எனக்கு பயமில்லை காரணம்…….

எனக்கு பயமில்லை காரணம்…….

🌹மாம்ச பலவீனத்தை காரணங்காட்டி பாவத்திலேயே விழுந்துக் கிடப்பதில்லை...
சாவுக்கேதுவான சரீரங்களையும் உயிர்ப்பிப்பவர் நம்மில் வாசமாயிருக்கிறார் என்பதால்

🌹அசிங்கமென்று வெறுத்தப் பாவத்தையே மனப்பூர்வமாக திரும்பவும் அணைத்துக் கொண்டிருப்பதில்லை...
ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே என்பதால்

🌹அடிமையாக்கத் துடிக்கும் பாவத்திற்க்கு நம்மை சிறைபிடிக்க ஒப்புக்கொடுப் பதில்லை...
இயேசுவின் ஆவியின் பிரமாணம் நம்மை பாவம், மரணம் என்பவைகளினின்று விடுதலையாக்கும் வல்லமை வாய்ந்தது என்பதால்

🌹நரக தண்டனை உண்டென்று பயமுறுத்தும் பிசாசுக்கு செவிக்கொடுப்பதில்லை...
இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை என்பதால்

🌹பழைய வாழ்க்கைப் பாவங்களையே திரும்பவும் நினைத்து கலங்குவதில்லை...
பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப்போக்கும் பலியாகவும் தேவகுமாரன் நமக்காக ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டார் என்பதால்

👉விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபிரெயர் 10:38👈


            தேவனுக்கே மகிமை

பதிப்பு: யாரோ……?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.