என்னை தேடி 2
நாங்கள் எங்கே செல்வோம்?
நிலையில்லாத இந்த உலகத்தில் நிம்மதியாய் வாழவேண்டும், கஷ்டமில்லாமல் வாழவேண்டும், அது நடக்கவேண்டும், இது நடக்கவேண்டும், பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும், என்று வேண்டிக்கொண்டிருப்பார் போலும். பெரும்பாலும் என்னுடைய பெற்றோர்கள் என்னை வலுக்கட்டாயமாகத் தான் என்னுடைய வீட்டில் உள்ள சிலையை அல்லது அட்டைப் படத்தைப் பார்த்து வணங்க சொல்லுவார்கள். அதுவும் முக்கியமாக நான் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டிக்கொள் என்று என்னுடைய அப்பா எனக்கு அறிவுறுத்துவார். ஆனால் ஒரு முறைக்கூட நீ தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்யாமல் வாழவேண்டும் என்றோ.. பரிசுத்தமாய் வாழவேண்டும் என்றோ, பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிக்கொள் என்றோ சொன்னதில்லை.
இப்படியாக நான் சிந்தித்துக் கொண்டிருந்த வேலையில், என்னுடைய ஆசிரியரை நோக்கி, இயேசு கிறிஸ்துவை தங்களது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே அவருடைய வருகையில் பங்குபெறமுடியும், பரலோகம் செல்லமுடியுமென்றால், என்னைப் போன்று இந்து மதத்தில் பிறந்தவர்கள் எங்கே செல்வார்கள் என்ற கேள்வியை எழுப்பினேன். ஏனென்றல் எனது குடும்பத்தில் கல், களிமண், மரம் போன்ற இயற்கை மற்றும் செயற்க்கை பொருட்களை வைத்து மனிதனுடைய விருப்பதிற்கேற்றவாறு வடிவமைத்து அதற்கு குங்குமம், மஞ்சள் வைத்து தெய்வமாக கும்பிடுகிற எங்களுடைய குடும்பத்தினருடைய நிலை என்ன என்றும், இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களும், அவரை சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு என்ன முடிவு என்ற என்னுடைய குதர்க்கமான கேள்விகளுக்கெல்லாம் மிகவும் பொறுமையாக பதிலளித்தார்.
இவைகளைக் குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன். :
மனிதக்குலத்திற்கு பாவமன்னிப்பு மிகவும் அவசியம் என்றும் [ பாவத்தின் சம்பளம் மரணம் - ரோமர் 6:23 ] நம்முடைய பாவத்திற்கு பரிகாரியாய் இயேசு கிறிஸ்துவே சிலுவையில் பலியானார் என்றும்
தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23]
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும்
நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1யோவான்1:7,9 என்றும்
இயேசு கிறிஸ்து நாம் ஏற்கவேண்டிய தண்டணையை அவர் தாமே ஏற்றுக்கொண்டு, ஒரு பாவமும் அறியாத, ஒரு பாவமும் செய்யாத தேவன் சிலுவையை சுமந்து, தமது பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நமது பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்றும் உயிரோடிருக்கிறார் என்றும், இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டியுள்ள நாட்கள் அனைத்திற்கும் தேவையான சந்தோஷத்தையும், சமாதானத்தையும் இயேசு கிறிஸ்து மாத்திரமே தந்தருள முடியும் என்று கூறினார்.
அவர் நம்மை அதிகமாய் நேசித்து, நம்மீது அன்பு காட்டுகிற தேவன் என்றும், நம் மீது கண்ணோக்கமாயிருந்து, நம் அனைவரையும் பாதுகாத்து, நமது தேவைகளையெல்லாம் அறிந்து நிறைவேற்றுகிற தேவன் என்றும், நமது ஆசை, விருப்பங்களை, தேவைகளை ஆண்டவரிடத்தில் ஜெபத்தின் மூலமாக கேட்கும் போது, அவர் தமது சித்ததின் படியாக தருகிறார் என்றும் பற்பல நற்செய்திகளை பகிர்ந்துக் கொண்டார்.
இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனும்

நாம் அனைவரும் பரலோகம் கடந்துச் செல்லவும், முடிவில்லாத நித்திய வாழ்க்கை வாழ்ந்திடவும், இயேசு கிறிஸ்து ஒருவரே வழி என்பதையும், மிகவும் தெளிவுப்பட விளக்கிக் காட்டினார். மேலும் குமாரனிடத்தில் [இயேசு கிறிஸ்து] விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்பது வேத விளக்கம்.
இந்த உலகத்தின் மக்கள் பலவகையான தெய்வங்களின் பெயர்களை வைத்து வழிப்பட்டுக் கொண்டிருந்தாலும் வேறு எந்த தெய்வங்களும் நம்முடைய பாவங்களுக்காய் இரத்தம் சிந்தவில்லை என்பதையும், இயேசு கிறிஸ்துவை தவிர எந்த தெய்வங்களும் நம்முடைய பாவங்களுக்காய் மரிக்கவில்லை என்றும், வேறு எந்த தெய்வங்களும் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழவில்லை என்றும், குறிப்பாக நாங்கள் வழிப்படும் தெய்வங்களெல்லாம் உண்மையான தெய்வம் அல்ல என்று நான் அறிந்துக்கொண்ட போது அவரை [என்னுடைய ஆசிரியரை] நான் மறுக்கவுமில்லை, அவரை எதிர்க்கவும், வாதிடவும், என்னுடைய மனம் இடம் கொடுக்கவில்லை. பெரும்பாலானோர் நினைப்பதைப் போல் இவர் என்னை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றுகிறாரோ என்ற எண்ணமோ அல்லது மாற்றுக் கருத்தோ அல்லது சந்தேகமோ எனக்கு எழவில்லை.
இந்தக் காலக்கட்டத்தில் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது பற்றுதல் ஏற்பட்டு இன்னும் அதிகமாய் அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே உண்மையான தெய்வம் என்றும், நாம் செய்த எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறவர் என்பதையும் நன்றாய் என் இருதயத்தில் உணர்ந்து, அவர் மீது நம்பிக்கை வைத்தப்படியால் இயேசு கிறிஸ்து என்னுடைய சொந்த தெய்வமாக மாறினார்.
இவைகளைக் குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன். :
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
அவர் [இயேசு] ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் [இயேசு] மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவருக்குள் [இயேசு] ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அவருடைய [இயேசு கிறிஸ்து] நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே வரை வெளிப்படுத்தினார். யோவான் 1:1-4,12,18
போன்ற வேத வசனங்களுக்கு ஆதாரமாய் இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்றும்
I தீமோத்தேயு 3:16 இன் படி- தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்றும் - அவ்வாறு மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன் இயேசு கிறிஸ்துவே என்றும்
ஏசாயா 59:2ன் படி- உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. என்றும்
ரோமர் 5:6-10ன் படி- நாம் தேவனுடையப் பார்வையில் அக்கிரமக்காரராகவும், பாவிகளாகவும், தேவனுக்குச் சத்துருக்களாகவும் காணப்படுகிறோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ஆனால் ஒன்று மாத்திரம் என்னுடைய இருதயத்தில் ஒளித்துக் கொண்டிருந்தது.. இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்... (அவரை யாரெல்லாம் தங்களது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து மரித்தவர்கள் எல்லாரையும் இயேசு உயிரோடு எழுப்புவார்) என்றும், அவரோடு கூட பரலோகத்திற்கு கூட்டிக் கொண்டுச் செல்வார் என்றால் கிறிஸ்துவுக்குள் மரிக்காதவர்களும், என்னைப் போன்ற இந்து தெய்வங்களை வழிப்படுபவர்களுடைய நிலை என்ன? என்றக் கேள்வி என்னுடைய மனதில் தோன்றியது.
உண்மையான தேவன் யார்? என்பதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்.
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; யாத்திராகமம் 20:1-5
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். லேவியராகமம் 26:1
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். சங்கீதம் 115:3-8
வகுப்புகள் முடிந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் என்னுடைய ஆசிரியரும் பள்ளி மைதானத்திற்குச் சென்றோ அல்லது வகுப்பறையிலோ அமர்ந்து இன்னும் அதிகமாய் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துக்கொள்ள தேவன் வழிநடத்தினார். ஒரு வித்யாசமான அனுபவம் நிறைந்த நாட்களாய் அவைகள் காணப்பட்டது. நடந்துப் போகையிலும், உட்காருகையிலும், சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகையிலும் "மகிழ்வோம் மகிழ்வோம்" என்ற பாடல் என் உள்ளத்தில் ஒளித்துக்கொண்டே இருக்கும். அந்தப் பாடலின் வரிகளை உணர்ந்துப் பாடும் போது, என் உள்ளத்திற்குள் நிறைவான சந்தோஷமும், எதைக்குறித்தும் கவலைப்படாமல், எனக்கு எல்லாமே இயேசு தான் என்றும், இயேசு மாத்திரம் போதும் என்ற மன நிறைவு கிடைக்கும். அந்தப் பாடலின் வரிகள்...
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
ஆம்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய உள்ளத்தில் உண்மையாய் ஏற்றுக் கொண்டு வாழும் போது இந்த உலகத்தில் யாரும் கொடுக்கமுடியாத ஒரு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துக் கொண்டேன். இன்னும் இயேசுவைப் பற்றி அறிந்துக்கொள்ள எனதுப் பள்ளியில் கொடுத்திருந்த புதிய ஏற்பாட்டையும், எனது ஆசிரியர் கொடுத்திருந்த யோவான் எழுதிய சுவிசேஷம் அடங்கிய புத்தகத்தையும் வீட்டில் நேரம் கிடைக்கும் சமயத்தில் அவைகளை நேசித்து வாசிக்கவும் குறிப்பாக ஒவ்வொரு நாள் இரவிலும் என்னுடைய அறையில் தூங்குவதற்கு முன்பாக முழங்கால் படியிட்டு ஒரு சில நிமிடங்கள் ஜெபித்துவிட்டு தூங்குவேன்.
இவைகளை நான் செய்து வந்தும், அந்நாட்களில் நான் எந்த ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கும் சென்றதில்லை. என்னுடைய மனதளவில் இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான தேவன் என்ற நம்பிக்கையில் மட்டும் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். நான் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த விசுவாசத்தை (நம்பிக்கையை) என்னுடைய பெற்றோர்களிடத்திலோ அல்லது என்னுடைய நண்பர்களிடத்திலோ நான் பகிர்ந்துக்கொண்டதில்லை.
விக்கிரகத்தை வணங்கிக் கொண்டிருந்த நாட்களுக்கும், இயேசுவை ஏற்றுக்கொண்டு முழங்கால் படியிட்டு ஜெபிப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசத்தை உண்ர்ந்தேன். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்றும் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் என்னுடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்ற நிச்சயம் எனக்குள் காணப்பட்டது.
வித்தியாசத்தை உணர்ந்தேன்

அடுத்த்தாக நான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் (தெரிந்தும், தெரியாமலும் செய்த எல்லாத் தப்பிதங்களுக்கும் - பொய் பேசியது முதல் எல்லாவிதமான குற்ற உணர்வுகளுக்கும்) இயேசுவினிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வு என் உள்ள்த்திற்குள் ஏற்படுவதுமாத்திரமில்லாமல், இனி அப்படிப்பட்ட தவறுகளை செய்யக்கூடாது என்ற உணர்வும் என் உள்ளத்திற்குள் ஏற்படும். எனவே நான் மிகவும் பயபக்தியோடு முழங்கால் படியிட்டு நான் செய்த எல்லாப் பாவங்களையும் அறிக்கையிட்டு இயேசுவினிடத்தில் பாவமன்னிப்பு கேட்பேன்.
ஆனால் என்னுடைய இந்து குடும்பத்தின்படி வீட்டில் விக்கிரகத்தை வணங்கும்போதோ அல்லது இந்து கோயில்களுக்கெல்லாம் சென்றபோதோ அப்படிப்பட்ட பயபக்தியோ அல்லது நான் செய்த எல்லாப் பாவங்களையும் அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வோ எனக்கு இருந்ததில்லை. இந்நாட்களில், எனக்கு திரு. ரமேஷ் என்ற அண்ணனை சந்திப்பதற்கான வாய்ப்பையும், அவரோடு சில மாதங்கள் நெருங்கிப் பழகவும், தேவனாகிய கர்த்த்ர் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். எப்படியெனில், நான் மாலை நேரங்களில் என்னுடைய வேதியியல் பாடம் கற்றுத்தந்த ஆசிரியர் (John sir) வீட்டிற்கு சென்று மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு சென்றுக்கொண்டிருந்தேன். அவருடைய வீட்டின் மாடியில் தான் ரமேஷ் அண்ணன் குடும்பமாக வசித்து வந்தார். அப்பொழுது அவருக்கு திருமணம் ஆகவில்லை. எனக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அதிகமாய் சொன்ன என்னுடைய ஆசிரியர் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். ரமேஷ் அண்ணன் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து பிறகு இயேசு கிறிஸ்துவை தமது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருந்தார். அந்நாட்களிலேயே (1993 - 1994), சென்னையிலுள்ள தண்டையார்பேட்டைக்கு ஒவ்வொரு வாரமும் சென்று சில குடும்பங்கள் மத்தியில் ஆண்டவருக்காக ஊழியம் செய்து கொண்டு வந்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருடைய வாழ்க்கையிலும் செய்த அற்புதங்களையெல்லாம் அவர்மூலமாகவும் கேள்விப்பட்டபோதும், இயேசு கிறிஸ்து மீது அவர் வைத்திருந்த உறுதியான நம்பிக்கையை நான் கண்டபோது என்னுடைய உள்ளம் மிகுந்த பரவசமும், உற்சாகமும் அடைந்தது. அவருடைய வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்தே மேன்மையாகப் பேசி, பற்பல புதிய பாடல்களை பாடி, எனக்கும் கற்றுக் கொடுப்பதும், அவரது வீட்டிற்கருகாமையிலிருந்த விளையாட்டு மைதானத்திற்கு இருவருமாக சென்று ஜெபிப்பது எமது அன்றாட வழக்கமாக இருந்தது.
இப்படியாக பகல் நேரங்களில் என்னுடைய வகுப்பாசிரியரும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ரமேஷ் அண்ணன் மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அதிகமாய் அறிந்துக் கொள்வதற்கு தேவன் கிருபை செய்தார்.
விக்கிரகத்தின் மீது வெறுப்பு:
இயேசு கிறிஸ்து என் இருதயத்தில் வாசம் பண்ணத் துவங்கியப் பின்னர், ஒர் இனம்புரியாத சந்தோஷம் என் இருதயத்தை நிரப்பியிருந்ததை மாத்திரம் என்னால் அனுதினமும் உணர முடிந்தது. எனவே, விக்கிரக வழிப்பாட்டைப் பார்க்கும் போதெல்லம் அவைகள் யாவும் மனுஷனால் உண்டான கைவேலை என்றும், இவைகள் ஒருபோதும் பேசாது, யாரையும் பார்க்காது, யார் வேண்டுதல் செய்தாலும் கேட்க்காது, யாருக்கும் பதில் தர இயலாது என்ற எண்ணம் தான் என் நினைவிற்கு வரும். என்னுடைய வீட்டில் கொண்டாடும் இந்து சமயப் பண்டிகைகள் மற்றும் விசேஷித்த நாட்களில் நடைப்பெறும் பூஜைகளிலும் கலந்துக் கொள்ள மனதில்லாமல் வெளியே நிற்பேன். என்னுடைய பெற்றோர்கள் என் கைஇயைப் பிடித்து இழுத்து, கற்பூரத் தட்டைக் கொடுத்து விக்கிரகத்தை மூன்று முறை சுற்றி வர கட்டாயப்படுத்துவார்கள். ஆனால் எனக்கு அந்த சிலைகளை பார்க்கவோ, வணங்கவோ என்னுடைய இருதயம் இடம் கொடுக்காது.
இருப்பினும் என்னுடைய பெற்றோர்களின் வலியுறுத்ததலின் மூலம் எங்களுடைய வீட்டிலுள்ள விக்கிரக சிலைகளுக்கு முன்பாகவோ அல்லது இந்து கோயில்களுக்குச் சென்றால் அங்குள்ள விக்கிரக சிலைகளுக்கு முன்பாகவோ அவர்கள் என்னைப் பிடித்து நிற்க வைக்கும்போது என்னுடைய இருதயம் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவையே நோக்கிக் கூப்பிடும். காரணம், சிற்பங்களோ, படங்களோ, உருவங்களோ ஒருபொதும் நம்மை காணாது, அதற்கு உணர்வுகள் ஏதும் கிடையாது, அப்படியிருக்க அவைகள் யாருக்கும் தெய்வம் ஆக முடியாது என்ற சிந்தனையும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டபடியால், விக்கிரக வழிப்பாட்டை நான் முற்றிலுமாக வெறுத்து விட்டுவிட்டேன்.
இப்படியே நான் இயேசு கிறிஸ்துவின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து (வெளியில் யாரிடமும் சொல்லாமல்) என்னுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கையில்……
விலகிச் சென்றேன்

இயேசு கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்ற நாட்கள்:
நான் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் திரு.நர்கீஸ் அவர்க்ள் திடீரென்று தன்னுடைய ஆசிரியர் பணியை இராஜினாமா செய்து விட்டார். ஆந்தப் பள்ளியில் வேரு சில ஆசிரியர்களிடம் நான் நெருங்கிப் பழகியிருந்தாலும், திரு. நர்கீஸ் சார் அவர்களின் இராஜினாமா என்னுடைய வாழ்க்கையில் நான் எதையோ இழந்துவிட்டதாகவே எண்ண வேண்டியதாயிற்று. மிகவும் முக்கியமாக, நாங்கள் மாலையில் சந்தித்து ஜெபிப்பதும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அதிகமாய் அறிந்துக் கொள்ளவேண்டிய வாய்ப்பும் முற்றிலுமாக நின்று போயிற்று. நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும், திரு. நர்கீஸ் சார் அவர்களைப் போல யாரும் எனக்கு அதிகமாய் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லவுமில்லை, எனக்காக யாரும் பாரத்துடன் ஜெபித்ததுமில்லை.
இந்தப் பிரிவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. ஒரே சமயத்தில் திரு. நர்கீஸ் அவர்களுடைய தொடர்பும், ரமேஷ் அண்ணன் அவர்களுடைய தொடர்பும் துண்டித்தப்படியால், என்னுடைய தனிப்பட்ட ஜெபவாழ்க்கையிலும், வேத வார்த்தைகளை வாசிப்பதிலும் (இரவு நேரம் கிடைக்கும்போதெல்லாம்), இயேசு கிறிஸ்துவின்மேல் இருந்த தெய்வீகப் பற்றுதலிலும் தொடர்ந்து வளரமுடியாமல் ஒரு பின்மாற்றம் காணப்பட்டது. அவர்கள் இருவருடைய தொடர்பும் எனக்கு தொடர்ந்து இருந்திருக்குமானால், என்னைக் குறித்து அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருந்திருப்பார்கள். அவர்கள் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்திருப்பார்கள். நான் சரியானப் பாதையைப் பின்பற்றுகிறேனா என்று என்மீது கண்ணோக்கமாய் இருந்திருப்பார்கள். அவ்வாறு ஜெபத்திலும், வேதவார்த்தைக்குள்ளும், இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் என்னை வழிநடத்துவதற்கு அவர்களோ அல்லது வேறு யாரும் இல்லாததினால், நாட்கள் செல்ல செல்ல எனக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த தாகமும், வாஞ்சையும் முழுவதுமாக குறைந்துவிட்டது. இதுவே நாளடைவில் தேவனுக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படக் காரணமாகவும் இருந்தது.
ஆனால் அவ்வப்போது எனக்கு ஏதாவது தேவையென்றால் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில்) பரிட்சை எழுதும் சமயங்களில், தேர்வு எழுதி முடிவு வரும் நேரங்களில் இயேசுவை மறந்ததில்லை. அச்சமயத்திலெல்லாம் நான் இயேசுவையே நோக்கி கூப்பிடுவேன்... மனசுக்குள்ளவே வேண்டுதல் செய்வேன். அப்படி தான் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க அடிக்கடி ஜெபித்திருக்கிறேன்.

பாதை மாறியது
இதற்கிடையில் நான் 12-ம் வகுப்பு முடித்தவுடன், சென்னையிலுள்ள R.M.K. பொறியியல் கல்லூரியில் சேர்ந்து B.E. Mechanical Engineerring நான்கு வருடங்கள் படித்தேன். கல்லூரி நாட்களிலும் நண்பர்களோடு சேர்ந்து எதைக் குறித்தும் கவலையில்லாமல் எங்கள் மனம்போன போக்கில் உல்லாசமாக வாழ்ந்தேன். தேவபக்தியை முற்றிலும் இழந்துவிட்டேன்.. இயேசு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அதிகமாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற என்னுடைய ஆத்துமத் தாகம் வெகுவாக குறைந்து விட்டது. இரவு நேரங்களில் அவ்வப்போது செய்துவந்த ஜெபமும், வேத வாசிப்பும் முற்றிலும் நின்று போய்விட்டது. தவறுகள் செய்யக்கூடாது என்றிருந்த பயவுணர்வு கூட இல்லாமல் போய்விட்டது. இச்சூழலில் எனது வாலிப நாட்களில் உலக ஆசை, இச்சைகளுக்கு இணங்கி பாவத்தின் அடிமைக்கு வாழும்படியாக பாவம் என்னை ஆட்கொண்டுவிட்டது.
இக்காலக்கட்டத்தில் எனது ஊரில் வருடந்தோரும் நடைப்பெரும் விக்கிரக கோயில் திருவிழாவில் ஒரு முக்கிய பொறுப்பை எனது ஊர் தலைவர் அவர்கள் என்னிடம் கொடுத்துவிட்டார். அந்த பொறுப்பு என்னவென்றால், நான் என்னுடைய நண்பர்கள் சிலரை என்னுடன் அழைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று, எங்களது ஊர் கோயில் திருவிழாவிற்கு சந்தா வசூல் செய்யவேண்டும். மற்றும் எல்லா கணக்கு வழுக்குகளையும் எழுதி கணக்குப் பார்க்க வேண்டும். விக்கிரகங்களையே வெறுத்த நான், இப்பொழுது கோயில் காரியங்களில் ஈடுப்பட்டு, நான் செய்வது தவறு மற்றும் சாபம் என்பதைக் கூட உணராமல் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக இந்த செயலை செய்தேன்.
என்னுடைய நாமத்தை விக்கிரகத்திற்கு கொடேன்:
நாம் எவ்வளவு தான் இயேசு கிறிஸ்துவை விட்டு விலகி தூரம் சென்றாலும், மறுபடியும் மறுபடியும் நம்மை சேர்த்துக்கொள்வதற்கு எப்போதும் ஆவலாய் இருக்கிறார். நம்மை தேடி வருகிற நல்ல தேவனாயிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையிலும் தேவன் அவ்வாறே செய்தார் என்று இன்று நான் நினைக்கும்போது என்னைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த தேவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
எனக்கும் தேவனுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்ட நேரத்தில் (இயேசுவை மறந்து அவரை விட்டு விலகி சென்ற நேரம்) ஒரு நாள் மாலை நேரத்தில், நான் கல்லூரி முடிந்து ரயிலில் வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்த போது அதே ரயிலில் என்னுடைய ஆசிரியர் திரு. நர்கீஸ் அவர்களை சந்திக்கும்படி தேவன் கிருபை செய்தார். அவரைப் பார்த்ததும் பரவசமடைந்தேன். சிறிது நேரம் அவரோடு உட்கார்ந்து பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து சந்தோஷமாய் விடைப்பெற்றேன். அவரை சந்தித்தப் பிறகும் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றமும் காணவில்லை. அவர் இயேசுவைக் குறித்து ஏதேனும் சொன்னாரா என்றுக் கூட எனக்கு ஞாபகம் இல்லை. காரணம் என்னுடைய மனம் இயேசுவைக் குறித்து கேட்க்கக்கூடிய நிலையில் அப்பொழுது இல்லை. இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அன்பு குறைந்தது, பாவம் பெருகியது.

இடையில் இடைப்பட்ட தேவன்
ஒரு சில வருடங்கள் கழித்து, மறுபடியும் என்னுடைய ஆசிரியரை சந்திக்கும்படியான வாய்ப்பை தேவன் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் ஒரு டியுஷன் சென்டர்க்கு வந்து பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் டியுஷன் சொல்லிக் கொடுக்க வருவார். அங்கே நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. (வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது). அந்நேரத்தில் அவர் எனக்கு ஒரு மனிதருடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை எழுதிய சாட்சியின் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ஒரு கொள்ளைக்காரனாக இருந்து தேவ ஊழியராய் (Eva. N.A Rajan) மாறியவரின் அனுபவத்தை எழுதிய சாட்சியின் புத்தகம். ஒரு காலக்கட்டத்தில் போதை, கொலை மற்றும் கொள்ளையில் ஈடுப்பட்டு அடிக்கடி போலிசாரால் கைதுசெய்யப்பட்டு பலமுறை பல ஜெயிலில் அடைக்கப்பட்டு (டெல்லியிலுள்ள திஹார் ஜெயில் உள்பட) அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு இப்பொழுது திஹார் ஜெயிலில் உள்ள சிறை கைதிகளின் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கும் பணியிலும் மற்ற பல்வேறு இடங்களிலும் தேவன் இவரை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.
இயேசு கிறிஸ்து மூலம் தான் பெற்றுக் கொண்ட சந்தோஷத்தையும், சமாதானத்தையும், பாவமன்னிப்பைக் குறித்தும், அவருடைய வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த பல அற்புதங்களையும், அதிசயங்களையும் - எப்படியெல்லாம் தேவன் இவரை பல சோதனையிலிருந்து தப்பிக்க வைத்தார், எப்படி இயேசுக் கிறிஸ்துவை சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டார் என்பதனை விவரித்து எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது மெய்யாகவே தேவன் அவருடைய வாழ்க்கையில் செய்த ஒவ்வொரு அற்புதங்களையும் எண்ணி வியப்படைந்தேன். அந்தப் புத்தகம் என்னை பரவசப்படுத்தியிருந்தாலும், இயேசு கிறிஸ்துவை முற்றிலும் மறந்து வாழ்ந்துக் கொண்டிருந்த என்னிடம் தேவன் பேசுகிறார் என்பதை என் இருதயத்தில் உணர்ந்துக் கொள்ளவில்லை. இப்படியாக நான் மறுபடியும் தேவனிடத்தில் கிட்டி சேர்வதற்கும், தேவனை அறிகிற அறிவில் வளர்வதற்கும் எத்தனையோ சந்தர்பங்களை தேவன் எனக்கு கொடுத்தார். ஆனால் நானோ தேவ சத்ததிற்கு கீழ்ப்படியவில்லை.
பொறியியற் கல்லூரி முடித்தவுடன் கிடைத்த வேலை :
எனது பொறியியற் கல்லூரி படிப்பை படித்து முடித்தவுடன், கடந்த 2000-ம் ஆண்டில் சென்னையில் உள்ள ஒர் பிரபலமான தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
மூன்று வருடங்கள் கழித்து 2003-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் பெங்களுரில் கோரமங்கலாவிலுள்ள ஒர் தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததால் சென்னையிலிருந்து பெங்களுர் சென்று நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தேன். என்னுடைய பெற்றோர்கள் சென்னையில் வசித்து வந்தார்கள். நான் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சென்னைக்கு போய் வருவேன். நேரம் கிடைக்கும்போதெல்லம் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் செல்வதை தவிற வேறு எந்த ஒரு பொழுதுபோக்கும் எனக்கு இருந்ததில்லை. மனம்போன போக்கில் மனம் விரும்பினதை செய்து கொண்டிருந்தேன்.
எதிர்காலத்தை நோக்கி

நல்ல சம்பளமும், நல்ல வேலையும் இருந்ததால், எந்த ஒரு பிரச்சனையுமில்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது இருந்த ஒரே எதிர்பார்ப்பு என்னுடைய பெற்றோர்கள் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆகவே, திருமணம் செய்துக் கொண்டு, நல்லதொரு வாழ்க்கை சந்தோஷமாய் வாழ்வதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய எதிர் கால இலட்சியம் :
1. எல்லாரும் விரும்புகிற வண்ணம், நானும் நன்றாகப் பணம் சம்பாதித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். எதிற்காலத்திற்கென பணத்தை சேர்த்து வைத்து, நல்ல வசதியாக வாழ வேண்டும், இப்பொழுதே நாம் சேமித்து வைத்தால், பிற்காலத்தில் நமக்கு உதவிகரமாக இருக்கும் என்ற மனக்கணக்கில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன்.
2. எந்த ஒரு வியாதியோ, பெலவீனமோ என்னை தாக்கக்கூடாது என்பதில் கருத்தாய் இருந்தேன். சுமார் 85 to 90 வயதுவரைக்கும் இந்த உலகில் வாழவேண்டும், ஆகவே உடலை ஆரோக்கியாமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெங்களூரில் அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தேன்.

பாவம் பெருகினது
இந்நாட்களில் இயேசு கிறிஸ்துவை நான் முற்றிலும் மறந்து விக்கிரகங்களையும், குறி சொல்லுகிறவர்களையும் பின் தொடர ஆரம்பித்தேன். என்னுடைய எதிர்காலம் நன்றாக அமையவேண்டும், திருமணம் நன்றாக நடக்க்வேண்டும் என்பதற்காக ஒரு சில இந்து விக்கிரக கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்யவேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் என்னிடம் கூற விக்கிரகங்களை வழிபடுவதற்கு ஆளாகினேன். என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்வதற்காக கைரேகை மற்றும் பணை ஓலைசுவடிகளையும், குறிகேட்பதிலும் நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்லும் பரிகாரங்களையெல்லாம் செய்தேன்.
எபேசியர் 2:3-ல் எழுதியிருக்கிறபடி என்னுடைய மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்துக் கொண்டிருந்தேன். (மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:19-21.)
இப்படியாக, நான் நன்றாக பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், 2005-ம் வருடம் நவம்பர் மாதத்தில் எனது திருமணமும் ஒழுங்கு செய்யப்பட்டது. என்னுடைய வருமானம், ஆரோக்கியமான உடல்நலம், என்னுடைய படிப்பினிமித்தமும், நல்ல சம்பாத்தியத்தினிமித்தமும், என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் என்னுடைய பெயரும், அந்தஸ்தும் மேலோங்கி இருந்ததால், என்னுடைய சூழ்நிலைகள் அனைத்தும் எனக்கே சாதகமாக இருந்ததாக எண்ணி, என்னுடைய சுயபெலத்தின் மீதும், என்னுடைய பணத்தின் மீதும் நம்பிக்கை வைத்து, எனது கனவுகளை நிஜமாக்கிட ஆர்வத்துடன் உழைத்துக் கொண்டிருந்த வேலையில்....................
சுமார் 13 வருடங்கள் கழித்து: 2005-ம் வருடம், ஆகஸ்டு மாதம்:
பெங்களுர் - கோரமங்கலா: நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து என்னுடைய அலுவலகத்திற்கு நடந்து சென்றால் 15 நிமிடமும், பேருந்தில் பயணம் செய்தால் ஒரு 5 நிமிடமும் தான் எடுக்கும். ஒரு நாள் என்னுடைய அலுவலகத்திற்கு நடந்துச் சென்று ண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராத விதமாய் என்னுடைய வயிற்றின் அடிப்பகுதியில் இழுத்துப் பிடிப்பதைப் போலவும், சுருக்கென ஊசியில் குத்துவதைப் போலவும் வலி ஏற்பட்டது. என்னுடைய உடல் சூடாகிவிட்டது என நினைத்து அலட்சியமாக இருந்தேன். வயிறு அடிக்கடி இழுத்துப் பிடித்ததனால் ஒருவேலை அஜீரனக் கோளாராக இருக்குமோ என்று நினைத்து வெந்நீரை அடிக்கடி குடிக்க ஆரம்பித்தேன். என்னுடைய வயிற்றுவலி நின்றபாடில்லை. அதுவும் இந்த வலி எனக்கு சற்று விநோதமாகக் காணப்பட்டது. தொடர்ந்து வயிற்றுவலி இருந்ததால், பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் (St.John's) மருத்துவமணைக்குச் சென்று வயிறு மற்றும் குடல் (Gastroenterologist) சம்பந்தமான மருத்துவரை சந்தித்தேன். என்னுடைய எல்லா அறிகுறிகளையும் கேட்டுவிட்டு, என்னைப் பரிசோதித்து விட்டு, அருகிலுள்ள பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon) மற்றும் மருத்துவர் அவர்களை சந்திக்கச் சொன்னார்.

வேதனையின் ஆரம்பம்:
உடனடியாக அந்த மருத்துவரை சந்தித்த நான், அருகிலிருந்த ஒரு படுக்கையைக் காட்டி என்னை அதில் படுக்குமாறு கேட்டுக்கொண்ட அவர் என்னை பரிசோதித்து எனக்கு குடலிறக்கம் இருப்பதாகவும் அதனை சரிசெய்ய ஒரு சிறு அறுவை சிகிச்சை ஒன்று செய்யவேண்டும் என்றும் எனக்கு வலியுறுத்தினார். அந்த மருத்துவர் என்னைப் பார்த்து அறுவை சிகிச்சை ஒன்று செய்யவேண்டும் என்று சொன்னவுடன் அந்த பரிசோதனைப் படுக்கையிலிருந்து எனக்கு எழுந்திருக்கக் கூட முடியாமல் திகைத்துப் போனேன். அறுவை சிகிச்சையா என என் மனம் அதிர்ந்தது, ஒரு சாதாரண வயிற்றுவலி என்று மருத்துவரிடம் வந்தேன் ஆனால் என்னை அறுவைசிகிச்சை வரைக்கும் கொண்டுபோய்விட்டதே என்று என்னுடைய இருதயம் படபடத்தது. பயந்த குரலில் அந்த மருத்துவரைப் பார்த்து ஏதேனும் மருந்து அல்லது மாத்திரை சாப்பிட்டு இந்த குடலிறக்கத்தை சுகப்படுத்த முடியாதா என்று அந்த மருத்துவரைப் பார்த்துக் கேட்ட கேள்விக்கு, மருத்துவர் என்னைப் பார்த்து, அறுவைசிகிச்சை ஒன்று தான் அதற்கு தீர்வு என்றும் மருந்து மாத்திரையால் இதை சுகப்படுத்த முடியாது என்றும் சொல்லிவிட்டார்.
பிறருக்கு அறுவை சிகிச்சை என்றாலே எனக்கு பய உணர்வு ஏற்படுகின்ற சுபாவம் கொண்டவன் நான். ஆனால் இப்பொழுதோ எனக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறாரே என்று மனம் வேதனையடைந்தது. அதுவரைக்கும் என்னுடைய சரிரத்தில் எந்தவொரு பிரச்சனையும் வந்ததில்லை! என்னுடைய உடல் வலிமையைப் பார்த்து நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். உடலை ஆரோக்கியாமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தேன், நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடுவேன். ஆனாலும் இப்படி ஒரு நிலையா? என்னசெய்வதென்று அறியாமல் வேதனையோடும், பயத்தோடும், குழப்பத்துடனும் மருத்துவமணையிலிருந்து வெளியேறினேன்.