அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம்.
சராசரி நபர் தன்னுடைய ஆத்மாவின் நித்தியத்தை இழந்து ஆபத்தில் இருக்கிறாரா? கர்த்தராகிய இயேசு கூறினார்: ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் (மத்.7:14). கிறிஸ்துவை அறிந்தேன் என்ற எந்தவித அத்தாட்சியில்லாமல் இருக்கிற நண்பர்கள் அல்லது பக்கத்தில் வசிப்பவர்கள் நிலை என்ன? தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோ.3:18). இவ்வசனங்கள் பயங்கரமான வசனங்கள், அமைதியாகவோ, சாத்மீகமாகவோ இருக்க நம்மை அனுமதிக்காது. 95 வீதக் கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவ அழைப்பின் முக்கிய பகுதியாக காணப்படுகிற, சுவிசேஷத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வதில்லை. நாம் எப்படி இப்படிப்பட்ட பொதுவான கருத்துடன் ஒப்புரவாக முடிகிறது? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கர்த்தராகிய இயேசு கூறினார் அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் (மத்.9:37). தருணத்திற்கோ, தேவைக்கோ எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள் வேலையாட்களோ கொஞ்சம்.
கர்த்தராகிய இயேசுவுக்கு மனித ஆத்துமாக்கள் மீது கொண்டுள்ள அக்கறை மிகப் பெர்pது, ஆதலால்தான் தன்னை புறக்கணித்து நகரத்தை பார்த்து கண்ணீர் விட்டார் (லூக்.19:41-42). ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனம் திரும்ப வேண்டும் (2பேது.3:9) என்று விருப்பமுள்ளவராய் இருக்கிறார். எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1.தீமோ.2:4). இவர் தன்னுடைய கிராமம் கிராமமாகச் சென்று தேவனுடைய இராஜ்யத்தை குறித்து பிரசங்கித்து வந்தார். அவர் ஒரு பெரிய தனிநபர் ஊழியர். தனி நபராக ஏராளமான நபர்களை ஆதாயப்படுத்தினார், அவற்றைக்குறித்து சுவிசேஷமே சாட்சி பகரும் அளவுக்கு உள்ளது. அவர் தன்னை கவனிக்கிறவர்களை பார்த்தபோது, கிறிஸ்துவில்லாத பயங்கர நித்தியத்தோடு அவர்களைப் பார்த்தார். அவர்களிடம் தேவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே ஆத்துமாவை அழிக்க வல்லமை உண்டு என்று கூறினார் (மத்.10:28).
சாட்சியாக இருக்க அழைப்பு
கர்த்தர் தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்ததில் எவ்வித தவறும் இல்லை. என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் (மத்.4:19). அவர்கள் ஆழத்திலே வலைகளை போடுவதில் அவர் விருப்பமுள்ளவராயிருந்தார், கடலிலே வாழ்கின்ற மீன்களை விடவும், மனிதரைப் பற்றி அக்கறை உள்ளவராக இருந்தார் (லூக்.5:4,10). ஆவிக்குரிய விசுவாசிகளாக முன்னேறி செல்ல அவர்களை அழைத்தார். இதோ வயல் நிலங்கள், உங்கள் கண்களை ஏறெடுத்து பாருங்கள், அறுக்கிறவன் கூலியை வாங்கி நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்கிறான் (யோ.4:35-35) மனித இருதயத்திலே அவர்கள் விதையை விதைக்க வேண்டியிருந்தது (மாற்.4:14) ஜெபத்தினாலே நீர் பாய்ச்ச வேண்டியிருந்தது, தேவனுடைய இராஜ்யத்திற்காய் ஆத்துமாக்களை அறுவடை செய்ய வேண்டியிருந்தது. சினேகம் அற்ற உலகிலே உள்ள நீதிமன்ற அறையிலே சாட்சிகளாயிருந்தார்கள் (அப்.1:8) அழிந்து போகிறவர்களுக்கு தேவ செய்தியை கொடுக்க தேவ ஆவியானவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டார். அவர் அவர்களை தகுதிப்படுத்தினார், இவ்வாறாக ஆதி விசுவாசிகள் எங்கும் சென்று, வார்த்தையை பிரசங்கித்தார்கள் (அப்.8:4).
பலவீனமான மனிதனிடத்தில் தேவன் இப்படிப்பட்ட கடினமான ஒரு பணியை ஒப்படைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. லீறாய் ஈம்ஸ் எழுதுகிறார் தேவன், நாம் தான் முக்கியமாக சுவிசேஷத்தை பிறருக்கு சொல்லவேண்டும் என்று, அப்பணியை நமக்கு ஒதுக்கியிருக்கிறதற்கு பதிலாக, அவர் யோவான் 3:16 யை தினந்தோறும் வானத்திலே எழுதியிருக்க முடியும் அல்லது நட்சத்திரங்களில் கூட அவரால் எழுதியிருக்க முடியும். நற்செய்தி ஒரு பரிசுத்த ஒப்படைப்பு (1தெச.2:4). நமக்கு இது ஒரு வாழ்வா, சாவா என்ற பிரச்சனை (ரோ.9:3) கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் அமைதியாயிருக்காமல் அவர்கள் அதை சொல்லவேண்டும் (சங்.107:2-3) லேகியோனாகிய பிசாசுகள் பிடித்தவன் கல்லறைகள் மத்தியில் கொடுரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவன் மீட்கப்பட்ட பொழுதோ, இயேசு அவனை ஒரு சாட்சியாக உடனே அனுப்புகின்றார் (மாற்.5:19). ஒழுக்கமற்ற ஒரு பெண்மணி இரட்சிக்கப்பட்ட பொழுது, இயேசுவின் சுவிசேஷத்தின் முக்கிய சாட்சியாக அந்நியதேசத்திலே மாறினாள் (யோ.4:28-29,39) இயேசுவால் சொஸ்தமான கண்தெரியாத மனிதன், இயேசுவை பற்றி அதிகம் தெரியாதவனாக இருந்த பொழுதிலும் நான் குருடனாயிருந்தேன் இப்பொழுது காண்கிறேன் இது ஒன்றுதான் எனக்குத் தெரியும், என்று கூற முடிந்தது. வேதத்தில் உள்ள எந்த வசனமும், கிறிஸ்துவை அறிக்கைபண்ணுதல் ஆவிக்குரிய வரங்களை போல, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு ஒதுக்கப்பட்டதாகவோ, அல்லது அதற்காக பயிற்சி பெற்ற விசுவாசிகளுக்கான பணி என்றோ கூறவில்லை. பேதுருவைப் போல நமக்கு பேச முடியாவிட்டால், அந்திரேயாவைப் போல் பிறரை இயேசுவிடத்தில் கொண்டு வரமுடியும் (யோ.1:40-42) நம்மை சுற்றி இருப்பவர்களை அண்ட நம்மை தவிர வேறு ஒருவராலும் முடியாது, பாவத்திலிருக்கிற ஒருவரை எச்சரிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பே தவிர, வேறு ஒருவருடையது அல்ல.
சாட்சியாக இருப்பதற்கு தடைகள்
தேவன் அழைத்த முக்கியமான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, ஏராளமான சக்தி வாய்ந்த தடைகள் விசுவாசிகளுக்கு ஏற்படுகிறது. இதை நாம் கண்ஊடாகப் பார்க்கிறோம்.
1) பயம்
பிறருக்கு வெறுப்பு உண்டு பண்ணுகிறோம், பிரச்சனைகளைத் தூண்டி விடுகிறோம், நம்மை வெறியர்கள் என்று அழைப்பார்கள் என்று நாம் சாட்சியாக இருப்பதில் இருந்து பின் வாங்குகிறோம். சில வேளைகளில் தோற்றுவிடுவோமோ என்ற பயமும் நம் உள்ளத்தில் ஏற்படுகிறது. ஆனால் வேதம் கூறுகிறது, மனுஷருக்கு பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் (நீதி.29:25). பயம் தேவனுடைய ஆசீர்வாதத்தை தடுக்கிறது, அது மட்டுமல்ல பயப்படாதே எந்த வார்த்தையை அடிக்கடி நினைவு கூறுவதற்கு எதிராகவும் பயம் என்ற சொல் நிற்கிறது. நாம் என்ன செய்ய முடியும்? முழுதைரியத்திற்காக ஜெபம் பண்ண முடியும் (அப்.4:30). அந்த வகையில் பவுல் கூட பயத்தை அறிந்திருந்தார், எவ்வாறாகிலும் தேவன் அவருடைய தீர்மானத்தை ஆசீர்வதித்து அவனை ஒரு சாட்சியாக நிறுத்தினார் (1கொரி.2:3). நாம் திடம் கொண்டு பயம் இல்லாமல் இருக்கும்போது, பிற விசுவாசிகள் திடம் கொள்ளுவார்கள் (பிலி.1:14). பயம் இருந்தாலும் தைரியம் செயலாற்றுகிறது.
2)வல்லமையினுடைய பற்றாக்குறை
கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்முடைய வாழ்க்கை வெளிக்காட்டவில்லை என்றால் நாம் வெற்றி பெறமாட்டோம் (பிலி.1:27). ஆவியானவரின் வல்லமை இல்லாமல் கர்த்தரை பின்பற்றுகிறவர்கள் சாட்சியாக இருப்பதை அவர் விரும்பவில்லை (லூக்.24:49). தேவ பக்தி உள்ள விசுவாசியின் சாட்சியாக இருப்பது ஆவியினாலும், வல்லமையாலும் வெளிப்படுவதாகும் (1கொரி.2:5).
3)பயிற்சியினுடைய பற்றாக்குறை
கர்த்தர் தன்னுடைய சீஷர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏராளமான நேரத்தை செலவழித்தார். நாம் தர்மசங்கடமான நிலையில் இருப்பதாகவும், சரியா, பொருத்தமான வேதவசனங்களை பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் இருப்போமானால் நாம் தட்டுத்தடுமாறியவர்களாகவும், பணியை இடையில் விட்டுவிடுகிறவர்களாகவும் இருப்போம், ஆகவே நமக்கு தனிப்பட்ட முறையில் நற்சாட்சி தேவையானதாகவும், தகுதியாகவும் இருக்கிறது. இரட்சிப்பின் வழியை குறித்துத் தெளிவாக கூறுவதற்கு சுவிசேஷத்தில் உள்ள சில எளிமையான வசனங்களை மனதில் ஞாபகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்துகின்ற எளிமையான தொடர்ச்சி பின்வருகிறது:
1. தேவன் நமக்கு நித்தியஜீவனை அளிக்கிறார் (யோ.5:24).
2. எல்லாரும் பாவிகள் (ரோ.3:23).
3. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோ.6:23).
4. எல்லா மனிதரும் பாவ நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு மனம் திரும்புங்கள் (அப்.3:19-20).
5. நம்முடைய பாவங்களை கிறிஸ்து சிலுவையின் மேல் சுமந்தார் (1பேது.2:24).
6. கிறிஸ்து மாம்சத்தில் வெளியான தேவனாக இருக்கிறார் (யோ.1:1,14).
7. இரட்சிப்பு கிருபையினாலே, கிரியையினால் அல்ல (எபே.2:8-9).
8. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுதல் நித்தியஜீவனாகும் (1யோ.5:11-12).
9. நாம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைக்கப்படுகிறோம் (யோ.1:12).
10. இயேசுவை கர்த்தர் என்று அறிக்கை இடவேண்டும் (ரோ.10:9-10).
11. நமக்கு நித்தியஜீவன் உண்டு என்று நாம் அறிய முடியும் (1யோ.5:13).
4)செயல்படுதலில் பற்றாக்குறை
மற்றெல்லாப் பற்றாக்குறையை நீக்கினாலும், செயற்படுதலில் உள்ள பற்றாக்குறை தொடரலாம். புதிதாக கிறிஸ்துவுக்குள் வந்தவர்கள் தீவிரமாக முதல் சில நாட்கள் சாட்சியாக இருக்கிறார்கள். தேவையற்ற தாமதத்தைப் பற்றி பிரசங்கி 11:4ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, காற்றை கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்கிறவன் அறுக்கமாட்டான்.
வசனத்தினுயை சாட்சி
கிறிஸ்துவைப் பற்றி பிறருக்கு சொல்லுதல் சாட்சி கூறுதலின் தேவையாய் இருக்கிறது, நாம் இதை எப்படி ஆரம்பிக்க முடியும் என்பதை பார்ப்போம்:
1)கிறிஸ்துவைப் பற்றி ஆவலுள்ளவராய் இருங்கள்
கிறிஸ்துவைப் பற்றி பிறருக்கு முன்பாக உற்சாகமுள்ளவராக இருக்கவும். அவர் வரலாற்றிலே மிகவும் பிரச்சனைக்குரிய ஒரு மனிதராக இருந்தபோதிலும் அவர் மிகவும் கவரக் கூடியவராகவும் இருக்கிறார். அவரே முக்கிய பிரச்சனை, சபைகளோ அல்லது வீழ்ந்து போகிற கிறிஸ்தவர்களோ அல்ல.
2)துவங்குகிறவர்களாக இருங்கள்
இயேசு தேடுகிறவராய் இருந்தார்: அவர் ஜனங்கள் அவரிடத்தில் வரவேண்டும் என்று காத்திருக்கவில்லை (லூக்.19:10) அவர் இழந்துபோன ஆத்துமாவை தேடி சென்றார். பிறரோடு அறிமுகம் என்னும் பாலத்தைக் கட்டுவதற்கும், சுதந்திரமாக அவரோடு பழகுவதற்கும் தேடி செல்கிறவராக கிறிஸ்து இருந்தார், அவர்களை குறித்து அக்கறை உள்ளவராகவும் இருந்தார்.
3)பொதுப்படையான அக்கறையை அமைத்துக்கொள்ளுங்கள்
நாம் நல்ல கவனிப்பாளராக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். உலகத்தோடு நம்மை ஈடுபடுத்தாத அல்லது கறைப்படுத்தாத பொதுவான நிலையைக் கண்டு பிடிக்கமுடியாது. உலகிலே தொடர்ந்து முக்கியமான நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கின்றன, அவைகள் ஆவிக்குரிய சம்பாசனைகளைத் துவங்குவதற்கு வாய்ப்பளிக்க முடியும். அது மட்டுமல்ல, மக்களுடைய ஆவல்களும், தேவைகளும் வெளிப்படையாக காணப்படுபவைகளாக இருக்குமானால், அதன் மூலமாகக் கூட ஆவிக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
4)தெய்வீக நியமனத்துக்காக ஜெபிக்கவும்
தேவன் ஆத்துமாவைத் தேடி சென்று நடத்த விருப்பமுள்ளவராக இருக்கிறார் (அப்.8:26-39) ஒவ்வொரு தனிநபரும் தேவனுக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதரிடம் பேசுவதற்காகக் கூட அவர் ஊழியக்காரரை நீண்ட தூரம் வழி நடத்துவார் (யோ.4:3-7). கிறிஸ்துவுக்காக ஒரு ஆத்துமாவையாவது ஆதாயம் செய்ய ஜெபம் பண்ணுவோம்.
5)தேவனுடைய வசனத்தைப் பயன்படுத்துங்கள்.
வார்த்தை விதைகளாக இருக்கிறது. மனிதன் மறுபடி பிறப்பதற்கு அது ஒரு கருவியாக இருக்கிறது. (1பேது.1:23). நாம் அதை பிறருக்கு முன்பாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். (பிலி.2:14). தேவன் தன்னுடைய நோக்கத்தை அவருடைய வாயில் இருந்து புறப்பட்ட வசனம் நிறைவேற்றுவதைப் பாருங்கள். (ஏசா.55:10-11).
6)உங்களுடைய சுயசாட்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடைய இரட்சிப்பைக் குறித்து தெளிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவைகள் பிறருடைய வழியைத் தெளிவு படுத்துகிற ஆற்றல் உள்ளவைகளாகவும் இருக்க வேண்டும். முதலில் சாட்சியை எழுதுங்கள், திரும்ப திரும்பப் படியுங்கள், பிறகு பயன்படுத்துங்கள். அடுத்தபாடம் இதைப்பற்றிக் கூறி உங்களுக்கு உதவி செய்யும்.
7)நல்ல கேள்விகளை பயன்படுத்துங்கள்
இதுவே கர்த்தராகிய இயேசு பின்பற்றின முறையாகும். ஆவிக்குரியவைகளைப் பற்றி நீங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். கருத்து அறிய விடப்படும் கேள்வித்தாளை பயன்படுத்துகிறவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை பயன்படுத்தலாம். நாங்கள் இன்றைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து எப்படி தொடர்புடையவராக இருக்கிறார் என்று மக்களிடம் பேச வந்துள்ளோம். நீங்கள் சில நிமிடங்கள் இதற்காhக ஒதுக்குவீர்களா? உலகத்தில் இன்றைக்கு என்ன நடைபெறுகிறது, அது எங்கே ஆரம்பித்து என்ற கேள்வி மூலம் அவர்களின் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள். தற்காலத்தில் ஏராளமான புத்தகங்கள் மரணத்திற்கு பின் வாழ்வு உண்டா? என்ற கேள்வி பிரபலமானதாக உள்ளது. இதன் மூலம் கூட ஆவிக்குரிய சம்பாசனையை துவங்கலாம்.
ஜீவியத்தினுடைய சாட்சி
நம்முடைய சாட்சி நம்முடைய சொல்லோடு நின்று விடுவதில்லை, ஆனால் அவை நாம் நடத்துகிற வாழ்க்கையோடு கூட தொடர்புடையதாக இருக்கிறது மனிஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது (மத்.5:16). கிறிஸ்தவத்தை எதிர்த்துச் சொல்லப்படுகிற பொதுவான குற்றச்சாட்டு சபையிலே ஏராளமான மாயக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவனாக மாறாதிருப்பதற்கு இது ஒரு சாக்காக இருந்தாலும், ஒரு மாயைக்காரன் சபையிலே இருப்பது அதுவே மிக அதிகமான ஒன்று என்பதை நாம் ஒத்துக்கொள்ள முடியும். நம்முடைய கர்த்தர் பக்தி வேஷம் தரித்த மாயைக்காhரர்களைக் கண்டனம் செய்தார் (மத்.23;:13-39). பிறர் நம்மை தீமையான எதையும் சொல்ல வெட்கப்படும்படி நாம் நல்ல ஜீவியம் நடத்த வேண்டும் (தீத்து2:1;,8, 1பேது.3:16).
எல்லா விசுவாசிகளும் சாட்சியாக இருக்க அழைக்கப்பட்டிருந்தாலும், தேவன் பயன்படுத்தும்படியான எல்லாரும் தங்களை அவருக்கு கிடைப்பவர்களாக ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். ஜீவியத்தில் இச்சிறப்பான குணங்கள் வெளிப்படையாகத் தெரியவேண்டும்.
1)தேவன் போஷிக்கிற ஜீவியம்
உண்மையான திராட்சைக்கொடி கனிகொடுக்கும்படி செடியைச் சார்ந்து நிற்கும், அதுபோல திராட்சைச்செடியாகிய கிறிஸ்துவைக் கொடியாகிய நாம் சார்ந்து நின்றால் கனி கொடுக்கும்படி நம்மை போஷிப்பார். கிறிஸ்து கூறினார், என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோ.15:5). தினந்தோறும் பயனுள்ள தியான வாழ்க்கையை இப்போஷித்தலின் ஆதாரமாக இருக்கிறது. கிறிஸ்துவின் வசனம் சகல ஞானத்தோடு நம்மிடம் பரிபூரணமாய் வாசமாய் இருக்கவேண்டும் (கொலோ.3:16).
2)தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜீவியம்
குயவனுடைய கையில் களிமண் அவன் விரும்புவது போல செய்ய தன்னை ஒப்புக் கொடுப்பது போல, கீழ்ப்படிதலே முதன்மையான தரமாக இருக்கிறது (எரே.18:6). கிறிஸ்துவின் ஆவியின் கட்டுப்பாட்டிலே, நாம் கர்த்தரைப் பற்றி பேச தெய்வீக நியமனத்தோடு நடத்தப்படுவோம்.
3)பிறருக்காக பொங்கிவழியும் ஜீவியம்
நம்முடைய வாழ்க்கையில் நதியைப் போல ஆவி பொங்கி பொங்கி வழியும்போது, பிறர் தொடப்படுகிறார்கள், களைப்பை ஆற்றிக் கொள்கிறார்கள் (யோ.7:38). கிறிஸ்துவினுடைய வாழ்க்கை பொங்கி வழிதலே. சக்தி வாய்ந்த சாட்சி பகிர்தலாகும். வசனங்களையும், நம்முடைய அன்றாடத் திட்டங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதை விடவும், நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகின்ற அன்பின் செயலே பிறரை கவரும். நாம் தனியாக பிறரிடம் இருந்து பிரிந்திருக்காமல் பிறர் நம்மை எப்பொழுதும் தங்கு தடையின்றி அணுகுவதற்கு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் (லூக்.15:1-2). கிறிஸ்து ஜனங்களின் பிரச்சனைகளையும், நோய்களையும், கவலைகளையும் அறிந்திருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையாகிய வசனத்தை விதைக்கும் பொழுது பசித்தவர்களுக்கு ஆகாரத்தையும், பிணியாளர்களுக்கு சுகத்தையும், ஆறுதலையும் அருளினார் (மத்.13;:37).
ஏராளமானவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகள் தெரியும் ஆனால் இவைகள் இரட்சிப்புக்கு தூரமாய் இருக்கிறது. கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்கிற பொறுப்பு அவசியமாய் இருக்கிறது, இரட்சிக்கப்படாதவர்கள் இப்பொறுப்பை உணரார்கள். அதைத்தான் நாம் பேசவேண்டியதாயிருக்கிறது. கிறிஸ்துவே வாழ்க்கையில் வழி என்பதை நாம் பகிர்ந்து கொள்ள விருப்புகிறோம். நம்முடைய வாழ்க்கையில் அவர் முக்கிய பங்கு வகிக்கும் பொழுது நாம் நன்றாக இதைச் செய்ய முடியும். உண்மையில், கிறிஸ்துவே நம்முடைய ஜீவன் (கொலோ.3:4).
முடிவுரை
நம்முடைய விசுவாசத்தில் பகிர்ந்து கொள்வதின் முக்கிய நோக்கம், கிறிஸ்துவில் அன்பாக இருக்க வேண்டும் (2கொரி.5:14). அவர் நமக்காக மரித்தார், கட்டளையைத் தந்தார் இதுவே நம்மை செயல்பட செய்வதாக இருக்கவேண்டும். நம்முடைய அடுத்த மிகப் பெரிய நோக்கம் பிறரைப் பற்றிய அன்பான கரிசனையாகும். இவை இரண்டுமே மத்தேயு 22:37-39ல் இருந்து காணப்படுகிறது.
பாடம் 11 ற் கான கேள்விகள்
1) மாற்கு 5:2-20தை படிக்கவும். சற்று முன்பாக தன்னால் சொஸ்தமாக்கப்பட்ட மனிதரிடத்தில் யேசு
என்ன கூறினார் (19வது வசனம்)?
இயேசுவின் வேண்டுதலின் நோக்கம் என்ன?
எப்படி அம்மனிதன் இயேசுவின் வேண்டுதலுக்கு கீழ்ப்படிந்தான், அதனால் விளைவு என்ன (20ம் வசனம்)?
இதிலிருந்து உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்ன கடைப்பிடிக்க முடியும்?
2.கொரிந்தியர் 5:18,20 வசனத்தின் முற்பகுதியை சொந்த நடையில் எழுதுக!
உங்களுடைய கடமை என்ன?
எப்படி அதை நிறைவேற்ற நோக்கமாய் இருக்கின்றீர்கள்?
3) சுவிசேஷகர்களே சாட்சியாக இருக்கவேண்டும் என்ற கூற்றுக்கு எப்படி நீங்கள் பதில் கூறுவீர்கள்?
4) அவிசுவாசியின் நித்திய முடிவைப் பற்றி பின் வருகின்ற வசனங்கள் கூறுவதென்ன?
மத்.7:13
மத்,13:41-47
உங்கள் வாழ்க்கையில், இழந்துபோனவர்களுக்கு சாட்சி பகர்தலை எப்படி (எசே.33:1-9) ன் படி பொறுப்பெடுத்துள்ளீர்கள்?
5. சில வேளைகளில் நிராகரித்து விடுவார்களோ என்று பயந்து நண்பர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி சாட்சி கூறுவதில்லை. நாம் நம்முடைய நண்பர்களுக்கு சாட்சி கூற வேண்டியதாய் இருக்கிறதா? (எசே.33:1-9)?
6. நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அடிப்படையில் சாட்சி பகர்தல் ஊழியத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தெசலோனிக்கேயர் தங்கள் வாழ்க்கையை கொண்டு சாட்சி பகர்ந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது (1. தெச.1:5-9)?
மத்தேயு 5.16 உங்கள் வாழ்க்கையில் பக்கத்தில் உள்ளவர்களோடும், பாடசாலை மற்றும் வேலை செய்கிற இடங்களிலும் எவ்வாறு கைக்கொள்ள முடியும் கூறுக?
7) சில விசுவாசிகள் கூறுகிறார்கள் நம்முடைய வாழ்க்கை ஒரு சாட்சியாக இருப்பதால், சுவிசேஷத்தைப் பற்றி ஒன்றும் கூறத்தேவையில்லை என்று. ரோமர் 10:14-17 யை அடிப்படையாகக் கொண்டு இதற்கு எப்படி பதில் கூறுவீர்கள்?
8. வாழ்க்கை சாட்சியையும், வார்த்தை சாட்சியையும் கூட்டாக சேர்க்க முடியும், எப்படியெனில் கிறிஸ்து எப்படி நம்முடைய சொந்த வாழ்க்கையை மாற்றினார் என்று பிறருக்கு எளிமையாகச் சொல்லும் பொழுது யோவான் 9:25ல் கண்தெரியாத மனிதரிடத்தில் இயேசுவைப் பற்றி கேட்டபொழுது என்ன கூறினார்?
எப்படி கிணற்றண்டையில் சந்திக்கப்பட்ட ஸ்திரீ அவளுடைய சாட்சியைப் பகிர்ந்தாள்?
(யோ.4:28-29)?
அதன் விளைவு என்ன (வசனம் 39)?
9. புதிய கிறிஸ்தவர்களுக்கு தனி நபர் சாட்சி ஒரு உன்னதமாக ஒரு கருவி மட்டும் அல்ல, ஆனால் அனுபவம் உள்ளவர்களால் வல்லமையாக பயன்படுத்தப்படுபவைகளாகவும் இருக்கிறது. அப்போஸ்தலர் 26:1-29தை படிக்கவும். எப்படி பவுல் தன்னுடைய சாட்சியைப் பயன்படுத்துகிறார்?
சுவிசேஷத்தை கேட்கும்படியாக பவுல் தன்னுடைய சாட்சியின் துவக்கத்திலே என்ன செய்கிறார் (வசனங்கள் 2;,3)?
கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு முன்னால் தன்னுடைய வாழ்க்கையைக் குறித்து சொல்லும் பொழுது (வசனங்கள் 4,5,9-11) ஏன் பவுல் நன்மையான மற்றும் தீமையான காரியங்களை கூறுகிறார்?
எப்படி பவுல் கிறிஸ்தவன் ஆனான் என்பதின் விளக்கத்தை எவ்வாறு வல்லமையாக பயன்படுத்துகிறார் (வசனங்கள் 12-15)? கிறிஸ்துவை சந்தித்தபின்பு அவரின் வாழ்க்கை எதைப்போல் ஆனது (வசனங்கள் 9-22)?
எப்படி பவுல் தன்னுடைய சாட்சியில் சுவிசேஷத்தை சேர்த்துள்ளார் (வசனம் 23)? இது ஏன் முக்கியமாக இருக்கிறது?
10. விண்ணப்பம் பண்ணி, வருகிற வாரத்திற்குள் நீங்கள் சாட்சி பகரப்போகிறவரின் பெயரை எழுதுக______________________________________________
இவருக்காக ஒரு நல்ல செயல் செய்க, பின்வரும் பகுதியில் நீங்கள் எப்படி சாட்சி பகிர்ந்தீர்கள் அவரின் மறு உத்தரவு எப்படி இருந்தது என்பதை எழுதவும்.
கழிந்தவாரம் நாம் செய்த நல்ல செயல்: _______________________________________
__________________________________________________________________.
அதற்குரிய பதில்: ______________________________________________________.