அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி Post பாடம்13: கர்த்தருடைய இராப்போஜனம்

அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம்13: கர்த்தருடைய இராப்போஜனம்

கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்கு முன்பாக அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் கர்த்தருடைய இராப்போஜனம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுடன் சேர்ந்து இவ் இறுதி இரவு போஜனம் அல்லது இரவு சாப்பாடு என்று அழைக்கப்படும் இவ்விருந்தைச் செய்ததால் இது மனதில் ஆழமாக பதியும் காட்சியாக இருக்கிறது. இக்காட்சியானது சித்திரமாக வரையப்பட்டு கிறிஸ்தவ கலையினில் ஒன்றாக தோன்றிய பொழுது உலகிலுள்ள ஏராளமான மக்கள் இக்காட்சியை உடனடியாக அடையாளம் கண்டு கொள்கின்றனர். துவக்கக்கால விசுவாசிகள் இக் காட்சியை தங்கள் மனதில் பதித்து, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள ரோம பாதாள அறைகளில் உள்ள சுவர்களில் வரைந்து வைத்தனர்.

கர்த்தராகிய இயேசு யூதர்கள் பஸ்கா பண்டிகையின் இரவிலே முற்றிலும் புதிதான இம் முறையை அறிமுகப்படுத்தினார். அவர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, பிட்டு அவருடைய சீஷர்களிடத்தில் கொடுத்து, வாங்கி புசியுங்கள் இது என்னுடைய சர்Pரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்கு கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள், இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன் படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மத்.26:25-28) மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது (மாற்.14:22-25 ; லூக்.22:14-20).
போஜனத்திற்கான பெயர்கள்

இராப்போஜனத்தை ஏற்பாடு செய்ததும், அதில் கனம் பொருந்திய விருந்தினராகவும் கர்த்தராகிய இயேசு இருப்பதால் இது கர்த்தருடைய இராப்போஜனம் என்றழைக்கப்படுகிறது (1.கொரி.11:21). சாதரண இராப்போஜனம் மட்டும் அல்ல, இதில் கர்த்தர் தன்னுடையவர்களுக்காக உண்டுபண்ணிவைத்துள்ளவைகள் இதில் அடங்கி உள்ளது. ஆகவே இது கர்த்தருடைய போஜனபந்தி (1.கொரி.10:21). இவ்விருந்து ஐக்கியம் (1.கொரி.10:16) என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நாம் இவ்விருந்தில் பங்கு பெறுகின்ற பொழுது கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்கிறவர்களாக இருக்கிறோம். அப்பம் பிட்குதல் (அப்போஸ்தலர் 2.:42 ; 20;;;:7) என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது சாதாரண, எளிமையாக உணவு உட்கொள்ளுதலை குறிக்கிறதாக இருக்கிறது கர்த்தர் இதை நினைவுகூரும்படி கட்டளையிட்டதால், ஏராளமானோர் இது கர்த்தரை நினைவு கூருதல் என்று கூறுகின்றனர். கர்த்தராகிய இயேசு அப்பத்திற்கும், பாத்திரத்திற்கும், ஸ்தோத்திரம் பண்ணியதால் சிலர் யுகாரிஸ்ட் என்று அர்த்தமுள்ள ஸ்தோத்திரம் செலுத்துதல் என்றும் கூறுகின்றனர் (மத்.26:26) ஆனால் அவ்வாறு வேதவாக்கியத்தில் அழைக்கப்படவில்லை.

சில சபைகள் சாக்கிரமந்து என்று இப்போஜனத்தை அழைக்கின்றனர். ரோம போர் சேவகன் இராணுவத்தில் சேர்க்கின்ற பொழுது எடுக்கின்ற விசுவாச பிரமாணத்தைக் குறிக்கும் சொல்லே இது ஆகும். ஆனால் பிற்காலத்தில் இச் சொல்லின் பொருள் இக்கருத்திலிருந்து விலகி சென்றுள்ளது. சில சபைகளில் இச் சாக்கிரமந்து தேவனுடைய கிருபையை அருளுகின்ற சடங்காக கருதுகின்றனர், மேலும் இதன் அதி உன்னததன்மை பங்கு பெறுகின்றவர்களுக்கு நலம் விளைவிப்பதாகவும் கருதுகின்றனர். சிலர் பாவமன்னிப்புக்கு சம்மந்தமுள்ளது என்று விசுவாசிக்கின்றனர். சாக்கிரமந்து என்ற பதம் வேதத்தில் காணப்படவில்லை. சாக்கிரமந்து கருத்துகளுக்கும், இவ்விருந்தை ஆவிக்குரிய உண்மையை வெளிப்படுத்துகின்ற சின்னங்களின் ஞாபகார்த்தம் என்று கருதப்படுகின்றவர்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகிறது. இதை மனதில் திரும்ப கொண்டு வருதல் நல்லது, யூதர்களின் மிருகப் பலிகள் ஒரு போதும் பாவத்தை நிவிர்த்தி செய்வதில்லை, ஆனால் அவைகள் சிலுவையில் கர்த்தராகிய இயேசு சிந்திய இரத்தத்திற்கு எதிர்பார்ப்புகளாக இருந்தன. அவருடைய இரத்தம் மட்டுமே பாவத்தை நீக்கும் (எபி.9:12-14).

இராப்போஜனத்திற்கான வரலாற்று பின்னணி

கர்த்தருடைய இராப்போஜனமானது யூதர்கள் கொண்டாடுகின்ற பஸ்கா பண்டிகையின் நாளின் இரவில் கர்த்தராகிய இயேசுவால் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பாக தேவனுடைய கரம் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து தேவனுடைய கட்டளையின்படி எகிப்து முழுவதும் வரப்போகிற நியாயத்தீர்பிலிருந்து இஸ்ரவேலர் காக்கப்பட, பழுதற்ற ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு அதன் இரத்தம் வீட்டுவாசல், நிலைக் கால்களில் தெளிக்கப்படவேண்டும். இது இஸ்ரவேலரை மகா பெரிதான நியாயத்தீர்ப்பில் இருந்து பாதுகாக்கும். (யாத்.12) தொடர்ந்து கடைபிடித்து, தவறாமல் செய்ய வேண்டி இப்பண்டிகையானது ஆழமான முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. இது வருகிற காலத்தில் நடைபெறப்போகிற மகாபெரிய பலியை சுட்டிக்காட்டுவதாக இருந்தது, இப்பலி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்து தேவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்து உண்மையாகவே பாதுகாக்கும். தேவன் தன்னுடைய ஆட்டுக்குட்டியை நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ஆயத்தப்படுத்தி இருந்தார் (ஆதி.22:.8 ; ஏசா.53:7). யோவான்ஸ்நானகனால் இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக சுட்டிக்காட்டப்பட்டார் (யோ.1:29). கிறிஸ்துவின் மகிமையான பெயர்களில் ஒன்று ஆட்டுக்குட்டியானவர் என்பதாகும் (வெளி.5:6,12). அவர் பஸ்கா விருந்தின் நிறைவேறுதலாய் இருந்தார். நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டார் (1கொரி.5:7). பழைய ஏற்பாட்டில் காணப்படும் இவைகள் வரப்போகிற பெரிய நிறைவேறுதலுக்கு நிழலாக இருந்தது (கொலோ.2:16-17 ; எபி.10:1).

எல்லாப் பக்தியுள்ள யூதரும் பஸ்காவை உண்மையாக அனுசரிப்பார்கள் (மத்.26:17). இது மீட்பின் ஞாபகார்த்தமாக இருந்தது. இந்த புனித மீட்பை ஞாபகப்படுத்தும்பொழுது, இயேசு அப்பத்தையும், இரசத்தையும் ஞாபகச்சின்னமாகக் கடைப்பிடிக்க ஏற்படுத்தினார். அதன் பிறகு விசுவாசிகள் இரட்சிப்புக்காகக் கொடுக்கப்பட்ட அவரின் சரீரத்தையும், சிந்தப்பட்ட அவரின் இரத்தத்தையும் ஞாபகப்படுத்தவேண்டியதாக இருக்கிறது. யூதர்களுக்கு எவ்வாறு பஸ்கா இருந்ததோ, அதேபோல் இராப்போஜனம் கிறிஸ்தவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இது தேவனுடைய பார்வையில் இருந்து பஸ்காவை மாற்றியது. இஸ்ரவேலருக்கு ஏராளமான சடங்குகள் இருந்தது. ஆனால் கிறிஸ்தவ சபைக்கு சேர்ந்து கடைப்பிடிக்க இது ஒன்றே கொடுக்கப்பட்டது.

கர்த்தராகிய இயேசு விசுவாசிகள் கடைப்பிடிக்கும்படியாய் கொடுத்த இராப்போஜனத்தின் முக்கியத்துவம் பற்றி அப்போஸ்தலனாகிய பவுலுக்கு நேரடியாகக் கூறினார். இயேசு சொன்னார்: என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் (1.கொரி.11:23-25). கர்த்தருடைய இராப்போஜனம் அவர்கள் ஆராதனையின் ஒழுங்கான ஒரு பகுதியாக இருந்தது (அப்.2:42,46). ஆதிச் சபைகள் வாரத்திற்கு ஒருமுறை இதைக் கடைப்பிடித்தார்கள் (அப்.20:7). உயிர்த்தெழுந்த நாளிலே இது அனுசரிக்கப்பட்டிருந்தது. ஆதிச் சபையின் பிதாக்கள் அல்லது தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் இராப்போஜனம் எல்லாக் கர்த்தருடைய நாளிலும் அல்லது ஞாயிறுதோறும் அனுசரிக்கப்பட்டதாகக் குறித்துள்ளனர்.

இராப்போஜனத்தை அனுசரித்தல்

1) யார் பங்கு பெறலாம்?
நிச்சயமாகவே பஸ்கா ய+தர்களுக்கு மட்டுமே என்றால் (யாத்.12:43), கர்த்தருடைய இராப்போஜனம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே. கர்த்தர் (தன்னுடையவர்களுக்காக) முதல் முதலாக இவ்விருந்தை ஏற்படுத்தினார். அவர் உயிர்த்தெழுந்த பின்னர் அவருடைய சீஷர்கள் அவரை நினைவுகூரும்படியாக அப்பம்பிட்டார்கள். மேலும் இராப்போஜனம் ஆயத்தப்பட்ட கிறிஸ்தவர்களுடையது. சில விசுவாசிகள் தன்னுடைய ஆவிக்குரிய நிலையைக் குறித்து அக்கறையின்றி இதில் பங்கு பெறுகின்றனர். அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் எச்சரிக்கப்படுகின்றனர் (1.கொரி.11:18-31). மிகத் தீமையான காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் இப் பந்தியில் பங்கு பெறுதலில் இருந்து புறம்பாக்கப்படவேண்டும் (1.கொரி.5:12-13). அது மட்டும் அல்ல சுவிசேஷத்தையோ, கிறிஸ்துவின் ஆள்த்தத்துவத்தையோ குறைவாக மதிப்பிடுகிற போதனைகளை உடையவர்களும் இதில் பங்கு பெற தகுதியற்றவர்கள் (2.யோ.9,10 ; கலா.5:12-13).

சுருக்கமாகவும் இறுதியாகவும் கூறுவதென்றால் கிறிஸ்துவைக் கர்த்தர் என்றும் இரட்சகர் என்றும் அpறக்கை செய்து, விசுவாசத்திலே தொடர்ந்து நிலையாக நடக்கிறவர்கள் இப் போஜன பந்திக்கு வர தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள்.

2) என்ன விதமான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும்?
கர்த்தரே நமக்கு முதன்மையான வழிகாட்டியாக இருந்து, அவரால் ஏற்படுத்தப்பட்ட பந்தியை ஆசரிப்பதற்கு மாதிரியை வைத்திருக்கிறார். இது ஒரு ஆடம்பர சடங்கல்ல, அனால் எளிமையான தன்மையைக் கொண்டதாக உள்ளது. கர்த்தர் குறிப்பிட்ட நிலையான எந்த முறையையோ, சட்டத்தையோ கூறி இருக்கவில்லை. கர்த்தர் மட்டுமே விருந்தை முன்னின்று நடத்தினார். பந்தியில் பரிமாறுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரு சாதாரணபொருட்கள் அப்பமும், பாத்திரமும் ஆகும். விசேஷமான அப்பமாக இருக்கவில்லை. இருந்தாலும் புளிப்பில்லாத அப்பம் அப்பொழுது பயன்படுத்தப்பட்டது. நாம் இப் பந்தியில் பங்கு பெறுகின்றபொழுது பரிசுத்தமாக இருக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. நம்மில் உள்ள புளித்தமாவைக் களைந்துவிட வேண்டும் (1.கொரி.5:6-8). அப்பம் எவ்வகையைச் சார்ந்ததானாலும் பிரச்சனை அல்ல. பாத்திரம் திராட்சைப்பழ இரசத்தைக் கொண்டதாக இருந்தது (மாற்.14:25 ; மத்.26:29). திராட்சை இரசம் எவ்வளவாய் புளிப்பிக்கப்பட்டது அல்லது எவ்வளவு தண்ணீர் சேர்க்கப்பட்டது என்பது பற்றி முடிவில்லாத விவாதம் நடைபெறுகிறது. வேதம் இவற்றைப் பற்றி தெளிவாகக் கூறவில்லை. அப்பமும் பாத்திரமும் கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தையும் இரத்தத்தையும் மாதிரியாகக் காட்டுகிறது. நாம் கர்த்தரால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் இருக்கவேண்டுமேயொழிய அடையாளமாய் வைக்கப்பட்டுள்ள பொருளின் தன்மையால் அல்ல. ஒவ்வொரு சீஷரும் கொஞ்சம் அப்பத்தையும், பாத்திரத்தையும் பகிர்ந்துகொண்டனர். 1.கொரிந்தியர் 11:32-34ல் கூறப்பட்டுள்ளவைகள் 1.கொரிந்தியர் 11ம் அதிகாரத்தில் விசுவாசிகள் அப்பம்பிட்கவென கூடுகின்றபொழுது கடைப்பிடிக்கின்ற மாதிரியின் தொடர்ச்சியாக இருப்பதாகக் காணப்படுகிறது. அநேக சகோதரர்களும் பங்கு பெற்றதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. கிரமமாகவும், ஒழுங்காகவும் இருக்கவேண்டியது குறித்து வலியுறுத்தப்படுகிறது. இத்தோடு ஒரு ஐக்கிய விருந்தும் அடிக்கடி சேர்க்கப்பட்டது.

3) நாம் எப்படிக் கர்த்தரின் சரீரத்தை நிதானித்து அறிவது? (1.கொரி.11:29)
கர்த்தராகிய இயேசு நம்முடைய பாவத்தைப் போக்குவதற்காக தன்னையே சிலுவiயில் ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த அந்த மேலான செயலை நினைவுபடுத்துகின்ற பொருள்களின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்திருக்கவேண்டும் (எபி.9:28). நாம் நம்மை நாமே சோதித்தறிந்திருக்கவேண்டும் (1.கொரி.11:28-32). சிலர் தவறுதலாக இவ் இராப்போஜனத்தை இயேசு அவரின் சரீரத்தைப் புசிக்கவும், இரத்தத்தைப் பானம் பண்ணவும் கூறியதோடு ஒப்பிடுகின்றனர் (யோ.6:53). இவ் வசனம் இராப்போஜனத்தோடு தொடர்புடையது, கிறிஸ்து செய்துமுடித்த இரட்சிப்பின் பணியை விசுவாசிகள் ஆவிக்குரிய பிரகாரமாக ஏற்றுக்கொள்ளுதலைக் குறிப்பதாகும். இது என்னுடைய சரீரம் என்ற வாக்கியம் நானே வாசல் என்ற அவருடைய வார்த்தையைப் போன்றதாக உள்ளது. இரண்டுமே அர்த்தம் விசேஷமான மொழியால்க் கூறப்பட்டுள்ளது. இப்படிப் பல வாக்கியங்கள் உள்ளது. தவறான போதனைகள் அற்புதகரமான அப்பத்திலும், இரசத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்போம்.

அ) அப்பமும் இரசமும் முறையே இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுதல்:
இக் கருத்தை ஆங்கிலத்தில் டிரான்ஸ்சப்டான்சியேன் (வுசயளெரடிளவயவெயைவழைn) என்று கூறுவர். இக் கருத்தின்படி அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உண்மையான சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றமடைகிறது. இவ்வாறு இவைகள் மாற்றம் அடைவதால் பங்கு பெறுகிறவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் புசிக்கின்றனர். இக் கருத்து ஒவ்வொரு முறையும் பந்தி அனுசரிக்கின்ற பொழுது கல்வாரியின் பாவத்திற்காக செலுத்தப்பட்ட பலி திரும்பவும் திரும்பவுமாக பலியிடப்படுகின்றது என்பதைக் குறிக்கிறது. எபிரெயர் 10:10-18ல் இக் கருத்தை மறுக்கிறது. எப்படியெனில் அநேக தரம் செலுத்தப்படுகின்ற பலி இல்லாமல் பாவத்திற்காக ஒரே தரம் செலுத்தக்கூடிய பலியே உண்டு. அந்தப் பலி முடிவடைந்ததும் பரிபூரணமானதுமாக இருக்கிறது.

ஆ) கான்சப்டான்சியேசன்: (Consubtantiation)
இக் கருத்தின் பொருள் என்னவென்றால் அப்பமும், இரசமும் மாற்றம் அடையாது. ஆனால் விளக்கம் கூறக்கொள்ளாத நிலையில் கிறிஸ்துவின் சரீரம் திடரூபமாக இருக்கிறது. அது பங்கு பெறுபவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இக் கருத்துக்கு கர்த்தருடைய வார்த்தையில் ஆதாரம் இல்லை.

இ) இப்பானேஷன்: (Impanation)
இக் கருத்தின்படி பந்தியில் பங்கு பெற்று அவற்றை உட்கொள்ளும்போது பங்கு பெறுவோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்றனர். ஏன் என்றால் கிறிஸ்துவே எலும்பிலும், ஊனிலும் புகுந்து அவருடைய ஜீவனை நமக்குள் பரவச் செய்கிறார். இதற்குக்கூட கர்த்தருடைய வார்த்தையில் ஆதாரம் இல்லை. இக் கருத்தை வலியுறுத்துவது கால்வின் அவார்.

4) அப்பம் பிட்பதால் நாம் எதை நிறைவேற்றுகிறோம்?
நாம் இப் பந்தியைக் கடைப்பிடிப்பதால் கர்த்தருடைய வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்து, அதன்படி செய்கிறோம். மேலும் அவர் மீது அன்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. அப்போஸ்தலரின் நடைமுறைகளுக்கு ஒத்ததாகவும் இது இருக்கும். மொத்தத்தில் விசுவாசிகள் என்ற அளவில் கிறிஸ்து கூறிய முறையின்படி நாம் அவரை நினைவுகூருகிறோம். நம்முடைய வழியின்படி அல்ல. சுவிசேஷத்தின் மூலமாக கிறிஸ்து ஜீவனையும், அழிவில்லாமையையும் வெளிப்படையாக்கினார். அதில் நாம் பங்குள்ளவர்கள் ஆனோம் என்கிற விதத்தில் சந்தோஷப்படுகிறோம். நாம் தனி நபராக பந்தியில் பங்கு பெறுகின்ற பொழுது விசுவாச சமூகத்தில் பங்கு உள்ளவர்களாக இருக்கிறோம். ஒரே அப்பத்தில் பங்கு பெறுவதால் நம்முடைய ஒற்றுமை விளங்கப்பண்ணப்படுகிறது (1.கொரி.10:16). பாத்திரம் ஐக்கியத்தைக் குறிக்கிறது அல்லது பொதுவான பகிர்வைக் குறித்துச் சொல்கிறது (1.கொரி.10:17). அவர் நம்முடன் இருந்து எல்லாவற்றையும் செய்து நிறைவேற்றியதுபோல, நாமும் அவருடன் ஒன்றாய் இருக்கிறோம். அவர் பாவத்திற்கு நேராகவும், நீதிக்கு நேராகவும் கொண்டுள்ள மனநிலையை நாம் பகிர்ந்து கொள்ளுகிறோம். நாம் அப்பத்தைப் புசிக்கும்போதும் பாத்திரத்தில் பருகும்போதும்
கர்த்தரின் மரணத்தைப் பிரகடனப்படுத்துகிறோம் (1.கொரி.11:26). இவ்விருந்து இரட்சிப்பின் செய்தியாக இருக்கிறது. இதை எதுவரையிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்றால் அவர் வரும்வரையிலும் ஒவ்வொரு தடவை நினைவுகூரும்போதும் அது கிறிஸ்துவின் வருகைக்கும் முந்தினதாக இருப்பதற்குச் சாத்தியக்கூறுகள் இருக்கிறது.


இராப்போஜனத்திற்கு ஆயத்தமாகுதல்

பழைய ஏற்பாட்டில் பஸ்காவுக்கு ஆயத்தமாகுதல் ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியது. கவனமின்மையால் யாரும் பங்குபெறமுடியாது. நாம் ஆயத்தமற்ற நிலையில் இருக்கக்கூடாது.

1) சோதித்தறிதல்: 
சுய பரிசோதனையோடு உண்மையான கர்த்தரின இராப்போஜனம் ஆரம்பமாகிறது (1.கொரி.11:28-32). பங்கு பெறுவோர் விடுபட்டுவிடாமல் இருக்க ஆயத்தமாக வேண்டும். ஒருவர் முதலில் அவர் கர்த்தரோடு கொண்டுள்ள உறவைச் சோதித்துப் பார்த்து, தெரிந்து ஏதாவது பாவம் செய்திருந்தால் மன்னிப்புக் கோரவேண்டும். அதன்பின்பு பிறரோடுள்ள உறவைச் சோதித்தறிய வேண்டும் (விசேஷமாகக் கிறிஸ்தவர்களோடு).விருந்தில் பங்கு பெறுவதற்கு முன்னால் பிற விசுவாசிகளோடு உள்ள பிரச்சனையைத் தீர்க்க முயற்சி எடுக்கவேண்டும் (மத்.5:23-24). தேவனுடைய நியாயத்தீர்ப்பு வராமல் இருக்க வேதவாக்கியம், சுயபரிசோதனை நிராகரிக்கப்படுவதைப் பற்றி எச்சரிக்கிறது. கொரிந்து சபையில் அபாத்திரமாக பந்தியில் பங்கு பெற்றதால் அநேகர் வியாதியுள்ளவர்களாகவும், அநேகர் நித்திரை அடைந்தும் இருக்கிறார்கள் (1.கொரி.11:30).

2) தியானித்தல்:
விருந்தைப் பொழுதுபோக்கவோ, கர்த்தரை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத முறையிலோ நாம் செய்தால் நம்முடைய ஆயத்தம் தோல்விகரமாக இருக்கும். கர்த்தருடைய வார்த்தையை வாசித்தல், ஆவிக்குரிய பாடல்கள் பாடுதல், விசுவாசிகளோடு அல்லது குடும்பத்தாரோடு கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பகிர்ந்துகொள்தல் ஆகிய வழிகளில் கர்த்தரை நினைவு கூருவதற்கு ஆயத்தமாகலாம். நிச்சயமாகவே நேரத்திற்கு முன்பாக ஆயத்தம் ஆக்கப்பட்டதால்த்தான் நாம் கர்த்தருக்குரியதைக் கொண்டுவர முடியும். தாவீது கூறுகிறார் நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியைச் செலுத்தாமல் (2.. சாமு.24:24) நாம் முன்கூட்டியே நம்மை நாமே ஆயத்தமாக்கினால் கர்த்தரின் இராப்போஜனம் உயிரற்ற ஒரே மாதிரியான தன்மையில் இருந்து விடுபடக்கூடியதாக அமையும்.

முடிவுரை

ஆராதனை விசுவாசியின் முதன்மையான பொறுப்பும், தனி உரிமையும் ஆகும் (யோ.4:23 ; லூக்.10:41-42). நாம் ஆசாரியர்கள் என்பதினால் ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகிறோம் (1.பேது.2:5). கர்த்தர் கூறியவண்ணம் ஒழுங்காக அவரை நினைவு கூறவேண்டும் என்பது பொழுது போக்கு அம்சங்கள், குடும்ப சம்பந்தமான அனைத்து கடமைகளையும் விட முதன்மையான இடத்தில் இருக்கவேண்டும். விசுவாசியினுடைய ஆசாரியத்துவ படிப்பின் முக்கிய பகுதியாக நம்முடைய உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியைச் செலுத்தச் சந்தர்ப்பம் பெற்றிருக்கிறோம் (எபி.13:15). நமக்குரியவைகளை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதும், ஆராதனையின் செயலாக உள்ளது (பிலி.4:17-18). இறுதியாக நம்முடைய சரீரங்களைப் பிரியமுள்ள ஜீவபலியாகக் கொடுக்கவேண்டும் (ரோ.12:1-2). இயேசு சொன்னார் என்னை நினைவுகூருங்கள்.

பாடம் 13 ற் கான கேள்விகள்

1) முதல் முதலாக பஸ்கா அனுசரித்ததை ஆராய்ந்தது பாருங்கள் (யாத்.12:1-14)! அனுசரித்ததின் நோக்கம் என்ன (வசனங்கள் 1-14)?

பஸ்கா அனுசரிப்பதில் ஆட்டுக்குட்டியின் பங்கு என்ன?

2) எப்படிக் கிறிஸ்து கடைசிப் பஸ்காவை பயன்படுத்தி (லூக்.22:7-18) கர்த்தருடைய இராப்போஜனத்தை அறிமுகப்படுத்தினார் (லூக்.22:19-20)?

கர்த்தராகிய இயேசு அப்பத்திற்கும், பாத்திரத்திற்கும் என்ன புதிய முக்கியத்துவம் சேர்த்தார்?

3) மேற்கூறப்பட்டுள்ளவைகளில், ஏசாயா 53:7 ; யோவான் 1:29 ; வெளி.5.8-9 பார்க்கும் பொழுது தம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து (1கொரி.5:7) என்கிற வாக்கியத்தின் பொருள் என்ன?

4) அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர் 11:23-26ல் கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்து மேலும் விளக்கங்களையும், நோக்கத்தையும், அதன் பொருளையும் கூறுகின்றார். எங்கிருந்து இதை கற்றுக்கொண்டார்?

இராப்போஜனத்தில் பங்கு பெறுவதால் நாம் என்ன பிரகடனப்படுத்துகிறோம்? விளக்குக.

எவ்வளவு காலம் இவ்வாறாக கர்த்தரை நினைவு கூறவேண்டும்?

5) பவுல் 1.கொரிந்தியர் 10:16-17ல் அப்பத்தையும், பாத்திரத்தையும் குறித்து கூறுவது என்ன?

6) எப்படி ஆதி சபை கர்த்தருடைய கட்டளையை கீழ்ப்படிந்து அவரை நினைவு கூர்ந்தார்கள் (அப்.2:42,20:7)?

7) கர்த்தரை ஆராதிப்பதில் எவ்விதமாக வித்தியாசமான வழிகளில் நம்முடைய பலிகளை செலுத்தலாம் (எபி:13:15 ; பிலி.4:17-18 ; ரோ.12:1-2)?

8 ) கிறிஸ்தவன் என்ற முறையில் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு பெறுவதற்கு முன்னால் அவனின் பொறுப்பு என்ன (1கொரி.11:27-32)?

பாவத்தோடு இராப்போஜனத்தில் பங்கு பெறுவதின் தீவிரத்தன்மையைக் குறித்து 1கொhந்தியர் 5ம் அதிகாரத்தில் என்ன கூறப்படுகிறது?

9. கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு பெறுவதற்கு முன்னால் சாதாரணமாக செய்ய வேண்டிய ஆவிக்குரிய ஆயத்தம் என்ன? வரும் நாட்களில் ஆராதனை மிகவும் பொருள் உள்ளதாய் இருக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?

10. சபையின் ஒட்டுமொத்த அனுபவத்தின் (அப்.2:42) உங்களுக்கு அப்பம் பிட்குதலில் என்ன பொறுப்பு உள்ளது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.