மரணம் தான் வாழ்க்கையின் முடிவா…?

மரணம் தான் வாழ்க்கையின் முடிவா…?
  • இளங்கோ கோபால்
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

இது நம்மைச் சிந்திக்க வைக்கிற ஒரு பாடலின் சில வரிகள், வாழ்க்கை என்ற நீடிய பயணத்தில் என்னோடு கூடி நடந்த பலரும் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து செல்லுகின்றார்கள்.

வாழ்க்கைப்பயணத்தின் பாதைகள் எல்லாமே மலர்ப்படுக்கைகளாக அமைவதில்லை. கண்கவரும் சோலைகளையும் கடந்து செல்லுகிறேன். கண்ணீரின் பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்லுகிறேன். இறுதியில், என் வாழ்க்கைப் பயணத்தில் மரணத்தின் வாசலுக்கூடாக நான் பிரவேசிக்கிற வேளையில், என்னோட கூட வந்தவர்களெல்லாம் அங்கே நின்று விடுகிறார்கள்.

நான் மரண இருளின் பள்ளதாக்கிலே தனியாக நடக்கிறேன். கூடிவாழ்ந்த மனைவியும், கொஞ்சி வளர்த்த பிள்ளைகளும், குலாவித் திரிந்த நண்பர்களும் குமுறி அழுவார்களே தவிர கூட வருவதில்லை.

மானிட உறவுகள் மரணத்தில் முடிந்து விடுகின்றன. ஆனால் வாழ்க்கைப் பயணமோ மரணத்தில் முடிந்து விடுகின்றன. ஆனால் வாழ்க்கைப் பயணமோ மரணத்திலும் முடிவடைதில்லை, அழிவற்ற மனுஷ ஆத்துமாவாகிய எனது பயணமோ மரணத்தைக் கடந்தும் தொடர்கிறது. மரணம் வாழ்க்கையின் முடிவு அல்ல; மரணமே வாழ்க்கையின் தொடக்கமாயிருக்கிறது. ஆனால் இந்த நிலையற்ற வாழ்விலே, மரணத்தின் பின்வரும் நித்திய மோட்ச வாழ்வைப்ப்ற்றிச் சிந்திக்காதவன், அதைத் தேடாதவன், அதற்க்காத் தன்னை ஆயத்தம் பண்ணாதவன், அதை அடவதில்லை. மோட்ச வாழ்வைத் தேடுகிறவனோ நிச்சயமாய் அதை கண்டடைவான்.

தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். என்பது அருள்நாதர் இயேசுவின் அமுத வாக்கு.

'கடைசி வரை யாரோ' என்று கதறும் மனுஷாத்துமாவின் குரல் கேட்டு பரமாத்மாவாகிய இறைவன்,மனுஷாவதாரமாகி நம்மைத தேடி வந்தார். அவர் தான் உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அவர் அழைக்கிறார்.

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." மத்தேயு 11:28

"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்."யோவான் 14:1

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்". மத்தேயு 28:20

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை."ஏசாயா 49:15

என்பதெல்லாம் அன்பு தெய்வத்தின் வார்த்தைகளை எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! அந்த அன்பு தெய்வமாகிய இயேசுவை அண்டிக்கொள்வோமேயானால் நமது ஆத்துமாவில் தேவ சமாதானம் ஆளுகை செய்யும்.

இன்னும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளிச் செய்த பரிசுத்த வேதாகமத்தில், "இவ்வுலக வாழ்வு, மரணம், மரணத்தின் பின் நாம் அடையத்தக்க மறுவாழ்வு என்பவற்றைப் பற்றிய உண்மைகளைக் கூறி வைத்திருக்கிறார்." உலத்தில் தோன்றிய ஞானிகளெல்லாம் மரணத்தின் பின் என்ன நிகழலாம் எனத் தங்கள் ஊகங்களைச் சொன்னார்களேயன்றி உண்மைகளைச் சொல்லவில்லை. கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமம் மாத்திரமே மரணத்தின் பின் மன்தர்களாகிய நமக்கு கடவுள் நியமித்திருக்கும் வாழ்வு சத்தியங்களைப் பக்தியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கு மெய்யாகவே இறைவன் மெய்வாழ்வு அளிக்கிறார். மனித வாழ்வின் சில் முக்கிய அம்சங்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்லுவதைக் கவனிப்போம்.

1. இவ்வுலக வாழ்வு
"ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்." யோபு 14:1,2

"எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்." சங்கீதம் 90:10

"இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்." சங்கீதம் 39:5

"பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்." லுக்கா 12:15

குறுகிய எனது வாழ் நாட்களை வீண் நாட்களாகக் கழிப்பேனா? அல்லது நல் வாழ்விற்கு ஆயத்தமாவேனா?

2. மரணம்
"நாம் மரிப்பது நிச்சயம்" 2 சாமுவேல் 14:14

"அன்றியும், ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத் தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" எபிரேயர் 9:27

"(ஆதாம் என்ற ) ஒரே மனுஷனாலே பாவ்மும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்து, எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது." ரோமர் 5:12

மரணம் நிச்சயம்: மரணத்தின் பின் கடவுளின் நித்திய நியாயத்தீர்ப்பு நிச்சயம், யாரும் தப்பவே முடியாது.

3. மரணத்தின் பின்னுள்ள நியாயத்தீர்ப்பு

"மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்." வெளி. 14:13

"பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்" வெளி. 21:8

"பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்." லுக்கா 16:22-24

"கடவுள் ஆவியாயிருக்கிறார்." என்று வேதாகமம் போதிப்பது போலவே பெளதீக உலகத்திற்கு அப்பால் ஒரு ஆவிக்குரிய உலகம் (  Spiritual world ) உண்டு என்றும் போதிக்கிறது. பெளதீக உலகத்தில், வாழ்க்கை முடிவுற்றதும் மனுஷ ஆத்துமா ஆவிக்குரிய உலகத்தில் பிரவேசிக்கிறது. ஆந்த ஆவிக்குரிய உலகத்திலேதான் மனித ஆத்துமா நித்திய மோட்ச வாழ்வையோ, அல்லது நித்திய நரகத்தையோ அடைகிறது, அந்த ஆவிக்குரிய உலகத்தின் நிகழ்வுகள்களையே மேற்குறிப்பிட்ட பரிசுத்த வேதாகம வசனங்கள் தெரிவிக்கின்றன.

4. பரலோக வாழ்வு

"பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; " வெளி. 14:13

"இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்." வெளி. 19:1

5. நரக ஆக்கினை
"துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்." சங்கீதம் 9:17

"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." வெளி. 20:15

நண்பரே! மேற்குறிப்பிட்ட பரிசுத்த வேதாகம வசனங்களின் வெளிச்சத்தில் மரணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்வு உண்டு என்பதைத் தெளிவாஅய் அறிந்து கொண்டீர். பாவங்களோடு ஒருவர் எப்படி பரலோகம் போய்ச் சேரமுடியும்?

பாவங்களை தொலைத்தால் மாத்திரமே பரலோக வாழ்வை நீர் அடைய முடியும். பாவங்களைத் தொலைக்க ஒரே வழி. கடவுள் நமக்கு அளிக்கும் இலவசமான பாவ மன்னிப்பே. இந்த இலவசமான் பாவ மன்னிப்பை நமக்குக் கொடுக்கவே இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்க்கு வந்தார்.

பாவம் அறியாத தேவ குமாரனாகிய அவர் உலகத்தாருடைய பாவங்களைச் சுமந்து தீர்த்து தமது சிலுவை மரணத்தினாலே பாவத்தைத் தொலைத்தார். நீர் இதை விசுவாசித்து இயேசுகிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நிச்சயமாகவே பாவ மன்னிப்பு உண்டு. "ஆண்டவராகிய இயேசுவே, என்னுடைய பாவங்களை எனக்கு மன்னியும். எனக்கும் உமது பரலோக வாழ்வைத்தாரும் என்று பிரார்த்திப்பீரா? இயேசு ஆண்டவர் உம்முடைய பாவஙளை மன்னிப்பார். உமது இருதயத்தில் சமாதானம் அருளுவார்

Thank you -  Elango Gopal

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.