விசுவாசத்தின் கிரியை

22 பிப்ரவரி 2018
விசுவாசத்தின் கிரியை

தேவ செய்தி
சார்லஸ் MSK



ஆதார வசனம்

விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.

யாக்கோபு 2:22





கிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்றைக்கு நாம் தியானிக்க இருப்பது தலைப்பில் கொடுத்த படியே  விசுவாசத்தின் கிரியை இதை நாம் சரியாக புரிந்துகொள்ள நீங்கள் என்னோடு பொறுமையாக பயணப்பட வேண்டுகிறேன்.
விசுவாசம் என்பது கிரியை செய்ய வைக்க கூடிய ஒன்று. இந்த விசுவாசத்தை விவரிக்கும் போது பவுல் யாக்கோபு க்கு முரன்படுவது போல தோன்றினாலும் அதில் முரண்பாடு இல்லை. இயேசு இந்த விசுவாசத்தை விவரிக்க அவர் கையாளும் சொல்லாடலை கவனியுங்கள்.

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான், கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:20

விசுவாசத்தை கடுகு விதையோடு ஒப்பிடுவதை கவனியுங்கள். அவர் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்பதை நாம் மறக்க கூடாது. கடுகு என்று கூறாமல் கடுகு விதை என்று குறிப்பிட்டது

கடுகுவிதை வளரும் தன்மை கொண்டது போல் விசுவாசமும் ஒவ்வொரு நாளும் வளரும் குணம் கொண்டது

என்பதை உள்ளடக்கிய வார்த்தை அது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இரசிப்படைய விசுவாசம் போதுமானது ஆனால் அந்த இரச்சிப்பு பூரண பட பூரண விசுவாசம் தேவை

விசுவாசிக்கும் அனைவரும் ரட்சிக்கப் படுவதில்லை.

எ. கா.

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான். பிசாசுகளும் விசுவாசித்து, நடுக்குகின்றன.
யாக்கோபு 2:19
பிசாசுகள் மட்டுமல்ல இந்த உலகத்திலுள்ள மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கூட இயேசு தேவனென்று விசுவாசி கின்றனர். அவர்கள் விசுவாசித்தும் அவரைத் தொழுது கொள்வது இல்லை. காரணம் சாதி சமுதாயக் கட்டுப்பாடு போன்ற கட்டுகளால் கட்டப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் விசுவாசித்தும் இரச்சிப்பை பெறவில்லை காரணம் அது கிரியை இல்லாத விசுவாசம்.

விசுவாசம் என்பது செடிக்கு உயிர் கொடுப்பது
ஆனால் பூரண விசுவாசம் என்பது உயிரை
பெற்றுக்கொண்ட அந்த செடி கணிக்கொடுப்பது

இதை விளக்கமாக இயேசு கூறியுள்ளார்.

கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

லூக்கா 13:9

அந்தம் மரம் கணி கொடுக்கவில்லை என்றாலும் ஜீவன் இருக்கிறது.
இதுதான் விசுவாசம் இருந்தும் கணி இல்லாத அனுபவம்
இது கிறிஸ்தவத்தின் அனுபவம் இல்லை மாறாக இது பிசாசின் அனுபவம்
பிசாசுகள் தேவனை அறிந்தும் கிரியை செய்யாது
மரத்தில் ஜீவன் இருந்தும் அதில் கனி இல்லை என்றால் அது ஒருவருக்கும் உதவாது, அதை போன்றவர்களே விசுவாசம் இருந்தும் கிரியை செய்யாதவர்கள்.
இப்படிப்பட்ட அனுபவம் உள்ளவர்களை பார்த்து தான் இயேசு இப்படியாக கூறுகிறார்

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

யோவான் 15:2

இதை குறித்து யோவான் பதிவு

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது, ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

லூக்கா 3:9


பவுல் விவரிப்பது விசுவாசத்தை ஆனால் யாக்கோபு விவரிப்பது விசுவாசத்தின் பூரணத்தை

உன்னை இரச்சிக்க தேவன் உன்னிடம் எதிர்பார்ப்பது விசுவாசத்தை ஆனால் உன் மூலமாய் பிறரை இறச்சிக்க தேவன் எதிர்பார்ப்பது விசுவாசத்தின் பூரணத்தை

நீ தேவனை துக்க உதவுவது விசுவாசம் ஆனால் உன் நிமித்தம் பிறர் தேவனை துதிக்க வேண்டியது பூரண விசுவாசம்

உனக்கு சுகத்தை தருவது விசுவாசம் ஆனால் உன் மூலம் பிறர் சுகம் பெற செய்வது பூரண விசுவாசம்


கிரியை செய்யும் விசுவாசமே பூரண விசுவாசம் ஆகும்

பூரண விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம்

3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்.
மாற்கு 2:3

4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல்,அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி,திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
மாற்கு 2:4

5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு,திமிர்வாதக்காரனை நோக்கி,மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மாற்கு 2:5

11 நீ எழுந்து,உன் படுக்கையை எடுத்துக்கொண்டு,உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 2:11

12 உடனே அவன் எழுந்து,தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான்,அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு,நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி,தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மாற்கு 2:12

இங்கு நாம் நுட்பமாக கவனிக்க வேண்டியது அந்த நான்கு பேரும் திமிர்வாத காரன் இயேசுவிடம் வந்தால் கட்டாயம் சுகமாகுவான் என்பது விசுவாசம். அந்த நிலையிலேயே அவர்கள் போயிருந்தால் அற்புதம் நடந்திருக்காது. அந்த விசுவாசத்தோடு அவர்கள் கிரியை செய்ய தொடங்குகிறார்கள் கிரியையின் உட்ச்ச பச்சமே கூரையை பிரிப்பதாகும். இயேசு அவர்களின் விசுவாசத்தையும் கிரியைகளையும் கண்டு குணமாக்கு கிறார்.
நடந்ததை கவனியுங்கள்
நான்கு பேரும் விசுவாசத்தை செயல்படுத்த தவறி இருந்தால் அவர்கள் மட்டுமே இயேசுவிடம் போயிருப்பார், துதிதிருப்பர். அவர்கள் விசுவாசத்தில் பூரண படுதியதால் அவர்கள் மட்டும் அல்ல அவர்களோடு திமிர்வாதகாரணும் கூ டி இருந்த ஜனங்களும் தேவனை துதித்தனர்.

கிறிஸ்து சுயநலம் அற்றவர் எனவே கிறிஸ்தவமும் சுயநலம் அற்றதே

இப்படி இருக்க சகோதரரே நீங்கள் விசுவாசி கிறவவர்கள் அல்ல விசுவாசிக்கிற தை செயல்படுத்துகிற வர்கள்.

கடைசியாக சகோதரரே

விசுவாசம் நமக்கானதை பூர்த்தி செய்யும் கிரியை செய்யும் விசுவாசம் பிரருக்கானதையும் பூர்த்தி செய்யும்


சுயநலம் பிசாசுக்குரியது பிறர் நலம் கிறிஸ்துவுக்கு உரியது.


முடிவு உங்கள் கையில்


இம்மானுவேல் கிறிஸ்தவ சபை
வேப்பங்குப்பம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.