🌹1. *அழகான கட்டிடம் கட்ட என்னைப் பயன்படுத்துவர். ஆனாலும் அந்த வீட்டிற்கு நான் ஆகாதவன் என்று தள்ளினக் கல் நான். பின்பு நான் எங்கு சென்றேன்? அது யாரால் ஆயிற்று?*
விடை: *மாற்கு12:10* மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
*மாற்கு12:11* அது கர்த்தராலே ஆயிற்று.
🌹2. *கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது?*
விடை: *மாற்கு12:29,30*இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர். உன் தேவனாகிய கர்த்த்ரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுமனதோடும் அன்புகூருவாயாக என்பதே.
🌹3. *இரண்டாம் கற்பனை எது?*
விடை: *மாற்கு12:31* உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
🌹4. *தாவீது பரிசுத்த ஆவியினாலே என்ன சொல்லியிருக்கிறான்?*
விடை: *மாற்கு12:36* நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார்.
🌹5. *நானோ ஏழை என்னிடம் இருந்ததோ இரண்டு காசு அதையும் போட்டு விட்டேன் இயேசுவோ நான் அதிகம் போட்டேன் என்றார். எதற்காக இப்படிக் கூறினார் சொல்லுங்களேன்?*
விடை: *மாற்கு12:14* இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
🌹6. *ஒரே தேவன் உண்டு; அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லையென்று இயேசு சொன்ன சத்தியத்தை சரி என்று கூறியது யார்?*
விடை: *மாற்கு12:33*
வேதபாரகர்
🌹7. *இயேசு நீங்கள் எதை அறியாததினால் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்?*
விடை: *மாற்கு12:24* வேதவாக்கியங் களையும், தேவனுடைய வல்லமையையும்
🌹8. *நாங்கள் இணைந்து இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்போம் ஆனால் உயிர்த்தெழுதல் என்று வந்தால் நாங்கள் இல்லையென்று சாதிப்போம். நாங்கள் யார்?*
விடை: *மாற்கு12:18*
சதுசேயர்
🌹9. *இயேசு யாருடையதை யாருக்குச் செலுத்தச் சொன்னார்?*
விடை: *மாற்கு12:17* இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.
🌹10. *நாங்கள் ஜெப ஆலயங்களில் முதன்மை, விருந்துகளில் முதன்மை, கழுகைப் போல விதவைகளிடத்தில் வீடுகளைப் பட்சிப்போம் எங்கள் ஜெபம் நீண்ட ஜெபம் நாங்கள் யார்? எங்களைக் குறித்து இயேசு எப்படியிருக்கச் சொல்லுகிறார்?நாங்கள் எதனை அடைவோம்?*
விடை: *மாற்கு12:40*
வேதபாரகர்,
எச்சரிக்கை,
அதிக ஆக்கினை அடைவார்கள்.
🌹_🌷_🌹