ஏழு சபைகள் ரகசியம்*

  *ஏழு சபைகள் ரகசியம்*

*இப்போது உலகில் இருக்கிற ஏழு வகையான சபைகள்தான் இயேசு கிறிஸ்து அன்று (2000 வருடங்களுக்கு முன்பு) யோவானுக்கு சொன்ன ஏழு சபைகள்*


*ஏழு சபைகள் ஏழு படிகள்:*

கர்த்தர் ஏழு சபைகளுக்கு எழுத வேண்டியதை வெளிப்படுத்தின விசேஷத்தில்  சொன்னார். ஓவ்வொரு சபைக்கும் தனித்தனியாக கட்டளைகளையும்,  தான் கண்டதையும் எழுத சொன்னார்.                                           வெளிப்படுத்தின விசேசம் (அ) திருவெளிப்பாடு)

அவைகள் ஏபேசு , சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள சபைகளே. எல்லா சபைகளும் ஆசிய மைனர் கண்டத்தில் உள்ளவை. ஒவ்வொரு சபைக்கும் உரைக்கும் “வழிகாட்டுதல் நம் ஆவிக்குரிய வாழ்க்கை வளர ஒவ்வொரு படிக்கட்டாகவும் அவைகள்  தேவாதி தேவனின் இராஜ்ஜியத்தை அடைய கட்டளைகளாகவும்  இருப்பதை உணரலாம்.
ஏழு படிகளாக நாம் நடக்க வேண்டிய ஒவ்வொரு வழியையும் படிப்படியாக காட்டுகிறது. முதலில் சாதாரண அர்த்தமாக தொடங்கி இறுதியில் ஆவிக்குரிய அர்த்தத்தில் நிறைவு பெறும். முதல் சபைக்கு எழுதியுள்ளதை படித்து நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பது நலம் பயக்கும். கர்த்தரின் கட்டளை – அதை நாம் கடைபிடிக்கறோமா என டிக் பண்ணிக் கொண்டே வாருங்கள். விசுவாசியின் வாழ்க்கையை கர்த்தர் தெளிவாய் சொல்லிக் கொண்டே வருகிறார். அவைகளை நாம் ஆவியில் உணர்ந்து படிக்க வேண்டும்.

ஒரு வசனத்தை திரும்ப திரும்ப படித்து தியானிக்க அர்த்தத்தை ஆவியாவனவர் உணர்த்துவார்.

ஏழாவது சபையின் முடிவில் வருவது ஆவிக்குரிய அர்த்தமாகும். அதுதான் கர்த்தரின் இருதயத்தில் நாம் இடம் பிடிக்கும் கடைசி படிக்கட்டு.

சபைகளின் குறைகளை/ நிறைகளை நாம் மேற்கொள்ள/கடைபிடிக்க வேண்டும். வரிசையாக சபைகளின் பார்ப்போம், அவைகளை கடப்போம்:

1. எபேசு சபை - ஆதி அன்பை விட்டது - நம் ஆதியில் கொண்டிருந்த அன்பை நிலை நிறுத்துவோம்.     

நற்குணங்கள்:
1. கிரியைகள், பிரயாசம், பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறது

2. அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்தது

3. சகித்துக்கொண்டிருக்கிறது

4. பொறுமையாயிருக்கிறது

2. சிமிர்னா சபை - உபத்திரவத்திலும்பொறுமையாய் நற்குணத்தை காத்துக்கொண்டது. ஆவிக்குரிய வாழ்வில் ஐசுவர்யனாக பொருளாதாரத்தில் தரித்தரனாக இருந்தபோதிலுமிருந்தது. உபத்திரவத்திலும் பொறுமையாயிருந்து நற்குணத்தை காத்து ஆவிக்குரிய வாழ்வில் ஐஸ்வரியனாகயிருப்போம்.

3. பெர்கமு சபை -

நற்குணங்கள்:
1. நற்கிரியை

2.கர்த்தரின் நாமத்தைப்பற்றிக் கொண்டிருத்தல்

3. உபத்திரவத்தின் நாட்களிலும் விசுவாசத்தை மறுதலியாமலிருத்தல்

*தீய குணங்கள்:*

1.பிலேயாமின் போதகம் (விபச்சாரம்)

2. நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் (விக்கிரக வழிபாடு)

இவைகள் மூன்றாவது படி, தீய போதனைகளை விட்டு மனந்திரும்பி ஜெயங்கொள்ளுதல்

4. தியாத்தீரா சபை
நற்குணங்கள்:

1.அன்பு
2. ஊழியம்
3. விசுவாசம்              
4. பொறுமை  
5.நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகம்

*குறைகள்:*
1. வேசித்தனம்
2. விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசித்தல்
3. தீய போதனை

தீயவைகளை விட்டு மனந்திரும்புதல்

சாத்தானுடைய ஆழங்களை அறிந்து விலகுதல்

5. சர்தை சபை
*தீமைகள்:*

1. உயிருள்ளவனாயிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்

2. கிரியைகள் நிறைவில்லை

மனந்திரும்பு இல்லாவிட்டால் திருடனைப்போல வருவேன் என்கிறார் இயேசு.

6. பிலதெல்பியா சபை:

பரிசுத்தமான சபை - கொஞ்சம் பலனிருந்தும் பொறுமையாய் வேத வசனத்தை கைகொண்ட சபை

இதுவே நமது ஆறாவது படி


7. லவோத்கேயா சபை
*குறைகள்:*

1. குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறாய்.

2. நிர்ப்பாக்கியமுள்ளவன் (மகிழ்ச்சியில்லாத செழிப்பில்லாத நிலை)

3. பரிதாபிகரமான நிலை

4. ஆவியில் தரித்தின்

5.குருடன் - வசனங்களை அறியாதவன் - தைலமாகிய நல்ல உபதேசம் தேவை

6. நிர்வாணி - நற்குணங்கள் இல்லாதவன

இந்த 7 சபைகளின் தீயவைகளை மேற்கொண்டு ஜெயித்தால் இயேசு கிறிஸ்துவின் இதயத்தை பிடித்து விடலாம். ஆமென்.

யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,                  (வெளி. விசேஷம் 1 :4)

யோவான் 7 சபைகளுக்கு (எழுதுகிறவைகள்) ஆதி மைனர் ஆசியாவிலுள்ள சபைகளுக்கானாலும் அதில் கூறப்பட்டுள்ள புத்திமதிகள் இப்போதுள்ள பல பிரிவுகளான
சபைகளை சீர்படுத்திக்கொள்ள சொல்லப்பட்டவைகள். அனைத்து புத்திமதிகளையும் மேற்க்கொண்டால் இயேசு கிறிஸ்துவின் இருதயத்தை அடையலாம்.

🔘 எபேசு சபை -- ஆதி திருச்சபை
(Apostolic Church)

🔘 சிமிர்னா சபை  --- உபத்திரவங்களுக்கு- வன்கொடுமைக்குள்ளான சபை
(Persecuted church)

🔘 பெர்கமு சபை --- மணவாட்டியான சபை
(Married Church)

🔘 தியாத்தீரா -----  மத்திய கால சபை
(Medieval church)

🔘 சர்தை ---- பிரிவுகளான சபை
(Denominational church)

🔘 பிலதெல்பியா ---- மிஷினரி சபை
(Missionary Church)

🔘 லவோக்கியா ----- எதிர்ப்பு சபை- விசுவாச துரோக சபை (Apostate church)

இப்படி 7 வகையான சபைகள் தற்போது உலகத்தில் இயங்கி வருகின்றன. இந்த வகையான சபைகள் உலகெங்கும் இயங்கி வருவதை நீங்கள் தெளிவாய் அறியலாம். இந்த சபைகளுக்குத்தான் கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலம் நிகழ்கால நடப்புகளையும் எதிர்கால எச்சரிக்கைகளையும் ஜெப விண்ணப்பங்களையும் சொல்லி வருகிறார்.

காதுள்ளவன் கேட்கக்கடவன், இனி காலம் இல்லை. மீண்டும் வருவேன் என்றுரைத்த தேவன் சீக்கிரமாக வரப்போகிறார். மகிமை பொருந்திய மகாராஜா தேவனுடைய நகரத்திலே சிங்காசனத்தில் அமரப்போகிறார்.
ஆமென். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.