நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்

இம்மானுவேல் கிறிஸ்துவ சபை
வேப்பங்குப்பம்


தேவ செய்தி
சார்லஸ் MSK

நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய்
இருக்கிறீர்கள்

ஆதார வசனம்

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

மத்தேயு 5:14

கிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான எனது அன்பு சகோதர சகோதரிகள் மற்றும் ஊழியக்காரர்கள் அனைவருக்கும் இயேசு கிருத்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள். இன்றைக்கும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான சத்தியத்தை தியானிக்க இருக்கிறோம்.

இயேசுகிறிஸ்து மலை பிரங்கத்தில் அநேக உபதேசங்களைக் உபதேசித்து வந்தார். அந்த வரிசையில் நாம் மேலே பார்த்த வசனமும் ஒன்று. இன்று இடத்தில் இயேசு தம்மை பின்பற்றி வந்து கொண்டிருக்கிற சீஷர்களையும் ஜனங்களையும் பார்த்து நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்றார்.

நான் திரும்பத்திரும்ப சொல்லுகிற வார்த்தைகளில் ஒன்று ஏசு பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

இந்த வார்த்தை இயேசு தான் இந்த உலகத்துக்கு வந்ததற்கான நோக்கத்தையும் இயேசுவைப் பின்பற்றி வருகிறவர்கள் இந்த உலகத்தில் இருப்பதற்கான நோக்கத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

இயேசு இந்த உலகத்திற்கு வந்ததற்கான நோக்கம்


இயேசு இந்த உலகத்துக்கு வருவதற்கான நோக்கங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை களில் ஒன்று இருளில் இருக்கும் ஜனங்களை ஒளியினிடத்திர்க்கு அழைத்து செல்வது ஆகும்.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
யோவான் 1:5

உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் 8:12
நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

யோவான் 9:5


என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

யோவான் 12:46


நாம் மேலே பார்க்கும் அனைத்து வசனங்களும் ஏசு இந்த உலகம் இருளில் இருக்கிறது என்பதையும் இருளில் இருக்கிற இந்த உலகத்திற்கு ஒலியை அல்லது வெளிச்சத்தை கொடுக்க வந்தேன் என்பதையும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறதை உணர முடிகிறது. இதை தெளிவு படுதும் வசனம் கீழே தருகிறேன்.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
மத்தேயு 4:15

ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 4:16

மேலே நாம் பார்த்த அனைத்து வசனங்களும் இந்த உலகம் பாவம் என்னும் மரண இருளில் இருந்ததையும் அந்த இருளைப் போக்கும் ஒளியாக ஏசு வந்ததையும் படம் பிடித்து காட்டுகிறது.


நம்மை ஏன் உலகத்துக்கு வெளிச்சமாக வைத்தார்…?

இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் உள்ளன. அவள் பார்ப்பதற்கு முன்பு இந்த உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


விடியங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது. அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.
யோபு 24:17

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் (அவரை பின் பற்றாதவன் இன்னும் இருளில் தான் இருக்கிறான்) ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் 8:12

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
1 யோவான் 2:11

நாம் இந்த வசனங்களை நோக்கும்போது இந்த உலகம் பாவம் என்ற இருளில் இருக்கிறது. இப்படி இருள் நிறைந்த இந்த உலகத்தில் இயேசு நன்மைகள் வெளிச்சமாக வைத்து இருக்கிறார்

எதற்காக என்றால்,

  1. நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.
  2. நம்மை சுற்றி இருப்போரின் இருளை அகற்ற வேண்டும்.

அதாவது நாமும் இருளான இந்த உலகத்தில் தான் வாழ்கிறோம். நமக்கு முன்பாகவும் இருள் இருக்கிறது நாம் இருளில் பயணம் செய்தாள் போகும் பாதை தெரியாமல் திசைமாறி போக வேண்டிய இடத்திற்கு போகாமல் போகக்கூடாது இடத்திற்கு போய்விடுவோம். இந்த உலகத்தில் நாம் வெளிச்சமாக இருந்தால் தான் அந்த இருளில் சிக்காமல் சரியான பாதையில் பயணப்பட முடியும் என்பதற்காகவே நம்மை வெளிச்சமாக வைத்திருக்கிறார் .

நம்முடைய வெளிச்சம் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்து இருக்கும் அனைத்து ஜனங்களின் இருளை நீக்கும் வெளிச்சமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நம்மை வெளிச்சமாக வைத்திருக்கிறார்.

இந்த உலகத்தில் வாழும் ஜனங்கள் பாவம் என்கிற இருளில் நடந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இருளில் நடப்பதால் தாங்கள் எங்கே போகிறோம் என்று அறியாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்படி போய்க்கொண்டு இருக்கிற ஜனங்களுக்கு முன்பாக நம்முடிய வெளிச்சம் பிரகாசிக்கும் பொழுது அவர்கள் தாங்கள்  பாதையை அறிந்து கொண்டு தாங்கள் போகும் பாதை எவ்வளவு ஆபத்தானது என்று அறிந்து தங்கள் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள்.


பிரகாசிப்பது என்றால் என்ன…?


இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16

இந்த வசனம் வெளிச்சம் என்பது நம்முடிய நற்கிரியைகளை குறிக்கிறது என குறிப்பிடுகிறது. அதாவது பாவத்தில் இருக்கிறவன் நம்முடிய நற்கிரியைகளை காணும்பொழுது ஒளியாகிய இயேசுவை கான வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஒளியின் (இயேசுவின்) பாதையில் அவன் நடக்க முடியும்.


பிரகாசிக்க என்ன செய்வது…?

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105

நம்மைப் பிரகாசிக்க செய்வது கர்த்தருடைய வசனம் மட்டுமே

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோத்தேயு 3:16

ஆகவே வசனத்துக்கு ஏற்றபடி நம்முடிய வாழ்கையை அமைத்துக் கொண்டால் நாம் பிரகாசிப்போம்.

வார்த்தையாகிய இயேசு உலகத்தில் இருந்து பிரகாசித்தது போல, வசனமாக வார்த்தை நமக்குள் இருக்கும் வரை நாமும்
பிரகாசிப்போம்.

அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

அப்போஸ்தலர் 10:38


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.