எஸ்றா 7
(8) ஆசாரியனான எஸ்றா எருசலேம் திரும்ப
மன்னனிடம் அனுமதி கோரல்
வசனம் 7:1-5
இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான். இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன். இவன் சல்லூமின் குமாரன். இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன், இவன் அமரியாவின் குமாரன். இவன் அசரியாவின் குமாரன், இவன் மொராயோதின் குமாரன், இவன் சேராகியாவின்குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன், இவன் அபிசுவாவின்குமா
ரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
ஆறாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் முடிந்து 60 ஆண்டுகாலத்திற்குப்பின் நடக்க ஆரம்பித்த நிகழ்ச்சிகளை 7ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம், இந்த கால தாமதம் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை, இப்போதுதான், இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமானவரை நாம் காண்கிறோம். அவன் தான் எஸ்றா, அர்த்தசஷ்டா இராஜாவின் காலத்தில் வாழ்ந்தவன். ஆரோனின் சந்ததியில் தோன்றியவன், அவன் ஆசாரியர்களின் வழிவந்தவர்களில் ஒருவன் என்பதை விளங்க அவனது வம்சவழி இந்த வசனங்களில் குறிக்கப்பட்டுள்ளது, அவன் கற்கத்திறந்த வேத பாரகன். மோசேயின் பிரமாணங்களை நன்கு அறிந்தவன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேத பாரகனாயிருந்தான், என வாசிக்கிறோம். நாம் கர்த்தரின் வார்த்தைகளை நன்கு அறிந்தவன் என என்னப்பட வழியுண்டா? கர்த்தர் தமது திருப்பணியைச் செய்ய பல துறைகளில் உள்ளவர்களை தெரிந்துகொள்பவராயிருக்கிறார், சிலர் ஆடுகளை மேய்க்கும் இடையர்: மோசே (யாத்.3:1). இன்னும் தாவீது (1.சாமு.16:11) மற்றும் எலிசா போன்றவர். உழவர், (1.இராஜா.19:19) நெகேமியா ஒரு பானபாத்திரக்காரன். (நெகே.1:11). மற்றும் பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா ஆகியோர் மீன்பிடிக்கிறவர்கள். (மாற்.1:16-19). மத்தேயு ஒர் ஆயக்காரன் (மத்.9:9). அப்போஸ்தலனாகிய பவுல் கூடாரம் பண்ணுகிற தொழிலாளி (அப்.18:3). லூக்கா ஒரு வைத்தியன் (கொலோ.4:14). இவர்கள் யாவரும், அவர்கள் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர்களைத்தான் கர்த்தர் தமது திருப்பணிக்கு அழைத்திருந்தார்.
வசனம் 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
இங்கே வேறு ஒரு புறஜாதியினனான இராஜா யூதர்களுக்கு மனமுவந்து உதவ முன்வந்ததைக்காண்கிறோம். நாம் 1-6 அதிகாரங்களில் வாசித்த, யூதர்கள் இப்போது காலமாகி இருக்கவேண்டும் அல்லது மிக வயது சென்றவர்களாக இருக்கவேண்டும். இப்போது ஆட்சி செய்கிறவர் வேறு ஓர் இராஜா. எஸ்றாவாகிய ஆசாரியனான வேதபாரகனான ஓர் அறிஞன் இராஜாவினிடம் சென்று, மற்றும் ஓர் கூட்டத்தை எருசலேமுக்கு திரும்ப அழைத்துச் செல்ல அனுமதிகேட்டும் அளவிற்கு அக்கறைகாட்டினான். ஓரு வேளை இந்தப்புதிய இராஜா கோரேஸின் கட்டளைகள் யாவும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆலயம் கட்டப்பட்டுவிட்;டது, நீங்கள் ஏன் போகவேண்டும்? அத்தகைய எண்ணத்தை மறந்து விடுங்கள் என்று கூறியிருக்கலாம். ஆனால் அவன் அப்படி ஏதும் கூறிவிடவில்லை. இங்கே, மறுபடியுமாக கர்த்தரின் கரம், அந்த இராஜாவின் ஆவி ஏவப்பட்ட கிரியை செய்ததைக் காண்கிறோம். இராஜாவான அர்த்தசஷ்டா அவன் கேட்ட யாவற்றையும் குறைவின்றிகொடுத்தான். எஸ்றா உடனே கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துகிறான். இந்த அதிகாரத்தில் மூன்று முறை அவ்வாறு கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவதை வாசிக்கிறோம்.
நாம் கர்த்திடத்தில் உதவி பெறும்போது கர்த்தருக்குத் தோத்திரங்களையும் நன்றியையும் உடனே செலுத்த சில வேளைகளில் தவறி விடுகிறோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் இருந்த காலத்தில் பத்து குஷ்டரோகிகளை ஒருமுறை சொஸ்தமாக்கினார். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்து நன்றி செலுத்தினான் (லூக்கா 17:11-19).
எஸ்றாவோடு, ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும் மற்றும் பணியாட்களும், நிதனீமியரும் உடனே சென்றனர். 2ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடியான கூட்டத்தினர் எஸ்றாவுடன் சென்றனர்.
வசனம் 7:8-9
ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான். அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது. முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.
மறுபடியுமாக எருசலேமுக்குச் செல்லும் பயணம் மிகவும் கடுமையானதொன்றாகும் என நாம் அறியமுடிகிறது. பாதைகள் மிகவும் கரடுமுரடானவை. தங்களின் உடைமைகளைச் சுமந்துக் கொண்டு பாபிலோனிலிருந்து எருசலேம் செல்ல குறைந்தது நான்கு மாதங்களாவது பிடிக்கும். ஆனால் மறுபடியுமாக எஸ்றா, தன்னை அரவணைத்து வழிகாட்டும் கர்த்தரின் கரங்களுக்குத் துதிகளை ஏறெடுக்கிறான்.
வசனம் 7:10
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
எஸ்றாவின் மேலான வலிமைக்கான காரணங்களின் இரகசியங்களை நாம் இங்கே காண்கிறோம். கர்த்தருடைய வேதத்தை ஆராய.... எஸ்றா தனது இருதயத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறான், என்று காண்கிறோம். இது ஒவ்வொருவரும் அவரவர்களே செய்ய வேண்டிய பணியாகும். இதனை வேறெருவன் நமக்காகச் செய்ய முடியாது. தானியேலைப்பற்றி நாம் வாசிக்கும் போது, தானியேல், தன்னை தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்... என்று வாசிக்கிறோம் (தானி.1:8). அவனுடைய காலம் முழுவதிலுமே அவன் ஜாக்கிரதையுள்ளவனாக வாழ்ந்தான். கர்த்தர் அவனைப் பூரணமாய் ஆசீர்வதித்தார். தானியேலும், எஸ்றாவும் ஆகிய இருவருமே, வேற்று நாட்டில் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள். அவர்கள் இருவருமே, தேவனுக்கு ஏற்ற காரியங்களை மட்டும் செய்ய தங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். அவர்கள் இருவரையும் இராஜாக்களிடத்தில் பரிந்து பேசும் அளவிற்கு தேவன் உயர்த்தினார் (தானி.2). தங்களின் இருதயங்களை ஆயத்தப்படுத்தியுள்ள எவரையும் தேவன் தமது பணிக்குத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவார். பல நேரங்களில், தமது சித்தத்தை நிறைவேற்ற அற்புதமாக தேவன் செயல்படுகிறார். அதுபோலவே சிலர், கர்த்தரை விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது அவர்கள் மூலமாக தமது சித்தத்தை நிறைவேற்ற சித்தமாயிருக்கிறார்.
2.நாளாகம புத்தகத்திலே, ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல், என்னும் வார்த்தையை மூன்று யூத இராஜாக்களைப்பற்றிய செய்திகளிலே நாம் வாசிக்கிறோம். 2.நாளா.12:14 ல் ரெகொபெயாம் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல், ஆயத்தப்படுத்தாமல் போனதால் பொல்லாப்பானதைச் செய்தான், என்று இருக்கக் காண்கிறோம். அவனுடைய செயல்களே அதை விளக்கின. இஸ்ரவேலர் கோத்திரங்களாக பிரிவதற்கு அவனுடைய செயல்களே காரணங்களாகும் (2.நாளா.10). அடுத்து யோசபாத், தேவனைத் தேட தம்முடைய இருதயத்தை நேராக்கினார்.... எனக் காண்கிறோம் (2.நாளா. 19:3). இன்னும் யோதாம், தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான் (2.நாளா.27:6) என வேதம் கூறுகிறது.
எஸ்றாவைப்பற்றி கூறுமிடத்து அது சிறந்திருத்தலைக் காண்கிறோம். அவனுடைய பயணங்கள் துவங்குமுன்பே அவன் தன் இருதயத்தை நேராக்கினான். முதலாவது அவன் தன்னைத்தானே சரி செய்துக்கொண்டான். எல்லாவித நல்ஆரம்பங்களும் அவ்வாறே உள்ளன. தேவனுடைய பிரமாணங்களைத் தேடுதற்கும், வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். இவ்வாறுதான் நாம் காரியங்களைச் செய்ய முற்பட வேண்டுமென்று வேதம், மறுபடியும், மறுபடியுமாக நம்மை எச்சரிக்கிறது. சங்கீதம் 1ல் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான், என்று நாம் வாசிக்கிறோம். இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவன் எனக் காண்கிறோம்.
மேலும் யோசுவாவின் புஸ்தகத்திலே, இந்த நியாயப்பிரமான புத்தகம் உன் வாயை விட்டு பிரியாதிருப்பதாக என்று சொல்லப்படுகிறது (யோசு.1:8).
எஸ்றா ஒருபடி மேலாகச் சென்று, நியாயப்பிரமாணப் புத்தகத்தை நன்றாகப் படித்துக் கற்றது மாத்திரமின்றி, அதன் கற்பனைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தான். கர்த்தருடைய நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியாதே போனால் அதனைக் கற்றுத் தேர்வதனால் மட்டும் பயன் ஏதுமில்லை. எஸ்றா அதனைக் கற்றது மட்டுமன்றி அதற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தான். அது மட்டுமன்றி, அக் கற்பனைகளைப் பிறருக்கு போதிக்கவும் ஆரம்பித்தான். இம்மாதிரிக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தும் அதனைப் பிறர்க்குப் போதித்தும் இருக்க வேண்டிய முறைமைக்கு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நல் உதாரணமாவார். அவர் எல்லாருக்கும் கீழ்ப்படிந்து பணிவிடை செய்தார். அது மட்டுமன்றி தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார் (மத்.26:39). அதுமட்டுமல்ல அவர் ஒரு நல்ல போதகரும்கூட. சுவிஷேசங்கள் அனைத்திலும் அவர் எங்கும் போதித்து போதனைகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம். மலையின்மேல் ஏறிப்பிரசங்கித்தார் (மத்.5:1-2). ஜெப ஆலயங்களிலே அவர் போதகம் பண்ணினார் (மத்.13:54). மக்கள் எங்கு கூடினார்களோ அங்கெல்லாம் போதித்தார் (மாற்கு 10:11). தேவாலயத்திலே (லூக்கா 19:47 படகிலிருந்து (லூக்கா 5:3). இன்னும் வீதிகளில்கூட போதகம் பண்ணினார் (லூக்கா 13:26) என்றெல்லாம் வாசிக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கடைசியாக தமது சீஷர்களுக்குக்கொடுத்த கட்டளை யாதெனில், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி....... நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்பதே (மத். 28:20). பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது: இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக் கொண்டிரு. நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி, என்று எழுதுகிறார் (1.தீமோ.4:11), (1.தீமோ.2:2). இவைகளிலிருந்து தேவனுடைய பிள்ளைகள் பின்பற்றவேண்டிய சரியான முறைமைகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தேவனுடைய கற்பனைகளை அறிந்துகொள்ள, முதலாவது தமது இருதயத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிந்துகொண்டபின்பு அதற்குக் கீழ்ப்படியவேண்டும், பிறகு அதை மற்றவர்களுக்கு போதிக்கவேண்டும். எஸ்றா சரியான முறையில் அந்த நியதிகளைப் பின்பற்றினான்.
வசனம் 7:11
கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னத்தின் நகலாவது:
அர்தசஷ்டா இராஜாவினிடத்தில் சென்று, எஸ்றா, எருசலேமுக்கு செல்ல அனுமதி கேட்டான். கர்த்தருடைய கரம் எஸ்றாவின்மேலிருந்தது. அர்தசஷ்டா இராஜா எஸ்றாவுக்கு தனது பதிலையும், அவனுக்கு தேவனுடைய அரசாங்க அனுமதியின் விளக்கங்களையும் ஒரு பிரகடனமாக எழுதிக்கொடுத்தான். இங்கு எஸ்றா முதலாவது ஆசாரியனாகவும், இரண்டாவது வேதபாரகனாகவும் விபரிக்கப்பட்டுள்ளான். ஆனால் ஒரு சாதாரண, மற்றவர்களைப்போன்றதொரு வேதபாரகனாக அல்ல. நன்கு கற்றிருந்த நியாயப்பிரமாணத்தினாலே தேறின வேதபாரகனென வேதம் கூறுகிறது. இஸ்ரவேலர்களுக்கு தேவன் அருளிச்செய்த அனைத்து வேதப்பிரமாணங்களிலும் தேறினவன் என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனுடைய வேதத்தின் கட்டளைகளை நன்கு அறிந்திருக்கிறோமா?
வசனம் 7:12
ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:
இராஜாவாகிய அர்தசஷ்டா, தன்னை, அவன் எழுதித்தந்த சன்னத்தின் நகலிலே இராஜாதி இராஜா என அழைத்துக்கொள்ளக்காண்கிறோம். இது நியாயமான கௌரவமே. நேபுகாத்நேச்சர் இராஜாவை, தானியேல் தீர்க்கதரிசியையும், எசேக்கியேல் தீர்க்கதரிசியும், இராஜாதி இராஜா என கௌரவித்து அழைக்கின்றனர். அந்நாட்களிலே அந்த இராஜா மிகவும் வல்லமை பொருந்தியவராய் இருந்ததைக் குறிப்பிடவே அவ்வாறு அழைத்தனர் (எசேக். 26:7, தானி. 2:37). ஆனால் வேதம் கூறுகிறபடி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து உலகில் வருகிற காலத்திலே அவர் மட்டுமே, இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா எனும் நாமத்தில் குறிக்கப்படுவார் (வெளி 19:16).
வசனம் 7:13
நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.
இராஜாவாகிய அர்தசஷ்டாவின் பிரகடனம் அவருடைய ஆட்சியிலிருந்த அனைத்து இஸ்ரவேலருக்கும் உரிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமன்றி ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்கூட உரிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் எவரேனும் எருசலேமுக்கு செல்ல எஸ்றாவுடன் சேர்ந்து சொல்ல விரும்பினால் அவர்கள் அவ்வாறே செல்லலாம் எனக்கூறியது. அந்தப் பிரகடனம் அது யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்புகிற எவரும் செல்ல அது அனுமதித்தது.
வசனம் 7:14
நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,
எஸ்றாவிற்குப் பிரமாணம் அளித்தவகையில், இராஜாவும் அவனுடைய ஏழு பிரதானிகளும் அதில் ஒப்பிட்டிருந்தனர் என்பது முடிவு (எஸ்தர் 1:13-14). அவர்கள் அந்தப் பிரமாணத்தைத் தங்கள் அவையில் வைத்து நன்கு ஆலோசித்த பின்னரே அவர்களுக்கு அளித்திருப்பர். அந்தக்கட்டளையின்படி அவன் முதலாவது, யூதாவையும், இஸ்ரவேலையும் அவன் கையிலிருக்கிற தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நன்கு விசாரித்து நடத்தவேண்டும். அதைச் செய்ய, எஸ்றா தவிர வேறொருவனும் நற்தகுதி பெற்றவன் அல்ல. அர்தசஷ்டா இராஜா, தேவ வழிபாடுகள் அனைத்தும் தேவனால் அருளப்பட்ட தேவ பிரமாணத்தின்படி தான் கண்டிப்பாக நடைபெறவேண்டும் என விரும்பினான் என்பது மிகத் தெளிவு. யூதர்களின் அந்நாள் முறைமையும் அதுவாகவே இருந்தது.
வசனம் 7:15
ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்குப் மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,
எஸ்றா ஓர் ஏழையாக அனுப்பப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு மனப்பூர்வமாய் வெள்ளியையும் பொன்னையும் தேவையான அளவு கொடுக்கவே இராஜாவும் அவனுடைய பிரதானிகளும் முன்வந்தனர். அவ்வாறு எஸ்றா விரும்புகின்ற அனைத்து உதவிகளும் அவனுக்கு கிடைக்கின்றனவா, என்பதை அவன் உறுதிப்படுத்திக்கொண்டான்.
வசனம் 7:16
பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.
அதுமட்டுமன்றி, பாபிலோன் நாடுமுழுவதிலும் உள்ள மக்களும், ஆசாரியர்களும் விரும்பிக்கொடுக்கும் வெள்ளியையும் பொன்னையும், அனைத்தையும் பெற்றுக்கொள்ள எஸ்றாவுக்கு அந்த ஆணையில் அனுமதி வழங்கப்பட்டது. கொடுப்பவர்களும் அது தேவனுடைய ஆலயத்திற்கு என்பதை உணர்ந்து தாராளமாய்க்கொடுக்கத் தூண்டப்பட்டனர். நாமும்கூட கர்த்தரின் கிருபையை உணர்ந்து தேவனுக்கு மனமுவர்ந்து கொடுக்க முன்வரவேண்டும்.
வசனம் 7:17
ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றிக் காளைகளையும் ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.
அர்தசஷ்டா இராஜா தேவ தொழுகைக்கு யூதர்களின் தேவை என்ன என்பதை நன்கு அறிந்தான். தரியு இராஜாவும் அவ்வாறே அறிந்தான் என முன் நாம் வாசித்தோம் (6:9-10). ஆகையால் அர்தசஷ்டா இராஜா காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் மற்றும் பலியிடுவதற்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக்கொள்ளவும் போஜனபலிகளையும், பான பலிகளையும் வாங்கிக்கொள்ளவும் பாபிலோனில் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தான். அவையனைத்தும் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்தப்படுமென அவன் அறிந்திருந்தான். எஸ்றா அந்த வெள்ளியையும் பொன்னையும் தேவனுடைய ஆலயத்துக்கென்று செலவுசெய்ய விரும்பி அவன் அனுமதி அளித்தான் (கடிதம் அளித்தான்).
அர்தசஷ்டா தனது கடிதத்தில் தேவனைப்பற்றி பத்துமுறைக்கு குறிப்பிட்டுள்ளான். அதுமட்டுமன்றி தேவனைக்குறித்து மூன்றுவிதமான வார்த்தைகளை கூறியுள்ளான்.
1. பரலோகத்தின் தேவன் 2. இஸ்ரவேலின் தேவன் 3. எருசலேமின் மீது வாசம் பண்ணுகிற தேவன்
என்று கூறும்போது, ஒரு குறிப்பிடப்பட்ட இடத்தின் தேவன், குறிப்பிடப்பட்ட இனத்தாரின்தேவன் மட்டுமல்ல பரலோகம் முழுமைக்கும் தேவன் என்பது விளக்கப்பட்டுள்ளது.
வசனம் 7.18
மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
அர்தசஷ்டா இராஜா எஸ்றாவின்மீதும் அவனது மக்கள் யூதர் மீதும் அளவில்லாத நம்பிக்கை வைத்தான். அதனால்தான் மீதியான வெள்ளியையும் பொன்னையும் உங்களுக்கு நலமாய் தோன்றுகிறபடி தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள் என்று அவன் கூறினான். எஸ்றா மிகவும் நேர்மையானவன் என்று நற்புகழ் பெற்றிருந்தமையினால் அனைத்து பொன்னும் வெள்ளியும் நல்லவழியில் பயன்படுத்தப்படுவதற்காக பத்திரமான வழியாக அவன் கையில் முழுவதும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நமது வேதத்தில் அவ்விதமாகவே எகிப்தின் பிரதான மந்திரியான போத்திப்பார், அனைத்துப் பொறுப்புக்களையும் யோசேப்பிடம் ஒப்படைத்தான் என வாசிக்கிறோம் (ஆதி. 39:4-6). எஸ்றாவும் யோசேப்பும் அந்நிய இராஜ்ஜியத்திலே சிறைவைக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களில் நேர்மையான வாழ்க்கையைப்பற்றி அறிந்திருந்த அதிகாரிகள் அவர்களை முழுவதும் நம்பும்படி செயல்பட்டனர். இதுபோலவே நமது வாழ்க்கை முறைமைகளும் நேர்மையானவைகளாக இருத்தல்வேண்டும்.
வசனம் 7:19-21
உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய். பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக. நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூற்றுக்கலக் கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,
மேலும் இராஜா தனது கடிதத்தில் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக கொடுக்கப்பட்டவைகளை எருசலேமில் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய் என்று குறிப்பிட்டான்.
பின்னும் தேவனுடைய ஆலயத்திற்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியது என்பதை இராஜாவின் கஜனாவிலிருந்து வாங்கிக்கொடுக்கவும் அக்கடிதத்தில் இராஜா அனுமதியளித்திருந்தான். சொன்னது மட்டுமன்றி அப்பகுதியில் இருந்த எல்லாக் கஜானாக்களும் அர்தசஷ்;டா இராஜா எழுதிய கட்டளையில் எஸ்றா கேட்பவை எல்லாவற்றையும் தாமதமில்லாமல் கொடுக்கவேண்டுமென்று கூறியிருந்தான். ஆகையால் அது எஸ்றாவின் வாயிலிருந்து பிறந்த வேண்டுகோள் மட்டுமன்றி அரசனுடைய கட்டளையின் அம்சமாகவும் இருந்தது.
வசனம் 7:22-23
வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும், பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும். ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.
இராஜாவின் கட்டளையின்படி பெறப்படக்கூடி பொருட்களின் விவரமாவது:
எஸ்றாவுக்கு கொடுக்கப்படக்கூடிய பொருட்களின் அளவு, 100 தாலந்து வெள்ளி 100 கலம் கோதுமை 100 கலம் திராட்சை இரசம் 100 கலம் எண்ணெய் வேண்டியளவு உப்பு
இது மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ள அளவின்படியான நன்கொடை. இவ்வாறு ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் இராஜா விளக்கியுள்ளான். இராஜாவும் அவன் குமாரனும் ஆளும் இராஜ்யத்தின்மேல் தேவனுடைய கடும்கோபம் வராமல் இருக்கவே அவ்வாறு கொடுக்கப்பட வேண்டுமென கூறி எழுதியுள்ளான். அதுமட்டுமன்றி தனது இராஜ்யத்தின் மக்கள் தங்களின் விருப்பத்தின்படி விரும்பும் தெய்வத்தை வணங்கிக்கொள்ள அனுமதித்தான். உதவிசெய்தல் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என அந்த இராஜா ஞானமுடம் எண்ணியிருக்கலாம்.
வசனம் 7:24
பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிய தீர்வையாகிலும் ஆயமாகிலும்சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.
அர்தசஷ்ட இராஜா எழுதியிருந்த பிரகடனத்திலே மேலும் ஒரு நன்கொடை அளிக்கப்பட்டிருந்தது. அது என்னவெனில் தேவனுடைய ஆலயப்பணிக்காக புறப்பட்டுச்செல்லும் ஆசாரியர்களும,; லேவியரும, பாடகரும், வாசல் காவலாளரும், நீதனீயரும், பணிவிடைக்காரருமான யாவரும் தீர்வையாகிலும், ஆயமாகிலும், பகுதியாகிலும் செலுத்தத் தேவையில்லை என்பதே அது. ஆனால் இத்தகைய பழக்கம் மற்றும் சில பெர்சியாவின் இராஜாவின் காலத்திலும் வழக்கத்தில் இருந்து வந்ததென்பது வரலாற்றின் உண்மையாயெனினும் யூதர்களான அந்த இஸ்ரவேலர்களுக்கு இது மகிழ்ச்சியும், வியப்பும் ஊட்டுவதொன்றாகவே இருந்ததெனலாம்.
வசனம் 7:25
பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக. அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.
இப்போது எஸ்றாவுக்கு இராஜாவாகிய அர்தசஷ்டா மேலும், சில நல்ல அதிகாரங்களை கொடுத்துள்ளதை நாம் காண்கிறோம். முதலாவது இராஜாவாகிய அர்தசஷ்டா, உன்னிடத்திலுள்ள தேவனுடைய ஞானத்தின்படியே.... எனக் கூறுவதால், எஸ்றா தேவனிடத்தில் தெய்வீகஞானம் பெற்றவன் என்பதை ஒப்புக்கொள்கிறான் என நாம் காண்கிறோம். வேதத்தில் ஞானம் என்பதைப்பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சாலெமோனின் புத்தகத்தில் அதிகமான ஞானத்தைப்பற்றி அவர் கூறியுள்ளதை வேதத்தில் காணமுடிகிறது. தேவனாகிய கர்த்தர் சாலேமோனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தார் என வேதம் கூறுகிறது (1.இராஜா.10:24). சாலெமோன் தனது நீதிமொழிகளின் புத்தகத்தில் ஞானமே முக்கியம், ஞானத்தை சம்மாதி என அவர் கூறியுள்ளார் (நீதி. 4:7). அதுமட்டுமின்றி கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி. 9:10) என்று கூறியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்குமிடத்தில் பரிசுத்த லூக்கா இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர்தயவிலும், அதிகமாய் விருத்தியடைந்தார் (லூக்கா 2:52) என்று கூறியுள்ளார். மேலும் ஞானத்தை எப்படிப்பெறுவதென்று கூறுமிடத்து யாக்கோபு ஞானத்திலே குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் (யாக். 1:5) என்று கூறியுள்ளதை வாசிக்கிறோம். இப்போது எஸ்றா நியாயம்விசாரிக்கத்தக்க நியாயாதிபதிகளை ஏற்படுத்தவும் தனது ஞானத்தைப் பயன்படுத்த இராஜா அர்தசஷ்டாவினால் அதிகாரம் பெற்றான். அதுமட்டுமன்றி தேவனுடைய பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அதைப் போதிக்கவும் அனுமதிக்கப்பட்டான்.
வசனம் 7:26
உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும் காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.
இதுமட்டுமன்றி இராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போதிக்கிறவர்களுக்கு யாது செய்யப்படல்வேண்டுமெனவும் அர்தசஷ்டா தனது பிரகடனத்தில் கூறியிருந்தான். அக்கட்டளையை இராஜாவினுடைய நியாயப்பிரமானம் என்றும், தேவனுடைய நியாயப்பிரமாணம் என்றும் கூறிய இராஜா அக்கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் உடனே மரணத்திற்குள்ளாகிலும,; தேசத்திற்குப்புறம்பாக்குதலாகிலும், அபராதத்திற்குக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டு தண்டிக்கக்கடவன் என அப்பிரகடனத்தில் விளக்கி எழுதியிருந்தான். அக்காலத்தில் இராஜாக்கள் என்றால் கண்டிப்பாக யாரும் கீழ்ப்படியவேண்டுமென்பது ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும் (தானி. 3:29).
வசனம் 7:27-28
எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப் பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.
இங்கே எஸ்றா தனது நன்றி பாராட்டுதலை முன்னறிவிக்கிறான். இத்ததைகய காரியங்கள் செய்தது யார்? எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் என்று எஸ்றா கூறினான். இப்படிப்பட்ட யோசனைகளை இராஜாவின் இருதயத்தில் தேவன் அருளினார் என்று கூறுகிறோம். எஸ்றா மேலும் இந்த யோசனைகள் எல்லாம் ஏன் என்று விளக்குமிடத்து, எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க இப்படிப்பட்ட யோசனையை இராஜாவின் இருதயத்தில் அருளினார், என்று கூறுகிறான். அதே நேரத்தில் எஸ்றாவாகிய தனக்கும், இராஜாவுக்கும், அவருடைய மந்திரிமாருக்கும், இராஜாவின் கைகளுக்குள்ளான பலத்த எல்லா பிரபுகளுக்கும் முன்பாக எனக்கு (எஸ்றாவுக்கு) தயவு கிடைக்கப்பண்ணினார், என்று கூறிய தேவனை ஸ்தோத்தரிக்கின்றான். கர்த்தர் ஏலியிடம் ஒருவன் என்னை கனம்பண்ணினால் நான் அவனைக் கனம்பண்ணுவேன் (1.சாமு. 2:30) என்று கூறியுள்ளதற்கேற்பன எஸ்றா தேவனாகிய கர்த்தரை கனம் பண்ணும்வகையில் அவருடைய பிரமாணங்களை நன்கு கற்றறிந்து அதற்கு கீழ்ப்படிந்தும் வந்தான். ஆகையால் இங்கே அர்தசஷ்டா இராஜாவினால் கர்த்தர் எஸ்றாவை கனம் பண்ணும்படி உயர்த்தினார்.
ஆகையால் எஸ்றா தேவனுடைய பணியைச் செய்ய மேலும் உற்சாகப்படுத்தப்பட்டான். கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் என்னும் வார்த்தைகளை எஸ்றா மறுபடியும் எழுதுகிறான். கர்த்தருடைய கரம் ஆசீர்வதிக்கப்பயன்படுவதுபோல சபிக்கவும் பயன்படுத்தப்படும். நகோமி மோவாபியர் நாட்டுக்குச்சென்றபோது கர்த்தருடைய கரம் எனக்கு விரோதமாக இருந்ததினால் எனக்கு மிகுந்த சஞ்சலம் உண்டாயிற்று என்று கூறுவதை நாம் வாசிக்கிறோம் (ரூத் 1:13). மேலும் யோபு தனது நண்பர்களிடத்தில் என் சிநேகிதரே எனக்கு இரங்குங்கள். தேவனுடைய கரம் என்னைத்தொட்டது என்று தனது துன்பத்தைக்குறித்து கதறுவதைக் காண்கிறோம் (யோபு 19:21). தாவீது இராஜா சங்கீதப்புத்தகத்திலே இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சாரம் வறண்டுபோயிற்று (சங்.32:4 ) எனப்புலம்புகிறான். இவைதவிர அப்போஸ்தலர்களைப்பற்றிய நடபடிக்கைகளில் புத்தகத்திலே கர்த்தருடைய கரம் அவர்களுடனே கூட இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் (அப்.11:21) என்ற ஆசீர்வாதத்தை நாம் காணமுடிகிறது. ஆகையால் கர்த்தருடைய கரம் ஆசீர்வாதத்தையும் அதுபோல சாபத்தையும் கூட தரவல்லதாகவிருக்கிறது.
எஸ்றா இஸ்ரவேலர்களின் தலைவர்களை அவனுடன் சேர்த்துக்கொண்டான். அவர்கள் எருசலேமுக்குப்போகப் புறப்பட்டார்கள். கர்த்தரின் மேலாக ஆசீர்வாதங்களும் வழிநடத்தலும் அவனோடே இருந்தது. எஸ்றா வேறு அநேகரையும் அவனுடன் போகச் சேர்த்துக்கொண்டான்.
By Tamil christian Assemblyஇந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான். இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன். இவன் சல்லூமின் குமாரன். இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன், இவன் அமரியாவின் குமாரன். இவன் அசரியாவின் குமாரன், இவன் மொராயோதின் குமாரன், இவன் சேராகியாவின்குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன், இவன் அபிசுவாவின்குமா