*உயிராயுதம்* எழுதியோன்* *- செ. டேவிஸ்*


*உயிராயுதம்* எழுதியோன்*
          *- செ. டேவிஸ்*

தொண்டைக் குழிக்குள்
நின்று ஊசலாடுகின்றன
என் சொற்கள்!
*ழ*வை உச்சரிக்க கஷ்ட்டப்பட்டது போல்!


சொற்களின் கோர்வை
உதிரிப்பூக்களைக் கொண்டு நாறில் கட்டிய இடைவெளியில் கண்ணிவிட்டு நிற்கிறது!

ஜெபித்து சில நாள்களாகியது.......
மேடையில் முழங்கும் சத்தம் இடியென விசுவாசிகளுக்கு.........
எனக்கு தான் தெரியும் அது பாலைவனத்தில் பெய்து மழைத்துளி என்று!

உயிராயுதம் மழுங்கிவிட்டது, சரி எது உயிராயுதம்? கேள்விகள் எனக்குள் கொக்கரித்தன.....

விசுவாசம் தானே உயிராயுதம்,
இல்லை ஜெபம், ம்ம்ம்ம்ம்கூம்
அன்பு?
வசனம்?
கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றது என் மனம், அண்டவெளியில் தலைகீழ் நடப்பவன் போன்று!

உயிராயுதத்தை கணேடுபிடிக்க முடியவில்லை......
பாட்டுக் கூச்சல் அடங்கிய பின் பாட்டுக்காரரிடம் கேட்டேன் எது *உயிராயுதம்?*
ஆடி களைத்துப் போய் ஷோபாவில் அமர்ந்தவர் முழித்தார்......அது விழிப்பா என அறியேன்?

முட்டையை வழியல் என்றும் புல்பாயில் என்றும் அரைவேக்காட்டு தனத்தில் தருவது ஒரு ருசி என்ற பாணியில் கிறிஸ்தவ உபதேசத்தை மசால் போட்டு விற்பவரிடம் *உயிராயுதம் என்றால் என்ன?*என்றேன்!
சிரிப்போம் சிந்திப்போம் ஸ்டைலில் சிரித்தார், அதாவது ஜாதியை ஒழிக்க வேண்டும்......என்று லெக்சர் கொடுத்து கடைசியில் சூலாயுதம் கொடுத்துவிடுவார் என நினைத்து உயிராயுதத்தை தேடி வெளியேறினேன்.......

இயேசுகிறிஸ்துவில் கலந்நு விடுவதே உயிராயுதம் என்பதையும், அந்த உயிராயுதம் விசுவாசத்துடன் கூடிய வார்த்தையில் நிறைந்த ஜெபத்திலும், அன்பிலும் ஊடுருவி
இரத்த அணுக்களிலும் கலந்துவிட்ட வாழ்க்கை என்பதையும்
நவீன நாடக மேடைப்
பேச்சாளர்களும்,
கூத்துக் ககலைஞர்களும் கற்றுத்தரார்....

*உயிராயுதத்தைக்*
கண்டுக் கொண்டேன், கண்டுகொண்டே இருக்கிறேன்...
இப்பொழுது என் அடி நாதத்திலிருந்து வார்த்தைகள் அருவியாக கொட்டுகிறது....

மேலிருந்து பாயும் அந்த ஜீவ நதி பாறையில் தொங்கிய தேன் கூட்டை உரசி வெடிக்கச் செய்து,
வேர்ப்பலாவை உடைத்து  என் குரல்வளையைத் தொட்டபோது
எனக்குள் நிறைந்தது அந்த உயிராயுதம்.....
      
           *எழுதியோன்*
          *- செ. டேவிஸ்*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.