என்னை தேடி 3
வேதனையின் ஆரம்பம்:
உடனடியாக அந்த மருத்துவரை சந்தித்த நான், அருகிலிருந்த ஒரு படுக்கையைக் காட்டி என்னை அதில் படுக்குமாறு கேட்டுக்கொண்ட அவர் என்னை பரிசோதித்து எனக்கு குடலிறக்கம் இருப்பதாகவும் அதனை சரிசெய்ய ஒரு சிறு அறுவை சிகிச்சை ஒன்று செய்யவேண்டும் என்றும் எனக்கு வலியுறுத்தினார். அந்த மருத்துவர் என்னைப் பார்த்து அறுவை சிகிச்சை ஒன்று செய்யவேண்டும் என்று சொன்னவுடன் அந்த பரிசோதனைப் படுக்கையிலிருந்து எனக்கு எழுந்திருக்கக் கூட முடியாமல் திகைத்துப் போனேன். அறுவை சிகிச்சையா என என் மனம் அதிர்ந்தது, ஒரு சாதாரண வயிற்றுவலி என்று மருத்துவரிடம் வந்தேன் ஆனால் என்னை அறுவைசிகிச்சை வரைக்கும் கொண்டுபோய்விட்டதே என்று என்னுடைய இருதயம் படபடத்தது. பயந்த குரலில் அந்த மருத்துவரைப் பார்த்து ஏதேனும் மருந்து அல்லது மாத்திரை சாப்பிட்டு இந்த குடலிறக்கத்தை சுகப்படுத்த முடியாதா என்று அந்த மருத்துவரைப் பார்த்துக் கேட்ட கேள்விக்கு, மருத்துவர் என்னைப் பார்த்து, அறுவைசிகிச்சை ஒன்று தான் அதற்கு தீர்வு என்றும் மருந்து மாத்திரையால் இதை சுகப்படுத்த முடியாது என்றும் சொல்லிவிட்டார்.
பிறருக்கு அறுவை சிகிச்சை என்றாலே எனக்கு பய உணர்வு ஏற்படுகின்ற சுபாவம் கொண்டவன் நான். ஆனால் இப்பொழுதோ எனக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறாரே என்று மனம் வேதனையடைந்தது. அதுவரைக்கும் என்னுடைய சரிரத்தில் எந்தவொரு பிரச்சனையும் வந்ததில்லை! என்னுடைய உடல் வலிமையைப் பார்த்து நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். உடலை ஆரோக்கியாமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தேன், நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடுவேன். ஆனாலும் இப்படி ஒரு நிலையா? என்னசெய்வதென்று அறியாமல் வேதனையோடும், பயத்தோடும், குழப்பத்துடனும் மருத்துவமணையிலிருந்து வெளியேறினேன்.
கேள்விகள் எழும்பின

பலக் கேள்விகள் என் உள்ளத்தில் எழும்பியது.. என்னுடைய உடல் நல்ல கட்டுப்பாட்டுடன் இருக்கிறது என்று அடிக்கடி நினைத்தேனே.. நேற்றுவரைக்கும் நான் நன்றாக இருந்தேனே, யோகா பயிற்சிக்கு சென்றேனே.. உடற்பயிற்சிக் கூடத்திற்கும் சென்றேனே... நான் நல்ல உடல் பெலனுள்ளவன், எப்படியும் 80-85 வயதுவரைக்கும் நான் இந்த உலகில் வாழலாம் என்று நினைத்தேனே…. ஆனால் இன்று ஒரு சாதாரண வயிற்றுவலி என்று வந்தால் இது அறுவைசிகிச்சையில் போய் முடிகிறது என்றால்... யாருக்கு தெரியும், எனக்கு நாளையோ, நாளை மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ அல்லது அடுத்த வருடமோ என்னுடைய உடலில் என்ன பிரச்சனை வேண்டுமென்றாலும் ஏற்படலாமே என்ற எண்ணம் தோன்றியது. என்னுடைய சுயபெலத்தினால் வாழமுடியுமென்கிற நான் போட்ட மனக்கணக்கெல்லாம் (எப்படியும் 80-85 வயதுவரைக்கும் நான் இந்த உலகில் வாழலாம் என்று நினைத்த) தவறாகிவிட்டடதை உணர்ந்தேன்.
நிலையில்லாத ஒரு வாழ்க்கை என்று சலித்துக் கொண்டேன். நம்முடைய வாழ்க்கையைக் குறித்து நமக்கே நிச்சயமில்லையென்றால், எப்படிதான் வாழ்வது என்று பரிதபித்தேன். என்னடா வாழ்க்கை இது… நம்முடைய சொந்த வாழ்க்கையைக் கூட என்னால் நிர்ணியக்க முடியவில்லயே என்று சலித்துக் கொண்டேன். இலட்சக் கணக்கில் பணம் சம்பாதித்தும், கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து வைத்தும் என்னப் பிரயோஜனம்? மனுஷனுக்கு அடுத்த நிமிஷம் என்ன நடக்குமென்றே தெரியவில்லையே.. எவ்வளவு நாள் உயிர் வாழ்வான் என்றும் தெரியாது? மனுஷனே மரித்த பிறகு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பணத்தை வைத்தும், ஆஸ்திகளை வைத்தும், மனுஷனுடைய நாட்களை நிர்ணியக்க முடியாமா? அல்லது உயிரை திரும்ப மீட்க முடியுமா? விடை தெரியாதவனாய் புலம்பிக் கொண்டிருந்தேன்……
மறந்தேன் இயேசுவை

ஆனால் இச்சூழ்நிலையில் இயேசு கிறிஸ்துவை நான் முற்றிலும் மறந்து, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும் என்ற எண்ணம் துளி கூட என்னுடைய மனதில் தோன்றாதது ஏனோ என்று எனக்குத் தெரியவில்லை. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவுமுறை குறையும்போதும், ஜெபமும், வேதவாசிப்பும் இல்லாமல், உண்மையான தேவபக்தியுடைய தேவ மனிதர்கள் அல்லது உண்மையான ஆவிக்குரிய மனிதர்களுடைய ஐக்கியத்தில் ஈடுபடாமல் வாழும்போதும், வேதத்தின் அடிப்படையில் உண்மையாய் நம்மை வழிநடத்தும் தேவமனிதர்களுடைய தொடர்புகள் துண்டித்துப் போகும்போது உண்டாகும் பின்மாற்றத்தின் மறந்தேன் விளைவுதான் இது என்பதை பின்பாக நான் அறிந்துக்கொண்டேன்.
அந்நாட்களில் [பள்ளி பயிலும் நாட்களில்] அவ்வாறு ஜெபத்திலும், வேதவார்த்தைக்குள்ளும், இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் என்னை வழிநடுத்துவதற்கு திரு. நர்கீஸ் அவர்களுடைய தொடர்பும், ரமேஷ் அண்ணன் அவர்களுடைய தொடர்பும் எனக்கு இருந்தது. ஆனால் அவர்கள் இருவருடைய தொடர்பும் துண்டித்தவுடன் அதுவே நாளடைவில் ஆண்டவருக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படவும், பின்மாற்றத்திற்கும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.
நம்மை நாமலே ஆளுகை செய்யமுடியாது என்பதை உணர்ந்தேன். நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் ஓடவில்லை என்பதை மட்டும் புரிந்துக்கொண்டேன். ஆனாலும் இயேசுவை நோக்கி நான் கூப்பிடவில்லை. இயேசுவை முற்றிலும் மறந்தவனாய் காணப்பட்டேன். இந்தச் சூழ்நிலையில் சென்னையிலிருந்த என்னுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மிகவும் மும்முரமாக ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். என்னுடைய திருமணமும் நவம்பர் மாதம் [2005-ம் வருடம்] என்று நிச்சியக்கப்பட்டது. திருமணத்திற்கு இரண்டு மாதமே என்ற காலக்கட்டத்தில் அவசர அவசரமாக என்னுடைய குடலிறக்கம் [Inguinal Hernia] அறுவை சிகிச்சையையும் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் செப்டம்பர் மாதத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படியே சரி செய்து கொண்டேன்.
இழந்தேன் சமாதானத்தை

எல்லாம் சரியாகிவிட்டது, இனி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களைப் பார்ப்போம் என்று என்னுடைய மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு என்னுடைய திருமணக் காரியங்களில் கவனத்தை செலுத்த முற்பட்டபோது....
அதுவரையில் சுமூகமாய் சென்றுக் கொண்டிருந்த எங்கள் வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்குமிடையே இருந்த உறவுமுறையில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதக் காலக்கட்டமே இருந்த சூழ்நிலையில் திருமணத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. காரணமே இல்லாமல் பிரச்சனைகள் எழும்ப இருவீட்டாருக்குமிடையே மனக்கசப்புகள் அதிகமாயின. கருத்துவேறுபாடுகள் அதிகமானதால், தொடர்ந்து நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக் கொண்டேயிருந்தது.
இச்சூழலில், ஏன் திருமணம் செய்துக்கொண்டோம் என்ற ஒரு வெறுப்பு எனக்குள் எழும்பியது. எதிர்பாராத அவமானங்கள், மனக்கஷ்டங்கள், அதுவரைக் காணாத கஷ்டங்கள், அதுவரைப் பாராத பிரச்சனைகள். வாழ்க்கையை எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தேன். நாளுக்கு நாள் பிரச்சனைகளும், வாக்குவாதங்களும் அதிகமாகிக்கொண்டேயிருந்ததால், என்ன செய்வதென்று அறியாமல் திருமணமான ஒரு மாதத்திற்குள் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிடலாமா என்ற எண்ணம் கூட மனதில் எழும்பியது. சமாதானத்தை இழந்தவனாய், என்னுடைய வாழ்க்கையே வீணாகிவிட்டதோ என்ற மனசோர்வுடன் ஒரு சில நாட்களை கழித்து வந்தேன்.
குடலிறக்கம் அறுவைசிகிச்சை செய்து மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. இதற்கிடையில், என்னுடைய சரீரத்தில் வேறு சில பெலவீனங்களும் தாக்கியதால், உடல் மெலிந்து, பெலனற்றுப் போனேன். என் உடலில் என்ன பெலவீனம் என்பதே தெரியாமல், ஏதோ ஒரு வியாதி என்னைத் தாக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஏதோ இனம்புரியாத பயம் மற்றும் மரணத் திகில் என்னை சூழ்ந்த நிலையில் காணப்பட்டேன், ஒரு வேலை கொடிய நோய் ஏதெனும் என்னை தாக்கியிருக்குமோ? அது என்னை மரணத்தில் கொண்டுப்போய் விட்டால் என்ன செய்வது என்ற பயம் எனக்குள் காணப்பட்டது.
ஒருவேலை நான் செய்த என்னுடைய பாவங்களினிமித்தம் இந்த வியாதியா என்ற கேள்விகள் என் உள்ளத்தில் எழும்பியது. பாவ குற்றவுணர்வுகளிலிருந்தும், மரண பயத்திலிருந்தும் என்னால் வெளியே வரமுடியாமல் தவித்தேன். கடைசியில் எனக்கு மரணம் சம்பவித்து விடுமோ என்ற கவலையில் உருக்குலைந்து விட்டேன்.
இப்படியாக, ஒரு பக்கம் எனது சரீர பெலவீனங்களும், மரண பயங்களும், எனது திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளும் ஒன்று சேர்ந்து தாக்கியதில் என்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்குதென்றே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை, ஆலோசனை கேட்கவுமில்லை. இப்படியே 2005-ம் ஆண்டு இறுதி இரண்டு மாதங்களை (நவம்பர்-டிசம்பர்) மிகுந்த கண்ணீரோடும், மனப் போராட்டத்தோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன்.
ஒரு பக்கம் சரீர பெலவீனம், ஒரு பக்கம் மரணபயம், இன்னொருபக்கம் குடும்பப் பிரச்சனைகள். இப்படி ஓரு நரக வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா? என்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே புரிந்துக் கொள்ளமுடியவில்லை. திருமணமாகியும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஓயவில்லை. வீட்டிற்கு போகவே பிடிக்காமல் தனியாகவே நிம்மதியாய் வாழ்ந்துவிடலாம் போல் இருந்தது. (திருமணமான பிறகும் நான் பெங்களூரில் தான் வேலை செய்துக் கொண்டிருந்தேன். எனது மனைவி மற்றும் பெற்றோர்கள் எல்லாரும் சென்னையில் இருந்தனர். (மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வீட்டிற்கு செல்வது வழக்கம்.)

இது என்ன வாழ்க்கை ?
இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக் கொண்டு எப்படி ஒரு மனுஷன் நிம்மதியாய் உயிர் வாழமுடியும்? என்னுடைய எதிர்காலமே சீரழிந்துவிட்டதே என்று வேதனையடைந்தேன். இப்படி ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்வதைக் காட்டிலும், நிம்மதியாய் செத்துவிடலாம் போல் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான், நாம் எதற்காக வாழ்கிறோம், என்ன ஓர் அர்த்தமில்லாத வாழ்க்கை இது என்ற பற்பல கேள்விகளுடன் இருந்தேன். இந்தப் பூமியில் எதற்காக நான் உருவாக்கப்பட்டேன்? எதற்காக நான் இந்த உலகில் உயிர் வாழ்கிறேன்? ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், மரித்தோம் என்று வாழ்க்கை இருக்கிறதே என்று என் மனம் தொடர்ந்து கேள்வி எழுப்பியது. What is the purpose of my life?
ஏன் வாழ்கிறேன் ?
நான் ஏன் பிறந்தேன் ? நான் இந்த உலகில் பிறந்த முக்கிய நோக்கம் என்ன? ஏன் பிறக்கிறோம்? ஏன் மரிக்கிறோம்? நாம் பிறந்து இந்த உலகில் சில காலம் உயிர் வாழ்கிறோம். அதேபோல் நாம் மரித்தப் பிறகு எங்கேப் போகிறோம் என்று கூட தெரியாமல் வாழ்க்கையை நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமே? என்ற கேள்வி என் உள்ளத்தில் எழும்பியது.
என்னிடத்தில் பணம் இருந்தும், உள்ளத்தில் சமாதானமும், சந்தோஷமும் இல்லாத நிலையில் இருந்தேன். நிம்மதியில்லாத, நிரந்திரமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் நான் புரிந்துக்கொண்டேன். என் மனதில் எழும்பிய பல கேள்விகளுக்கு விடைத்தெரியாமல் இருந்தேன்.
தேடி வந்த தேவன் !

இப்படியாக, ஜனவரி மாதம் 2006- ம் வருடம் 9-ம் தேதியன்று, பெங்களுரில் கோரமங்கலாவிலுள்ள என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, மதிய நேரத்தில் எனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில், என்னுடைய உடல் மிகவும் பெலவீனமாய் இருக்கிறதே, ஏன் எனக்கு இப்படி ஆயிற்று என்ற மிகுந்த கவலையுடன், நம்முடைய உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துணவு கொடுக்கவேண்டுமென்ற ஆவலில், என்னுடைய சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படிஎன்பதைக் குறித்த தகவல்களை திரட்ட இண்டர்நெட்டில் (Internet) ஆராய்ந்தேன்.
நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகள், பழவகைகள், நல்ல சத்துள்ள உணவுவகைகள் போன்ற தகவல்களை தேடி கண்டுப்பிடித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது தான், நான் தேடாமலேயே என்னையுமறியாமல் சில வேத வசனத்தின் விளக்கங்களை (Bibe Articles) வாசிக்க நேர்ந்தது. அதில் எழுதியிருந்த ஒரு சில வேதப்பகுதிகளை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் ஓர் இனம் புரியாத ஆர்வத்தைத் தூண்டியது. காரணம், எனக்குள் நான் கேட்டுக் கொண்டிருந்த எல்லாக் கேள்விகளுக்கும் வேத வசனங்கள் எனக்கு விடை கொடுத்தது என்னுடைய உடைந்து போன உள்ளத்தை உயிர்பித்ததாய் இருந்தது.
அறிந்தேன் இயேசுவை !:

நான் எதையோ தேடப்போக, என் கண்களில் வேத வசனங்களும், அதின் விளக்கங்களும் தென்பட்டதை நினைத்தால் இன்று வரை எனக்கு ஆச்சிரியமாகவே இருக்கிறது. என் கண்ணீரைக் கண்ட தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்!
நான் அன்று படித்த முதல் வேத விளக்கத்தில் இப்படியாக எழுதப்பட்டு இருந்தது.
There is no pardon for a person who dies in unbelief. Remember, John 3:16
"For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life."
இந்த வசனத்தை வாசிக்கும்போது, எனக்குள் ஒரு பெரிய சமாதானம் உள்ளத்தை நிரப்பியதை உணர்ந்தேன். யாரோ ஒருவர் என்னோடு பேசுவதைப் போலவும், என்னை உற்சாகப்படுத்தி தேற்றுவதுப் போலவும் உணர்ந்தேன். நான் பெற்ற சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்கும் அளவே இல்லை. என்னுடைய வாழ்க்கையின் எதிர்காலத்தைக் குறித்ததான பயம் நீங்கி, ஒரு உறுதியான நம்பிக்கை எனக்குள் பிறந்தது. மேற்கூறப்பட்ட யோவான் 3:16 வசனத்திலுள்ள "everlasting life" நித்தியஜீவன் என்ற வார்த்தையில் பிறந்த நம்பிக்கை என்பதை உணர்ந்தேன்.
நாம் மரித்தப்பிறகு ஒரு வாழ்க்கை உண்டு என்பதை அறிந்துக்கொண்டேன். அது நித்தியக் காலமாய் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கூட வாழ்கின்ற வாழ்க்கை என்பதை அறிந்துக்கொண்டேன்.
ஏதோ பிறந்தோம், சில காலம் வாழ்ந்தோம், மரித்தோம் என்று வாழ்க்கை இருக்கிறதே! மரித்த பிறகு எங்கே போவோம் என்கிற என்னுடைய கேள்விக்கு யோவான் 3:16-ன் வேதவசனத்தின் மூலமாக அன்று (09th JAN 2006) எனக்கு விடை கிடைத்தது.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 என்ற வேத வசனத்தின் மூலம் நம்மை உண்டாக்கின தேவன் ஒருவர் உண்டென்றும், தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும், அதற்காகவே தேவன் இயேசு கிறிஸ்து மூலமாக மாமிசத்தில் வெளிப்பட்டு இந்த உலகத்தில் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்து, ஒரு பாவமும் செய்யாமல், நமக்காக சிலுவையை சுமந்து, பல பாடுகள் பட்டு தமது பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நமது பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்றும் உயிரோடிருக்கிறார் என்றும் நம்புகிற அனைவருக்கும் தேவன் இலவசமான இரட்சிப்பை (இலவசமான பாவமன்னிப்பும், நித்திய வாழ்க்கையும்) தருகிறார் என்றும் எழுதப்பட்டிருந்தது.
இந்த இரட்சிப்பின் அனுபவத்தை இலவசமாக பெறுவோரின் இருதயத்தில் இயேசு கிறிஸ்து நிரந்தரமாக வந்து வாசம் செய்வார் என்றும் எழுதப்பட்டிருந்தது. தேவன் எனக்கு நித்திய பரலோக வாழ்வையும், பாவ மன்னிப்பையும் இலவசமாக எனக்கு கொடுக்கிறார் என்பதை அப்பொழுது அறிந்துக் கொண்டேன்.
இயேசு கிறிஸ்துவின் மீது யாரெல்லாம் நம்பிக்கை வைக்கிறார்களோ, தமது உள்ளத்தில் இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் இந்த விலைமதிக்கமுடியாத இரட்சிப்பின் அனுபவத்தை இலவசமாக அளித்திட இன்றும் ஆண்டவர் ஆயத்தமாகவே இருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்த வரிகளை மிகுந்த பயபக்தியுடனும், நம்பிக்கையுடனும் படித்தேன்.

பாவங்களை அறிக்கையிட்டேன்
மேலும் என்னுடைய உள்ளத்தை அதிகமாய் உருக்கின காரியம் என்னவென்றால்: மக்கள் பலவகையான துணிகரமான பாவங்களை செய்துவிட்டு தேவனை நோக்கிப் பார்ப்பதற்கே பயப்படுகிறார்கள். அவர்களுடைய பாவங்களையெல்லாம் தேவனால் மன்னிக்கமுடியாது என்றும், அவர்களுடைய பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கமாட்டார் என்றும் தங்களுடைய குற்றவுணர்வுகளிலிருந்து வெளியில் வரமுடியாமல் இனி வாழ்க்கையே நரகம் தான் என வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் அப்படி பயப்படுகிற மனிதர்கள் நம்மை உண்டாக்கின தேவனிடத்தில் தங்களை அர்ப்பணித்து நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் மண்ணிப்பதற்கு இயேசுகிறிஸ்து ஆவலாயிருக்கிறார் என்பதை நம்பி தேவனிடத்திற்கு திரும்பிவரவேண்டும். ஏனென்றால் : என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. யோவான் 6:37 என்று இயேசு சொல்லியிருக்கிறாரே.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். I யோவான் 1:7,9 என்றே வேதம் கூறுகிறது.
ஆகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட பாவங்களையும் மன்னிக்க அவர் வல்லவராயிருக்கிறார். மேலும் ஒருவன் விபச்சாரம் செய்திருந்தாலும், கொலை செய்திருந்தாலும், அல்லது கொள்ளையடித்திருந்தாலும் அல்லது எப்படிப்பட்ட பாவத்தை செய்திருந்தாலும், அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, மனம்திரும்பும் போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று அந்தப் பகுதியில் விளக்கியிருந்தது..
அப்பொழுது தான் பரிசுத்த ஆவியானவர் நான் ஒரு பாவி என்பதையும், இத்தனை நாட்களாய் பாவத்தில் வாழ்ந்து தேவனுக்குப் பிரியமில்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பதை உணர்த்தினார்.
பாவமன்னிப்பின் நிச்சியத்தைப் பெற்றுக்கொண்டேன்:
அதைப் படித்தப் பிறகு என்னுடைய உள்ளத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்ததை உணர்ந்தேன். ஒருவன் விபச்சாரம் செய்திருந்தாலும், கொலை செய்திருந்தாலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை மன்னிக்கிறார் என்று வாசித்த போது எனக்குள் இருந்த எல்லா பயமும், குற்றவுணர்வுகளும் பறந்துப் போயின. ஏனென்றால், அதைப் படித்தவுடன், என்னுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கல்வாரி சிலுவையில் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினார். அவருடைய பரிசுத்த இரத்தம் என்னுடைய பாவங்களையெல்லாம் சுத்திகரிக்கும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீதும், அவர் சிந்தின பரிசுத்த இர்த்தத்தின் மீதும், அவர் என்னுடைய பாவங்களுக்காய் மரித்தார் என்றும், மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும், இன்றும் உயிருள்ளவராயிருக்கிறார் என்றும் அவர் மறுபடியும் வரப்போகிற தேவன் என்றும் என்னுடைய இருதயத்தில் விசுவாசித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு உடனடியாக நான் செய்த எல்லாப் பாவங்களையும் அறிக்கையிட்டு (என்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலேயே) பாவமன்னிப்பின் நிச்சியத்தைப் பெற்றுக்கொண்டேன். என் உள்ளத்திலே வந்து வாசம் செய்யும்படியாகவும், என்னை ஆளுகை செய்யும்படியாகவும் ஒரு ஜெபமாக அறிக்கை செய்து என்னை முழுவதுமாய் அர்ப்பனித்தேன்.
தேவனை விட்டு விலகி, துணிகரமாக பாவங்கள் செய்து, சுய இச்சைகளினாலும், பற்பல அருவருப்புகளினாலும், எனது சிந்தையிலும், செயலிலும், பாவக் கறையுடன் நின்றிருந்த எனக்கு பூரண விடுதலை கிடைத்தது. மரித்த பிறகு சம்பவிக்கும் நியாயதீர்ப்பு நாளென்று வெளிப்படும் தேவகோபாக்கினை எனப்பட்ட மரணத் தண்டனையிலிருந்தும், நித்திய ஆக்கினையான நரகத்திலிருந்தும் என்னை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீட்டுக் கொண்டார்.

அதிகாரம் தேவனுடையது !
என்னுடைய பாவக் குற்றவுணர்வுகளிலிருந்தும், எதிர்காலத்தைக் குறித்த பயத்திலிருந்தும், மரணபயத்திலிருந்தும் என்னால் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் நீக்கி என்னை தைரியப்படுத்தினார். பாவியாய் வாழ்ந்துக் கொண்டிருந்த என்னை தேவனுடைய பிள்ளையாய் மாற்றினார்.
அதுமாத்திரமில்லாமல், Only God has the authority to take our life - நமது ஜீவன் நம்முடைய சரீரத்திலிருந்து எடுப்பதற்கு, நம்மை சிருஷ்டித்த தேவனுக்கு மாத்திரமே அதிகாரமுண்டு என்றும், நாம் தற்கொலை செய்துக் கொண்டு, நம் உயிரை நாமே மாய்த்துக்கொள்ள இந்தப் பூமியில் யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு செய்வது தேவனுக்கு விரோதமான பாவச்செயல் என்றும், அவர்களுடைய ஆத்துமா நித்திய ஆக்கினை பெறும்படி நரகத்திற்கு தள்ளப்படும் என்றும் புரிந்துக்கொண்டேன்..
நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வதைக் காட்டிலும், நிம்மதியாய் செத்துவிடலாம் போல் தோன்றின எனக்கு தற்கொலை எண்ணங்களெல்லாம் தேவனுக்கு விரோதமான செயல் என்றும் அவைகளின் முடிவு நரகமே என்பதை அறிந்துக் கொண்டேன்.
பிறகு, அதில் எழுதப்பட்டிருந்த கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அதின் விளக்கங்களை தெளிவாகவும், பொறுமையாகவும் வாசித்தேன். அதில் "தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்" மத்தேயு 19:26 என்றும், விவாகரத்து (Divorce) செய்வது தேவனுக்கு விரோதமான செயல் என்பதையும் அறிந்துக் கொண்டேன்.
திருமணமான ஓரிரண்டு மாதத்திலேயே ஒரு சில குடும்ப பிரச்சனைகளினிமித்தம் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிடலாம் என்று எண்ணிய நான் அது தவறு என்பதை வேத வார்த்தையின் மூலம் உண்ர்ந்துக் கொண்டேன்.
அளித்தார் சமாதானத்தை !

இப்படியாக என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும், எனக்கு வேதவார்த்தைகளின் மூலமாக எனக்கு பதில் கிடைத்தது. அவைகள் என்னுடைய உள்ளத்திற்கும் திருப்தியளித்தது. தேவ சமாதானம் என்னுடைய உள்ளத்தை நிரப்பியதை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. என்னுடைய ஆத்துமாவிலே ஒரு புதிய உற்சாகம் கிடைத்தது. என்னுடைய எல்லாப் பாவக் குற்ற உணர்வுகளும் என்னை விட்டு விலகியது. மரண பயங்கள் என்னை விட்டு நீங்கியது. எதிர்காலத்தைக் குறித்து ஒரு நம்பிக்கை பிறந்தது. தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியது என்றும், தேவன் தம்முடையப் பிள்ளைகளை எப்படியாக நேசிக்கிறார் என்பதையும் அன்று தான் அனுபவப்பூர்வமாக உண்ர்ந்தேன்.
ஆதி தகப்பனான ஆதாம் மூலமாக பாவம் ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் ஆண்டுக் கொண்டது. பாவத்திலிருந்து இந்த மனுக்குலத்தை மீட்கவே தேவன் தாமே தமது சொந்தக்குமாரனை இந்த பூமிக்கு உலக இரட்சகராக அனுப்பி, தமது பூரணமான அன்பை வெளிப்படுத்தினார். தம்முடைய சொந்தக் குமாரனென்றும் கூடப் பாராமல், சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர் தம் இரத்தம், மரணம், உயிர்தெழுதல் மூலமாக இந்த இரட்சிப்பின் திட்டத்தை வைத்திருக்கிறார் என்று நினைக்கும் போது, தேவன் எவ்வளவாய் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள முடியும்.
உணர்த்தினார் உள்ளத்தில் !

சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக, என்னுடைய பள்ளி நாட்களில் எவ்வளவாய் நான் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்... எவ்வளவு வாஞ்ஞையாய் இயேசுக் கிறிஸ்துவைக் குறித்து என்னுடைய ஆசிரியரிடத்தில் கேட்பேன்.. அவர் எனக்கு சொல்லிக்கொடுத்தப் பாடல்கள், அவர் வாழ்க்கையில் இயேசுக் கிறிஸ்து செய்த அற்புதங்களையெல்லாம் பகிர்ந்துக் கொண்டவைகள், நானும் என்னுடைய ஆசிரியரும் மாலை நேரங்களில் பள்ளி மைதானத்திற்கு சென்றும், வகுப்பறையில் அமர்ந்து மணிக்கணக்கில் இயேசுக் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினவைகளையும், ஜெபித்ததையும், பாடல்களைப் பாடினவைகளையும், வீட்டில் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக நான் ஜெபித்தது, புதிய ஏற்பாடு வாசித்தது போன்ற சம்பவங்களை தேவன் எனக்கு நினைவுப்படுத்தினார்.
உடனடியாக நான் என்னுடைய ஆசிரியர் திரு. நர்கீஸ் அவர்களை பெங்களூரிலிருந்து சென்னைக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினேன். இன்னொரு ஆசிரியர் (John sir) மூலமாக திரு. நர்கீஸ் அவர்களுடைய விலாசத்தைக் கண்டுபிடித்தது தேவன் செய்த அற்புதமே!
நான் சிறு வயதில் (டியூசன் படிக்கும் இடத்தில் (ஞாயிறு பள்ளியில்) ஒரு சில பாடல்கள் மூலமாகவும், பைபிள் கதைகள் மூலமாக இயேசுவை அறிந்துக் கொண்ட விதமும், அந்த சிறுவயதிலிருந்தே ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்து தம்மை எனக்கு வெளிப்படுத்தின விதமும், என்னை வழிநடத்தின விதமும்... அவரை அறிந்திருந்தும், எவ்வளவோ பாவங்களில் நான் ஈடுப்பட்டு, அவரை விட்டு விலகிபோயிருந்தும், அவரை நான் முற்றிலும் மறந்துபோயிருந்தும் மறுபடியும் மறுபடியுமாய் என்னைத் தேடி வந்த தேவனுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை.
என்னுடைய பிரச்சனையை நான் யாரிடத்திலும் சொல்லாமல், மனதிற்குள்ளாகவே பூட்டி வைத்திருந்தேன். இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தின் உணர்வுகளையும், நம்முடைய வேதனைகளையும், ஏக்கங்களையும் அறிந்தவராய் தம்முடைய வார்த்தையை அனுப்பி, தம்மை எனக்கு வெளிப்படுத்தி, என்னை என்னுடைய எல்லாப் பாவத்திலிருந்தும், மரண பயத்திலிருந்தும், நரக ஆக்கினையிலிருந்தும் மீட்டு எடுத்து, பரலோக வாழ்வை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அர்ப்பனித்தேன் என்னையே !

உலக சந்தோஷமே வாழ்க்கை என்றும், வியாதிகள் இல்லாமல் 80–90 வயது வரை வாழ என்னால் முடியும்; அதற்கு என் சம்பாத்தியமும், ஆஸ்திகளும் உதவி செய்யும், என நம்பி மாம்சபெலத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் 2005-ம் வருடத்தின் கடைசி மாதங்களில், நான் யார் என்றும், என் மாம்ச எண்ணங்களெல்லாம் வீணானது என்றும், எனக்கு ஆண்டவர் உணர்த்திய நாட்கள். அச்சூழலில் தான், தேவனுடைய அளவில்லா அன்பையும், தேவன் தமது ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கிற இந்த இலவசமான இரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றியும் அன்றையதினத்தில் நான் அறிந்துகொண்டேன்.
இன்னொருகாரியம் என்னவெனில், ஒருவன் எவ்வளவு கொடியதான பாவம் செய்திருந்தாலும், அவனை இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப்பாவங்களும் நீங்க நம்மை சுத்தமாக்கும், என அறிந்துகொண்டேன். என்னையும், என் எதிர்காலவாழ்வையும் முழுமையாக இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்தேன். இயேசுவின்மேல் என் முழு நம்பிக்கையையும் வைக்கத் துவங்கினேன். ஆண்டவர் என்சரீரத்திலும், என் வாழ்விலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கினார். ஆம், சங்கீதம் 116:8, ன்படி :
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
சங்கீதம் 138:3, - ன்படி :
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினர்;
நான் கிறிஸ்துவுக்குள் பிறந்த சிறு குழந்தையாக புதுவாழ்வு வாழத் துவங்கினேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ள வேதத்தைப் படிக்க ஆரம்பித்தேன், ஜெபிக்க ஆரம்பித்தேன். அருகிலிருந்த சபைக்கு சென்று அதிகமாய் ஆண்டவரை தேட ஆரம்பித்தேன். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கவும், ஒரு நல்ல ஆவிக்குரிய சபையில் (பெங்களூரில்) தேவனை ஆராதிக்க தேவன் கிருபை செய்தார்.

அற்புதம் நிகழ்ந்தது !
இயேசு கிறிஸ்துவை நான் என்னுடைய சொந்த தெய்வமாகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்ட 2 மாதத்தில் (மார்ச் மாதம்) என்னுடைய பிறந்த நாளை சந்தித்தேன். எத்தனையோ வருடங்கள் என்னுடைய பிறந்த நாளை நான் மறந்திருக்கிறேன். ஆனால் இந்த வருடமோ எனக்கு அது மிகவும் விசேஷமாய் தோன்றியது. காரணம், நம்முடைய வாழ்க்கை தேவனுடைய கரத்தில் உள்ளது என்பதையும், இந்நாள் வரை நாம் அழிந்து போகாமல் உயிரோடிருப்பது தேவனுடைய அநுகிரகம் என்பதை உணரந்துக் கொண்டேன்.
அவரே நமக்கு ஜீவனையும் சுவாசத்தையும் கொடுத்திருக்கிறார். நாம்உயிரோடிருக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் தேவன் நமக்குகிருபையாய் கொடுகிறார் என்பதையும், நாம் விடுகிற ஒவ்வொரு சுவாசமும் தேவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் நான் அறிந்துகொண்டபடியினால், கடந்த வருடம் முழுவதும் என்னை காத்து வந்த தேவனுக்கு நன்றி சொல்லவும் புதிய வருடத்தில் அவர் என்னை ஆசிர்வதித்து நடத்தவும் என்னுடைய பிறந்தநாளன்று அதிகாலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
ஓரிரு நாட்களாகவே நான் என்னுடைய பல் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். இடதுப்பக்க மேற்வரிசையில் ஒரு புதிய பல் (ஞானப் பல்) ஒன்று கோணலாக முளைத்து அது வெளிவருகையில் வலியினால் அவதிப்பட்டேன். என்னுடைய கீழ் தாடையையும் மேல் தாடையையும் கூட சரியாக மூட முடியவில்லை. என்னுடைய பிறந்தநாளன்று அதிகாலை எனக்கு பல் வலி அதிகமானதினால் என்னால் சரியாக தூங்க முடியாமல் விழித்துக்கொண்டேன். தேவன் என்னை எழுப்பினார் என்று தான் சொல்லவேண்டும். காரணம், நான் எழுந்திருக்கும் போதே என் உள்ளத்தில் வேதத்திலிருந்து யோசுவாவின் புஸ்தகத்தை படிக்க வேண்டுமென்று ஒருவிதமான தூண்டுதல் உண்டானதை உணர்ந்தேன். முதல்முறையாக வித்தியாசமான உணர்வாய் அது எனக்கு தோன்றியது. தேவன் என்னோடு கூட பேசினதை உணர்ந்து மிகவும் சந்தோஷமடைந்தேன்.
வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய பல்வலி குறைந்தபாடில்லை. காலையில் இட்லி சாப்பிடுவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். அதை அப்படியே குழைத்து ஒரு மாத்திரையை விழுங்குவதைப்போல் விழுங்கினேன். எப்படியோ சமாளித்துக்கொண்டு அலுவலகம் சென்ற நான் மிகுந்த வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய வாயை திறக்கவே முடியவில்லை. இதற்குள் எனக்கு காய்ச்சலும், காதுவலியும் வந்துவிட்டதினால் நான் அருகிலுள்ள ஒரு பல் மருத்துவரிடத்தில் சென்று பல்வலி குறைவதற்கு மருந்து அல்லது மாத்திரை வாங்கிவருவதற்கு சென்றேன். அனால் மருத்துவரோ என்னுடைய பல் கோணலாக வளர்ந்ததினால் அதை பிடுங்கி எடுத்துவி வேண்டும் என்று ஆலோசனை கூறினார். நானோ மருத்துவரிடத்தில் தற்சமயத்திற்கு பல்வலி குறைவதற்கான மாத்திரையை எழுதி தருமாறு வலியுறுத்தினேன்.
மருத்துவர் சிபாரிசு செய்த மாத்திரையை மருந்துகடையில் வாங்கிக்கொண்டு அலுவலகம் திரும்பினேன். பல்வலி அதிகமாகயிருந்ததால் மதியவுணவு மறுபடியும் இட்லியை மாத்திரை விழுங்குவதைப்போல் விழுங்கிவிட்டு அலுவலகத்தில் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்.உடனடியாக நான் வாங்கிக் கொண்டுவந்த மாத்திரையை என்னுடைய கையில் எடுத்து அந்த மாத்திரையினால் என் பல்வலி நீங்கவேண்டும் என்று என் மனதிற்குள் ஜெபித்தேன்.
நான் ஜெபித்த ஜெபமாவது :
இயேசப்பா இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் என்பதை நீர் அறிவீர். இந்த பல்வலி என்னால் தாங்கவே முடியவில்லை. மருத்துவர் இந்த பல்லை பிடுங்கவேண்டும் என்று சொல்கிறார். இயேசப்பா இந்த பல்லை எந்த மருத்துவரும் இனி தொடக்கூடாது, இந்த மாத்திரையின் மூலமாய் என் பல்வலி நீங்க எனக்கு உதவி செய்யுங்கள்.
இயேசப்பா எனக்காக நீங்க அடிக்கப்பட்டிங்க நொறுக்கப்பட்டிங்க என்னுடைய பாவத்தினிமித்தம் நீங்க சிலுவையில் இரத்தம் சிந்தி எனக்காக அவ்வளவு வலிகளை நீங்க ஏற்றுக்கொண்டீங்க. உங்கள் உடல் முழுவதும் காயம் உங்களக்கு எவ்வளவாய் வலித்திருக்கும். உங்க வலியெல்லாம் கம்பேர் (compare) பண்ணும்பொழுது என்னுடைய வலியெல்லாம் எம்மாத்திரம் சாமி என்று சொல்லும்போத எனக்குள் ஒரு வல்லமை இறங்கினதை உணர்ந்தேன். என்னுடைய பல்லில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன்.
அதே நேரத்தில் என்னுடைய கோணலான பல் நேரானது. என்னுடைய பல்வலி என்னைவிட்டு நீங்கியதை உணர்ந்தேன். இந்த அற்புதத்தின் மூலம் நான் இன்னும் அதிகமாக இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தில் வளரவும், நம்மை தேவன் எவ்வளவாய் நம்முடைய அசைவுகளையும், வலிகளையும், பிரச்சினைகளையும் அறிந்திருக்கிறார் என்றும் நம் மனதிற்குள் ஏறெடுக்கும் ஜெபத்தை கேட்கிறார் என்றும் எனக்கு உணர்த்தினார். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவனே நம்மோடு கூட இருக்கும்போது நமக்கு வேறு என்ன தேவை ?
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:20
ஆளுகை செய்கிறார் இயேசு !

நான் இரட்சிக்கப்பட்ட பிறகு, பெங்களூரிலேயே ஒரு சில ஆவிக்குரிய நண்பர்களுடைய நட்பையும், அதேபோல் சென்னையில் ஆசிரியர் திரு. நர்கீஸ் அவர்களுடன் மறுபடியும் ஐக்கியப்பட தேவன் கிருபை செய்தார். அவர்கள் என்னுடைய வாழ்வில் இடைப்பட்டது தேவ கிருபையே.. அவர்கள் மூலம் ஜெபஐக்கியத்திலும், என்னுடைய ஜெபவாழ்க்கையிலும், தேவனை அறிந்துக் கொள்வதிலும் வளர உதவியாயிருக்க தேவன் கிருபை செய்தார். சந்தோஷத்திலும், சோதனையின் மத்தியிலும் கடந்து போகும்போது அவர்களுடைய உற்சாகமும், ஆவிக்குரிய ஆலோசனைகளிலும், என்னையும் என் குடும்பத்தையும் இடைவிடாமல் ஜெபத்திலும், அன்பிலும் தாங்குவதற்கு நல்ல ஆவிக்குரிய நண்பர்களை தேவன் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். (கர்த்தருக்கு சித்தமானால் அந்த ஆவிக்குரிய அனுபவங்களையும், என்னை தேவன் வழிநடத்தியவிதத்தையும், அவர் என் வாழ்விலும், என்னுடைய குடும்பத்திலும் செய்த எண்ணற்ற அற்புதங்களையும் வருகிற நாட்களில் எழுத தேவன்கிருபை செய்வாராக).
2007–ம் வருடத்தில் அமெரிக்கா வர கிருபைசெய்தார். அவருடைய வாக்குத்தத்தங்களின்படி என்னை ஆண்டவர் நடத்த துவங்கினர். 2008 - ம் வருடத்தில் என் மனைவி புவனேஷ்வரியையும், மகன் சாமுவேலையும் (1வயதில்) அமெரிக்காவிற்கு அழைத்து வந்தார். அமெரிக்கா வந்த நான்கு மாதத்திற்குள் என் மனைவியை (அக்டோபர்–2008-ல்) தேவன் கிருபையாய் இரட்சித்தார். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கவும், தேவனுடைய வழிநடத்துதலின்படியே இங்கு நாங்கள் ஒரு சபையில் சேர்ந்து தேவனை ஆராதிக்கின்றோம். 2012-ம் வருடம் மார்ச் மாதம் தேவன் கிருபையாய் இன்னொரு மகனையும் (யோசுவா மோசே), 2013-ம் வருடம் செப்டம்பர் மாதம் ஒரு மகளையும் (எப்சிபா) எங்களுக்கு கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாய், நாங்கள் இலவசமாய் பெற்ற இந்த இரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றியும், (இயேசுவைப் பற்றி) சுவிசேஷத்தையும் மற்றவர்களுக்கு அறிவிக்க தேவன் கிருபை செய்கிறார்.

எனக்கு அன்பானவர்களே, என் இரட்சிப்பின் அனுபவத்தை ஒருமனிதர் மூலமாகவோ, ஆலயத்திற்கு சென்று போதகரின் ஆலோசனையால் கிடைத்ததோ அல்ல. என் அலுவலகத்தில் ஓய்வுநேரத்தில் இன்டர்நெட்டில் தகவல்கள் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் தேவவார்த்தை என்னைத் தேடி வந்தது. வார்த்தையின் மூலம் தேவன் எனக்கு வெளிப்பட்டார். அதுபோலவே, இந்த புத்தகத்தின் மூலமாக தேவன் இன்று உங்களைத்தேடி வந்துள்ளளார். ஆகவே, இதனை வாசித்த நீங்களும் ஆண்டவரிடம் உங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்8:32) ஆண்டவரை சந்திக்க ஆயத்தப்படுங்கள், அவர் சீக்கிரமாகவே வருகின்றார்.
தேவக் கிருபையும், சமாதானமும் உங்களோடு இருப்பதாக! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும், கனமும் உண்டாவதாக. நன்றி. தேவனுக்கே மகிமையுண்டாவதாக !!! ஆமென்.!!!
நீங்களும் இந்த பரலோக மீட்பின் பரிசை வெல்ல ஆயத்தமா ?

நீங்கள் யாராக இருந்தாலும் சரி, சர்வ வல்ல தேவனின் கிருபையும், இரக்கமும், அன்பும் நிச்சயம் உமக்கும் உண்டு. இந்த உன்னதமான தேவனாகிய இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக ஏற்று, உமது இருதயத்தை அவருக்கு ஆலயமாக தருவீரேயாயின், உமது எதிர்கால வாழ்க்கை ஓர் அர்த்தமுள்ளதாகவும், உம்முடைய இருதயம் அளவில்லாத சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிறைந்துக் காணப்படும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.
இயேசு கிறிஸ்து ஒருவரே :
அன்பில்லாத இந்த உலகத்தில் உண்மையான அன்பை வெளிப்படுத்தி நம்மை நேசிக்கிறவராயிருக்கிறார்.
பாவிகளை நேசிக்கவும், பாவங்களை போக்கிடவும், இரட்சகராக இருக்கிறார்.
நாம் பரிசுத்தமுள்ள ஓர் வாழ்க்கை வாழ இம்மானுவேலராக நம் இதயத்தில் வாழ்கிறார்.
நம்மை பரலோகம் கொண்டுச் செல்ல திரும்பவும் வரவிருக்கிறார்.
நம்முடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறவராயிருக்கிறார்.
நம்மை எல்லா பயத்திலிருந்தும் நீக்கி நமக்கு நம்பிக்கையையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தருகிறவராயிருக்கிறார்.
எப்படிப்பட்ட வியாதிகளையும் குணப்படுத்த வல்லவராயிருக்கிறார்.
இம்மையிலும், மறுமையிலும் நம்மை ஆசிர்வதிக்கிற ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார்.
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !! இரட்சிப்பை இலவசமாக பெறுவீர் !!!
நீர் நித்தியத்தை பரலோகத்தில் செலவிட ஓர் அழைப்பு இது !!!
ஜெபம்:
அன்புள்ள பரலோகப் பிதாவே…
இத்தனை நாட்களாய் உம்மை விட்டு விலகி, துணிகரமாக பாவங்கள் செய்து, சுய இச்சைகளினாலும், பற்பல அருவருப்புகளினாலும், எனது சிந்தையிலும், செயலிலும், பாவக்கறையுடன் வாழ்ந்துக் கொண்டிருப்பதை உணர்த்தினீர். என்னுடைய எல்லாப் பாவங்களுக்காகவும், உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கல்வாரி சிலுவையில் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினார். அவருடைய பரிசுத்த இரத்தம் என்னுடைய பாவங்களையெல்லாம் சுத்திகரிக்கும் என்றும், அவர் என்னுடைய பாவங்களுக்காய் மரித்தார் என்றும், மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும், இன்றும் உயிருள்ளவராயிருக்கிறார் என்றும் என்னுடைய இருதயத்தில் விசுவாசித்து என்னுடைய வாயினால் அறிக்கையிடுகிறேன்.
நான் செய்த எல்லாப் பாவங்களையும் மன்னியும். இயேசுவே நான் உம்மை என்னுடைய சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய இருதயத்தில் வந்து வாசம் செய்யும். என்னை உம்முடைய பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளும் என்னுடைய வாழ்க்கையை உம்முடைய கரத்தில அர்ப்பனிக்கிறேன். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் பிதாவே!
ஆமென்.!

மேலும் இயேசுவைக் குறித்து அறிந்துக்கொள்ள, பரிசுத்த வேதாகமத்தின் மூலமோ அல்லது உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நண்பர்களின் மூலமோ அல்ல்து உங்களுக்கு அருகிலுள்ள தெரிந்த சபை போதகரைத் தொடர்புக்கொண்டு தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து, அவருக்குப் பிரியமாய் நடக்கவும், வேத வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கவும் தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக.
தேவனுக்கே மகிமையுண்டாவதாக !!! ஆமென்.!!!