யோவான் 18 விளக்கவுரை


யோவான் 18 விளக்கவுரை
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)

1. இயேசு தோட்டத்தில் கைது செய்யப்படுதல் (யோவான் 18:1-14)


யோவான் 18:1-3
1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். 2 இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். 3 யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
இயேசு தம்முடைய வாழ்வையும், தமது அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்களுடைய வாழ்க்கையையும் இறைவனுடைய கரத்தில் கொடுத்து விண்ணப்பித்தார். இந்த பிரியாவிடை ஜெபத்தின் மூலமாக அவர் தம்முடைய வார்த்தைகளையும் ஊழியங்களையும் விண்ணப்பங்களையும் முடித்தார். அதன் பிறகு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவஆட்டுக்குட்டியாக பாடுகளையும் துக்கங்களையும் அனுபவிக்கும் நிலைக்குள்ளானார்.
திராட்சைத் தோட்டமிருக்கும் கிதரோன் ஆற்றுக்கு அப்புறம் உள்ள ஒலிவ மலையிலுள்ள மதில் கட்டப்பட்ட தோட்டத்திற்குள் அவர் நுழைந்தார். இந்தத் தோட்டத்தில்தான் அவரும் அவருடைய சீஷர்களும் அடிக்கடி அடைக்கலம் புகுந்தார்கள், உறங்கினார்கள்.
யூதாஸ் இந்த இரகசிய இடத்தை அறிந்தவனாக யூத அதிகாரிகளுக்கு அவர் எங்கிருப்பார் என்பதை அறிவித்திருந்தான். இதைக் கேட்ட அவர்கள் மகிழ்ச்சியுற்று தேவாலயக் காவலர்களையும் பரிசேயர்களுடைய பிரதிநிதிகளையும் சேர்த்துக்கொண்டார்கள். ரோம ஆட்சியாளர்களின் அனுமதியின்றி யாரையும் கைது செய்யவோ ஆயுதங்களைக் கொண்டு செல்லவோ அவர்களுக்கு அதிகாரமில்லை. தேசாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. யூதாஸ் தகவல் கொடுத்தால் மட்டும் போதாது அவர்களுடன் அவரைக் கைது செய்ய வழிகாட்டியாக வர வேண்டும் என்றும் யூதர்கள் அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆகவே யூதாஸ் காட்டிக்கொடுப்பவனாக மட்டுமல்ல இயேசுவை அவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தவனாகவும் இருந்தான். இறைவன் தம்முடைய குமாரனை காட்டிக்கொடுப்பவனுடைய சாயலை எடுக்கவோ, அவன் இறைமகனுடைய சாயலைப் பெறவோ இறைவன் அனுமதியாராக. அப்படிப்பட்ட இழிசெயல்களை இறைவன் செய்யுமளவுக்குத் தாழ்ந்தவர் அல்ல.
யோவான் 18:4-6
4 இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். 5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். 6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
இயேசுவைக் கைதுசெய்ய வந்தவர்கள் எவ்வாறு தோட்டத்திற்குள் வந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அவர் தப்பிக்க முயலக்கூடும் என்று அவர்கள் கருதியமையால் பல் விளக்குகளை அவர்கள் கொண்டுவந்தார்கள். இயேசு ஆழமாக ஜெபித்துக்கொண்டிருந்தார்; சீஷர்களோ ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவரைப் பிடிப்பதற்கான கூட்டம் காட்டிக்கொடுப்பவனோடு வருகிறது என்பதை இயேசு தமது ஜெபத்தில் கண்டார். தமக்கு கடுமையான நியாயத்தீர்ப்பும் சித்திரவதையும் காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்தபோதிலும் அவர் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அவர் எல்லாவற்றையும் அறிந்தும் தம்முடைய பிதாவிற்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவர் எழுந்து கைதுசெய்ய வந்தவர்களிடம் தம்மை ஒப்புக்கொடுத்தார். அவருடைய மகத்துவமும் மேன்மையும் மாறாதிருந்தது. உண்மையில் யூதாஸ் அல்ல இயேசுவை அவர்களிடம் ஒப்புக்கொடுத்தது, இயேசுவே தம்மைத்தாம் அவர்களிடம் ஒப்புக்கொடுத்தார்.
“நீங்கள் யாரைத் தேடுகறீர்கள்?” என்று அவர் அவர்களிடம் கேட்டார். அவர்கள் அவருடைய பெயரைச் சொன்னபோது அவர் “நான்தான் அவர்” என்ற தெய்வீக நாமத்தை உச்சரித்தார். ஆவிக்குரிய அறிவுள்ள எந்த மனிதனும் இயேசுவில் இறைவனே நின்று மோசேயிடம் சொன்னதைப் போல “நானே” என்று சொல்லுகிறார் என்பதை அறிவார்கள். “நீங்கள் உண்மையிலேயே உங்கள் இரட்சகரைக் கொல்லப் போகிறீர்களா? நான்தான் அவர் உங்களுக்கு இஷ்டமானபடி எனக்குச் செய்யுங்கள். உங்களுக்கு முன்பாக நிற்கும் நானே சிருஷ்டிகரும் மீட்பருமாயிருக்கிறேன்.”
இவற்றை அவர் சொன்னபோது யூதாஸ் அங்குதான் நின்றுகொண்டிருந்தான். இந்த வார்த்தைகள் அவனது இருதயத்தைத் தைத்தது. இதுதான் யோவான் நற்செய்தி நூலில் இறுதியாக அவனைப்பற்றி குறிப்பிடப்படும் இடம். யூதாஸ் முத்தமிட்டதைப் பற்றியும் தற்கொலை செய்துகொண்டு செத்ததைக் குறித்தும் யோவான் எழுதவில்லை. எதிரிகளை தைரியமாக எதிர்கொண்ட இயேசுவைச் சித்தரித்துக் காட்டுவதே யோவானுடைய நோக்கமாயிருந்தது. இயேசு மரணத்தைச் சந்திக்க அயத்தமாக இவ்வாறு சாந்தமாக முன்வந்து தம்மை ஒப்புக்கொடுத்தது யூதாஸின் இருதயத்தைக் குத்தியது. இதைக் கண்டு யூதாஸýம் அவனுடன் வந்த கூட்டமும் அவருடைய மகத்துவமான பிரசன்னத்தில் அதிர்ச்சியடைந்தார்கள். குற்றவாளியைக் கைதுசெய்யும்போது அவர் தப்பிக்க முனைந்தால் அவரோடு போராடுவதற்கு அவர்கள் ஆயத்தமாக வந்திருந்தார்கள். ஆனால் இயேசுவோ பாவப்பரிகார நாளில் பிரதான ஆசாரியன் நடந்துகொள்வதைப் போல மரியாதையுடன் “நீங்கள் தேடுகிறவர் நான்தான்” என்று ஒப்புக்கொடுத்தார். அவர்கள் மயங்கித் தரையில் விழுந்தார்கள். இயேசு நினைத்திருந்தால் அப்போது தப்பித்திருக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்தும் அவர்களுக்கு முன்பாக நின்றுகொணடுதானிருந்தார்.
யோவான் 18:7-9
7 அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8 இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
இயேசு தம்மைக் கைதுசெய்ய வந்தவர்களுடைய கவனத்தைத் தம்மை நோக்கியிழுத்தார். அவர்களில் சிலர் அவருடைய சீஷர்களைக் கைதுசெய்ய விரைந்தார்கள். இயேசு அதை அனுமதிக்காமல் அவர்களைக் காத்து, எதிரிகளை எதிர்கொண்டார். நல்ல மேய்யப்பனாக அவர் தம்முடைய மந்தைக்காக தமது உயிரைக்கொடுக்க ஆயத்தமாக அவர்களை விட்டுவிடும்படி போர்வீரர்களிடம் கேட்டுக்கொண்டார். அவருடைய மகத்துவம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்த காரணத்தினால் அவருடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். மீண்டும் அவர் “நானே அவர்” என்று மறுபடியும் சொன்னார். அதன்மூலம் “நானே ஜீவ அப்பம், நானே உலகின் ஒளி, நானே வாசல், நானே நல்ல மேய்ப்பன், நானே வழி, சத்தியம், ஜீவன். நானே இரட்சகர். மனித உருவில் என்னில்தான் இறைவன் நிற்கிறார்” என்று சொல்கிறார். “இயேசு” என்ற வார்த்தைக்கு இறைவன் ஆதரிக்கிறார் அல்லது இரட்சிக்கிறார் என்று பொருள். இந்த தெய்வீக ஆதரவு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டது. தாழ்மையுள்ள நசரேயனை அவர்கள் தங்கள் மேசியாவா ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 18:10-11
10 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர். 11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
பேதுரு தனது ஆண்டவரையோ அவரது வார்த்தைகளையோ புரிந்துகொள்ளவில்லை. அவர் தூங்கி எழுந்து இன்னும் தூக்க கலக்கத்தில் இருந்தார். போர்வீரர்களை அவர் பார்த்தபோது கோபம்கொண்டு, இயேசுவின் அனுமதியோடு அவர் வைத்திருந்த வாளை எடுத்தார். அதை உயர்த்தி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை தனது ஆண்டவருடைய அனுமதியின்றி வெட்டிப்போட்டான். அந்த வேலைக்காரனுடைய காது துண்டிக்கப்பட்டது. பேதுரு மரித்து வெகுகாலத்திற்குப் பிறகு யோவான்தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இயேசு பேதுருவின் வாளை உறையில்போடும்படி கட்டளையிட்டு மற்ற சீஷர்களும் கைதாவதைத் தடைசெய்தார் என்பதை யோவான் கோடிட்டுக் காட்டுகிறார்.
அதன் பிறகு இயேசு தாம் விண்ணப்பித்தபடி இறைவனுடைய கோபத்தின் பாத்திரத்தை தாம் குடிக்க வேண்டும் என்பதை தமது சீஷர்களுக்கு எடுத்துரைத்தார். இதன் மூலம் அவர் கைதாவதற்கு முன்பாக அவரில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆவிக்குரிய போராட்டம் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் நமக்கான அனைத்துத் தண்டனைகளையும் சுமக்கும்படி துயரப்படுவதற்கு ஆயத்தமாயிருந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். அந்தப் பாத்திரம் நேரடியாக பிதாவின் கரத்திலிருந்து வருகிறது. இவ்வாறு அவர் தமக்கு மிகவும் பிரியமானவரிடமிருந்து மிகவும் கசப்பானதைப் பெற்றுக்கொண்டார். பிதாவும் குமாரனும் மனுக்குலத்தின் மீட்பில் ஒன்றாயிருப்பதால் அன்பினாலேயே அவர் அதைச் சுமந்தார். இறைவன் தம்முடைய ஒரே பேறான மகனைக் கொடுத்து இவ்வளவாக உலகத்தில் அன்புகூர்ந்தார்.

2. அன்னா முன்பாக இயேசு விசாரிக்கப்படுதலும், பேதுரு மூன்று முறை மறுதலித்தலும் (யோவான் 18:15–21)


யோவான் 18:12-14
12 அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, 13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். 14 ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
யூதர்கள் மட்டும் இயேசுவைக் கைதுசெய்யவில்லை, அதற்காக அந்தக்கூட்டத்தில் வந்திருந்த ரோமப் போர்ச்சேவகர்களும் அவரைக் கைதுசெய்தார்கள். மரணத்திற்கும் பிசாசுகளுக்கும் ஆண்டவரும், காற்றையும் கடலையும் அடக்கினவரும், பிணியாளிகளைச் சுகமாக்கினவரும், பாவங்களை மன்னித்தவருமாகிய கிறிஸ்து இப்போது தாழ்மையுடன் தம்மைக் கட்டும்படி ஒப்புக்கொடுக்கிறார். சுதந்திரமானவர் கைதியானார். கர்த்தரை அவர்கள் கட்டி, விலங்கிட்டார்கள். நம்முடைய அசிங்கமான பாவங்களினால்தான் இந்நிலையை நாம் உருவாக்கினோம். அவர் சிலுவை வரை தம்மைத் தாழ்த்துவதில் அவருடைய கட்டுகள் ஆரம்பமாயிருந்தன.
கி. மு. 6 முதல் 15 வரை அன்னாதான் பிரதான ஆசாரியனாக இருந்தான். நியாயப்பிரமாணத்தின்படி அவன் சாகும்வரை பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால் ரோமர்கள் அவனைப் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்கள். ஒரு தந்திரமான சட்ட அறிஞனான அவனது மருமகன் காய்பாவாகிய நரியை அவர்கள் தெரிவுசெய்திருந்தார்கள். அவன் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளையும் ரோமர்களுடைய விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடியவனாக இருந்தான். அவன் வஞ்சகமான தந்திரக்காரனாயிருந்து, சாத்தானுடைய தீர்க்கதரிசியாக தேசத்தின் நன்மைக்காக இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று பொய்த் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். அவர்கள் பேரளவில் நியாயம் விசாரித்து, இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தாங்கள் நீதியாக நியாயம் விசாரிப்பதைப்போல நாடகமாடினார்கள். தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர்களுக்கு இது நியாயப்படி ஆதரங்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணை என்று காண்பிப்பதற்காக அப்படிச் செய்தார்கள்.
மற்ற நற்செய்தியாளர்களைப்போல யோவான் இரண்டு நியாயவிசாரணையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விவரிக்காமல், ஆசாரிய வகுப்பின் தலைவனான அன்னாவின் முன்பு நடைபெற்ற விசாரணையை மட்டுமே கவனத்தில் கொள்கிறார். அன்னா இன்னும் தேசத்தில் நடக்கும் காரியங்களில் அதிக செல்வாக்குச் செலுத்தினான். மரியாதையினிமித்தம் ஆரம்ப விசாரணையை அன்னா செய்யட்டும் என்று காய்பா விட்டுக்கொடுத்தான்.
யோவான் 18:15-18
15 சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.16 பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.18 குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
அந்த இரவில் யோவானும், பேதுருவும் தூரத்திலிருந்து இயேசுவை பின் தொடர்ந்து சென்றார்கள். யோவான் பிரதான ஆசாரியனுக்கு உறவினராய் இருந்தபடியால், அவனால் ஆசாரியார்கள் செல்லும் வழக்கு மன்றத்திற்குள் எளிதாக நுழைய முடிந்தது. நுழைவாயில் வேலைக்காரர்களால் பாதுகாக்கப்பட்டபடியால் பேதுருவால் நுழைய இயலவில்லை.
கதவருகே இருளில் நின்று கொண்டிருந்த பேதுருவின் மனக்குழப்பத்தை யோவான் உணர்ந்தார். வாசலைக் காத்துக் கொண்டிருந்த வேலைக்காரியிடம் யோவான், பேதுருவிற்கு உதவி செய்ய விரும்பி அவனுக்காக பேசினான். அவள் முழுவதும் அதற்கு இணங்காமல், சந்தேகத்துடன் பேதுருவை வினவினாள். “நீயும் அவனுடைய சீஷரில் ஒருவன் அல்லவா?”, “நான் அல்ல என்று அவன் பதிலளித்தான். தனக்கு ஒன்றும் தெரியாததைப் போலவும், தனக்கு அந்தக் காரியத்தில் எந்தப் பங்கும் இல்லை என்பதைப்போலவும் அவன் நடந்துகொண்டான். அது குளிர்காலமாய் இருந்தபடியால், பின்பு நெருப்பினருகே சென்று அவன் குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
யோவான் 18:19-24
19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.21 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
இயேசுவின் குற்றம், அவருடைய ஆள்த்துவம் மற்றும் அவரது உரிமை கோருதல் பற்றி ஆரம்பநிலை விசாரணை இருக்கவில்லை. அது அவருடைய சீஷர்களைப் பற்றியும், அவரது போதனை முறைகள் பற்றியும் இருந்தது. அக்காலத்தில் அநேக இரகசிய குழுக்கள் அங்கே இருந்தன. அவரை விசாரித்தவர்கள் அவருடைய சீடர்கள் மூலம் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆபத்து நேரிடுமோ என தீவிரமாக கண்டறிய விரும்பினார்கள். அதன் மூலம் அவர்கள் கலகம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
அப்படிப்பட்ட எந்த குழுவும் இருப்பதை இயேசு மறுத்தார். மேலும் அநேகர் வந்து கேட்கத்தக்கதாக தேவாலயத்திலும், ஜெப ஆலயங்களிலும் அவர் பகலில் வெளியரங்கமாக போதித்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். தலைவர்கள் அவரை அறிவதை நேர்மையுடன் விரும்பியிருந்தால், அவரது போதிக்கும் இடங்களுக்கு சென்று அவருடைய பேச்சுக்கள் மற்றும் அழைப்பு பற்றிய விவரங்களை கேட்டிருக்க வேண்டும். இவ்விதமாக பிரதான ஆசாரியனுக்கு இயேசு பயமின்றி பதிலளித்தார். திடீரென்று வேலைக்காரர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு சாதகமாக இயேசுவை அறைந்தான். இயேசு அவனை திருப்பி அடிக்கவில்லை அல்லது கோபத்தைக் காண்பிக்கவில்லை. அதே நேரத்தில் அவனது குற்றத்தின் ஆழத்தை அவர் குறைத்துவிடவில்லை. அடித்ததற்கான காரணத்தை கூறும்படி அவனை வினவினார். இயேசு நிரபராதியாய் இருந்தபடியால், அந்த வேலைக்காரன் மனந்திரும்புதலை காண்பிக்க தனது வருத்தத்தை தெரிவிப்பது அவசியமாய் இருந்தது.
வேலைக்காரனின் நடத்தைக்கு அன்னா பொறுப்பு என்பதால் இந்த சவாலானது மறைமுகமாக அன்னாவிற்கு கொடுக்கப்பட்டது.அவன் குற்றச் செயலை அனுமதித்திருந்தான். சரியான காரணமின்றி ஒருவனை அடிப்பது அல்லது நிரபராதியை பயமுறுத்தும் செயலைச் செய்ய தன்னுடைய அடிவருடிகளை அனுமதிப்பது போன்ற காரியங்களை இன்று செய்யும் அனைவருக்கும் விரோதமாக இந்த சவால் விடுக்கப்படுகிறது. நமது ஆண்டவர் சிறு செயலுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அவர் கூறுகிறார், “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.”
இயேசு தன்னை நீதிபதியாக முன்னிறுத்தி, உண்மை மற்றும் நீதியைக் குறித்து வினவினார். தனது பயமுறுத்தல்களுக்கு இயேசு அடிபணியாததை உணர்ந்த அன்னா விசாரனையை முடிவுக்குக் கொண்டுவர சூது நிறைந்த நரியாகிய தனது மருமகன் காய்பாவிடம் அவரை அனுப்பினான்.
யோவான் 18:25-27
25 சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.27 அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
காய்பா இயேசுவின் சீடர்களைக்குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டான். வழக்குமன்றத்தில் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் தாங்கள் கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் என்று அறிக்கைச் செய்யவில்லை. நெருப்பின் வெளிச்சத்தில் பேதுரு அந்த இடத்தில் அந்நியனாக காணப்பட்டான். இயேசுவுடன் தொடர்புள்ளவன் என்று வேலைக்காரர்கள் சந்தேகித்தார்கள். மறுபடியும் பேதுரு பதிலளித்தான். “இல்லை”, “இல்லை”,
சந்தேகித்தவர்களில் ஒருவன் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தான். ஆகையால் அனைவரும் பேதுருவை பயமுறுத்தும்படி பார்த்தார்கள். அவன் கலக்கமடைந்தான். நான் உன்னை அறிவேன், உன்னை நான் தோட்டத்தில் பார்த்தேன் என்று ஒரு வேலைக்காரன் கூறினான். ஆபத்து உச்சகட்டத்தை எட்டியது. ஏனெனில் பேதுரு யாருடைய காதை வெட்டினானோ, அவனுடைய உறவினன் தான் இவன். பேதுருவின் மறுதலிப்பு, சபித்து சொன்ன வார்த்தைகளின் விபரங்களை முழுமையாக யோவான் தரவில்லை. ஆனால் பேதுருவின் மாய்மாலமான நடத்தை, முதன்மையான அப்போஸ்தலரின் தகுதியற்ற தன்மையை யோவான் உறுதிசெய்கிறார்.
சேவலின் கூவல் பேதுருவின் காதுகளில் நியாயத்தீர்ப்பின் எக்காள சத்தம் போல் தொனித்தது. மரணம் வரை தன்னை விருப்பமுடன் பின்பற்றும் எந்த சீஷனையும் இயேசு காணவில்லை. அவர்கள் அனைவரும் ஓடினார்கள், பாவம் செய்தார்கள். பொய் கூறினார்கள் அல்லது மறுதலித்தார்கள். யோவான் நமது ஆண்டவரை மறுதலிப்பதின் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறார். பேதுருவை எச்சரிக்க சேவல் மூன்று முறை கூவிற்று. நமது ஆண்டவரை அறிக்கையிட நாம் பயப்படும்போது. அல்லது நாம் பொய் சொல்லும் போது இறைவன் நமக்கு ஒரு சேவலை கூவும்படி அனுப்புகிறார். சத்திய ஆவியானவர் நம்மீது இறங்க விரும்புகிறார். இயேசுவிடம் சத்திய நாவு, நேர்மையான இருதயம், தெளிந்த மனதை தரும்படி கேளுங்கள்.

3. ரோம ஆளுநர் முன்பு குடிமகனுக்குரிய விசாரனை (யோவான் 18:28 – 19:16)

அ) கிறிஸ்துவின் இராஜரீக உரிமை கோருதலுக்கு எதிரான குற்றச்சாட்டு (யோவான் 18:28-38)


யோவான் 18:28-32
28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.30 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.31 அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
இயேசு பெதஸ்தாவில் முடக்குவாதமுள்ளவனை சுகமாக்கிய போது, சில யூதர்கள் அவரை வெகுசீக்கிரத்தில் கொல்ல நினைத்தார்கள்.(5:18) லாசரு உயிரோடெழுப்பப்பட்ட போது பெரும்பான்மையான யூதத் தலைவர்கள், அவர் கண்டிப்பாக மரணத்தை சந்திக்க வேண்டும் என்று இரகசியமாய் தீர்மானித்தார்கள். (11:46)
யோவானால் குறிப்பிடப்படாத இரண்டு முக்கியமான ஆலோசனைச் சங்கத்தின் கூடுகைகள் வியாழன் இரவு நடைபெற்றது. (மத் 26:57-67, 27:1) கிரேக்க வாசகர்களுக்கு இந்த யூத மார்க்க விளக்கங்கள் குறைந்த முக்கியத்துவம் உடையவை. எனவே தேவாலயத்தை பாதுகாக்கும் படைவீரர்களின் குடியிருப்பில் ரோம நீதியின் பிரதிநிதியாக விளங்கிய பிலாத்து அறிவித்த அநீதியான தீர்ப்பை யோவான் வலியுறுத்திக் காண்பிக்கிறார். பிலாத்து மாத்திரமே தண்டிக்கவும், விடுதலை செய்யவும் அதிகாரம் உடையவனாய் இருந்தான்.
புற இனத்தைக் சேர்ந்த பிலாத்துவின் அரண்மனையில் பிரவேசித்து, தீட்டுப்படலாகாது என்று யூதர்கள் எண்ணினார்கள். தங்கள் குடும்பத்தினருடன் பஸ்காவை ஆசரிக்க வந்தவர்கள் பரிசுத்தத்தை காக்க விரும்பினார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையான தேவ ஆட்டுக்குட்டியை அடித்துக் கொன்றார்கள். இயேசு சிறைப்பிடிக்கப்பட்ட இந்த முக்கிய தருணத்தில், பிலாத்துவின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. கலகம் ஒன்றை திட்டம் பண்ணியதற்காக, இவரைப் போன்ற ஒரு ரோம தேசாதிபதி சீஷர் என்ற ரோம மன்னனால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த ரோம தேசாதிபதி ஓர் யூத எதிர்ப்பாளர். இவரின் இரகசிய சூழ்ச்சி யூதர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. முன்பு யூதர்களை இகழ்ச்சியுடனும், கடினமாகவும் பிலாத்து நடத்தினான். ஆனால் தற்போது அவனின் அதிகாரம் வலிமையிழந்து காணப்பட்டது. யூதர்கள் இயேசுவை பிலாத்துவினிடத்தில் கொண்டு வந்த போது, தேசாதிபதி அவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, எழுந்து அரண்மனைக்கு வெளியே போனார். அவர் விசாரிக்க அதிக நேரம் செலவழிக்கவில்லை. ஆனால் அவர்களின் குற்றச்சாட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டார். புயபலம், படைபலம் இல்லாத ஒரு மன்னன், ரோமிற்கு ஆபத்தைக் கொண்டுவராத அவரது எருசலேம் கழுதைப் பவனி இவற்றை அறிந்து பிலாத்து தனது நமட்டுச் சிரிப்பு மூலம் இயேசுவைக் குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்தினார். மேலும் யூதர்களின் கோரிக்கைகளுக்கு அவன் சம்மதித்து, அவர்களின் விருப்பத்திற்கு ஒப்புக் கொடுத்தான். ஏற்கெனவே இயேசுவை சிறைபிடிக்க அனுப்பப்பட்ட படைக்கென்று ஓர் அதிகாரியை அவன் நியமித்திருந்தான். திட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது கைதி தீர்ப்பை எதிர் நோக்கி நிற்கிறார். பிலாத்து கேட்கிறான் “இவன் என்ன குற்றம் செய்தான்?”.
“இவனைக் குறித்து நாங்கள் முன்பே சொன்னவற்றை நீர் அறிந்திருக்கிறீர்” என்று யூத மூப்பர்கள் மறைமுகமாக அறிவித்தார்கள். இந்த மனிதன் கலகமுண்டாக்கும் நோக்கங்களை உடைய அரசியல் குற்றவாளி. நாங்கள் எதையும் இதனுடன் சேர்க்கத் தேவையில்லை. யூத மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வெறும் சட்டரீதியான சந்திப்பிற்காக நாங்கள் வரவில்லை. அவருடைய மரணத்தை உறுதிசெய்யும்படி வந்திருக்கிறோம். அப்போது தான் மக்கள் கொந்தளிப்பு அடையாமல் இருப்பார்கள்.
யூதர்களின் தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்களை பிலாத்து அறிந்திருந்தான். வல்லமைமிக்க மேசியாவைக் குறித்த அவர்களது எதிர்பார்ப்பையும், அவர்களது சட்டத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதையும் அறிந்திருந்தான். ரோமச் சட்டத்தின்படி இயேசு குற்றத்திற்கு ஏதுவான ஒன்றையும் பேசவில்லை, செய்யவில்லை. ஆகவே அவன் இயேசுவை அவர்களது சட்டத்தின் படி தீர்ப்பு செய்யும்படி வெளியே கொண்டு வந்தான்.
நியாயப் பிரமாணத்தை மீறுபவர்களை கல்லெறிந்து கொல்லும் உரிமையை யூதர்கள் அந்நேரத்தில் பெற்றிருக்கவில்லை. இயேசுவை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டார்கள். சுத்தமற்றவர்கள் என்று கருதப்பட்ட ரோமர்களின் கையில் பொதுவான விசாரனைக்கு இயேசுவை உட்படுத்தினார்கள். அப்போது தான் அடிமைகள் மற்றும் குற்றவாளிக்கு கிடைக்கும் கடுமையான தண்டனை இயேசுவுக்கு கிடைக்கும். சபிக்கப்பட்ட மரத்தின் மீது அவர் உயர்த்தப்பட முடியும். இயேசு தேவனுடைய குமாரன், வல்லமைமிக்கவர். நீதியுள்ளவர் அல்ல என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தமுடியும். மாறாக அவர் பலவீனமுள்ளவர், தேவதூஷனம் செய்பவர் என்பது வெளிப்படும். ரோமர்களின் கையில் இயேசு சிலுவையில் மரிப்பது, அவர் மேசியா அல்ல என்பதை நிரூபிக்கும் என்று காய்பா கருதினார். அதன் மூலம் அவர் சட்டத்திற்கு புறம்பாக அதிகாரத்தை அடைந்தவர் மற்றும் ஏமாற்றுக்காரர் என்பது வெளிப்படும் என்று கருதினார்
யோவான் 18:33-36
33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
போர்வீரர்கள் இயேசுவை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றார்கள். யூதர்களின் குற்றச்சாட்டை கேட்ட பிலாத்து, இயேசு தனது வாயினால் கூறும் எதிர்வாதங்களை கேட்க விரும்பினான். யூதர்களின் வார்த்தைகள் அனைத்தையும் பிலாத்து நம்பவில்லை. சட்டபூர்வ விசாரணையைத் தொடர அவன் கிறிஸ்துவிடம் கேட்டான், “நீ யூதருடைய ராஜாவா?” கறுப்புத் தாடி, பயமுறுத்தும் கண்களுடன் பற்களை கடித்துக் கொண்டிருக்கும் மேசியாக்களை நான் பார்த்திருக்கிறேன். நீ போராளியுமல்ல, தீவிரவாதியுமல்ல, நீ மிகவும் பரிதாபமிக்கவனாக, தாழ்மை மற்றும் எளிமையுடன் காணப்படுகிறாய். இராஜ பதவியை நீ எப்படி அடைய முடியும்? ஒரு ராஜாவுக்கு அதிகாரம், வல்லமை, இரக்கமற்ற தன்மை தேவை.
தான் ராஜா என்று உரிமை கோரியதை பிலாத்து சந்தேகித்தான் என்பதை இயேசு உணர்ந்து அவனிடம் கேட்டார். “என்னுடைய சீஷர்கள் இரவில் உனது படைவீரர்களுடன் சண்டையிட்டார்கள் என்று உமக்குச் சொன்னார்களா? உமது உளவாளிகள் என்னுடைய அரசியல் உரைகளை கேட்டார்களா? அல்லது யூதர்களின் பொய்யை மட்டுமே சார்ந்து உமது கேள்வி உள்ளதா? ஒரு ஆளுநர் தவறான குற்றச் சாட்டுகளுக்கு செவி சாய்க்க கூடாது.
பிலாத்து கோபத்துடன் பதிலளித்தான், “நான் ஒரு யூதனா?” பிடிவாதமான மதவெறி பிடித்த நிலைக்கு நான் இறங்கி வர அவசியமில்லை, மதத்தை குறித்த காரியங்களை இரவும், பகலும் விவாதிக்கத் தேவையில்லை”.
ஆகவே இயேசுவை தான் சிறைபிடிக்கவில்லை என்பதை பிலாத்து ஒத்துக்கொண்டான். யூதமக்களும், அவர்களது தலைவர்களும் தேசியவாதிகளும் தான் அதைச் செய்தார்கள். பின்பு பிலாத்து கேட்டான்,”நீ என்ன செய்தாய்? உன் மீது குற்றம் சாட்டுபவர்களுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். பேசு அல்லது நீ அடிக்கப்படுவாய்; முழு உண்மையையும் சொல்லு” இத் தருணத்தில் இயேசு சீஷர்களுடன் உரைத்தது போல முழு உண்மையையும் அறிக்கை செய்தார். அவர் சொன்னார், “இறைவனுடைய ராஜ்யம் எனக்குரியது. மற்றவர்களை அழித்து, ஆயுதத்தைப் பயன்படுத்தி, கலகத்தைத் தூண்டி கட்டப்பட்ட ராஜ்யம் அல்ல அது. கிறிஸ்துவின் ராஜ்யம் மற்றவர்களுடையதைப் போன்றது அல்ல. ஆயுதத்தை வைத்து போராட வேண்டாம், எறிகுண்டுகளை அல்லது வெடி குண்டுகளை பயன்படுத்தவேண்டாம் என்று இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பூமியின் அனைத்து ராஜ்யங்களை விட அவருடைய ராஜ்யம் முற்றிலும் வேறுபட்டது.
யோவான் 18:37-38
37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.38 அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
பிலாத்து இயேசுவின் கூற்றின் தன்மையை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இராஜா என்பதற்குரிய காரியங்களை தெளிவுபடுத்தாமல் தான் ராஜா என்று குற்றம் சாட்டப்பட்டவர் அறிக்கையிடுவதை அவன் உணர்ந்து கொண்டான். இயேசு இவ்வாறு பதிலளித்தார். “ நீர் எனது இரகசியத்தை உணர்ந்துள்ளீர், எனது வார்த்தைகளை புரிந்துகொண்டுள்ளீர். ஒரு ராஜா என்பவர் தனது ராஜ்யத்தின் சொந்தக்காரர் மற்றும் ஆளுகிறவர். எனது ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல; பொய்கள் மற்றும் ஏமாற்றுகளினால் கட்டப்படும் இவ்வுலக ராஜ்யத்தை போல எனது ராஜ்யம் இல்லை. ஏனெனில் நான் சத்தியத்தின் ராஜாவாக இருக்கிறேன்.
தனது ஆரம்பம் கன்னி மரியின் வயிற்றில் பிறந்தது முதல் அல்ல என்பதை இயேசு சாட்சியிட்டார். அதற்கும் அப்பாற்பட்ட நிலையில் இருந்து அவர் இந்த உலகிற்கு வந்தார். காலங்கள் தோன்றுமுன்னே அவர் பிதாவின் ஒரே பேறான குமாரனாக இருந்தார். அவர் தெய்வீக சத்தியங்களை அறிந்திருக்கிறார். இறைவனுடைய சத்தியத்திற்கு இயேசு சாட்சி கொடுக்கிறார். நித்திய குமாரனாக இருக்கிறார். அவர் உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். ஆனால் பிலாத்து சிரித்துக் கொண்டே கேட்டான், “சத்தியமாவது என்ன?” ஆளுநர் முழுவதும் மாய்மாலம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்பவர் என்பது வெளிப்பட்டது. அவர் சத்தியத்தில் தனது நம்பிக்கையை இழந்து காணப்பட்டார். ஆனால் இயேசு தெய்வீக சத்தியங்களுக்காக உண்மையுள்ள சாட்சியாக உறுதியுடன் நின்றார். அவர் நமக்கு அவருடைய பிதாவின் நாமத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆ) இயேசு மற்றும் பரபாஸ் இருவரில் ஒருவரை தெரிந்தெடுத்தல் (யோவான் 18:39-40)


யோவான் 18:39-40
39 பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.40 அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
இயேசு உண்மையுள்ளவர் என்றும் ஆபத்து விளைவிக்காதவர் என்றும் பிலாத்து உணர்ந்து கொண்டான். அவன் வெளியே காத்துக்கொண்டிருந்த யூதர்களிடம் போனான். குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த குற்றமும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிக்கையிட்டான். நான்கு நற்செய்தி நூல்களும் மத சட்டம் மற்றும் தேச சட்டத்தின்படி இயேசு பாவமற்றவர் என்பதை நிரூபிக்கிறது. இயேசுவின் மீது எந்த குற்றச்சாட்டையும் ஒரு ஆளுநராக அவனால் குறிப்பிட முடியவில்லை. ஆகவே அந்த ஆளுநர் இயேசு குற்றமற்றவர் என்பதை ஏற்றுக்கொண்டார்.
பிலாத்து இந்த அபூர்வ நபரை குற்றம்சாட்டுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்பினார். ஆனாலும் யூதர்களை பிரியப்படுத்த ஆர்வம் கொண்டார். பண்டிகைக் காலத்தில் ஏதேனும் ஒரு குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்யும் வழக்கம் இருந்ததை அவன் அறிவித்தான். இயேசுவை யூதருடைய ராஜா என்று கேலியாக அறிவித்து, அதன் மூலம் பிரதான ஆசாரியனை அவன் சாந்தப்படுத்த முயற்சித்தான். பிலாத்து அவரை விடுவிப்பான் என்றால், இயேசு தனது உரிமை கோருதலை இழந்துவிடுவார். (இவ்விதம் பிலாத்து வாதிட்டான்) ஏனெனில் இயேசு ரோம அடிமைத்தனத்தில் இருந்து தனது மக்களை விடுவிக்கவில்லை. எப்படி இருப்பினும் “யூதருடைய ராஜா” என்ற கூற்றில் ஆசாரியர்கள் மற்றும் மக்கள் தீவிர நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவர்கள் ஒரு இராணுவ கதா நாயகரை எதிர்பார்த்தார்கள். ஆகவே அவர்கள் பரபாஸ் என்ற பெருங்குற்றவாளியை தெரிந்தெடுத்தார்கள். இறைவனின் பரிசுத்தமான ஒருவருக்கு பதிலாக பாவம் நிறைந்த ஒரு மனிதனை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்.
ஆலோசனை சங்கம் இயேசுவுக்கு முரண்பட்டு எதிர்த்து நின்றது. ஜனங்களும் அவரைப் பரியாசம் பண்ணினார்கள். தாழ்மை மற்றும் படைபலம் இல்லாத உண்மையின் பக்கம் நீ தரித்து நிற்கிறாயா? கலகம் மற்றும் வஞ்சகத்தை சார்ந்து நின்ற சட்டவாதிகளை நீ விரும்புகிறாயா? இரக்கத்தையும், சத்தியத்தையும் விட்டுவிடுவாயா?

இ) குற்றம் சாட்டியவர்கள் முன்பு இயேசு வாரினால் அடிக்கப்படுதல் (யோவான் 19:1-5)


யோவான் 19:1-3
1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். 2 போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:3 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
பிலாத்து தனது பதவியைப் பயன்படுத்தி இயேசுவை விடுவிக்கவும், அவரை குற்றம் சாட்டியவர்களை கைது செய்யவும் முடியும். ஆனால் அது நடைபெறவில்லை. அவன் உண்மையை திரித்தான். அவன் ஒத்துபோக முயற்சித்தான். ஆகவே இயேசுவை வாரினால் அடிப்பிக்கக் கட்டளையிட்டான. அத்தண்டனை திகிலூட்டக்கூடியதாக மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. வாரின் நுனியில் எலும்புத்துகள்கள் மற்றும் ஈயக் குண்டுகள் பதித்திருக்கும். அவைகள் தோலைப் பிய்த்துவிடும். சேவகர்கள் இயேசுவை வெறும் முதுகுடன் தூணில் கட்டி, மூர்க்கத்தனமாக அடிக்க ஆரம்பித்தார்கள். அவரது தோள், சதை கிழிந்து, சொல்லொண்ணா வேதனையை அவருக்குத் தந்தது. இந்த சித்ரவதையின் போது அநேகர் இறந்து விடுவார்கள். நமது குற்றமில்லாத ஆண்டவர் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மிகுந்த வேதனையுற்றார்.
இயேசுவின் கிழிக்கப்பட்ட சரீரத்தைக் கொண்டுவந்து, சேவகர்கள் பரியாசம் பண்ணத் தொடங்கினார்கள். இந்த சேவகர்கள் யூத எல்லைப் பகுதிகளில் பயத்துடன் வாழ்ந்து வந்தார்கள். இரவு நேரத்தில் அணிவகுப்பு செய்ய அஞ்சியவர்கள் ஆவர். இப்பொழுது பழிவாங்கும் தருணமாக யூதரின் ராஜா என்று சிலரால் அழைக்கப்பட்ட இவரை துன்புறுத்தினார்கள். இந்த அமைதியற்ற மக்கள் மீது கொண்டிருந்த எல்லா வன்மமும் அவர் மீது ஊற்றப்பட்டது. அவர்களில் ஒருவன் ஓடி, முட்களை எடுத்து, கிறிஸ்துவின் தலையில் அதை கிரீடமாக சூட்டினான். முட்களினால் ஆன கிரீடத்தை அழுத்துவதன் மூலம் இரத்தம் வழிந்தோடியது. மற்றவர்கள் அதிகாரியின் வசம் இருந்த கிழிந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவரைச் சுற்றிக் கட்டினார்கள். காயங்களிலிருந்து வெளியேறுகிற இரத்தம் வெளியே தெரியாத வண்ணம் செந்நிற சாய உடையுடன், அவருடைய இரத்தம் கலந்தது. மேலும் அவர் உதைக்கப்பட்டார், மூர்க்கத்தனமாக குத்தப்பட்டார். சிலர் அவருடைய முடிசூட்டு விழாவிற்கு ஆயத்தமாக, அவரை பணிந்து வணங்கினார்கள். இந்தப் படை வீரர்கள் வேறுபட்ட ஜரோப்பிய நாடுகளை பிரதிபலித்தார்கள். பல்வேறு உலக இன மக்கள் இறைவனின் ஆட்டுக்குட்டியை பரியாசம் மற்றும் தூஷணம் செய்தார்கள்.
யோவான் 19:4-5
4 பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.5 இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
இயேசுவின் வழக்கைப் பார்த்த பிலாத்து அவர் நிரபராதி என்று கண்டு கொண்டான். மூன்றாவது முறையாக அவன் வெளியே சென்று யூதத் தலைவர்களிடம் மறுபடியும் அறிக்கை செய்தான். “நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். “அவன் வஞ்சகத்தை மறைக்கவும், சத்தியத்தை நிலை நாட்டவும் முயற்சித்தான். இயேசுவை வாரினால் அடிப்பட்ட அடையாளங்கள், காயங்களுடன், அவன் கொண்டுவந்தான். முட்கிரீடம் சூட்டப்பட்ட அவர் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவருடைய தோள்களில் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்ட கருஞ்சிவப்பு நிற ஆடை இருந்தது.
உலக பாவத்தை சுமந்த இறைவனின் ஆட்டுக்குட்டியைப் பற்றிய படத்தை உங்களால் காண முடிகிறதா? அவரது பொறுமையில் காணப்பட்ட ஒப்பிட முடியாத அவரது அன்பின் காரணமாக அவரது தாழ்ச்சி அவருடைய உயர்வாக இருந்தது. அவர் கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள மக்களை பிரதிபலித்த பரியாசக் கூட்டம் முன் நின்றார். அவர் மட்டுப்படுத்தப்பட்டார், முட்கிரீடம் சூட்டப்பட்டார். எல்லாப் பாவங்களையும் பரிகரிக்கும் இரத்தத்தை உடைய முட் கிரீடத்துடன் ஒப்பிடும்போது ஜொலிக்கும் மாணிக்கங்களை உடைய எல்லா உலகக் கிரீடங்களும் மதிப்பற்றவையாக இருக்கின்றன.
கடினமான மனிதர்கள் முன்பு பிலாத்து இக் காட்சியினால் அசைக்கப்பட்டான். இயேசுவின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் இல்லை. அவரது உதடுகள் சபிக்கவில்லை. அவர் மௌனமாக அவரது பிதாவிடம் விண்ணப்பம் பண்ணினார். தனது எதிரிகளை ஆசீர்வதித்தார். தன்னைத் திட்டியவர்களின் பாவங்களை சுமந்தார். ஆளுநர் வலிமையான வார்த்தைகளை உச்சரித்தார், “இதோ இந்த மனிதன்” அவன் இந்த மனிதனுடைய மகத்துவத்தையும், கனத்தையும் உணர்ந்தான். அவன் கிறிஸ்துவைக் குறித்து சொல்லியது என்னவென்றால், “இறைவனுடைய சாயலை உடைய இவர் தனித்துவம் மிக்க மனிதன், “சாகும் ஆபத்தில் இருந்த நேரத்திலும் அவரது இரக்கம் வெளிப்பட்டது. சிதைக்கப்பட்ட சரீரத்தில் இருந்து அவரது பரிசுத்தம் பிரகாசித்தது. அவர் தனது சொந்த தவறுகளுக்காக துன்புறவில்லை, என்னுடைய உங்களுடைய பாவம், மனுக்குலத்தின் பாவத்திற்காக துன்புற்றார்.

ஈ)கிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தால் பிலாத்துவிடம் ஏற்பட்ட பயம். (யோவான் 19:6-12)


யோவான் 19:6-7
6 பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.7 யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்.
சித்ரவதையின் நேரங்கள் தொடர்ந்த போது, பெருந்திரளான மக்கள் ஆளுநரின் வாசல் முன்பு கூடினார்கள். அவர்களது கலகத்தன்மையை மென்மையாக்க யூதத் தலைவர்கள் விரும்பவில்லை. அவர்கள் ஒரே சத்தத்துடன், மிகுந்த அமளியுடன் இயேசுவின் மரணத்தண்டனை கொடுக்கும்படி கேட்டார்கள். தயை காட்டுபவர்களையும் அச்சுறுத்தி மனச்சோர்வுண்டாக்கி தங்கள் பக்கம் திருப்பினார்கள். இறைவன் இயேசுவை கைவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். மீட்கும்படியாக ஒரு அற்புதத்தை அவர்களுக்கு இறைவன் நிகழ்த்தவில்லை. ஆகவே மரண தண்டனைக்கான கோரிக்கையில் சத்தம் வளர்ந்தது. கடுமையான தண்டனைத் தீர்ப்பை பிலாத்து கொடுக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் இயேசுவை முற்றிலும் வெறுத்து ஒதுக்கினார்கள். ஏளனத்தின் ஆழங்களுக்கு அவரை உட்படுத்தினார்கள்.
இந்நேரத்தில் அமைதியின்மையின் அடையாளத்தைக் குறித்து எச்சரிக்கையுடன் பிலாத்து இருந்தான். சட்டத்திற்கு புறம்பாக ஒருவனைக் கொல்ல விருப்பமில்லாதவனாக இருந்தான். ஆகவே அவன் யூதர்களிடம் கூறினான், “இவனைக் கொண்டு போய் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். “மூன்றாவது முறையாக இயேசு குற்றமற்றவர் என்பதை அவன் ஒத்துக்கொண்டான். குற்றமில்லாத ஒருவரை வாரினால் அடிப்பித்ததின் மூலம் பிலாத்து தன்னைத் தானே குற்றவாளியாக தீர்ப்பு செய்து கொண்டான்.
எவரையும் கொல்லுவதை ரோமச் சட்டம் தடுக்கிறது என்று யூதர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஒரு வேளை யூதர்கள் அப்படிச் செய்திருந்தால் பிலாத்து அவர்களுக்கு எதிராக திரும்பியிருப்பான். யூதச் சட்டம் சிலுவைத் தண்டனையை நிறைவேற்றும் உரிமையை பெற்றிருக்கவில்லை. கல்லெறியும் தண்டனையை வழங்க முடியும். இயேசு இறை தூஷணம் செய்தார் என்றால், அவர் கல்லெறியப்படத் தகுதியானவர்.
இறைவனுடைய மகன் என்ற கிறிஸ்துவின் கோரிக்கை சரியென்றால், அவரைத் தாழ விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்பதை யூதத் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். எல்லா வேதனையுடன் அவர் துன்பப்பட்ட சிலுவை மரணம், அவர் தெய்வீகமானவர் அல்ல என்பதை நிரூபித்தது. இறைவனின் அனுமதியுடன் நடைபெறும் வெறும் சிலுவை மரணமாக அவர்கள் கருதினார்கள். அதை பாவப் பரிகார பலியாகிய இரத்தமாக அவர்கள் ஏற்கவில்லை.

By
Wateroflife. org

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.