படுகிறது (வெளி.1:2,9). முதல் நூற்றாண்டு விசுவாசிகள், கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்கிற உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வலியுறுத்தினர் (அப்.2:32 ; 4:33 ; 13:30-31). தீர்கதரிசனம் நிறைவேறுதலும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியும் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. நம்முடைய வாழ்க்கையை எப்படி கிறிஸ்து மாற்றினார் என்பதை கூறுவது மிக அவசியமாகும் (1தெச.1:9, ; 1.கொரி.6:9-11). பவுல் ஒரு காலத்தில் தூசிக்கிறவனும் துன்பப்படுத்துகிறவனுமாய் இருந்தான் (1தீமோ.1:13) பின்னர் அவன் கிறிஸ்துவின் முன்னணி ஊழியக்காரன் ஆனான். ஒரு நல்ல சாட்சி, கேட்கிறவர்களின் மனதிலே தேவனிடத்தில் திரும்புவதையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது குறித்து சவாலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் (அப்.20:21). ஆவிக்குரிய எதிர்புகள் அனைத்தும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் விசுவாசிகளால் ஜெயிக்கப்படுகிறது (வெளி.12:11).
பொதுவான குறிப்புகள்
1) வேத வாக்கியங்களில் காணப்படுகிறபடி
அப்போஸ்தலர் 26:1-29ல் கூறப்பட்டுள்ள பவுலின் சாட்சி நமக்கு வேதவாக்கின்படி எடுத்துக்காட்டான சாட்சியாக இருக்கிறது. இச்சாட்சியிலே பவுலின் வாழ்க்கை, அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பும், ஏற்றுக் கொண்ட பின்பும் உள்ள நிலை விளக்கப்பட்டுள்ளது. இராஜாவாகிய அகிரிப்பாவின் முன்பாக நிற்கும் பொழுது இம்முறையை பின்பற்றுவதை நினைவில் குறித்துக் கொள்ளவும்.
அ) கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக (26:4-11) பவுல் தன்னுடைய பக்தியின் அடிப்படையில், கிறிஸ்துவை எதிர்த்ததையும் கூறுகிறார்.
ஆ) எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் (26:12-18) இயேசு கிறிஸ்துவை தமஸ்கு சாலையிலே சந்தித்தது, எப்படி இரட்சகர் அவரின் பாவத்திற்கு நிந்திக்கப்பட்டார், தன்னால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு ஊழியம் செய்ய எப்படி அழைக்கப்பட்டார் என்பதை கூறுகிறார்.
இ) கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் (26:19-23) தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் எப்படி தன்னைக் கொலை செய்ய தேடினவர்கள் மத்தியிலும் ஒரு போதகரானார் என்பதை விளக்குகிறார்.
2)உங்களுடைய சாட்சியில் பிரதிபலிக்க வேண்டியவை
நீங்கள் உங்கள் அனுபவ சாட்சியை பகிர்ந்து கொள்ளும் பொழுது மனதிலே சில விஷயங்களை வைத்துக்கொள்ளுங்கள்:
அ) கிறிஸ்து ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னால் எவைகள் உங்கள் முந்தைய வாழ்க்கையை மாற்றம் தேவை என்று வலியுறுத்தியது? அவைகள் எவை எல்லாம் பிறருடைய தேவைகளோடு பொதுவானதாக இருந்தது?
ஆ) எப்படி கிறிஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டார். பிறர் உங்களுடைய மாற்றம் ஒரு வெறுமையான மாற்றம் என்று உணராமல், உண்மையிலே ஜீவிக்கிற தேவனோடு ஒரு சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதில் மிக தெளிவாக இருக்கவும். எப்படி எப்பொழுது, எங்கே இது நடந்தது?
இ) கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்பு, வாழ்க்கையில் என்ன தெளிவான மாற்றம் ஏற்பட்டது? விசுவாசியானதால் என்ன நன்மைகள் இருக்கிறது? பிறருடைய இருதய இயக்கத்தில் எது உங்களைத் தொட்டது?
திட்டமான உள்ளடக்கம் அடங்கிய சாட்சியை தயாரிக்க வழிகாட்டி
பின்வருகின்ற வழிமுறைகளை உங்கள் சாட்சிகளில் கடைப்பிடிக்க வேண்டும்:
1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து என்ன செய்திருக்கிறார் என்று கூறவும்.
2. தேவனுடைய வார்த்தையைப்பயன்படுத்துங்கள் (எபி.4:12 ; எபே.6:17). உன் மனசாட்சியைத் தேவன் தொட பயன்படுத்திய வசனங்களைக் கூறவும். இப்படிக் கூறுவது அதிகாரத்தையும், திட நம்பிக்கையையும் கொண்டு வருகிறது (மாற்.1:22).
3. தன்னைச் சுற்றியே இருக்கவேண்டும் (நான், என்னுடைய என்ற சொற்களைப் பயன்படுத்தவேண்டும்). சாட்சி கூறுதல் உரையாடல் போன்றிருக்கவேண்டும். உபதேசிப்பது போன்றோ, இயற்கைக்கு முரணாகவோ இருக்கக் கூடாது.
4. கிறிஸ்தவத்திற்குரிய சொற்களான மறுபடி பிறத்தல், மனம் திரும்புதல், இரட்சிப்பு போன்ற சொற்களுக்கு சரியான விளக்கம் கொடுத்து கேட்கிறவர்கள் புரிந்து கொள்ளும் படியாக பேசவேண்டும்.
5. உங்கள் சாட்சியில் எப்பகுதியில் ஜனங்கள் தங்களை ஒன்றுபடுத்த முடியும் என்ற பகுதியை கருத்தாய் அறிந்திருக்கவும். தெளிவாக புரியக் கூடிய வார்த்தையை பயன்படுத்தவும்.
6. உண்மையான மையக் கருத்தை விட்டு விலகாமல் உங்கள் சாட்சி இருக்கவேண்டும்.
7. உங்கள் வார்த்தைகள் கிருபை பொருந்தினதாக இருக்கவும் (லூக்.4:22). பிற குழுக்களை கண்டனம் பண்ணுவதாக இருக்கக் கூடாது. பணிவோடு பேச வேண்டும்.
எவ்வாறு சாட்சி தயாரிக்க ஆயத்தப்பட வேண்டும்
1. கிறிஸ்துவில் எப்படி நீங்கள் புதிய வாழ்க்கையை கண்டு கொண்டீர்கள் என்பதை தெளிவு படுத்த ஞானத்திற்காக தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணவும்.
2. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன் உள்ள வாழ்க்கை, எப்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்கள், அவரை ஏற்றுக் கொண்ட பின்னால் உள்ள வாழ்க்கை ஆகிய தலைப்புகள் அடங்கிய மூன்று காகிதங்களை எடுத்து தனித்தனியாய் இம்மூன்றையும் பற்றி எழுதிக்கொள்ளவும்.
3. எழுதப்பட்டுள்ள சாட்சி பொதுவான எடுத்துக்காட்டு மற்றும் ஏழு வழிகாட்டிகளோடு ஒத்துள்ளதா என்று மதிப்பீடு செய்யுங்கள்.
4. குறிப்புகளை வைத்துக்கொண்டே சாட்சி கூற கற்றுக்கொள்ளுங்கள். மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் உங்கள் சாட்சியைக்கூற 3 ஓ 5 அளவுள்ள அட்டைகளில் நிரப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
5. குறிப்புகளை வைத்துக் கொள்ளாமல் உங்கள் சாட்சியை மூன்று நான்கு நிமிடங்களில் கூற கற்றுக்கொள்ளுங்கள்.
வகுப்பறைப் பயிற்சி
இப்பாடத்திற்குரிய பயிற்சி முழுவதும் அனுபவ சாட்சியை பகிர்ந்து கொள்வதாகவே இருக்கும். நாம் பல குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொருவரும் அவருடைய சாட்சியை வரிசையாக கூற வேண்டும். 3 ஓ 5 அளவுள்ள அட்டைகளில் எழுதப்பட்டுள்ள குறிப்புக்களைப் பயன்படுத்துவதின் மூலம் உங்கள் சாட்சியை ஞாபகத்திற்குக் கொண்டு வரலாம். சிலர் தங்கள் சாட்சியை வாசிக்க விரும்பலாம், அப்படி செய்யும் பொழுது 3 ஓ 5 அட்டைகளை பயன்படுத்தவும். நாம் குழு அங்கத்தினரிடம் சாட்சியை எப்படி சரியாகக் கூறுவது, சுருக்கிக் கொள்வது அல்லது விரிவாக்கிக் கொள்வது போன்ற கருத்துக்களை கேட்டுக் கொள்வது நல்லது.
பாடம் 12 ற் கான கேள்விகள்
வழிகாட்டிகளையும் எப்படி தாயரிப்பது, சாட்சி என்பதை சரியாகக் கற்று சாட்சி தயாரிக்கவும். உங்கள் சாட்சியை கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்கு விடையாக எழுதவும்.
1. இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் கர்த்தரும், இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக உங்கள் வாழ்க்கை நிலை என்ன?
2. எப்படி, எப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவை கர்த்தரும், இரட்சகருமாக ஏற்றுக் கொண்டீர்கள்? எந்தெந்த சூழ்நிலைகளில்? விசுவாசத்தால் எந்த வேதப் பகுதியை உரிமை கொண்டாடினீர்கள்? எளிமையாக புரியக் கூடிய வகையில் தேவனுடைய வழியை பிறருக்கு காட்டுங்கள். கிறிஸ்துவை மையமாகக் கொள்வதில் நிச்சயமாக இருங்கள்.
3. இயேசு கிறிஸ்துவை கர்த்தர், இரட்சகருமாக ஏற்றுக்கொண்ட பின்னால் நடைமுறை வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தீர்மானங்கள் பற்றியோ, அல்லது வாழ்க்கையில் எடுத்துள்ள முடிவைப் பற்றியோ சொல்ல வேண்டிய அவசியமில்லை.