இனி தீங்கை கானாதிருப்பாய்

இனி தீங்கை
கானாதிருப்பாய்
தேவ செய்தி
போதகர்: சார்லஸ்  MSK
Date: 21/02/2018

ஆதார வசனம்

கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

செப்பனியா 3:15

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து இனி தீங்கை காணாதிருப்பாய் என்று அவர் சொல்லும் வார்த்தையை நாம் கவனித்தால் அதுவரை அவர்கள் தீங்கு அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. தீங்கு என்பதாக இருந்தாலும் அல்லது மனிதனை (தேவ பிள்ளைகளை) வேதனைப்படுத்த கூடிய எதுவாக இருந்தாலும் அதுவாகவே எதுவும் வருவது இல்லை. அவைகள் வருவதற்கான வழிகள் அந்த மனிதன் இடத்திலோ அல்லது அந்த ஜனங்கள் இடத்தில் இருந்தால் மட்டுமே வரும். அப்படி என்றால் தேவ ஜனமாகிய இசுரவேல் ஜனங்களுக்குள் தீங்கு வந்ததற்கான காரணங்கள் என்ன.. ? அவைகள் எந்த வழியாக வந்து அவர்களை பற்றிக்கொண்டது….? இனி தீங்கு வராமல் காத்துக்கொல்வது எப்படி…? என்பதை தான் நாம் இன்று ஆராய போகிறோம்.

தீங்கு வரும் வழிகள்

  1. கர்த்தர் நம் நடுவில் இல்லாதிருந்தால் தீங்கு நமக்கு வரும் (உபா 31:17)

அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன், அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும், அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

  1. கர்த்தரை நினையாமல் அவரை மறந்து விடும் போது தீங்கு நமக்கு வரும் (உபா 32:18-23)

உன்னை ஜெனிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய், உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
கர்த்தர் அதைக் கண்டு தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:

என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன், அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன், அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி, உண்மையில்லாத பிள்ளைகள்.

தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள், ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன்.

என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும், அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.

தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன், என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.

  1. விக்கிரக ஆராதனை செய்யும் போது தீங்கு நமக்கு வரும் (1 இரா 9:9)

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.
தேவனுக்கு கொடுக்க வேண்டிய கணம், புகழ், துதி, நேரம், வேலை, பணம்…… வேறொன்றுக்கு கொடுப்பது விக்கிரக ஆராதனை
  1. கர்த்தருடைய வார்த்தையை கேட்பதை வெறுக்கும் போது தீங்கு வரும் (எரே 6:19)

பூமியே, கேள், ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள், அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.

தீங்கு வராமல் தடுப்பதற்கான வழிகள்


  1. தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி கிரியை செய்ய வேண்டும் (யோனா 3:10)

அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

  1. கர்த்தர் எப்பொழுதும் நம்முடனே இருக்க வேண்டும் (செப் 3:15)

கர்த்தர் எப்பொழுதும் நம்முடனே இருக்க என்ன செய்ய வேண்டும்

கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார், நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார், அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
2 நாளா 15:2


குறிப்பு:

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
ஆதியாகமம் 39:2

கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு,
ஆதியாகமம் 39:3

யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
ஆதியாகமம் 39:4

அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
ஆதியாகமம் 39:5

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
ஆதியாகமம் 39:21

கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
ஆதியாகமம் 39:23


இம்மானுவேல் கிறிஸ்துவ சபை
வேப்பங்குப்பம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.