எஸ்றா 2
(3) திரும்பி வந்தவர்கள்
வசனம் 2:1
பாபிலோன் ராஜாவாகியநேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
இந்த அதிகாரத்தில், ஒரு சிலரின் பெயர்ப்பட்டியலைக் காண்கிறோம். தேவனுக்கு ஊழியம் செய்தவர்களின் பெயர்களைக் கர்த்தர் நமக்குப் பட்டியல் படுத்திக் காட்ட தயவுள்ளவராய் இருக்கிறார். அந்தப் பெயர்களின் வரிசையை நாம் மறுபடியும் நெகேமியாவின் புத்தகம்,7ம் அதிகாரத்தில் காணமுடிகிறது. பரிசுத்த வேதாகமத்தில், கர்த்தரால் குறித்து வைக்கப்பட்டுள்ள பல குறிப்புகளை நாம் காணமுடிகிறது. மல்கியாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலே கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக்கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைப் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.... என்கிற வார்த்தைகளை நாம் காண்கிறோம் (3:16). கர்த்தரைச் சேவித்து அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காக உள்ள அ
ந்த ஞாபக புத்தகத்தின்மூலம் கர்த்தர் அவர்களை நினைவுகூருகிறார். நமது வேதத்தில் உள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் 11ம் அதிகாரத்தில் கர்த்தருடைய பார்வையில் மிகவும் அருமையானவர்கள் என்று கருதப்படக்கூடிய சிலரின் பெயர்களை நாம் காணமுடிகிறது. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் தேவனுடைய குமாரனும் ஆட்டுக்குட்டியானவரில் விசுவாசம் வைத்திருப்போர் அனைவரின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன (வெளி 21:27). நீங்கள் செய்துவருகிற....... அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதி உள்ளவரல்லவே (எபேசி.6:10).
வசனம் 2:2
செருபாபேல், யெசுவா,நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடுகூடத் திரும்பிவந்த தேசத்துப் புத்திராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
எருசலேமுக்குப் போகப் புறப்பட்ட இந்தக் கூட்டத்தில் உள்ள பத்து கோத்திரங்களிலும் சில யூதர்களும் இருந்திருக்கலாம். ஆனால், வேதம் கூறுகிறபடி, பொதுவாக அவர்கள் நேபுகாத்நேச்சார் இராஜாவினால் சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்ட யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களின் குடும்பங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் விட்டுச்சென்ற நகரங்களுக்கே திரும்பி வந்துள்ளனர். அவர்களின் இரு முக்கியத் தலைவர்கள், செருபாபேல் என்பவரும், யெசுவா என்பவருமாகும். செருபாபேல் என வழங்கப்படுவது சேஸ்பாத்சார் எனப்பட்ட பெயரின் யூத மொழியாகக் கூடவும் இருக்கக்கூடும். சேஸ்பாத்சார் எனப்படுவது யூதாவின் அதிபதியாகும். இயேசு கிறிஸ்துவின் உலகப் பிரகாரமான முற்பிதாக்களின் பட்டியல் வரிசையிலே நாம், செருபாபேல் என்ற பெயரைக் காண்கிறோம். அவன் யூதாவின் கடைசி இராஜாக்களில் ஒருவனாகிய எகோனியாவின் பேரன் என்பதையும் அங்குக் காண்கிறோம். அந்த அரச குடும்பத்தினர் பாபிலோனில் சிறைப்பட்டுக் கிடந்த காலத்தில்தான் அந்தச் செருபாபேல் பிறந்திருக்க வேண்டும் (மத்.1:11,12). எஸ்றாவின் புத்தகத்தில் இந்தச் செருபாபேலைப்பற்றி நாம் வாசிக்கிறோம். தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக எருசலேமுக்குச் சென்ற இஸ்ரலேவர் கூட்டத்தின் ஒரு தலைவனாகச் செருபாபேல் சென்றதை நாம் வாசிக்கிறோம்.
2வது வசனத்தில், செருபாபேலுடன் எருசலேமுக்குச் சென்ற மற்ற பத்து தலைவர்களின் பெயர்களை நாம் வாசிக்கிறோம். அவர்களில் நெகேமியாவும், மொர்தெகாயும் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஏனெனில் அடுத்துவரும் வேத பகுதிகளில் நாம் இப் பெயர்களைக் காண முடிகிறது. ஆனால் எஸ்தரின் சரித்திரத்தில் வரும் மொர்தகாய் என்பவரும் நெகேமியாவின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நெகேமியாவும், இக்கூட்டத்துடன் எருசலேமுக்குச் சென்றதாகக் கூறப்படவில்லை. ஆதலால் இங்கு வாசிக்கும் அந்த இருவரும் வேறுபட்டவர்களாவர்.
வசனம் 2:3-22
பாரேஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்றுப் எழுபத்திரண்டுபேர். செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். ஆராகின் புத்திரர் எழுநூற்றுஎழுபத்தைந்துபேர். யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பன்னிரண்டுபேர். ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். சத்தூவின் புத்திரர்தொளியிரத்து நாற்பத்தைந்துபேர். சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர். பானியின் புத்திரர் அறுநூற்றுநாற்பத்திரண்டுபேர். பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர். அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்துமூன்றுபேர். அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர். ஆதீனின் புத்திரர்நானூற்று நானூற்று ஐம்பத்து நான்பேர். எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர். பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர். ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர். கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர். பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர். நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
இந்த வசனங்களில் எருசலேமுக்குத் திரும்ப வந்த அநேகரின் பெயர்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இவர்களில், ஒரு பிரிவினர் ஒரு தலைவரின் கீழும் மற்றொரு பிரிவினர், அவர்களின் முன்னோர்கள் வசித்து வந்ததும் இப்போது அவர்கள் திரும்பி சேர விரும்புவதுமான ஒரு ஊரைச் சேர்ந்தவர்களுமாகவுள்ள வரலாற்றினையும் நாம் இந்த வசனங்களில் வாசிக்கிறோம். 21வது வசனத்தில் அந்த பட்டணமாகிய பெத்லகேமுக்கு 123 பேர் திரும்பி வருவதைக் காண முடிகிறது. மீகா தீர்க்கதரிசி எழுதியுள்ள தீர்க்கதரிசன ஆகமத்தில், எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்.... (மீகா 5:2) எனக் கூறப்பட்டுள்ளது. பெத்லகேம் ஒரு சிறிய நகரம்தான். ஆனால் கர்த்தராகிய இயேசு உலகில் பிறந்த இடமாக அது அமைந்து விட்டது (மத்.2:1).
வசனம் 3:23-27
ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர். அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர். கீரியாத்யாரீம், கெமிரா, போரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர். மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
ஆனதோத் என்கிற அழகிய ஊர் ஒன்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இதுதான் எரேமியா தீர்க்கதரிசி பிறந்த ஊர் (எரேமி.1:1). தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான், என்று இயேசு ஒரு முறை கூறியுள்ளதை நினைவுகூருவோம் (மாற்கு 6:4). இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலேயே அக்கூற்று உண்மையாகி விட்டது. அவருடைய சொந்தத் தாய் நகரத்தாரே அவருடைய சொந்த மக்களே, அவரைப் புறக்கணித்து விட்டனர் (மாற்கு 3:21, 6:1-4). இக்கூற்று எரேமியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையிலும் உண்மையாகிவிட்டதனையும் காண்கிறோம். எரேமியாவின் தீர்க்கதரிசனப் புத்தகத்திலே, யூதாவின் மக்கள், கர்த்தரை விட்டு விக்கிரகங்களை வணங்கினதினால் கர்த்தரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளதை, முன்னறிவிப்பதாக, இதோ, அவர்கள் தப்பித்துக் கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று வாசிக்கிறோம் (எரேமி.11:11-13). ஆனால் இத்தகைய கடுமையான ஆக்கினைகளை யாரும் விரும்புவதில்லை. அவ்வாறே எரேமியாவின் சொந்த நகரமாகிய ஆனதோத்திலும் ஆசாரியர்கள் மிகுதியாக வாழ்ந்த அந்த நகரத்திலும் இத்தகைய நிலையே நிலவியது. அந் நகரமக்கள் மிகவும் கோபங்கொண்டனர்.
அம் மக்கள் எரேமியாவின் முன்னறிவிப்புகளைக் கேட்டு கடுங்கோபங் கொண்டதினால் அவனைக் கொல்லச் செய்தனர். அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்தில் இராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும் போக அவனைச் சங்கரிப்போம், என்று அவர்கள் கூறினர் (எரேமி.11:19). ஆனால் கர்த்தர் இந்தச் சதியை எரேமியாவிற்கு வெளிப்படுத்தினதினால் அவன் அவர்களின் கைக்குத் தப்பி ஓடிப்போனான். கர்த்தர் ஆனதோத்தின் மக்களுக்கு எச்சரிக்கைகளை விளங்கச் சொல்லி, இதோ இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன் இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்:.... பஞ்சத்தாலே சாவார்கள். அவர்களில் மிதியாய் இருப்பவர்கள் இல்லை....... என்று வெளிப்படுத்தினார் (எரே 11:22-23).
ஆக, எஸ்றாவின் புத்தகத்திலே, இந்த நகரத்தின் மக்களைப்பற்றி, இந் நகரத்தில் தோன்றி வளர்ந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே,128 பேர் மட்டுமே தங்கள் முன்னோர்களிடம் திரும்பி வந்ததைக் காண்கிறோம். கர்த்தர் தமது வார்த்தைகள் நிறைவேறும்படி செய்தார்.
வசனம் 2:28-35
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர். நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர். மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர். மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர். சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
வசனம் 28ல் பெத்தேல், ஆயி என்ற இரு நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதே இரு நகரங்களைப்பற்றியும் நாம் ஆதியாகமப் புத்தகத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் அவ்விடம் விட்டுப்பெயர்ந்து, பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ தனக்கு கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டான் (ஆதி.12:8). பெத்தேல் என்றால் அப்பத்தின் வீடு, ஆயி என்றால் அழிவுச் சிதைவுகளின் குவியல், என்பதாம். இதுதான் இன்றைய கிறிஸ்தவனின் வாழ்க்கையைப்பற்றிய உண்மையான விளக்கம். இவ்வுலகில் கிறிஸ்தவர்களாகிய நாம், புதிய வாழ்க்கையாகிய ஆசீர்வாதத்திற்கும், அழிவிற்குரிய உலக இச்சைகளுக்கும் இடையே வாழ்கிறோம் (யோவான் 6:35, 16:33).
வசனம் 3:36-39
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். இம்மேரின் புத்திரர் ஆயிரத்துஐம்பத்திரண்டுபேர். பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஐம்பத்திரண்டுபேர். ஆரீமின் புத்திரர் அயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
ஆசாரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 4289 என இவ்வசனங்களிலிருந்து அறிகிறோம். எருசலேமுக்குத்திரும்பி வந்த அனைத்து இஸ்ரவேலர்களின் மொத்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பங்கு ஆகும் (ஆதி.14:20, எபி.7:2). ஆபிரகாமின் காணிக்கையைப்பற்றி வாசிக்கும் நாம், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாகக் கருதப்படும் அரசனும் ஆசாரியனுமான மெல்கிசேதேக்கு என்பவருக்கு ஆபிரகாம் காணிக்கையாக தனக்குண்டான யாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் என்று காண்கிறோம். இங்கே எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களில் பத்தில் ஒரு பங்கினரானவர்கள் ஆசாரியப்பணிக்காகப் பிரித்தெடுத்துக் கொண்டார். யாத் 28:1, எண் 18:7. (எஸ்.2:36,39)இல் குறிக்கப்பட்டிருக்கும் யெதாயா, பஸ்கூர், இம்மெர் என்பவர்கள் ஆசாரியர்களும் தேவாலயத்திற்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களுமாயிருந்தார்கள் என்று 1.நாளாகம புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம் (1.நாளா.9:10-13). இதுபோலவே ஆரிமின் என்பவரைப் பற்றியும் நாளாகமப்புத்தகத்தில் (28:1) வாசிக்கிறோம். இந்த ஆசாரியர்கள் ஆரோனின் வழி வந்தவர்கள் (யாத்.28:1). இவர்கள் காணிக்கைகள் படைப்பது, பலிகள் செலுத்துவதுமான பரிசுத்தப்பணிகளைச் செய்யவேண்டியவர்கள் (லேவி.6:8).
வசனம் 2:40
லேவியரானவர்கள்: ஓதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்துநான்குபேர்.
திரும்பி வந்த இஸ்ரவேலரில் 74 லேவியர்கள் இருந்தனர். அவர்கள் லேவியின் கோத்திரவழி வந்தவர்கள். லேவியர்கள் தேவனுடைய சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதனுடைய சகல பணிமுட்டுகளுக்கும், பொருட்களுக்கும் விசாரிப்புக்காரர்களாகவும், வாசஸ்தலத்தின் காவல் காப்பவர்களாவும் இருந்தனர் (எண்.1:50-53).
வசனம் 2:41
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
பாடகர்களானவர்கள் 128 பேர் என்று இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் பல சங்கீதங்களை எழுதினவரான ஆசாபின் வம்ச வழித் தோற்றியவர்கள். இவர்கள் மட்டுமன்றி, திரும்பி வந்த இஸ்ரவேலரின் ஊழியக்காரர்களில், ஆண்களும், பெண்களுமாக 200 பாடகர்களும் இருந்தனரென்று வேதம் கூறுகிறது. இந்த நெடுந்தொலைவுப் பயணத்தைக் கால் நடையாக அவர்கள் கடந்து வரும்போது, பாடகர்கள் உரத்தக்குரலில் பாடல்களைப்பாடிக்கொண்டு வருதல் சாதாரரமானதொன்றே. அப்பாடல்களிலே அவர்களின் கடந்தகால நினைவுகளைப் பின்னித் துயரத்துடனான புலம்பல் பாடல்களும் புறப்பட்டிருத்தல் வேண்டும் (1.நாளா.35:25). அத்தகைய புலம்பல் பாடல்களில் தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர். நீர் சம்பாதித்த உமது சபையையும் கோத்திரத்தையும்.....நினைத்தருளும்... (சங்.74:1.2) என்றும், மற்றும், தேவனே....எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கப் பரியாசமும், சக்கந்தமுமானோம்... (சங்.79:4) என்பதும், போன்ற இன்னும் பலவும் அடங்கும். மற்றும் துதிப்பாடல்களாகவும் மகிழ்ச்சிப்பாடல்களாகவும், நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப்பாடி ஆர்ப்பரியுங்கள், என்றும் (சங்.81:1), வானஙகள் அவருடைய நீதியை அறிவிக்கும், தேவனே நியாயாதிபதி....... என்றும் (சங்.50:6). பாடி ஆர்ப்பரித்திருப்பார்கள். அவர்களில் பாடகர்கள் முதலில் பாட, அவர்களுடன் நடந்து வந்துகொண்டிருந்த மற்ற ஆயிரமாயிரம் பேரும் சேர்ந்து பாட்டினைப் பின்னிசைத்துப் பாடி மகிழ்ந்திருக்கலாமன்றோ! தேவனுக்கு உகந்ததான பாடல்களின் மகிழ்வோசைகள்தான் என்னே!
வசனம் 2:42
வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சொபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
இதில் கூறப்பட்டுள்ளவர்கள் வாசல் காவலாளரின் புத்திரர்களாவர். வாசல் என்னுமிடத்தில் தேவாலயத்தின் வாசல் எனக்கொள்ளவேண்டும். அவர்கள் வாசனைத்திரவியங்களும், பணிமுட்டுகளும் வைக்கப்பட்டிருந்த அறைகளின் பொறுப்பாளர்களுமாவர். வாசற் கதவுதனைத்திறந்து பூட்ட வேண்டியவர்கள் இவர்களே. தேவாலயத்தின் வாசற்கதவுகளைத் திறத்தல் என்பது ஒரு முக்கியமான பணியாகக் காணப்படாது என்பது உண்மைதான். ஆனால் தாவீது இராஜா எழுதியுள்ளதாவது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்போரைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துக்கொள்ளுவேன், என்பதாகும் (சங்.84:10). வாசற்காவலாளரும், பாடகர்கள் ஆகிய இருவருமே சுத்திகரிப்பின் காவலை, காத்தனர், என்று வேதம் கூறுகிறது (நெகே.21:45).
வசனம் 2:43-62
நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர், கோரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர், லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர், ஆகாபின் புத்திரர் சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர், அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர், பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர், பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர், பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர், நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே. சாலமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர், யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர், செபத்தியாவின் புத்திரர், அத்தீமீன் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே. நிதனீமியரும் சாலமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்: தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே. இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிதனீமியரானவர்களும்கூட தேவனுடைய ஆலயத்தின் ஊழியக்காரர்களாகவிருந்து லேவியர்களுக்கு உதவி செய்து வந்தனர் (எஸ்றா 8:20). அவர்கள், சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் (யோசுவா 9:21): பணி செய்து வந்த கிபியோனர்களுடைய சந்ததியார் என்று கருதப்படுகிறவது (யோசுவா 9:21). 59 வது வசனத்தில் சாலோமோனுடைய வேலையாள்களின் புத்திரர், எனக் கூறப்பட்டுள்ளவர்கள் சாலொமோன் தேவாலயத்தைக் கட்டுவதற்காகப் பணியில் அமர்த்திய 153,600 பணியாள்களின் வழிவந்தவர்கள் எனக் கருத இடமுண்டு (2.நாளா.2:1-2).
ஆனால், ஆலயத்தின் பணியாள்களும், சாலொமோனின் பணியாள்களின் வழிவந்தவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கச் செய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் வழிவந்தவர்களில் சிலரும் அவ்விதமே தங்களை விளங்கச் செய்யக் கூடவில்லை (வச.61). இஸ்ரவேலர் தங்களின் முன்னோரைப்பற்றிய கோத்திர வரலாறுகளையும் தாங்கள் எவ்வழி வந்தோமென்கிற விளக்கங்களையும் குறித்த ஆவணங்களைக் கவனத்துடன் பாதுகாத்து வந்தனர். ஆனால் அவைகளில் பல, அவர்களின் சிறையிருப்பின் காலத்தில் அழிந்தும், தொலைந்தும் போய்விட்டன. ஆகையால் சில ஆசாரியர்கள் தங்கள் கோத்திரங்களை நிரூபிக்க முயன்று முடியாமல் போயினர்.
வசனம் 2:63
ஊரீம், தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
ஆசாரியர்களில் சிலர் தங்கள் கோத்திரங்களை நிரூபிக்க முடியாதபோது தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று அவர்களின் அதிபதிகளால் விலக்கப்பட்டனர். அவர்கள் தங்களை ஆசாரியப் பணிக்கு உரியவர்களாகத் தங்களை, ஊரீம், தும்மீம் என்பவைகளினால் நரூபித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஊரீம், தும்மீம் எனப்படுவது ஓர் ஆசாரியன் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கற்களாகும். தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்ப்பட அவைகள் உதவியாக இருந்தன (யாத்.28:10).
வசனம் 2:64-67
சபையாh எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து, அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
எருசலேமுக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை சபையார் எல்லாரும் ஏகத்திற்கு 42,360 பேராய் இருந்தார்கள் எனப்படுவது அதன் முடிவல்ல. வேறு பலரும் இருந்தனர். அவர்களுடன் பாடகர்களான ஆண்களும், பெண்களுமாக இருநூறு பேரும், மற்றும் 7337 பேரான வேலைக்காரரும், வேலைக்காரிகளும் இருந்தனர். அது தவிர 736 குதிரைகளும், 245 கோவேறுக் கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6720 கழுதைகளும் அவர்களிடம் இருந்தன. அத்தனைப் பெரியக் கூட்டத்தினருக்குப் பொதிகளைச் சுமந்துச் செல்ல இவைகள் மிகச் சொற்பமே. 6 பேருக்கும் அவர்களுடைய சுமைகளுக்கும் ஒரு விலங்கு வீதம் இருந்தன. மற்ற விலங்குகளை விடக் கழுதைகள் அதிகமான இருந்தன... ஏனென்றால் ஓர் ஏழைக் குடம்பம் கூடத் தனது பணிக்காகக் கழுதைகளை வைத்திருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எருசலேமுக்குள் பவனி வந்தபோது கழுதைக் குட்டியாகிய மறியின்மீது ஏறிக் கொண்டு வந்த வேத வாக்கியங்களை நிறைவேறச் செய்தார் (மத்.21:5, சக.9:9). இந்த நீண்ட பயணத்திற்கு ஒட்டகங்கள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்திருக்கும். ஏனெனில் சுமாராக 900 மைல்கள் பாலைவனத்தின் வழியாக அவர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மேலும் ஓர் ஒட்டகம் சுமாராக 200 ராத்தல் எடையுள்ள மூட்டை முடிச்சுக்களையும் சவாரி செய்யும் ஆளையும் சுமந்துகொண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 28 மைல்கள் செய்ல முடியும். ஆனால் அவர்கள் பயணம் அத்தனை வேகமாக இருக்க முடியாதபடி சிறுவர்களும், பெண்களும் அதிகமாக உடனிருந்தனர்.
அவர்கள் தாங்கள் அறிந்திருந்த வாழ்க்கையை விடுவித்து நெடுந்தொலை பயணம் புறப்படுகின்றனர். அவர்கள் சேர வேண்டிய நகரம் படையெடுப்புகளால் அழிந்துச் சிதைந்து விட்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். பல சமயங்களில் பலர் தங்கள் தாய் நாட்டைவிட்டு வேற்று நாடுகளுக்குச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும் பொழுது தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்நோக்கிச் செல்லுகின்றனர். ஆனால் எருசலேமுக்குச் செல்லும் இவர்கள் கடின உழைப்பை எதிர்நோக்கிச் செல்லுகின்றனர். ஆனால் அவர்கள் மனமகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் தங்கள் பயணத்தின்போது எருசலேமின் பழைய வரலாறுகளை எண்ணிப் பார்த்திருப்பர். 2.இராஜாக்கள் 25 ஆம் அதிகாரத்தில் எருசலேமுக்கு ஏற்பட்ட அவல நிலைகளை நாம் வாசிக்கிறோம். நேபுகாத்நேச்சார் இராஜாவின் சேனைகள் எருசலேமுக்குள் புகுந்து, தேவனுடைய ஆலயத்தை அக்கினிக்கு இரையாக்கிற்று. ஆலயத்தில் இருந்த வெண்கல பணிமுட்டுகளை உடைத்து, மற்ற பொன் வெள்ளி பணிமுட்டுகளையும், பாத்திரங்களையும் பாபிலோனுக்கு எடுத்துச் சென்றனர். இராஜாவின் அரண்மனைக் கட்டடங்களும் மற்ற பெரிய கட்டடங்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் எருசலேம் நகரின் அலங்கங்கள் யாவும் இடித்துக் தரைமட்டம் ஆக்கப்பட்டன. இந்த வரலாறு முழுவதும் இவர்களுக்கத் தெரியும். இத்தகைய அவல நிலையில் இருந்த எருசலேமுக்கு அவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை உனது வாழ்க்கையில் கர்த்தருக்கு விரோதமாக இத்தகைய பல வீழ்ச்சிகள் ஏற்பட்டிருக்கலாம். கர்த்தர் உன்னை அழைக்கிறார். ஒரு வேளை உனது பிரார்த்தனை திட்டங்கள் உனது சுகவீனமும், அறிவீனமும் தடுக்கிறதா? உனது குடும்ப வாழ்க்கை சீரமைப்புப் பெற வேண்டியுள்ளதா? நீ முழுமனதுடன் உனது செயலை ஆரம்பிக்க வேண்டும். சில செயலாக்கங்களை நீ விட்டொழிக்க வேண்டி வரலாம். பொதுவாக நம்மைப் பிரார்த்தனை திட்டங்களில் இருந்து தடுப்பவை உலகப் பிரகாரமாக நல்லவைகளாகவும், தேவையானவைகளாகவும் தோன்றலாம். அவைகளுக்கு அதிக நேரம் நாம் ஒதுக்குவதனால் தான் நமது அன்றாட வாழ்வில் தேவனுக்குரிய காரியங்களைப் புறக்கணிக்க நேரிடுகிறது. நீ உனது வாழ்க்கையை ஆராய்ந்து பார். வழிநடத்துதலுக்காக தேவனிடத்தில் மன்றாடு.
எருசலேமின் இழிந்த சிதைவுகளை அவர்கள் காண்கின்றனர். தேவாலயத்தின் சிதைந்த நிலை அவர்களின் சில தலைவர்களின் மனதைத் தொடுகிறது. அதன் விளைவாக அவர்கள் தங்கள் தங்கள் பொருள்களையும், தளவாடங்களையும் திருப்பணிக்காக ஒப்படைக்கின்றனர். நமது இருதயம் தொடப்படும்பொழுது நாம் கொடுக்க முன் வருகிறோம். தாவீது இராஜாவின் நாள்களிலே, ஜனங்கள் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். சந்தோஷப்பட்டார்கள்.... உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள் (1.நாளா.29:9). இத்தகையக் கொடுத்தலைப்பற்றி பவுல் அப்போஸ்தலனும் கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்து, தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள் என்று கூறி உள்ளார் (2.கொரி.8:2). இதை வாசிக்கும் நீ கர்த்தருக்குக் கொடுக்கும் விஷயத்தில் எவ்வாறு இருக்கிறாய் என்று எண்ணிப்பார்.
வசனம் 2:68-70
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாகத் திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
அவர்கள் தங்கள் திறமைகளுக்கு ஏற்பக் கொடுத்தார்கள். ஒவ்வொருவரிடமும் வெவ்வோறு அளவிலான பொன்னும், வெள்ளியும், ஆசாரிய வஸ்திரங்களுமிருந்தன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் திராணிக்குத் தக்கதாக கொடுத்தார்கள் (அப்.11:29). நாம் கொடுப்பதுகூட மற்றவர்களின் செல்வ நிலையைப் பொறுத்துக் கணிக்கப்படுவதில்லை. அவரவரின் திராணிக்குத் தக்கதாகக் கொடுக்க வேண்டும்.
இந்த அதிகாரம் முடியும் தருவாயில் எருசலேமுக்கு வந்த ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள் எனக் காண்கிறோம்.

By
Tamil christian Assembly