மாற்கு 13 ஆம் அதிகாரம் வினாடி வினா





மாற்கு 13 ஆம் அதிகாரம் வினாடி வினா




🌹1. *திருடன் திருட வரும் நேரம் தெரியாது அது போல் இயேசு வருகை யாருக்குத் தெரியும் யாருக் கெல்லாம் தெரியாது? அதனால் நாம் என்ன  செய்ய வேண்டும்?*


விடை: *மாற்கு13:32,33*
அந்த நாளையும் நாழிகையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.  அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள்,  விழித்திருங்கள்.

🌹2. *இயேசு எங்கு உட்காந்திருந்தார்? அவரிடத்தில் யாரெல்லாம் வந்தார்கள்?*

விடை: *மாற்கு13:3*  
தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்காந்திருக்கையில், பேதுரும் யாக்கோபும் யோவானும்  அந்திரேயாவும்.

🌹3. *மாற்கு 13 ஆம் அதிகாரத்தில் எச்சரிக்கையாயிருங்கள் , விழித்திருங்கள் என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?*
   
விடை: *மாற்கு13:5,9,23,33* நான்கு முறை  எச்சரிக்கையாயிருங்கள்
*மாற்கு13:35,36,37*  மூன்று முறை விழித்திருங்கள்.

 
🌹4. *யார் வந்து எதைக் கொண்டு எதைச் சொல்லி யாரை வஞ்சிப்பார்கள்?*

விடை: *மாற்கு13:6*
அநேகர் வந்து ,என் நாமத்தைக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

🌹5. *யாரை நான் இரட்சிக்கக்கூடும் என்று இயேசு கூறுகிறார்?*
 
விடை: *மாற்கு13:13*
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

🌹6. *எந்த தீர்க்கத்தரிசியின பெயர் மாற்கு 13ஆம்அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது?அந்த தீர்க்கத்தரிசிக் கூறியதை வாசிக்கிறவன் என்ன செய்ய வேண்டும்?*
    
விடை: *மாற்கு13:14*
தானியேல்  
வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.

🌹7. *சொத்துப் பகை, நிலப்பகை, பணப் பகை, தொழில் பகை இதனால் வெட்டுக் கொலை இவ்வுலகில் ஆனால் இயேசு கூறும் பகையினால் யார் யாருக்கும் இடையில் என்ன நடக்கும்?*
  
விடை: *மாற்கு13:12*
சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு  விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.

🌹8. *பணம், நகை எல்லாவற்றையும் திருடுபவன் என்னை மக்கள் கள்ளன்என்று கூறுவர் நான் எடுப்பது வேறும்  பொருட்கள் மட்டுமே ஆனால் இந்த உலகம் முழுவதும்  இருக்கிற கள்ளர்களை வேத எப்படி அழைக்கிறது என்று தெரியுமா?  அவர்கள் என்ன தான் செய்வார்கள் கொஞ்சம் கூறுங்களேன்?*

விடை *மாற்கு13:22*
கள்ளக்கிறிஸ்துக்களும்,     கள்ளத் தீர்க்கத்தரிசிகளும்  எழும்பி கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

🌹9. *இராஜக்குமாரன் பூமியில் பிறந்தார், வளந்தார்,  வானத்தில் ஏறி சென்று விட்டார்  இது எல்லோருக்கும் தெரிந்தது ஆனால் நியாயாதிபதி வருவதை நாம் எப்படிக் காண்போம்?*

விடை:  *மாற்கு13:26*
மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்ளின் மேல் வருகிறதைக் காண்பார்கள்.

🌹10.   *மதம், மொழி,ஜாதி, நிறம்,நாடு, தேசம்,உலகம் இதில் நாம் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் எது  நமக்கு பிரசங்கிக்கப் பட வேண்டும்?*

விடை: *மாற்கு13:10*
சுவிசேஷம்.


       🌹_🌷_🌹



*நன்றி!*   

*God bless you all*
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.