மாற்கு 14 ஆம் அதிகாரம் வினாடி வினா




மாற்கு 14 ஆம் அதிகாரம்

வினாடி வினா

🌹1. *நான் மிகவும் சுறுசுறுப்பானவன் ஆனால் என் எதிரி மிகவும் சோர்வானவன்.நாங்கள் யார் என்று இயேசு கூறுகிறார்?*
 

விடை: *மாற்கு14:38*
ஆவி உற்சாகமுள்ளது தான். மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.


🌹2. *என் சத்தம் அதிகாலையில் கேட்கும். என் சத்தம் கேட்டதும் ஒருவன் மிகவும் அழுவான். இதனை ஒருவர் அவனுக்குக் கூறினார் ஆனால் அதை அவன் மறந்துவிட்டான். நாங்கள் யார் தெரியுமா?*

விடை: *மாற்கு14:30,72*
சேவல்,  *மாற்கு14:29,72*பேதுரு, *மாற்கு14::30,72* இயேசு.



🌹3. *என் உயிருக்குப் பயந்தேன். என் நேசரே விட்டு தூரம் போனேன். அதனால் என் நேசரைத் தெரியாது என்றேன். நான் யார்?*
   

விடை:
*மாற்கு14: 68,70,71*
பேதுரு.
 
🌹4. *நான் இராஜா. நான் பூமிக்கு வந்தேன்,  உபதேசித்தேன்.என்னை குற்றவாளியாக்கினார்கள். நான் சொன்ன வார்த்தைக் கேட்டு தூஷண வார்த்தை என்றான். நான் யார்? அப்படி அவன் என்னக் கேட்டான்? நான் என்னக் கூறினேன்?*

விடை *மாற்கு14:61,62*
இயேசு.   

நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானோ?
  
நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் கேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.

🌹5. *எனக்கு விரோதமாய் குற்றங்கள் சாற்றப்பட்டது. அது நிலைக்கவில்லை. ஆனாலும் அநேகர் சொல்லியும் அது செல்ல வில்லை. அதன் பெயர் என்ன எனறு வேதம் கூறுகிறது?*
  
விடை: *மாற்கு14:56,58*
பொய்ச்சாட்சி.
 


🌹6. *என்னுடன் இருந்தவன். என்னோடு அப்பம் புசித்தவன். எனக்கு விரோதமாய் செயல்பட்டவன். அவன் யார்? அவன் என்னோடு பேசின கடைசி வார்த்தை என்ன?*
  
விடை: *மாற்கு14:10* யூதாஸ்காரியோத்
*மாற்கு14:45*
ரபீ ,ரபீ


        
🌹7. *என் மரண நாள் வந்ததும் எனக்கு என்ன வந்தது?*
  
விடை: *மாற்கு14:33*
திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
  


🌹8. *நான் எங்குச் சென்றாலும் இவர்களை மாத்திரம் கூப்பிட்டுச் செல்லுவேன்? இன்றும் அப்படியே கூப்பிட்டுப் போனேன். எங்கே போனோம்? அவர்கள் யார்?*

விடை: *மாற்கு14:32*
கெர்செமனே
*மாற்கு14:33*
பேதுரு, யாக்கோபு,    யோவான்.


🌹9. *நான் மரிக்க என் சரீரம் தயார் நிலைக்கு வந்தது. ஆனால் எனக்கு மிகுந்த  கவலை வந்தது. எதில் கவலை வந்தது ? அது எதற்கான வேதனை?*
 
விடை: *மாற்கு14:34.*
என் ஆத்துமா மரணத்துக்குக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.


🌹10.   *நாங்கள் மதுபானம் குடிக்கவில்லை ஆனால் மயங்கிப் போய் இருந்தோம் எதனால் தெரியுமா? இந்த மயக்கத்தினால்என்னச் செய்யச் சொன்னார்?*

விடை: *மாற்கு14:40*
மிகுந்த நித்திரை மயக்கம்.
*மாற்கு14:41*
இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்;

       🌹_🌷_🌹




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.